PDA

View Full Version : ஜோடி

ஆதி
30-11-2007, 04:11 PM
உன்னையும்
என்னையும்
கேட்காமலே முடிவு செய்தனர்
நம் பெற்றோர்..

உனக்கும் என்னையும்
எனக்கும் உன்னையும்
பிடிக்கதானில்லை..

இருந்தாலும்..
கடத்திவிட்டோம்
பதிமூன்று ஆண்டுகளை..

வெளியே எங்கு
சென்றாலும் பார்க்கிற
அனைவரும் சொல்கிறார்கள்
நம்மை
'அம்சமான ஜோடி'

-ஆதி

அமரன்
30-11-2007, 06:06 PM
மேற்குலகத்துக்கு வந்த புதுதில் காலநிலை ஒவ்வாமை வறுத்தெடுக்க, சொந்தங்களின் பிரிவுத்துயர் வாட்டி வதக்க வாட்டம் கண்டது எனது உடலும் உள்ளமும். காலச்சக்கரம் சுழல, எனது காலத்தின் சதியால் நான் மேற்குலகில் உழல, ஒரு கட்டத்தில் காலநிலைக்கு இசைவாக்கம் அடைந்தது உடல்.. துயர்துடைத்து மகிழ்வுக்குள் அடைக்கலாமனது மனம்..

விருப்பம் என்பது இல்லாமலே எத்தனை சம்பவங்கள் வாழ்வில்.. சிலர் வாழ்க்கையே விருப்பமில்லாமல். காலம் விருப்பபட வைக்கின்றது.. சமூகக் கடப்பாடுகள் துணையாக...

இப்படியான நேரங்களில் சமூகத்தில் உள்ள சில கடப்பாடுகள் சரியானதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஆதி
01-12-2007, 01:04 PM

தொடர் பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி..

-ஆதி

நேசம்
01-12-2007, 07:40 PM
சில விஷயங்கள் நம் விருப்பம் இல்லாமல் நடக்கலாம்.ஆனால் கால போக்கில் அது நம்முடைய விருப்பத்துக்குரிய விச்யமா மாறி விடும் நம்முடைய விருப்பமில்லாமல்.வாழ்த்துக்கள் ஆதி

ஆதி
02-12-2007, 04:18 AM
சில விஷயங்கள் நம் விருப்பம் இல்லாமல் நடக்கலாம்.ஆனால் கால போக்கில் அது நம்முடைய விருப்பத்துக்குரிய விச்யமா மாறி விடும் நம்முடைய விருப்பமில்லாமல்.வாழ்த்துக்கள் ஆதி

விதியை மதியால்
வெல்லலாம் - ஈங்கு
மதி விதியை
வென்றது..

உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்

நன்றிகள் உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் ஊட்டத்திற்கும்..

-ஆதி

meera
02-12-2007, 10:31 AM
ஆதி நல்ல கருத்து. ஆனால் பதின்மூன்று ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதென்றால் பிடித்து போனது என்றே அர்த்தம்

ஆதி
02-12-2007, 01:25 PM
ஆதி நல்ல கருத்து. ஆனால் பதின்மூன்று ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதென்றால் பிடித்து போனது என்றே அர்த்தம்

பிடிக்காமல் பிணைக்கப்பட்டவர்கள்தான், பிடிமானமானபின் பிணைந்து கொண்டார்கள்..

-ஆதி