PDA

View Full Version : மீண்டும் தொடங்கிற்று



அகத்தியன்
30-11-2007, 08:57 AM
உன் ஞாபகக் காயங்கள் ஆறிப்போகும் காலங்களில்
ஓர் இலையான் போல
உன் தொலைபேசி அழைப்புகள்
என் மனசின் காயங்களை சுரண்ட..

மீண்டும் தொடங்கிற்று
மறதிக்கும் உன் ஞாபகங்களிற்குமிடையிலான சண்டை.


என்றோ மறந்த,
உன் புன்னகைகள்
உன் முத்தங்கள்
அடிக்கடி சந்திக்கும் அப்பூமரம்
கல்லூரி வாசிகசாலை
என எல்லாம்
தூசு தட்டப்படுகின்றன.
உன் அழைப்பினால்.


முடிகின்ற உறவில்
இன்னும் நீ முற்றுப்புள்ளி இடவில்லையா?
அழுது கொண்டு
நீ சொன்ன ஓர் மழை நாள் கூட
இன்று போல் உள்ளது.

ஓவியன்
09-12-2007, 03:06 PM
இம்மைக்கு ஒரு மறுமை...
இரவுக்கு ஒரு பகல்...
கோடைக்கு ஒரு மாரி...

என்று எல்லாவற்றிலும் ஓர் சுழற்சி இருக்க..
காதலில் மட்டும் அது இருக்க கூடாதா என்ன...???

கடந்த கால கசப்பை மறந்து
நம்பிக்கையுடன் நம்பிக் கை பிடிக்கத்தான்
அந்த அலைபேசி சிணுங்கலோ...!!

அலட்சியம் செய்யாதீர்கள்
அனுசரித்துத் தான் பாருங்களேன்
அமிர்தமும் கிட்டக்கூடும்.....