PDA

View Full Version : உன் அழைப்புகள் வரும் வரை



அகத்தியன்
30-11-2007, 08:53 AM
பூக்கள் உதிரும் ஓர் மாலையில்
என்னோடு பார்வை பகிருவாய்.
அம்மரம் உன்னையும் என்னையும் ஆசிர்வதிக்கும்.
சாட்சியாகிப்போன மரம்-
இன்னும்,
என்னையும் உன்னையும்,
அடம்பிடித்து பெற்ற முத்தங்களையும்,
ஞாபகம் வைத்திருக்கும்.
எனக்கு மறந்து போயிற்று
உன் அழைப்புகள் வரும் வரை.

எவ்வாறானாலும்,
உன்னில் இருந்து
ஓடி ஒளியவே எத்தனிக்கின்றேன்.
இன்னுமொரு பூமரம்,
இன்னுமொரு கண்ணீர்,
இன்னுமொரு ஞாபகத்தொல்லைகள்
எனக்குள் தேவையில்லை.

அமரன்
04-12-2007, 10:31 AM
திரைப்படங்களிலும், இளவேனில்காலத்து தெருக்களிலும் கண்ட காதல்சில்மிஷங்களை, இன்னொரு தடவை கண்களுக்கு விருந்தாக கொண்டு வரும் வருணனை வரிகள்.

என்றுமே அழியாத
குணங்கள் பல இயற்கைக்கு உண்டு.
வசீகரித்தல் அதில் முக்கியமான ஒன்று.
எப்படித்தான் ஓடி ஒளிந்தாலும்
அதனிடத்தில் இருந்து தப்ப முடியாது..

காதலும் இயற்கையே..
பாராட்டுக்கள் தொடருங்கள்..

சிவா.ஜி
04-12-2007, 10:49 AM
சாட்சி நின்ற மரம் நினைவு வைத்திருக்க...நிகழ்வின் நாயகர்கள் இருவேறு திசை பயணிக்க...மீண்டுமிணையும் தருணம் வேண்டாமென...ஞாபகக் கத்தியால் நினைவுப் புண்ணைக் கீறவேண்டாமென நாயகன் மறுதலிக்க...பெற்ற ஞாபகங்களுடன் பூமரம் மட்டும் தனியாய்.
அழகான கற்பனை.வாழ்த்துகள் அகத்தியன்.

மனோஜ்
04-12-2007, 12:33 PM
மனது ஒரு குரங்கு என்பார்க்ள அலைபாயும் ஆனாலும்
கவிதை அதை அழகய் எடுத்து காட்டுகிறது

ஓவியன்
09-12-2007, 02:20 PM
காதலால் சிலிர்த்த
பூ ஒன்று இன்று
காதலாலேயே வெறுத்து
பூ மரத்தை விட்டே
ஓடி ஒளியவிளைகிறது.....

பாராட்டுக்கள் அகத்தியன்..!!