PDA

View Full Version : தலைநகருக்கு(டெல்லி) தலைகுனிவு



namsec
30-11-2007, 01:05 PM
உலகிலேயே இரண்டாவது மிக மோசமான விமான நிலையம் என்ற பெயரை டில்லி விமான நிலையம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த ஃபாரின் பாலிசி என்ற பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில், பயணிகளுக்கு பெரும் துயரத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும் விமான நிலையங்கள் ஐந்தை தேர்ந்தெடுத்தார்கள். அதில் டில்லி விமான நிலையத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் ஐ.டி.தொழில் கொடி கட்டிப்பறக்கும் ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் நவீன வசதிகளைக்கொண்ட புத்தம் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டிருக்கும் போது, டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் மட்டும் இன்னும் பழைய விமான நிலையத்திலேயே இயங்கி இருக்கிறது. அங்குள்ள பாத்ரூம்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறதாம். அங்குள்ள ஊழியர்கள், டாய்லெட் பேப்பருக்கு கூட வெளிநாட்டவர்களிடம் காசு கேட்கிறார்களாம். மேலும் டெர்மினல் இல் ஆங்காங்கே உபயோகப்படுத்தப்பட்ட சிரிஞ்ச், சிதறி கிடக்கிறதாம். லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு வேகமாக இந்த விமான நிலையத்திற்குள் செல்ல முடியாது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே பெரும் கூட்டம் காத்திருக்கும். லக்கேஜ் பெல்ட்டை கடைசி நிமிடத்தில் தான் மாற்றுவார்கள். இவ்வாறு அந்த பத்திரிக்கையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. செனேகல் நாட்டில் லியோபோல்ட் செடார் செங்கோர் விமான நிலையம், ரஷ்யாவில் இருக்கும் மினரால்னே வோடி விமான நிலையம், பாக்தாத் சர்வதேச விமான நிலையம், பாரீசில் இருக்கும் சார்லஸ் தே காவ்லி விமான நிலையம் ஆகியவைகள் மற்ற மோசமான நிலையங்களாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கையில் வந்திருக்கும் கட்டுரை குறித்து டில்லி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் ஏதும் சொல்லவில்லை.


நன்றி தினமலர்

மன்மதன்
30-11-2007, 02:54 PM
அப்படி இருந்தால் இனி அதனை சீர் செய்யும் முயற்சிகள் எடுப்பார்கள் என நம்புவோம்..

நேசம்
30-11-2007, 07:25 PM
சின்ன நாடுகள் கூட நவின வசதிகள் கொண்ட விமான நிலையத்தை வைத்துள்ளன.ஆனால் அடுத்த வல்லரசு என்று சொல்லி கொள்ளும் இந்தியா,தனது தலைநகரத்து விமான நிலையத்தை எப்படி வைத்து கொள்ள வேண்டும்.மன்மதண்ணா நம்புவது போல் நம்ப தான் முடியும்/

சிவா.ஜி
01-12-2007, 03:54 AM
மிக உண்மையான செய்தி.அனுபவித்திருக்கிறேன்.கொடுமைடா சாமி.சென்னை ஏர்போர்ட் எவ்வளவோ பரவாயில்லை.(ஆனால் அதுவே நம்ம அன்புரசிகனுக்கு பிடிக்கவில்லை.நல்லவேளை...தில்லிக்குப் போகவில்லை)

தங்கவேல்
02-12-2007, 05:53 AM
எது நம்ம ஊரு பஸ் ஸ்டான்டு போல இருக்குமா ? ரோடெல்லாம் எப்படி குண்டும் குழியுமா இருக்குமா ?