PDA

View Full Version : தேடியந்திர மோசடி உஷார்



பகுருதீன்
01-12-2007, 04:49 AM
இணையவாசிகளின் கண்ணில் மண்ணை தூவி அவர்களை வலையில் விழ வைக்கும் மோசடி வேலைகளுக்கு இன்டெர்நெட்டில் பஞ்சமில்லை. இத்தகைய மோசடிகள் குறித்து நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டு இணையவாசிகள் விழிப்படையும் நிலையில் அவர்களை முற்றிலுமாக ஏமாற்றி விடும் புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகின்றன.
.
அந்த வகையில் சமீபத்தில் தேடல் முடிவுகளில் நச்சு கலக்கப் பட்டிருக்கிறது. தேடல் முடிவுகளால் ஏமாந்து போகும் இணைய வாசிகளின் கம்ப்யூட்டரையே விஷமிகள் கடத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும் ஆபத்தும் உருவாகி உள்ளது.

இமெயில் மோசடி, வைரஸ் விஷமத்தனம் என்று பல வகையான ஏமாற்று வேலைகள் பற்றி இணையவாசிகள் பரவலாக அறிந்திருக்கின்றனர். வைரஸ் விஷயத்தில் ஓரளவு எல்லோரும் உஷாராகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் இணையவாசி களின் உஷார் நிலையை மீறி அவர்களை ஏமாற்ற தேடல் முடிவுகளை விஷமிகள் தேர்ந்தெடுத் துள்ளனர். இன்டெர்நெட்டில் தகவல்களை தேட தேடியந்திரமே பயன்படுத்தப் படுகிறது. கூகுல் போன்ற தேடியந் திரங்கள் தரும் முடிவுகளை இணைய வாசிகள் கண்ணை மூடிக் கொண்டு நம்பி விடுகின்றனர்.

அவர்கள் இந்த தேடல் முடிவுகள் சந்தேகத்திற் குரியதாக இருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தேடல் முடிவுகளை தேடியந்திரங் களே தீர்மானிப்பதால் அவற்றில் சந்தேகப்பட எதுவுமில்லை என்று கருதப்படுகிறது.

அதிகபட்சம் போனால் தேடல் பட்டியலில் முன்னுரிமை பெறுவதற்காக ஒரு சில யுக்திகளை பின்பற்றி தேடியந்திரங்களின் முதலிடத்தை பெற திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இதற்கான பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதில்லை.

ஆனால் தற்போது தேடல் முடிவுகளுக்கு மத்தியில் இணைய வாசிகளுக்கான பொறியை மறைத்து வைக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. நல்லவேளையாக அந்த முயற்சி உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப் பட்டு வெற்றிகரமாக முறியடிக்கப் பட்டும் உள்ளது.

கூகுல் போன்ற முன்னணி தேடியந்திரங்களை பயன்படுத்தும் போது கிறிஸ்துமஸ் பரிசு, ஆஸ்பைஸ் சொற்களை பயன் படுத்தும் போது குறிப்பிட்ட சில இணையதளங்களின் முடிவுகள் முன்வரிசையில் பட்டியலிடப் படுகின்றன.

இந்த முடிவுகளுக்கு பின்னே இருக்கும் விவகாரத்தை யாரும் அறிந்திருக்க நியாயமில்லை. மற்ற முடிவுகள் போலத்தான் இவையும் என்று இணையவாசிகள் கருதி விடுவார்கள். ஆனால் தப்பித்தவறி இந்த இணையதளங்களில் கிளிக் செய்து விட்டால் விளைவு விபரீதமாக இருக்கும். உடனே விஷமிகள் கிளிக் செய்தவரின் கம்ப்யூட்டரை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு விடுவார்கள். இதனால் மேலும் பல விபரீதங்கள் ஏற்படலாம்.

அந்த கம்ப்யூட்டரை இயக்கி அவர்கள் தங்களுக்கு தேவையான பல விஷயங்களை சாதித்துக் கொள்ள முடியும். பொதுவாக, தேடியந்திரங்களை கவரும் வகையில் குறிப்புச் சொற்கள் மற்றும் போல் இணைப்புகளை உருவாக்கி பட்டியலில் முன்னேற முயற்சி மேற்கொள்ளப்படுவதுண்டு.

அந்த வகையான யுக்தியைதான் இந்த இணையதளங்களும் பின் பற்றின என்றாலும் இவை பிரம் மாண்டமான அளவில் மேற் கொள்ளப்பட்டிருப்பது வைரஸ் தடுப்பு நிபுணர்களை திகைத்துப் போக வைத்துள்ளது.

இதற்காக என்று ஆயிரக்கணக் கான போலி இணைய தள முகவரிகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் தகவல்கள் இருப்பது போன்ற உணர்வு தேடி யந்திரங்களுக்கு ஏற்படுத்தப்பட் டுள்ளது. இதன் விளைவாக தேடியந்திரங்கள் இவற்றை தங்களது தேடல் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளன.

இணையவாசிகள் இவற்றை கிளிக் செய்யும் போது விஷமிகளின் சதிக்கு இலக்காகி விடுகின்றனர். ரஷ்யாவை மையமாகக் கொண்ட கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. நிபுணர்கள் இதனை உரிய நேரத்தில் தெரிந்து கொண்டு எச்சரித்துள்ளனர்.

இந்த விஷமத்தனத்தை கூகுல் உடனடியாக உணர்ந்து கொண்டு சந்தேகப்படும்படியான முடிவுகளை எல்லாம் நீக்கி விட்டது. ஆனால் மற்ற முன்னணி தளங்களில் இவை இன்னமும் இடம் பெற்றிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி பிரம்மாண்டமான முறை யில் போலி முகவரிகள் மற்றும் இணைப்புகளை உருவாக்கி தேடியந்திரங்களை ஏமாற வைத்து இணையவாசிகளை பலியாக்கும் முயற்சி வருங்காலத்தில் மேலும் தீவிரமாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நேசம்
01-12-2007, 05:17 AM
உண்மைதான்.இது போன்று மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.தகவல் பகிர்தலுக்கு நன்றி தீன்

தீபன்
01-12-2007, 06:51 AM
நன்றி நண்பரே... உரிய நேரத்தில் எச்சரிக்கைசெய்தமைக்கு..!