PDA

View Full Version : என் மறதிகள் வளரும் காலங்களில்



அகத்தியன்
30-11-2007, 08:51 AM
என் மறதிகள் வளரும் காலங்களில்
எப்போதும் போல்
உன்னிடமிருந்து ஓர் அழைப்பு வரும்
ஓர் கத்தி போல
என் மறதிகளை அறுவடை செய்ய.

ஆதவா
30-11-2007, 08:58 AM
விதைப்பதை நிறுத்து
தேவையில்லை
அவ(னு)ளும் கத்தியும்

அகத்தியன்
30-11-2007, 09:05 AM
மறதிதானே விதைக்கப்படுகின்றது.
அதை நிறுத்துவதா நண்பரே?

ஆதவா
30-11-2007, 09:16 AM
மறதிதானே விதைக்கப்படுகின்றது.
அதை நிறுத்துவதா நண்பரே?

அதே அதே,

மறதி மறத்தல் விதையும் மறப்பின்
உறுதி பிறத்தல் விளை

ஓவியன்
09-12-2007, 02:55 PM
மறதியைப் பற்றி அகத்தியனின் கோணத்தில் முன்பு நான் எப்போதோ எழுதிய ஒரு குறுங்கவி இது....!!


மறக்க வேண்டும் உன்னை
இன்றே இப்போதே இக்கணமே!.
முடிவுடன் இறங்கினேன்
வீதியில் உத்வேகமாய்!.

அங்கு எங்கோ இருந்த
ஒரு பலசரக்குக் கடையின்
பாதிப் பெயர், என் மனதில்
உன் பெயரைச் சொல்ல!.
மறந்து தான் விட்டேன்.

உன்னை
மறக்க வேண்டும் என்பதையும்!.

நான் கருவைச் சொல்ல எடுத்துக் கொண்ட சொற்களிலும் குறைவாக திறமையாக சொற்களைக் கையாண்ட விதம் அருமை.......:icon_b:

பாராட்டுக்கள் அகத்தியன்...!!