PDA

View Full Version : வசீம் ஜாஃபர் - இன்னொரு ராஹூல் டிராவிட்



leomohan
30-11-2007, 07:47 AM
இரவு முழுக்க என் தொலைகாட்சிப் பெட்டி இயக்கத்தில் இருந்தது. 6.30 மணிக்கு இந்தியா முதலில் களத்தில் இறங்குவதாக காதில் விழுந்ததும் சுறுசுறுப்பாக எழுந்து Coffee Maker ஐ இயக்கி, சுடு நீர் வைத்து, Nidoவை போட்டு பால் செய்து, Nescafe போட்டு சுடச்சுட காபி தயார் செய்து தொலைகாட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்தால் முதலிலேயே நம்மூர் பிள்ளை out.

சரி பொறுமையை இழக்காமல் ஆட்டத்தை பார்த்தால் வசீமின் அருமையான ஆட்டம் காணக் கிடைத்தது.

நல்ல உயரம், நேரான stance, கூர்மையான பார்வை அழகான body-weight transfer, நேராக மட்டையை பிடிக்கும் விதம், boundary மழையாக பொழிந்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி பிரார்த்தனைகள் செய்துக் கொண்டிருக்க ஒரு அருமையான எல்லை கோட்டை தாண்டும் அடியுடன் தன் சதத்தை நிறைவேற்றினார்.

இந்திய அணிக்கு இன்னொரு ராஹூல் டிராவிட் கிடைத்துவிட்டார் என்று தோன்றியது.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது பழுத்த இளைஞன் சச்சினின் அற்புதமான on-drive. இடது தோள் தலைக்கு மேல் செல்ல, சிறிய அடி பின்னால் வைத்து ஷோயிப் அக்தரின் பந்தை wicket க்கு நேராக ஒரு punch செய்ய, பந்து எல்லை கோட்டை தேடி ஆலாய் பறந்தது.

வெள்ளி விடுமுறையில் அதிகாலை (என்னை பொருத்த வரையில் :-) எழுந்தது வீணாக போகவில்லை.......

ஆதவா
30-11-2007, 08:20 AM
நீங்க சொல்றது கரெட் தான்.. ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் அப்படி ஒத்துக்க முடியாது. இருந்தாலும் நம்புவோம்......

வாழ்த்துகள் அவருக்கும் உங்களுக்கும்..

அமரன்
30-11-2007, 08:24 AM
திறமையானவர்.. திராவிட் அளவுக்கு சிறப்பாக செயல்படுவாரா என்பது தெரியவில்லை. செயல்பட்டால் மகிழ்வு.. செயல்பட வாழ்த்துக்கள்.. 150 ஓட்டங்க எடுத்து விட்டார்..

மதி
30-11-2007, 08:27 AM
நன்றாக விளையாடுகிறார்கள்..
வாசிம் ஜாஃபருக்கு வாழ்த்துக்கள்..!

அன்புரசிகன்
30-11-2007, 08:28 AM
ஆரம்பத்தில் நன்றாகத்தான் எல்லோரும் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் பின்னர் சிலர் தான் தொடர்கிறார்கள்.

ஆதவா
30-11-2007, 08:34 AM
ஆரம்பத்தில் நன்றாகத்தான் எல்லோரும் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் பின்னர் சிலர் தான் தொடர்கிறார்கள்.

யாருஙக் அந்த சிலர்? இப்ப சிலரிலும் சிலரே சிறக்கறாங்க இல்லையா?

கமலன்
30-11-2007, 11:26 AM
வசிம் இன்னும் பந்து அதிகமாக எழும்பும் ஆடுகலங்கலில் ஆடனும் அய்யா. அப்புரம் திராவிடுடன் ஒப்பிடலம்.

மன்மதன்
30-11-2007, 02:56 PM
நல்ல திறமையான விளையாட்டு வீரர்.. மென்மேலும் மெருகேறட்டும்.

மாதவர்
30-11-2007, 02:58 PM
192 ஓட்டங்கள் எடுத்துள்ளார் வாழ்த்துக்கள்

நேசம்
30-11-2007, 07:21 PM
நல்ல ஆட்டகாரர் என்று சொல்லலாம்.ஆனால் டிராவிட் மாதிரி என்று சொல்வதற்கு வாசிம் இன்னும் நிருபிக்க நிறைய இருக்ககிறது.

அக்னி
30-11-2007, 10:42 PM
வசீம் ஜாஃபர் சிறப்பாக மிளிர வாழ்த்துவோம்...

லியோ உங்கள் எழுத்துநடை மிக அழகு...
பாராட்டுக்கள்...

ஓவியன்
01-12-2007, 06:04 PM
வாசிம் ஜாஃபர்..!!

துடிப்பும் திறமையுமுள்ள இளைஞர்...
அனுபவமும் சேர, சேர இந்திய பெருஞ்சுவராகலாம்....

அதற்கு என் வாழ்த்துக்களும்.....

தீபன்
02-12-2007, 02:54 AM
எப்பிடி வாசிம்மை ராவிட்டுடன் ஒப்பிடலாம்...? ராவிட் 50றன் தானே அடிச்சார்... வாசிம் 202அடிச்சாரே... :smilie_abcfra: :smilie_abcfra:

புரியாமல் தீபன்:confused: