PDA

View Full Version : ரோஜாச்செடியே....



செல்வா
30-11-2007, 09:11 PM
பூப்பறிக்க வந்தோரை
பூங்கொத்தோ டனுப்பி விட்டு

நீரூற்ற வந்த என்னை
நெஞ்சிலே குத்துவதேன்.

அக்னி
30-11-2007, 10:27 PM
பூவைப் பறித்த கை, அழகாக...
நீரைப் பாய்ச்சிய கை, வலியாக...
வாடிய செடி...

பாராட்டுக்கள் செல்வா அவர்களே...

சிவா.ஜி
01-12-2007, 03:43 AM
விரும்புவோருக்கு வலியைத் தருவதே இந்த பூக்களின் வேலை.
அழகான கவிதை.வாழ்த்துகள் செல்வன்.

சுகந்தப்ரீதன்
01-12-2007, 08:38 AM
அடக்கமான வடிவில் அழகான கவிதை.. வாழ்த்துக்கள் செல்வன்..!

meera
02-12-2007, 11:08 AM
நீருற்றுபவன் மேல் நேசம் கொண்டு
செல்லமாய் முத்தமிட்டதோ முட்கள் கொன்டு...

அழகிய குறுங்கவி பாராட்டுகள் செல்வா

செல்வா
02-12-2007, 11:21 AM
நீருற்றுபவன் மேல் நேசம் கொண்டு
செல்லமாய் முத்தமிட்டதோ முட்கள் கொன்டு...
ஆகா.... கவலையில் பிறந்ததை மகிழ்ச்சியாக மாற்றிவிட்டடீர்கள் உங்கள் புதிய விளக்கத்தால்...


அழகிய குறுங்கவி பாராட்டுகள் செல்வா
நன்றி... மீரா..

செல்வா
02-12-2007, 11:22 AM
அடக்கமான வடிவில் அழகான கவிதை.. வாழ்த்துக்கள் செல்வன்..!
நன்றி சுகந்தப்ரீதன்

செல்வா
02-12-2007, 11:25 AM
விரும்புவோருக்கு வலியைத் தருவதே இந்த பூக்களின் வேலை.

சரியாகச் சொன்னீர்கள் சிவா....


அழகான கவிதை.வாழ்த்துகள் செல்வன்.
நன்றி....

செல்வா
02-12-2007, 11:27 AM
பூவைப் பறித்த கை, அழகாக...
நீரைப் பாய்ச்சிய கை, வலியாக...
வாடிய செடி...

பாராட்டுக்கள் செல்வா அவர்களே...

நன்றி அக்னி.... உங்கள் ஹை.கூ வும் அருமை...

ஆதி
02-12-2007, 01:34 PM
பூப்பறிக்க வந்தோரை
பூங்கொத்தோ டனுப்பி விட்டு

நீரூற்ற வந்த என்னை
நெஞ்சிலே குத்துவதேன்


தளைத்தாட்டமல் ஒரு கவிதை - இதய
தளம்தொட்டப் புது கவிதை..


வாழ்த்துக்கள் செல்வா..

-ஆதி

அமரன்
04-12-2007, 08:56 AM
பூக்கள் பூப்பதே பறிப்பதுக்குத்தானே..


பூவை இழந்த ரணம் ஆறமுன்னர்
தண்ணீர் ஊற்றப்போனது உங்கள் தப்புங்கோ...
பக்குவம் பத்தலை.. அதுதான் குத்திட்டுது..
பாராட்டுக்கள் செல்வா.

ஓவியன்
05-12-2007, 06:06 PM
அடிக்கிற கைதான் அணைக்குமாம்...
இங்கும்
குத்தும் முள் தான் தன் மலர் தந்து
கட்டி அணைக்குமோ..........???

ஆதவா
07-12-2007, 05:56 AM
பூப்பறிக்க வந்தோரை
பூங்கொத்தோ டனுப்பி விட்டு

நீரூற்ற வந்த என்னை
நெஞ்சிலே குத்துவதேன்

பறிப்பவர் கைங்கர்யம்
ஊற்றுபவர் துரதிட்டம்.

காத்திருந்தவன் காதலியை
நேத்து வந்தவன் தள்ளியது போல....

பூவளர்ப்பு தான் பறிக்க, தான் பறிக்கவியலா பூந்தோட்டம் தேவையா?

அழகுக்குப் பூ எனில் வருத்தம் ஏன்?

எனக்கு எங்கோ உதைக்குதுங்கோ!!!

வாழ்த்துகள்....

M.Jagadeesan
19-01-2013, 08:14 AM
பூப்பறிக்க வந்தோரை
பூங்கொத்தோ டனுப்பி விட்டு

நீரூற்ற வந்த என்னை
நெஞ்சிலே குத்துவதேன்.



நீரூற்ற வந்தவன்தான்
எஜமானன் என்றறிந்து
வாஞ்சையாய் வருடியதைக்
குத்தல் என்று கொள்ளுவதேன் ?