PDA

View Full Version : திருவள்ளுவமாலைதேவிப்ரியா
29-11-2007, 11:58 PM
திருவள்ளுவமாலை


நமக்கு திருவள்ளுவர் பற்றியும் குறள் பற்றியும் பல விவரம் தரும் திருவள்ளுவமாலை பாடல்களை அறிந்து கொள்வோம்.


அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப(து) இன்பத்
திறபிர்பத் தைந்தால் தெளிய- முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதவழுக் கற்ற்(து) உலகு. மதுரை பெரு மருதனார்.

அறத்துப்பால்-38 அதிகாரங்கள்
பொருட்பால்- 70 அதிகாரங்கள்
இன்பத்துப்பால்- 25 அதிகாரங்கள் என 133 அதிகாரங்களால் வள்ளூவர் வேதங்களின் நற்கருத்துக்களை தன் குறளினால் தர அதனால் உலகம் குற்றங்களினில் இருந்து தப்பியது.


ஐயாறு நூறும் அதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விள்ங்கப்- பொய்யாது
தந்தான் உலகிறு தான்வள்ளூவனாகி
அந்தா மரைமேல் அயன்.
-காவிரிப்பூம்பட்டிணத்துக் காரிக்கண்ணனார்.


5x 6 = 30 + 100 + 3 = 133

படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவே வள்ளுவனாய் வந்து 133 அதிகாரங்களினால் வேதங்களின் நற்கருத்துக்களை தந்தார்.

இளசு
30-11-2007, 06:44 AM
உங்கள் திருக்குறள் புலமை + நேசம் - உங்கள் பதிவுகளால் தொடர்ந்து புலப்படுகிறது . பாராட்டுகள் தேவப்ரியா அவர்களே!

மதுரை பெரு மருதனார். அழகாக முப்பால் கணக்கு சொல்ல ....

காவிரிப்பூம்பட்டிணத்துக் காரிக்கண்ணனார் வித்தியாசமாக மொத்த அதிகார எண்ணிக்கை சொல்ல..

அய்யன் மேல் உள்ள அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் எத்தனை தலைமுறையாய்... என்ற ஆனந்த வியப்பு..

காலத்தை வென்ற நூல் என்றால் தமிழில் குறளே முதல் - இல்லையா நண்பர்களே!

மீனாகுமார் அவர்களின் ' அனுபவக்குறள் ' - நவீன வாழ்க்கைப்பார்வையில் குறளின் விளக்கவுரைகள் - ஒட்டியாக இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10317

ஆதவா
30-11-2007, 08:07 AM
அடடே நல்ல பதிவு... அப்பப்ப வந்து எட்டிப் பார்க்கிறேன்.

ஆதவா
30-11-2007, 08:07 AM
உங்கள் திருக்குறள் புலமை + நேசம் - உங்கள் பதிவுகளால் தொடர்ந்து புலப்படுகிறது . பாராட்டுகள் தேவப்ரியா அவர்களே!

மதுரை பெரு மருதனார். அழகாக முப்பால் கணக்கு சொல்ல ....

காவிரிப்பூம்பட்டிணத்துக் காரிக்கண்ணனார் வித்தியாசமாக மொத்த அதிகார எண்ணிக்கை சொல்ல..

அய்யன் மேல் உள்ள அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் எத்தனை தலைமுறையாய்... என்ற ஆனந்த வியப்பு..

காலத்தை வென்ற நூல் என்றால் தமிழில் குறளே முதல் - இல்லையா நண்பர்களே!

மீனாகுமார் அவர்களின் ' அனுபவக்குறள் ' - நவீன வாழ்க்கைப்பார்வையில் குறளின் விளக்கவுரைகள் - ஒட்டியாக இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10317


அண்ணா எனக்குக் கூட திருக்குறள் பற்றி ஒரு கட்டுரை கொடுக்கவேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறது. நேரம் அமைந்தால் நிச்சயம் தருகிறேன்...

தேவிப்ரியா
02-12-2007, 07:01 AM
திருவள்ளுவமாலை
'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.'
- வெள்ளி வீதியார்

'செய்யா மொழி- வேதங்கள்( எழுதப் படாதது)
பொய்யா மொழி- திருக்குறள்.

வேதங்கள் கூறுவதும் திருவள்ளுவர் உரைத்த திருக்குறள்
கூறுவதும் ஒன்றே. வேதங்கள் அந்தணர் மட்டுமே பயன்படுத்த; திருக்குறள் எல்லா மக்களும் படித்து கடைப்பிடிக்க ஆனதாகும்.

---------------------------------
வேதங்கள் பாணினியால் வ.கா.மு. 5ம் நூற்றாண்டில் சமஸ்க்ருத இலக்கணம் வகுக்கப்பட்டது. அதற்கு சில பல நூற்றாண்டின் முன் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணமும்- வியாசரின் மஹாபாரதமும் அடக்கப் பட்டன.

ஆனால் பாணினிக்கு 1000 ஆண்டுகள் முன்பே வரையப்பட்டிருந்த வேதங்கள் பாணினி சமஸ்க்ருத இலக்கணம வரம்பில் வராது. அதன் சொல் பகுப்புமுறைகள் முன்பிருந்த நடை. எனவே வேதங்கள் எழுதப் படல் கூடாது என்பது வழக்கு. எனவே அவை வடமொழியில் ஸ்ருதி- கேட்கப் படுவது எனப்படுவது எனப் படும்.

சங்க இலக்கியத்தில் வேதங்களை வேதம். நான்மறை, மறை, புலம், ஓத்து, ஆரங்கம், கேள்வி, எழுதாக் கற்பு, எனப் பல பெயர்களில் வழங்கப் பட்டுள்ளது.

தேவிப்ரியா
08-12-2007, 01:34 AM
திருவள்ளுவமாலை:

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வாலறிவின்
வள்ளுவரும் தம் குறள்வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து
-பரணர்

திருமாலும் குள்ளவுருவாய் முதலில் தோன்றிப் பின்னர் திரிவிக்கிரமனாய் வளர்ந்து இரண்டு பெரும் அடிகளால் உலகம் முழுவதையும் நன்றாக அளந்தான். கூரிய அறிவுடைய திருவள்ளுவரும் தம் குறள் வெண்பா அடிகளால் உலகத்தார் எண்ணும் எல்லாவற்றையும் ஆராய்ந்து அளர்ந்தார்.

இங்கே எடுத்துக் கொண்ட உவமை பல நிலைகளிலும் பொருந்துகின்றது. திருமாலை திருவள்ளுவருக்கு உவமையாகச் சொல்கிறார். குறள் வெண்பாக்களுக்கு திருமாலின் குறள் உருவம் (குள்ள வாமன உருவம்) உவமை. திருக்குறள் வெண்பாக்களின் பொருள் விரிவிற்கு திருமாலின் வளர்ந்த திரிவிக்கிரம உருவம் உவமை. குறள் வெண்பாவின் இரண்டு அடிகளுக்கு திருமாலின் இரண்டு பெரும் திருவடிகள் உவமை. உலகத்தார் எண்ணுவதெல்லாம் ஆராய்ந்து அளித்ததற்கு திருமால் உலகமெல்லாம் அளந்தது உவமை

தேவிப்ரியா
09-12-2007, 07:17 AM
திருவள்ளுவமாலை:


ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதுஆகி,
வேதப்பொருளாய், மிகவிளங்கித், தீதுஅற்றோர்
உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளமுருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு. 24
-மாங்குடி மருதனார்.

படிப்போர்ககு எளிதாக, அரிய கருத்துக்களை-வேதங்கள் கூறும் நற்பண்புகளை மிக எளிதாக குற்றமற்றோர் உள்ளங்களில் படிக்கும் போது உள்ளத்தை உருக வைக்கும்வகையில் எழுதப்பட்டதே வள்ளுவர் எழுதியதின் சிறப்பு.

ஆதவா
09-12-2007, 07:36 AM
திருவள்ளுவமாலை
'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.'
- வெள்ளி வீதியார்

'செய்யா மொழி- வேதங்கள்( எழுதப் படாதது)
பொய்யா மொழி- திருக்குறள்.

வேதங்கள் கூறுவதும் திருவள்ளுவர் உரைத்த திருக்குறள்
கூறுவதும் ஒன்றே. வேதங்கள் அந்தணர் மட்டுமே பயன்படுத்த; திருக்குறள் எல்லா மக்களும் படித்து கடைப்பிடிக்க ஆனதாகும்.தேவப்பிரியா, செய்யுளை சற்றே மாற்றித் தரலாமே!!! நம்மவர்களுக்கும் புரியும் படி


'செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே--செய்யா,
அதற்குரியர் அந்தணரே! யாராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்.'

தேவிப்ரியா
10-12-2007, 12:47 AM
ஆதவன் தங்கள் கருத்திற்கு நன்றி.

இனி முயற்சிக்கிறேன்.

தேவிப்ரியா
12-12-2007, 01:50 PM
திருவள்ளுவமாலை:

அறம்தகளி, ஆன்ற பொருள்திரி, இன்பு
சிறந்தநெய், செஞ்சொல் தீதிதண்டு- குறும்பாவா,
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உளிருள் நீக்கும் விளக்கு.
-நப்பாலத்தனார்

திருக்குறள் மக்கள் மன இருட்டை நீக்கும் விளக்காகும். அறத்துப்பால் அகல்; பொருட்பால்-திரி; இன்பத்துப்பால்-நெய்; அழகிய செந்தமிழ் சொற்கள்-திரிக்கான் தண்டு; இவற்றைக் கொண்டு மன இருட்டை நீக்கும் ஓளி தீபமே திருக்குறள் வெண்பா.

தேவிப்ரியா
16-12-2007, 01:40 PM
திருவள்ளுவமாலை:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து,ஏட்டின் புறத்துஎழுதார்- ஏட்டுஎழுதி
வல்லுநரும், வல்லாரும், வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும், ஆற்றல்சோர்வு இன்று.

-கோதமனார்

நான்மறைகள் - ரிக், யஜுர் சாம & அதர்வண என்னும் வேதங்களானவைகளை போற்றி அதை குரு மூலமாக மட்டும் என ஒருவரிடமிருந்து மற்றவர் என வாய்ப்பாடமாக மட்டுமே பாதுகாத்து வந்தனர் பார்ப்பனர்கள், அந்தணர் வேதங்கள் எழுதப்பட்டால், முறையான போதிப்பு இல்லாதவர்கள் படித்தால் அதன் சரியான பொருள் புரிபடாமல் போக ஆற்றல் குறையும் ஆனால் ஏட்டில் எழுதி முப்பாலை-திருக்குறளை நிறைந்த வல்லமையுள்ளாரும் வல்லமையில்லாதாரும் படித்தாலும் அதன் ஆற்றல் குறைவது இல்லை.

இளசு
16-12-2007, 10:40 PM
குறளுக்கும் உலகளந்த மாலடிக்கும் என்ன பொருத்தம்..

வாய்மொழியாய் வந்த வேதம் Vச் எழுதப்பட்ட குறளமுதம்... என்ன விளக்கம்!

சிலப்பதிகாரம் சகமனிதனை நாயகனாக்கிய முதல் காப்பியம்..
குறள் சமமாய் மனிதர்க்கெல்லாம் அளிக்கப்பட்ட எழுத்தோவியம்..

படிக்கப் பெருமிதம் அளிக்கும் குறள் பாராட்டுமாலை இன்னும் வளரட்டும்.

நன்றி தேவப்ரியா அவர்களே!

தேவிப்ரியா
12-01-2008, 04:50 AM
திருவள்ளுவமாலை:

தானே முழுது உணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்றும் மற்று!

- நக்கீரர் -


வள்ளுவர் தான் அறிந்து உணர்ந்து - அறம் பொருள் இன்பம் என்ற மனிதனின் வளங்களுக்கு வழி கூறி வீடுபேறு பெற அழியாத வழியினை மக்கள் அனைவருக்கும் இயற்கை முறைப்படி குளிர்ச்சியிலான தமிழில் தருதலின் மக்கள் அனைவருக்கும் நன்மை தரும் மழையைத் தரும் மேகத்துக்கு ஒப்பானவர். மேகமும் குறளும் இவ்வுலகமும் வாழி.