PDA

View Full Version : சாமக் கோடங்கி!!!



தாமரை
30-11-2007, 04:23 PM
1976 நவம்பர் முதல் - 1977 மார்ச் வரை ஆண்டு..

நான் நாலாவது படிச்சிகிட்டிருந்த காலம். அப்போ ஒரு நாலஞ்சு மாசம் சேலத்துக்கு பக்கத்தில் இளம்பிள்ளைக்கு அருகில் காடையாம்பட்டின்னு ஒரு குக்கிராமத்திற்கு குடிபோனாம்.

வீடுன்னா அது வீடு இல்லை. அது ஒரு பன்னிக் குடிசைன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும். 3 அடி உயர் மண் சுவர். அதுக்கு மேல் மூங்கிலால டைமண்ட் டிசைன் மாதிரி மூங்கில் தடுப்பு. நாலு மூலைக்கு நாலு தாங்கல் வச்சு தென்னையோலை வேஞ்ச குடிசை. அது முழுசும் கூட எங்களுக்கு வாடகைக்கு இல்லை. குடிசைக்கி தென்மேற்கு மூலையில எப்பவுமே மூடிக்கிடக்கற ஒரு அறை. அது போக எல் ஷேப்பில மிச்சமிருக்கறது தான் வீடு.

வாசல் கதவு மிக மிக வலுவானது. ஆமாம் சாக்குப்பை தான்.


இதையெல்லாம் விட முக்கியமானது. வீட்டுக்கு நேரெதிரே சுடுகாடு.

தொடரும்.

அக்னி
30-11-2007, 04:46 PM
காற்று பலமாக வீசினாலே சுடுகாடு தெரியும்... அப்படித்தானே...

தாமரை
30-11-2007, 04:50 PM
காடையாம்பட்டி ரொம்ப சின்ன ஊர். முப்பது வீடு கூட கிடையாது, 100 மீட்டர் நீளம் கூட இல்லாத ஊர். ஊர்க்கோடியில் முச்சந்திப் புளியமரத்தில தொங்கிக் கிடக்கற பேய்க்கதைகள் ஏராளம். அந்த இடத்தைப் பாடை மாத்தி என்பார்கள். பிணம் வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த பாடைமாத்தி இடம் வரை வீட்டைப்பார்த்த மாதிரி, வீடு இருக்கும் பக்கம் காலை நீட்டிக் கொண்டு வருமாம். இந்த இடத்தில் வந்த உடன் காடு பாக்கிற மாதிரி மாத்துவார்கள்.. அதனால் இந்த இடத்துக்கு பாடை மாத்தி என்று பெயர்.

எங்க வீட்டுக்கும் இந்த இடத்துக்கும் அண்ணா சமாதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இருக்கும் தூரம்..

ஆரம்ப காலத்தில் எந்தக் கதையையும் எங்களுக்குச் சொல்ல வில்லை.

அப்போதெல்லாம் நடுராத்திரில் எங்க அக்காமர்கள் என்னையும் என் அண்ணனையும் எழுப்பி சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்வார்கள்.. ஒரு நாள் எழுப்பிக் கூட்டிகிட்டு போகும் போது கொஞ்சம் லேட்டாகி 1:00 மணி ஆயிருச்சி .. எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது...

கலீர் கலீர்னு சலங்கை ஒலி.. கூடவே டமடமன்னு உடுக்கை ஒலி..

தொடரும்.

செல்வா
30-11-2007, 05:15 PM
வந்துட்டாருய்யா சாமக்கோடங்கி...

மதி
30-11-2007, 05:39 PM
ஆஹா ஆரம்பிச்சாச்சா..!
இன்னிக்கு நான் தூங்கணும்.. காலையில படிச்சுக்கறேன்..

அமரன்
30-11-2007, 05:52 PM
இதையே சொந்த நாட்டில் இருந்து படிச்சிருந்தா முதுகுத்தண்டு சில்லிட்டு இருக்கும். தூக்கம் கெட்டு இருக்கும். கந்தர்சஷ்டி கவசம் கையில் அடைக்கலமாக நான் அதனுள் அடைக்கலாமாகி இருப்பேன். பில்டப்புக்காக இதை சொல்லல. எங்க வீட்டில் இருந்து பார்த்தால் குறிபிட்ட தூரத்துக்கு ஒருபக்கமாக தென்னந்தோப்புத்தான் தெரியும்..மறுபக்கம் வாழைத்தோட்டம் தெரியும். இராப்பொழுது வண்டுகள் சங்கீதத்தில் துணிவு என்னிலிரா..இப்போ பரவாயில்லை.. ஆரம்பமே திகிலுக்கு காரன்டி தருகின்றது..

பூமகள்
30-11-2007, 06:22 PM
முதல் பதிவு படிச்சிட்டேன்..
இரண்டாம் பதிவு... படிக்க ஆரம்பிச்சதும், பார்த்து... பயந்து...
நாளை படிக்க முடிவெடுத்துட்டேன்.
கோடாங்கி இரவில் வந்தாலும் குறி சரியாய் சொன்னால் சரி தான். :)

தாமரை
30-11-2007, 08:00 PM
அந்த நள்ளிரவில் நாய்கள் விழித்துக் குலைக்க ஆரம்பித்தன.. நிலா வெளிச்சத்தில் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவா உருவம். பாக்கறதுக்கே பயமா தலையில் பெரிய கொண்டை.. ஒத்தை நைட்டி மாதிரி ஒரு அங்கி. கயில மயிலிறகுக் கொத்து உடுக்கை அடிச்சபடியோ அவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்னு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சான். வீட்ல எல்லாரும் முழிச்சாச்சு. அம்மா ஒரு சின்ன படியில் அரிசி கொண்டுபோய் போட,

பஞ்சம் வருகுதம்மா பேய்ப்பஞ்சம் வருகுதம்மா
பசியில் வாடுதம்மா பிள்ளைகள் பசியில் வாடுதம்மா
தஞ்சம் நீயம்மா

அப்படி ஏதேதோ சொல்லிப் பாட்டு படிச்சிட்டு மயிலிறகால எங்க எல்லோருக்கும் பாடம் போட்டுவிட்டு போயிட்டார்..


அடுத்த நாள் தான் ஊர்ஜனங்க சொன்னாங்க, அது சாமக் கோடங்கியாம். அமவாசையில சுடுகாட்டில பூசை செய்வாராம். எப்பயாவது சாமி உத்தரவு வந்தா இப்படி ஊருக்குள்ள வந்து உடுக்கை அடிச்சு குறிசொல்லுவாராம்.

என்ன சொன்னாரு என்ன சொன்னாருன்னு ஒரே விசாரிப்பு.. நங்க ஹீரோ ரேஞ்சுக்கு ஆயிட்டோம். பஞ்சம் வரப்போகுதாமில்ல..

(இப்பன்னா ஆமாம் இந்த வருஷம் மழையே இல்லை இதைச் சொல்ல கோடங்கி வரணுமான்னு கேட்டிருப்போம்)

பஞ்சமும் நிஜமாய் வந்தது.. அரிசிச் சோறு கனவானது, மக்காச் சோள ரவையும், மரவல்லிக் கிழங்குமே உணவானது.கிணறுகள் வத்தி தண்ணீருக்கு கிலோ மீட்டர் கணக்காய் நடக்க வேண்டி வந்தது..

அது இல்ல மேட்டர். இது கோடங்கியை நாங்க பார்த்த முதல் முறை.. அப்போ உருவம் காட்டுமிராண்டித்தனமா இருந்தாலும் அவ்வளவு பயமில்லை.. ஏன்னா மயிலிறகு.. அது ஒரு மந்திரவாதி கிட்ட இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை. கோடங்கி ஊருக்குள்ள அனாவசியமா நுழையமாட்டர்ங்கற தைரியம். சுடுகாட்டுக் காளி சொல்லாமே எதுவுமே செய்யமாட்டார் என்ற நம்பிக்கை.. அந்த நம்பிக்கை எல்லாம் அடுத்த அமாவசை வரைதான்..

அமாவாசை நாள் 11:00 மணிக்கு சுடுகாட்டுக் காளி பூஜை ஆரம்பித்தார் கோடங்கி...

தொடரும்

ஓவியா
30-11-2007, 08:58 PM
நான் மட்டுமே விட்டில் இரவில் தனியே அறையில் அமர்ந்து இன்று முழுதும் இதை படித்து முடித்து விடவேண்டும் என்று ஆரம்பித்தால், அடடா!!!!!!!!!!!!!!!!!! எனக்கு நாமம்.

கதையாசிரியர் இரவாச்சி நான் பேய் கதை எழுத மாட்டேன் என்று உறங்கச்சென்று விட்டார். :redface::redface:


அந்த பழைய பங்களா கதைப்போல் ஆகாமால் இருக்கட்டும். :D:D

சிவா.ஜி
01-12-2007, 03:25 AM
திகில் பயணம் ஆரம்பிச்சிடிச்சி,அந்த ஆறடி உயரமும்,நீள அங்கியும்,நடுசாமமும் என்னவோ பண்ணுதே....இதுல காளி பூசையை வேற நடத்தப்போறாராம்.....சீட்டு நுனிக்கு வந்தாச்சு....

மன்மதன்
01-12-2007, 03:44 AM
ஆஹா.. பிளாஷ்பேக்கில் பேய் கதையா.. பயமுறுத்தாம சொல்லுங்க..

தாமரை
01-12-2007, 04:51 AM
முதல் முறையா ஒரு கோடங்கி பூஜை.. சுடுகாட்டுக் காளிக்கு. அத எப்படி போடுவாங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது.. பின்னாடி கேட்டுத் தெரிஞ்சுகிட்டது..

இதுக்காக கோடங்கி சுத்து வட்டார சுடுகாடெல்லாம் அலைவாரம். அந்தவாரம் புதைக்கப்பட்ட பிணத்தின் சவக்குழி மண், பிணமெரித்த சாம்பல், எதாவது எலும்புத்துண்டு, எலுமிச்சம்பழம், பூசனி, அரளிப்பூ இப்படி பலப்பல விஷயங்களைச் சேர்ப்பார் கோடங்கி.. அமாவாசை இரவு சுடுகாட்டில ஒரு உருவம் போட்டு (உருவத்தில சவக்குழி மண் கலந்திருக்கும்) அதுக்கு இதையெல்லாம் படைச்சு ஓங்கி உடுக்கை அடிச்சிப்பாடி பூஜை பண்ணுவார்.. (எங்க குல தெய்வம் அங்காளியம்மனும் சுடுகாட்டுக் காளிதான்.. காட்டில் உருவம் போட்டு உயிர்பலி குடுத்து வணங்கற பழக்கம் எங்களுக்கும் உண்டு.. அங்காளி என்பவள் இறந்த சதிதேவியின் உடலில்லா உயிர். அவளே பேய்ச்சியாக இருந்து பிரம்ம கபாலத்தின் கொட்டம் அடக்கி சிவபெருமானை காப்பாற்றியவளும் ஆவாள்)

நாங்கள்ளாம் வீட்டிலயே ஒடுங்கிட்டோம்.. உடுக்கைச் சத்தம் மட்டும் ஒரு மணிநேரத்துக்கு மேல கேட்டுகிட்டு இருந்தது.. எதேதோ சத்தங்கள், உடுக்கைச் சத்தத்திற்கு தொண்டையைச் செருமி ஊளையிடும் நாய்களின் சத்தம் வேற திகிலா இருந்துச்சி, என்ன நடக்குதுன்னு பார்க்க ஆசைதான் ஆனால் கடைசியா கோடங்கி தன் இரத்ததைக் காணிக்கையா குடுக்கறப்ப பேய்களெல்லாம் அதைக் குடிக்க எழுந்திருக்குமாம்.அந்த இரத்த பலிக்குப் பின்னால பேய்கள் அடங்கி தாகம் தீர்ந்து அமைதியாயிடுமாம். அந்த நேரத்தில யாரும் பார்த்திடக் கூடாதாம்..

பூஜை முடிந்திருக்கும் போல கலீர் கலீர்னு சலங்கைச் சத்தம். கோடங்கி ஓங்கிக் குரல் கொடுத்து வீல் எனக் கத்தினார்.. ஏதோ உரத்த குரலில் உறுமினார்.. சத்தம் சன்னமா இருந்தாலும் மனசு படபடன்னு அடிச்சுக்குது.. என்னமோ சரியில்லை..

அரைமணி நேரம் கழிச்சு சீரான உடுக்கைச் சத்தமும் சலங்கைச் சத்தமும் வந்தது.. கோடங்கி திரும்ப வர்ரார் என்றதும் எங்க அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டுகிட்டு வெளிய வந்தாங்க

வியர்த்து வடிந்து ஆவேசமாய் இருந்தது கோடங்கி முகம். அவர் கண்ணு நிலைச்சு கூர்ந்து எங்கயோ பார்த்துகிட்டு இருந்தது.. அரிசியை அங்கியை நீட்டி வாங்கியவர்..

அகோர பிணம் விழுது ஊரில
அடங்காத ஆட்டம் ஆடப்போகுது
ஆம்பளைங்க பத்திரம் ஆம்பிளைங்க பத்திரம்னு
ஏதோ பாட்டுப் பாடிட்டு போயிட்டாரு...

எங்களுக்கோ வயிரெல்லாம் கலங்கிருச்ச்சி.,..

தொடரும்

நேசம்
01-12-2007, 05:20 AM
அண்ணா அடிக்கடி தொடரும் போட்டு பயமுறுத்துறிங்கே.அடுத்து என்ன நடந்தது ந்னு அறிய ஆவலாய் இருக்கிறது

lolluvathiyar
01-12-2007, 06:52 AM
என்னவோ தெரியல நம்ம மன்றத்துல இப்ப கொஞ்ச நாளா திரில் பேய் கதைகளை தான் எழுத ஆரம்பிக்கிறாங்க. இது ஏதாவது பேய் சீசனா?

பூமகள்
01-12-2007, 07:25 AM
அம்மா.... பூச்சாண்டி...!:icon_shok::huh::ohmy:
கடைசி பதிவு படிக்கவே பயமா இருக்கு...!!:shutup::icon_rollout:

சிவா.ஜி
01-12-2007, 08:12 AM
அம்மா.... பூச்சாண்டி...!:icon_shok::huh::ohmy:
கடைசி பதிவு படிக்கவே பயமா இருக்கு...!!:shutup::icon_rollout:

அதுக்குள்ல பயந்தா எப்படீம்மா..இது கடைசியில்ல....இன்னும் இருக்கு...
சரி காய்ச்சல் வந்த பொண்ணு....எதுக்கும் அம்மாவைப் பக்கத்துல இருக்கச் சொல்லிட்டு படிம்மா!

தாமரை
01-12-2007, 11:00 AM
அந்த மாசம்தான் காமன்பண்டிகையும் வந்தது.. இது கிராமங்களுக்கே உரிய திருவிழா. இதில மன்மதனை சிவன் எரிக்கறது தான் ஸ்பெஷல். அதுக்காக துணிப்பொம்மை செஞ்சு எரிப்பாங்க.. அப்புறம் காமன் ஜெயிச்சாரா, சிவன் ஜெயிச்சாராங்கர மாதிரி ஒரு கூத்து,.. இதை லாவணின்னு கூடச் சொல்வாங்க.. இப்ப அல்லிராணியும் நானும் சண்டைப் போட்டுக்குவமே, அட சொற்சிலம்பத்தில நானும் சாம்பவியும் போட்டுக்குவமே அது மாதிரி எதிர்பாட்டு பாடறது.. ஒண்ணும் புரியலைன்னாலும் பாட்டு கூத்து .. அப்புறம் ரெகார்டு டேன்ஸ் நடந்தது. அதையெல்லாம் பாக்க எங்களை விடலை:sauer028:

அப்படி ஊரே ஒரு எடத்தில குந்தி ஜாலியா இருக்கறப்பத்தான் ஊரின் அடுத்தப்பக்கதில் இருந்த் குடிசை குபுக்குன்னு பத்திகிட்டு எரிஞ்சது...

ஆமாம்.. அந்த வீட்டில இருந்த பொண்ணு மண்ணெண்ணை ஊத்தி தீ வச்சுகிச்சு.. கரிக்கட்டயா தோலெல்லாம் உரிஞ்சு வாழை எலையில மூட்டைகட்டி எடுத்து வந்து எரிந்தும் எரியாம இருந்த ஒடம்பை முழுசா எரிச்சாங்க.. நாங்க நாலு நாளைக்கு பக்கத்து ஊரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டோம்.. (பயம்தான்)

வீட்டுக்கு திரும்ப வந்த பின்னாலயும் பயங்கரமான பயம்தான். அதுவேற நம்மகிட்டதான் கற்பனைக்குப் பஞ்சம் கிடையாதே! பையன் செத்தா பேய். பொண்ணு செத்தா பிசாசு, எரிஞ்சு செத்தா கொள்ளிவாய்ப் பிசாசு, பூதம், ராட்சஸி, அரக்கி, யட்சினி இப்படி எக்கச்சக்க வார்த்தைகள் தெரிஞ்சு வச்சிருக்கமே! பயங்கர கிலிதான்..

ஊர்ல அந்த மோகினி ஒரு ஆணை பலிவாங்கப் போறதா கோடங்கி சொல்லி இருக்காராம்.. அதனால் பசங்கள்ள இருந்து குடு குடு கிழவன் வரை எல்லாத்துக்கும் தாயத்து, வீட்டுக்கு வீடு அணையா விளக்கு, வேப்பிலை, கதவில நாமம், விபூதி பூச்சு இப்படி எத்தனை எத்தனியோ பரிகாரங்கள்.. நாய் குளிரில் ஊளையிட்டாலும் சரி, வேற எதுக்கோ ஊளையிட்டாலும் சரி, கொள்ளிவாய்ப் பிசாசு அப்படிப் போகுது, கொள்ளி வாய்ப் பிசாசு இப்படிப் போகுதுன்னு கிசுகிசுப்பு பேச்சுகள்.. இப்பல்லாம் நாங்க உச்சா போகக் கூட ராத்திரியில் வெளிய வரமாட்டோம்..

சுடுகாட்டுக்கு எதிர் வீடு வேற, ராத்திரியில் எப்பவாவது சலங்கைச் சத்தம் கேட்கும். கோடங்கியா, மோகினியா.. புரியாது.. எப்பவாவது உடுக்கை சத்தம் கேட்டா மனசு நிம்மதியா இருக்கும்..

ஊரே கிலி பிடித்து அடுத்த அமாவாசை பூசைக்கு காத்திருந்தது.. அப்பதான் கோடங்கி பூசை போட்டு பிசாசைக் கட்டுவாராம்..

அமாவாசை வந்தது பூசையும் நடந்தது ஆனால் இந்த முறை கோடங்கி
தோற்றுப் போனார்..

தொடரும்

அக்னி
01-12-2007, 11:10 AM
ஹி... ஹி...
எனக்..கு..குப்... ப..யமே... இல்..லீங்..கோ...:sprachlos020:
(இனி இந்தத் திரிக்கு வாறதுன்னா, யாரையாச்சும் கூட்டிக்கிட்டுத்தான் வரணும்...)

lolluvathiyar
01-12-2007, 11:42 AM
ஊர்ல அந்த மோகினி ஒரு ஆணை பலிவாங்கப் போறதா கோடங்கி சொல்லி இருக்காராம்.. அதனால் பசங்கள்ள இருந்து குடு குடு கிழவன் வரை எல்லாத்துக்கும் தாயத்து, வீட்டுக்கு வீடு அணையா விளக்கு,

ஆச்சரியமா இருக்கு நீங்க சொல்லரது நானும் கிராமத்துல பிறந்து வளர்ந்தவன் தான் ஆனால் நீங்க சொல்லர அளவுக்கு எங்க ஊர் மக்கள் பயந்ததில்ல. அப்படியும் எங்க கிராமத்துல அதிகம் படிக்காதவங்கதான்.

ஓவியா
01-12-2007, 11:59 AM
அடுத்த பாகம் எப்போ!!! இருப்புக்கொள்ளவில்லையே!!!!

எனக்கு பயமே இல்லை!!! நான் 20 வயசிலே 6 மாதம் தனி பங்களாவில் வாழ்ந்தேன், என் ஆண்டியோடது, அவர்கள் மாமி விட்டில் குடித்தம் செய்தார்கள். இங்கு நாந்தான் ராணி, வாரத்தில் ஒருநாள் மட்டும் வருவார்கள்.............காலி செய்யும் கடசிநாள் நான் மூட்டி முடிச்சு கட்டி வைத்துட்டு உறங்க சென்றேன்...உறங்கிகொண்டு இருந்தேன்..அன்றுதான்......... ம்ஹூம் சொல்லமாட்டேன். விரைவில் அந்த கதையை எழுதுறேன்.


கதை

வீட்டிற்க்கு பின்னாடி 2 வாழைமரம் இருந்துச்சி........

தொடரும்.

தாமரை
01-12-2007, 12:06 PM
ஆச்சரியமா இருக்கு நீங்க சொல்லரது நானும் கிராமத்துல பிறந்து வளர்ந்தவன் தான் ஆனால் நீங்க சொல்லர அளவுக்கு எங்க ஊர் மக்கள் பயந்ததில்ல. அப்படியும் எங்க கிராமத்துல அதிகம் படிக்காதவங்கதான்.


நல்லதங்காள் வர்ரான்னு வீட்டுக்கு வீடு நாமம் போட்டு வச்ச சேலத்துக்கு பக்கதில இருக்கிற கு கிராமம் (க் போடற அளவுக்கு கூட பெரிசு இல்லை)

முப்பது வீடு கூட கிடையாதுன்னா அது எவ்வளவு பெரிய கிராமம்.
கோடங்கியை நான் வேற எந்தக் கிராமத்திலும் பார்த்தது கிடையாது.. இந்த ஊர்ல மட்டும்தான்.. அதென்னவோ அவர்தான் ஊர்க்காவலன் மாதிரி... அவர் சொன்னா நடந்திரும்னு ஒரு நம்பிக்கை.. ஒரு சின்ன நூல் வச்சி சம்பவங்களைக் கோத்துகிட்டேப் போனா அவர் சொல்றதுதான் நடக்கும்னு பிரம்மையே இருக்கும்.

ஊர் பயந்திருந்தது உண்மை.,. அந்தப் பெண்ணோட கோரமரணத்தை எங்க வீட்டில பாக்கக் கூட விடலை.. பக்கத்தில வேம்படிதாளம்னு ஒரு பெரிய கிராமத்துக்கு அழைச்சுகிட்டுப் போய்ட்டாங்க.

ஒரு 100 - 150 பேர் இருக்கிற கிராமத்தில ஒரு மாதத்தில இரண்டு சாவுங்கறது மிகப் பெரிய அதிர்ச்சி,, அதுவும் அந்தப் பொண்ணு எல்லாருக்கும் தெரிந்த பொண்ணு.. அவளுடைய மரணத்தோட பயங்கரம் அப்புறம் அது தற்கொலைங்கற விவகாரம், அதுக்குப் பிண்ணனி என்னங்கற விவகாரம் எல்லாம் தொடங்கி, கோடங்கி சொன்ன ஆம்பளைங்களுக்கு ஆபத்துங்கற வார்த்தை இதையெல்லாம் ஊரை பயத்தில தள்ளிடுச்சி. அடுத்த அமாவசை வரை பாதுகாப்பா இருந்தா பிசாசைக் கட்டிடடலம்னு ஒரு தைரியம்..

சேலம் டவுனே பயந்ததைப் பார்த்திருக்கேன்... தியேட்டர்ல பேய் வந்து டிக்கெட் வாங்கின கதை, நல்லதங்காள் தண்ணி கேட்டகதை இதையெல்லாம் சேலத்துப் பெருசுங்க கிட்ட கேட்டுப் பாருங்க.. சொல்லுவாங்க..

ஓவியா
01-12-2007, 12:22 PM
தொடரும் போடலையே!!!!!!!!

கதை முடிந்ததா?? அந்த கோடங்கி ஸ்வாமி என்ன ஆனார்???

அக்னி
01-12-2007, 12:24 PM
செல்வரே...
தொடருமா... முடிஞ்சிடுத்தா...?


நான் 20 வயசிலே 6 மாதம் தனி பங்களாவில் வாழ்ந்தேன், என் ஆண்டியோடது,
பங்களாவுக்குள்ள உங்கள் விட்டக்கப்புறம் தானே ஆண்டியானாங்க...:D

கதை

வீட்டிற்க்கு பின்னாடி 2 வாழைமரம் இருந்துச்சி........

தொடரும்.
நல்லவேளை...
வீ...
தொடரும்.
என்று போடாதவரை சந்தோசம்...
சூப்பர் கதைங்க... :icon_clap:

ஓவியா
01-12-2007, 12:31 PM
செல்வரே...
தொடருமா... முடிஞ்சிடுத்தா...?


பங்களாவுக்குள்ள உங்கள் விட்டக்கப்புறம் தானே ஆண்டியானாங்க...:D

நல்லவேளை...
வீ...
தொடரும்.
என்று போடாதவரை சந்தோசம்...
சூப்பர் கதைங்க... :icon_clap:

:p:p:p:p:p:p:mad::mad::mad::D:D:D:D

தாமரை
01-12-2007, 12:53 PM
இந்த அமாவசை பூஜை உக்ர பூஜையாம்.. கோழி பலிகொடுத்து பலகாரங்கள், பழங்கள், கிழங்குகள் ஏதேதோ வச்சு செய்யற பூசை,, இதில தான் கோடங்கி அந்தப் பிசாசுக்கு என்ன வேணுமோ அதைக் கொடுத்து அடக்கிச் சாந்தப் படுத்துவார்.. அதுக்கு ஒரு சின்ன துணிப்பொம்மையில பேயை அடக்கி பாடை மாத்தி முச்சந்தியில இருக்கற புளிய மரத்தில அறைஞ்சிருவாரு.

இந்த முறை இரண்டு மணி நேரத்திற்குப் பூசை நடந்தது.. கோடாங்கி குதிச்சு ஆடினார்.. உடுக்கை அடித்தார்.. மந்திரம் போட்டார்.. எலுமிச்சை நறுக்கி வீசி, பூசனி வெட்டி, கோழி வெட்டி என்னென்னவோ செய்தார்..

ஆனால் ஆவி அடங்கலையாம்.. மனித உயிர் இல்லாமல் போகமாட்டேன் எனச் சொல்லிடுச்சாம். கோடங்கி என்னென்னவோ செய்தும் பொம்மைக்குள் அடக்க முடியலை...

இம்முறை கோடங்கி சொல்லிட்டுப் போயிட்டாரு.. அடுத்து ஒரு ஆண் உசிரு போகும். அதன் பின்னால்தான் ஆவி அடங்கும்... ஆம்பிள்ளைகள் ஜாக்கிரதையா இருங்க..

ஊர் ஜாக்கிரதையாய் தான் இருந்தது.. ஒரு 10 நாட்கள் கழிந்தது.. அந்த ஞாயிற்றுக்கிழமை காலை பாடை மாத்திப் புளிய மரத்தில் ஊஞ்சலாடிய உடலைப் பார்க்கும் வரை...

தொடரும்

யவனிகா
01-12-2007, 01:47 PM
காலைல அடிக்க ஆரம்பிச்சாரு உடுக்கை....நாங்கெல்லாம் சாமியாட ஆரம்பிச்சாச்சு...யாரையாவது பலி குடுத்தாத் தான் "முற்றும்" போட்டு முடிக்க முடியுமோ என்னவோ?யார் தான் தொங்கினாங்க கடைசில....வெத்தலைல மை போட்டுப் பார்த்தும் தெரியலையே?சீக்கிரம் சொல்லுங்க தாமரை....யாராவது தெரிஞ்ச முகமா...இல்லை கோடாங்கியே தொங்கிட்டாரா?

ஓவியா
01-12-2007, 01:49 PM
அடுத்த பாகம் ப்லீஸ். சூப்பரா போகுது பேய் பிசாசு கதை. :D:D

பூமகள்
01-12-2007, 02:07 PM
அதுக்குள்ல பயந்தா எப்படீம்மா..இது கடைசியில்ல....இன்னும் இருக்கு...
சரி காய்ச்சல் வந்த பொண்ணு....எதுக்கும் அம்மாவைப் பக்கத்துல இருக்கச் சொல்லிட்டு படிம்மா!
வேப்பிலை மந்திரிச்சி..
தாயத்து கட்டிட்டு தான் மீதி படிப்பேன் னா..!:icon_ush::icon_ush:
பேய் கனவு இல்லாம இந்த வாரம் நிம்மதியா தூங்க விடமாட்டாங்க போல இருக்கே..! :eek::sprachlos020:
கதை, சுவையான சம்பவம்னு எங்கு பார்த்தாலும், சாவும்... பேயும்... சோகமுமா இருக்கு..! :frown:

தாமரை
01-12-2007, 04:16 PM
தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது முதல்ல செத்துப் போனாளே அந்தப் பெண்ணின் எதிர் வீட்டுக்காரப் பையன்.. ரெண்டு வீட்டுக்கும் கடும் சண்டை இருந்து வந்தது..

அந்தப் பையனும் அந்தப் பொண்ணும் காதலிச்சதாகவும் அதனால்தான் அவள் வந்து அவனைக் கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டாள் என்றும் சொன்னார்கள்.

இரண்டு பேருக்கும் மத்தியில் காதல் இருந்ததா தெரியாது.. ஆனால் கோடங்கி அடுத்த அமாவாசைப் பூஜையில் இருவரையும் பொம்மைகளில் பிடித்து புளியமரத்தில் அறைந்தார்.. ஜோடியாக..

இன்னும் அந்தப் புளிய மரம் இருக்கிறது.. என் மூத்த அண்ணன் வீட்டருகே! அதைப் பார்க்கும்பொழுது அந்த பிசாசுகள் நினைவுக்கு வருதோ இல்லியோ கோடங்கியும், உடுக்கைச் சத்தமும், சலங்கைச் சத்தமும் மனசில் எழும்.

யாரிடமும் எதையும் அந்தக் கோடங்கி கேட்டதில்லை.. அரிசி வாங்கிச் சென்றாலும் எங்கே சமைத்து எப்படிச் சாப்பிட்டு, ஒருவேளை மளிகைக் கடையில் கொடுத்து காசு வாங்கிக் கொள்வாரோ?

மயில் பீலிகள் கொண்டு நள்ளிரவில் பாடம் போடுவது வேறு ஏதாவது ஊரில் இருக்கிறதா?

அதெல்லாம் விட

கோடங்கிகள் இன்னும் இருக்கிறார்களா? எதென்றாலும் ஊருக்காகச் செய்யும் கோடங்கிகளை உங்கள் கிராமங்களில் பார்த்து இருக்கிறீர்களா?

முற்றும்

மலர்
01-12-2007, 05:12 PM
ம்ம்ம்ம் :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001:
என் தூக்கம் இன்னைக்கு போச்சி...

மலரு: மலரு.. இனிமே இத மாதிரி தலைப்பைப்பாத்தும் உள்ள வருவ...
மனசாட்சி:பயமா தான் இருக்கு.. இருந்தாலும்.. ஹீ..வருவேன்
மலர்: நீ திருந்தவே மாட்ட..
என்னைக்கு நான் சொன்னத நீ கேட்டிருக்க..
கேட்டாதான் உருப்பட்டு இருப்பியே..

அண்ணா...
நான் இதுவரை கோடாங்கிய பாத்ததே இல்லை..
ஆனா..
நானும் கிராமம் தான்... அதனால பேயி பிசாசுன்னு ஊருல இருக்குர வரை பயந்திருக்கேன்..

இப்போ இல்லை.. அடிக்கடி கண்ணாடில முகத்தை பாத்து பழகிடுச்சி..
ஆனாலும்
பேய் படம், திகில் படம் எல்லாம் பாக்கும் போது
பாதிநேரம் முகத்தை போர்வையால மூடிப்பேன்..
மீதி நேரம் பின்புறமா திரும்பிப்பேன்...
அவ்ளோ தைரியம்...

நீங்க எழுதுறது தான் ரொம்ப திக் திக்குன்னு இருக்கு...
அப்படியே அந்த வீடு.. வாசல்ல சாக்கு..
எதிர்புறமா சுடுகாடு....
புளிய மரம்ன்னு கொஞ்சம் கற்பனை பண்ணவே
திகிலா இருக்கு..

தாமரை
02-12-2007, 12:43 AM
கற்பனையாய் எழுதுவதென்றால் இன்னும் நிறைய திகிலாய் இருக்கும். நடந்ததை மட்டும் எழுதுவதால் இங்கே குறைச்சல் திகில்தான்..


அடுத்து, திகில் சம்பவம் எழுதலாமா? வேணாமா?

ஓவியன்
02-12-2007, 02:14 AM
ஹூம் என்ன செய்ய...?!!

பயந்து பயந்து படித்து முடித்தேன்.....

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகள், நம்பிக்கைகள் அனுபவங்கள் மூலம் கட்டியெழுப்பப் படுகின்றன. அவரவர் அனுபவத்திலிருந்தாலே அவரவர் நம்பிக்கைகள் தெளிவாகும்......

இங்கே சுடலைக்கு முன்னே உள்ள வீட்டிலிருந்த செல்வன் அண்ணாவின் அனுபவங்களும் வித்தியாசமானவை. உணர்ந்துகொள்ள சிரமமானவை. ஏனெனில் அந்த அனுபவத்தை எல்லோரும் அடைவது எளிதல்ல....

இருந்தாலும் அந்த அனுபவத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துயது சொல்வேந்தரின் வார்த்தைப் பிரயோகங்கள், பாராட்டுக்கள் அண்ணா...!!

நான் இருந்தது கூட கிராமம் தான் ஆனால் கோடங்கி பற்றிக் கேள்விப் பட்டதில்லை. ஆனால் திகில் நாவல்களில் படித்துள்ளேன், இப்போது இந்தப் பதிவிலும்..... :)

ஓவியன்
02-12-2007, 02:53 AM
செல்வன் அண்ணா அந்த பெண்ணின் இறப்பில் உண்மையாக என்ன நடந்தது...??

பாதி எரிந்த பெண்ணை, கிட்டத்தட்ட கருணைக் கொலை போல் முழுவதுமாக எரித்தார்களா..??
கேட்கவே பயங்கரமாக இருந்தது, அரச சட்டங்கள் இந்த நடைமுறையை அனுமதித்தனவா...??

தீபன்
02-12-2007, 03:17 AM
எங்க ஊர்ல இப்பிடியானவர்களை நான் காணவில்லை. இந்திய சினிமா, கதைகள் மூலமாக அறிந்திருக்கிறேன்... சம்பவத்தைவிட அது சொல்லப்பட்டவிதம் அருமை. திகில் கதையை தொடருங்கள் அண்ணா..!

மயூ
02-12-2007, 03:37 AM
என்ன கேள்வியிது... தொடர்ந்து எழுதுங்கோ...!!!
போய்... குடு குடுப்பைக் காரன் என்பதெல்லாம் நாங்க பார்த்ததில்லை!!!!

ஆனால் இப்படியானர்வகள் அதிசயமே..!! பேய்களில் எனக்கு நம்பிக்ககையில்லை ஆனாலும் சிறுவயதில் கந்தசஷ்டி கவசம் சொல்வது.. காலையில் டியூசன் கிளாஸ் செல்லும் போது சிவபுராணம் சொல்லிக்கொண்டு போவது.. பெரிய மரங்களைக் கண்டால் விலத்திக்கொண்டு போவது என்று பல அனுபவங்கள் உண்டு.. உங்கள் அனுபவத்தைக் கேட்டால் திகிலா இருக்குதுங்கோ!!!! இப்படியெல்லாம் நடக்குமா?? அந்தக் கொடங்கியை பிறகு யாரும் பார்க்கேலியோ?? இப்பவும் இருக்கிறாறோ????

சிவா.ஜி
02-12-2007, 03:56 AM
[QUOTE=மலர்;
நானும் கிராமம் தான்... அதனால பேயி பிசாசுன்னு ஊருல இருக்குர வரை பயந்திருக்கேன்..

இப்போ இல்லை.. அடிக்கடி கண்ணாடில முகத்தை பாத்து பழகிடுச்சி..
[/QUOTE]
தாமரை உங்களோட அடுத்தப் பேய்கதைக்கு கதாநாயகி ரெடி.அதை சினிமாவா எடுத்தாலும் இவங்களையே போட்டுடலாம்.மேக்கப் செலவு மிச்சம்..ஹி...ஹி...

தாமரை
02-12-2007, 03:57 AM
செல்வன் அண்ணா அந்த பெண்ணின் இறப்பில் உண்மையாக என்ன நடந்தது...??

பாதி எரிந்த பெண்ணை, கிட்டத்தட்ட கருணைக் கொலை போல் முழுவதுமாக எரித்தார்களா..??
கேட்கவே பயங்கரமாக இருந்தது, அரச சட்டங்கள் இந்த நடைமுறையை அனுமதித்தனவா...??


அந்தப் பெண் இறந்த பின்னரே எரித்தார்கள். வெந்த உடல் சாம்பலாவதற்கே இரண்டாவது எரிப்பு!.. கரியாய் போன தோல் உரிந்து செந்நிறம் காட்டி, பார்க்கவே பயங்கரமாய் இருந்ததாம்.

கோடங்கி (இது வேறு கோடங்கி) இன்னும அந்த ஊரில் உண்டு, என் அண்ணிக்கு பேயோட்ட வந்ததும் அந்த் ஊர் கோடங்கி தான். ஆனால் சுடுகாட்டுப் பூஜை இன்னும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. நான் இருந்த பல கிராமங்களில் கோடங்கி என்றால் யாரென்றே தெரியாது..

கோடங்கிகள் கெட்டவர்கள், மந்திரவாதிகள், பயங்கரமானவர்கள் என்ற எண்ணம், அம்புலிமாமா, பொம்மைவீடு, பாலமித்ரா போன்ற சிறுவர் இதழ்களைப் படித்து ஒரு கற்பனை வைத்திருந்த எனக்கு இந்தக் கோடங்கி எதையும் எதிர்பார்க்காமல் வாழ்வது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அது மூட நம்பிக்கையாய் இருந்தாலும் சரி, அதில் இழையோடிக் கிடந்த பொது நலம் சிந்திக்க வேண்டியது.

பயந்து போன தங்கைகள் எல்லாம் வாங்க கோடங்கி கிட்ட போய் மயிலிறகு பாடம் போட்டுகிட்டு வந்திரலாம்.;)

மலர்
02-12-2007, 04:39 AM
பயந்து போன தங்கைகள் எல்லாம் வாங்க கோடங்கி கிட்ட போய் மயிலிறகு பாடம் போட்டுகிட்டு வந்திரலாம்.;)
அஸ்கு பிஸ்கு...
நான் வர மாட்டேன்ப்பா....:icon_rollout::icon_rollout:
என்ன ஒரு வில்லத்தனம்...:eek::eek::eek:

mukilan
02-12-2007, 05:27 AM
நக்கீரர் இப்போ விட்டலாச்சாரியர் வேடம் போட்டிருக்கீரோ? நல்லாத்தான்யா பயம் காட்டினீங்க. நல்லாக் கெளப்புறாரய்யா பீதியை! நாங்கள்லாம் நாயர் கடைல சிங்கிள் டீல ரெண்டு கட்டிங் போட்டு பேயும் நானுமா டீ குடிச்சவய்ங்க. ஹ! எங்ககிட்டேவா?

lolluvathiyar
02-12-2007, 05:59 AM
சேலம் டவுனே பயந்ததைப் பார்த்திருக்கேன்.
இதையெல்லாம் சேலத்துப் பெருசுங்க கிட்ட கேட்டுப் பாருங்க.. சொல்லுவாங்க..

கோவை பகுதியில் இந்த பயம் குரைவுதான். ஆனால் ஒரு வேடிக்கை என்னன்னா, எங்க கிராமத்துல மக்கள் இப்படி பயம் இல்லாம இருக்காங்க, அதே கோவை டவுனுக்கு ரொம்ப பக்க*த்துல நான் முதல்ல குடியிருந்த தெருவுக்கு கொஞ்ச தள்ளி ஒரு சேரி இருந்தது, அங்க ஒரு நாள் எல்லா வீட்டலயும் வேப்பதலை கட்டி இருந்தாங்க, ஏதோ ரத்த காட்டேரி வருது சொல்லி கட்டினாங்க. கிராமத்துல இல்லாத இந்த மூட நம்பிக்கை நகரத்துல இருக்கு. என்ன சொல்ல.

ஐயை சூப்பரா கொண்டு போறீங்க. முக்கிய கட்டத்துல தொடரும் போட்டுரீங்க. சீக்கிர சொல்லுங்க. இல்லீனா நம்ம அமரனே குட்டிசாத்தானா வந்துருவாராம்

கண்மணி
02-12-2007, 06:04 AM
கோவை பகுதியில் இந்த பயம் குரைவுதான். ஆனால் ஒரு வேடிக்கை என்னன்னா, எங்க கிராமத்துல மக்கள் இப்படி பயம் இல்லாம இருக்காங்க, அதே கோவை டவுனுக்கு ரொம்ப பக்க*த்துல நான் முதல்ல குடியிருந்த தெருவுக்கு கொஞ்ச தள்ளி ஒரு சேரி இருந்தது, அங்க ஒரு நாள் எல்லா வீட்டலயும் வேப்பதலை கட்டி இருந்தாங்க, ஏதோ ரத்த காட்டேரி வருது சொல்லி கட்டினாங்க. கிராமத்துல இல்லாத இந்த மூட நம்பிக்கை நகரத்துல இருக்கு. என்ன சொல்ல.

ஐயை சூப்பரா கொண்டு போறீங்க. முக்கிய கட்டத்துல தொடரும் போட்டுரீங்க. சீக்கிர சொல்லுங்க. இல்லீனா நம்ம அமரனே குட்டிசாத்தானா வந்துருவாராம்

வாத்யாரே கதையில ரொம்ப முழுகிட்டீங்களா? அண்ணன் அப்பவே முற்றும் போட்டாச்சு

தாமரை
02-12-2007, 06:47 AM
தாமரை உங்களோட அடுத்தப் பேய்கதைக்கு கதாநாயகி ரெடி.அதை சினிமாவா எடுத்தாலும் இவங்களையே போட்டுடலாம்.மேக்கப் செலவு மிச்சம்..ஹி...ஹி...


கதாநாயகியும் ரெடிதான்.. பேயும் ரெடிதான்,, (அதான் நீங்க இருக்கீங்களே!)(மலர் 100 ஐ-கேஸ் இந்தப்பக்கம் தள்ளுங்க)

ஆண்கள் மட்டும் தான் பேயாய் ஆவார்கள். பெண்கள் பிசாசுகள்தான். அழகிய பிபாசு - ஸாரி - பிசாசு, மோகினிப் பிசாசு, கொள்ளிவாய்ப் பிசாசு (தம் அடிக்கிற பொண்ணோ - பென்ஸ்), காதல் பிசாசு இப்படி பலவகைப் பிசாசுகள் உண்டு..

இதயம்
02-12-2007, 07:06 AM
இந்த கதைய படிச்சிட்டு நான் பயப்படவே இல்லீங்கன்னு சொன்னா நீங்க நம்பணும். ஆனா, நீங்க நிச்சயம் நம்பமாட்டீங்க..!! வீரம்கிறதே பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது தான்..! அந்த வகையில் நான் பெரிய வீரன்..! சாமக்கோடாங்கின்னு தலைப்பை படிக்கும் போதே அடிவயித்துல ஜிலீர்-னு ஒரு சிலிர்ப்பு ஊடுருவிப்போனதை என்னால் தவிர்க்க முடியல. அதனாலேயே இதை படிச்சுத்தான் ஆகணுமான்னு இந்த திரிய முறைச்சி, முறைச்சி பார்த்திட்டு போவேன். எல்லோரும் போனதை பார்த்துட்டு புலிய பாத்து பூனை சூடு போட்டுக்கிட்ட மாதிரி இன்னைக்கி நானும் படிச்சேன்.! பயத்தில் விறைச்சேன்.!! எழுதிய சம்பவங்கள் திகில்னா அதை எழுத பயன்படுத்துன வார்த்தைகள் திகிலோ திகில்.!! தாமரை திட்டம் போட்டு தான் இதை எழுதியிருக்கார். பயம்கிறது தவிர்க்க முடியாத ஒரு வினோத உணர்வு தான். இரவில் வெளிச்சமான, ஆள் நடமாட்டமுள்ள ஒரு இடத்துக்கும், அதே இடம் ஆள் யாரும் இல்லாம, இருட்டு சூழ்நிலையில நாம இருக்கிறப்போ நமக்கு உண்டாகிற உணர்வுல நிறைய வித்தியாசம் இருக்கு..! அந்த மாதிரியான இடங்கள்ல நாம் இருக்கும் போதோ, கடக்கும் போதோ இதய துடிப்பு அதிகமாகிறதும், அதன் தொடர்ச்சியா வேர்வை சுரப்பில் ஓவர்டைம் எடுத்து வேலை பார்க்கிறதும் இயல்பா நடக்கிற விஷயம். அந்த நேரம் இருட்டில் ஏதாவது மாய தோற்றமோ, வினோத சத்தமா வந்தா அடுத்த நாள் வீட்டு வாசல்ல நிறைய கூட்டம் இருக்கும்.

நானும் சின்ன வயசை கிராமத்துல கழிச்சவன் தான். புளிய மரம், மரணம், சுடுகாடு பார்த்த எனக்கு சாமக்கோடாங்கி நட்பு மட்டும் கிடைக்கவேயில்லை. இந்த சமூகம் சொல்லிக்கொடுத்தபடி ஒரு குறிப்பிட்ட வயசு வரை எனக்கும் சுடுகாட்டை கடக்கும் போது திக், திக்-னு தான் இருக்கும். இத்தனைக்கும் எந்த ஒரு பயமும் தராத சத்தமில்லாத இடம் தான் அது. ஆனா, அந்த சத்தமில்லாத ஏகாந்தம் தான் பெரும் கிலியை அப்ப ஏற்படுத்தும். சுடுகாட்டு மரத்துல ஆணி அடிக்கிற கதையை ரொம்ப ரசிச்சி படிச்சிருக்கேன். ஒவ்வொரு மனுஷனும் தனக்குள்ள இருக்கிற பய உணர்ச்சியை வெளிக்காட்ட வெட்கப்படுறதை ரொம்ப எதார்த்தமா உலகத்துக்கு சொல்ற கதை அது..! உலகத்துல பேய், பிசாசு, மோகினி இதெல்லாம் இல்லைங்கிறது என் கருத்து. ஆனா, அது சம்பந்தமான பயம் மட்டும் எல்லார்க்கிட்டயும் இருக்கு..!

தாமரையோட எழுத்து எனக்கு ரொம்ப புடிக்கும். காரணம், அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் புதைந்துகிடக்கும் ஆழமான கருத்துக்கள். நாவலாசியர் ராஜேஷ்குமார் இது மாதிரி திகில் கதையை ரொம்ப நல்லா எழுதுவார். அதை இராத்திரியில படிக்க பயந்துக்கிட்டு பகலில் படிச்ச கதையெல்லாம் இருக்கு..! அந்த வகையில் ஒரு பயங்கரமான திகில் அனுபவத்தை, திகிலான வார்த்தைகளை வச்சி எழுதி, என்னை திகில் படுத்திட்டார். இனி தூங்கிக்கிட்டிருக்கும் போது உச்சா வந்தா இந்த கதை ஞாபகம் வராம இருக்கணும். அப்படி வந்ததுன்னா நான் ஃபிலிப்பினோக்களின் முறையை பின்பற்ற வேண்டியிருக்கும்.!! ஆனா, நான் ஊர்ல இருந்தா எனக்கு அந்த பயமே இருக்காது. காரணம், 4வது படிக்கிற என் தங்கச்சிப்பையனை துணைக்கு கூட்டிபோய்க்குவேன்..! அப்படி பார்க்காதீங்க.. உங்களைப் பார்த்தாலே பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு..!!

மலர்
02-12-2007, 07:51 AM
நான் ஊர்ல இருந்தா எனக்கு அந்த பயமே இருக்காது. காரணம், 4வது படிக்கிற என் தங்கச்சிப்பையனை துணைக்கு கூட்டிபோய்க்குவேன்..! அப்படி பார்க்காதீங்க.. உங்களைப் பார்த்தாலே பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு..!!

இதயம் அண்ணா....
எங்கேயோ போயிட்டீங்க.... :D:D

அமரன்
04-12-2007, 03:09 PM
சாமக்கோடாங்கி ஊருல என்ன செய்திருக்காருன்னு புரிஞ்சுதுங்கோவ். அவர் பெரிய புலனாய்வாளர்போலும். அந்தப்பொண்ணும் பையனும் காதலிச்சதை தெரிந்து வெச்சிருக்கார். அதை வெச்சு நாககம் ஒன்றை அரங்கேற்றி இருக்கார் போலும்..

ஒருவேளை இப்படி இருக்குமோ? தான் சொன்னதை நிசமாக்க அந்தபையனை அவரே கொன்று, தற்கொலை என்று ஊரை நம்பவைத்திருப்பாரோ.. நீங்கள் சொன்ன நிகழ்வு முற்றுப்பெற்ற இடத்திலிருந்து கதை ஒன்று தொடங்கலாம் போல இருக்கே..

திரைப்படங்களிலும், சாமியின் நாவல்களிகும் மட்டும் பழகிய பாத்திரம் கோடாங்கி. அதை விட வேறு ஒன்றும் தெரியவில்லை

அமரன்
04-12-2007, 03:10 PM
கற்பனையாய் எழுதுவதென்றால் இன்னும் நிறைய திகிலாய் இருக்கும். நடந்ததை மட்டும் எழுதுவதால் இங்கே குறைச்சல் திகில்தான்..
அடுத்து, திகில் சம்பவம் எழுதலாமா? வேணாமா?
எழுதுங்க எழுதுங்க... இதைவிட திகிலான சம்பவமாகச் சொல்லுங்கள்..

யவனிகா
04-12-2007, 03:50 PM
அடடா...கடைசில காதல்ல கதை முடிஞ்சு போச்சே...நானும் கோடங்க்கிக்காரனை நெறையப் பாத்திருக்கிறதால பயப்படவேயில்லையே...

வாத்தியாரண்ணா...கையில ஐந்து முக விளக்கும்,சாட்டையும் வெச்சிட்டு இப்பவும் எங்க வீதிக்கு ஒரு கோடங்கிக்காரர் வருவார்.என்னப் பாத்தா "எப்ப பாப்பா ஊரிலிருந்து வந்தேன்னு கேட்பார்...போனமுறை பாத்தப்ப பாப்பா எனக்கொரு செல்போன் வாங்கிட்டு வந்திருக்கக் கூடாதான்னு கேட்டுட்டு திரிமையால பொட்டு வெச்சு விட்டார். அந்த கோடங்கி உங்க வீட்டுக்கு வந்தா நான் விசாரிச்சதா சொல்லுங்க அண்ணா...

lolluvathiyar
05-12-2007, 06:17 AM
நான் இருந்த பல கிராமங்களில் கோடங்கி என்றால் யாரென்றே தெரியாது..



சாமகோடங்கிகள் கிராமங்களில் மட்டுமல்ல இன்னும் நகரங்களில் சுற்றுகிறார்கள் (கோவையில்). குடுகுடுபைகாரன் குரைந்து விட்டார்கள். ஆனால் எங்க கிராமத்துல சுடுகாட்டு சமாசாரம் எல்லாம் கிடையாது.



கையில ஐந்து முக விளக்கும்,சாட்டையும் வெச்சிட்டு இப்பவும் எங்க வீதிக்கு ஒரு கோடங்கிக்காரர் வருவார்.
திரிமையால பொட்டு வெச்சு விட்டார்.


இவர தான் சொன்னேன். ஆனா யவனிகா இவரு சாதர்ன கோடாங்கி சாம கோடாங்கி இல்ல, சாமகோடாங்கி டவுனுகுள்ள சுத்தரதில்லை. கிராமங்களில் கூட வளுவில தான் சுத்துவாங்க.



இந்த சமூகம் சொல்லிக்கொடுத்தபடி ஒரு குறிப்பிட்ட வயசு வரை எனக்கும் சுடுகாட்டை கடக்கும் போது திக், திக்-னு தான் இருக்கும்.

ஆமாம் கிராமங்களில் சுடுகாட்டு பக்கம் சிறியவர்களை விட மாட்டாங்க. பயமுறுத்துவாங்க, காரனம் அங்க தான் கஞ்சா கள்ள சாராயம் விக்கர இடம். பினம் எரிந்து முடிகிற காட்சியை அருகில் இருந்து பார்த்தா சிலருக்கு அலர்ஜியா இருக்கும், அதிலும் பாதியில வருமே அந்த சதைகள் கருகர வாசம் கொஞ்ச குமட்டும்.

சிவா.ஜி
05-12-2007, 06:38 AM
பினம் எரிந்து முடிகிற காட்சியை அருகில் இருந்து பார்த்தா சிலருக்கு அலர்ஜியா இருக்கும், அதிலும் பாதியில வருமே அந்த சதைகள் கருகர வாசம் கொஞ்ச குமட்டும்.

ரொம்ப முக்கியம்......என்ன வாத்தியாரே....ஏற்கனவே எல்லோரும் பயந்துபோய் கெடக்குறாங்க....இதயம் என்னடான்னா...உச்சா போகக்கூட ராத்திரியில எந்திரிக்கறதில்லன்னு சொல்றாரு...இப்ப போய் பாதி எரிஞ்ச பிணம்...,சதை கருகுற வாசம்..அது இதுன்னுகிட்டு....

அக்னி
05-12-2007, 09:47 AM
கோடங்கி பற்றி நான் இந்த திரி வந்ததால்தான் முதன்முதலாக அறிந்து கொண்டேன்.
சிலருக்கு, அமானுஷ்ய சக்திகள் இருப்பது உண்மை, ஏற்றுக்கொள்ளக்கூடியதே. விஞ்ஞானம் கண்டறிய முடியாத விந்தைகள். வித்தைகளா என்று சொல்ல முடியாத நிகழ்வுகள்.
திகில் + சுவாரசியம் கலந்து தந்துவிட்டு, அனைவரையும் நுனி இருக்கைக்குத் தள்ளிவிட்டு,
தொடர்ந்தும் எழுதலாமா என்று ஒரு கேள்வி...
எழுதுங்கோ அண்ணா...

ஓவியா, சிவா.ஜி, lolluvathiyar, மலர், பூமகள், அமரன், அக்னி, யவனிகா, ஓவியன், மன்மதன், இதயம், mukilan, செல்வா, மதி, தீபன், மயூ, கண்மணி, நேசம்

இவங்க எல்லாரும் வெடவெடன்னு நடுங்கிறத பாக்கிறதே ஆனந்தமா இருக்கு (ஹி... ஹி... நானும் தாங்க...).
இதவிட திகிலா எழுதுங்க...

கீதம்
27-04-2012, 12:56 AM
ஒரே மூச்சில் படித்து முடித்தேன். என்ன ஒரு திகிலான அனுபவம். சுடுகாட்டுக்கு அருகில் குடியிருக்கும் அனுபவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அந்த வாய்ப்பை, மிகவும் திகில் வாய்ந்த எழுத்துக்களால் அனைவரையும் அனுபவிக்கச் செய்த உங்கள் திறமையைப் பாராட்ட வேண்டும்.

சுடுகாட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்தபோது ஏற்பட்ட மிகவும் மோசமான பயங்கரமான அனுபவங்களை கலையரசி அக்கா சொல்லக் கேட்டிருக்கிறேன். முடிந்தால் அவர்களுடைய அனுபவத்தையும் எழுதச் சொல்லலாம்.