PDA

View Full Version : நிலையானவளே...!

யாழ்_அகத்தியன்
30-11-2007, 01:18 PM
என் சோம்பேறி மனசு
செய்த வீரமான செயல்

உன்னைக் கண்டதும்
ஓடிப்போய் உன்னைத்
தொட்டுவிட்டு திரும்பி
வராததுதான்

*

கையசைத்துவிட்டு
கல்லூரிக்குள் நுழைந்து
விடுகிறாய் நீ

விடை பெற்றுப்
போகும் கடைசி நாள்
மாணவன் போல்

வீடு செல்ல
மனமில்லாமல் நான்

*

நம் காதலுக்கு முதல்
எதிரி நேரம்தான்

பார்
நாம் சேர்ந்திருக்கும் போது
மட்டும்தான் போட்டி போட்டு
ஓடுகிறது

*

உன்னைக் காதலிக்க
வேண்டாம் என்பவர்களை
கூட்டி வா

ஒரு நிமிடம் நீ
இல்லாத என்னை
கொடுத்துப் பார்ப்போம்

சமாளிக்க முடிந்தால்
சமாதானம் பேசுவோம்

*

என் கைகளுக்கு இதுவும்
தேவை இன்னும் தேவை

என்னை எதுவும் கேக்காமலே
உன்னை அணைத்து பழகிவிட்டு

நீ தூரம் இருக்கிறாய் என்று
தெரியாமல் தேடிக் களைக்கிறது

-யாழ்_அகத்தியன்

பென்ஸ்
30-11-2007, 01:52 PM
ஆகா...
அகத்தியன்...
வாசிக்கும் போது ஒரு முறை என் உதடுகள் என்னையும் மீறி ஒருமுறை விரிந்தன...
சில வரிகள் எப்பவும் அப்படிதான்...
அதை எழுதும் கைகள் மட்டும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை...
வாழ்த்துகள்....

யாழ்_அகத்தியன்
30-11-2007, 02:47 PM
ஆகா...
அகத்தியன்...
வாசிக்கும் போது ஒரு முறை என் உதடுகள் என்னையும் மீறி ஒருமுறை விரிந்தன...
சில வரிகள் எப்பவும் அப்படிதான்...
அதை எழுதும் கைகள் மட்டும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை...
வாழ்த்துகள்....

மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு

சுகந்தப்ரீதன்
01-12-2007, 08:07 AM
அழகானவள், அசத்தலானவள், உறவானவள், உயிரானாவள், இம்சையானவள், நிலையானவள்,.... இன்னும் எத்தனை அவள்களோ அகத்தியரின் கைகளிலும் கவிதைகளிலும்.... வாழ்த்துக்கள் அகத்தியா..!

அமரன்
06-12-2007, 09:58 AM
கடந்தகாலங்களை
மீட்டிப்பார்ப்பதில் அலாதி சுகமிருக்கும்.
கடந்த காலங்களை மீண்டும் பார்ப்பத்தில்..
சொல்லவும் வேண்டுமா?:icon_b:

யாழ்_அகத்தியன்
06-12-2007, 03:06 PM
அழகானவள், அசத்தலானவள், உறவானவள், உயிரானாவள், இம்சையானவள், நிலையானவள்,.... இன்னும் எத்தனை அவள்களோ அகத்தியரின் கைகளிலும் கவிதைகளிலும்.... வாழ்த்துக்கள் அகத்தியா..!

உங்க அசத்தலான வாழ்த்துக்கு மிக்க நன்றி

யாழ்_அகத்தியன்
06-12-2007, 03:07 PM
கடந்தகாலங்களை
மீட்டிப்பார்ப்பதில் அலாதி சுகமிருக்கும்.
கடந்த காலங்களை மீண்டும் பார்ப்பத்தில்..
சொல்லவும் வேண்டுமா?:icon_b:

ம்ம்ம் உண்மைதான் மிக்க நன்றி