PDA

View Full Version : இலக்கியச்சோலை.....!செல்வா
29-11-2007, 10:12 PM
இந்த பகுதியில தமிழ் இலக்கியங்களிலிருந்து எனது கண்ணிலும் மனதிலும் விழுந்த சில பாடல்களைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.. எழுதுவது இதுதான் முதல் முறை எனவே தவறு இருந்தால் குறிப்பிடுங்கள் திருத்திக் கொள்ளுகிறேன்...

நாம எல்லாரும் திருக்குறள் பள்ளிகூடத்துல படிச்சுருப்போம். அறம் பொருள் தவிர வேற ஏதும் படிக்க விடமாட்டாங்க. அதனால நாம படிக்காம விட்ட இன்பத்துப்பால்லருந்து எனக்கு புடிச்ச சில பாடல்கள பாக்கலாம்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 1317

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. 1318

இந்த ரெண்டு பாட்டுமே ரொம்ப ஜாலியானது காதலனும் காதலியும் தனியாருக்காங்க அப்போ நம்மாளுக்கு தும்மல் வந்துருச்சு பாவம் அவன் என்ன பண்ணுவான் தும்மிட்டான் அவ்ளோதான் அந்தம்மாவுக்கு கோபம் வந்துருச்சு உன்ன நெனக்க வேண்டிய நானே இங்கருக்கும் போது வேறயாரு உன்ன நெனக்கிறதுன்னு சண்டக்கி வந்துட்டாங்களாம்
இதுதான் முதல் பாட்டு.

ரேண்டாவது பாட்டு என்னண்ணா
அட அநியாயமே என்ன கொடுமைடா சாமி தும்ம கூட உரிமை இல்லியாண்ணு நெனச்சு அடுத்தாப்புல வந்த தும்மல அடக்கிருக்கான் நம்மாளு விடுவாங்களா. ஏன்யா நீ தும்முனா உன்ன நெனக்க வேற ஆளுருக்காங்கங்குறது எனக்கு தெரிஞ்சுரும்னு தானே வர்ற தும்மல அடக்குறன்னு சண்டக்கி வந்துட்டாங்களாம்.
என்னங்க பாட்டு புடிச்சுருக்கா நல்லாருக்குல்ல இப்படி இன்னும் நெறய இருக்கு ஒண்ணொண்ணா பாக்கலாம் சரியா.
ஆனா ஆண்களே ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க அண்ணிக்கும் சரி இண்ணிக்கும் சரி பொண்ணுங்க மாறவே இல்ல அப்படியே தான் இருக்காங்க.
(ஏதோ என்னால முடிஞ்ச கலகம் உண்டாக்கியாச்சு :lachen001:)

அக்னி
29-11-2007, 10:41 PM
சுவாரசியமான எழுத்து நடை...
இத்திரி, சோலையாக செழிப்புற வாழ்த்துகின்றேன்...
நாம் தொடர, தொடருங்கள் செல்வா அவர்களே...


அண்ணிக்கும் சரி இண்ணிக்கும் சரி பொண்ணுங்க மாறவே இல்ல அப்படியே தான் இருக்காங்க.
(ஏதோ என்னால முடிஞ்ச கலகம் உண்டாக்கியாச்சு :lachen001:)
மன்றத்து மகளிரணியின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க பிரார்த்திக்கின்றேன்...

மலர்
29-11-2007, 10:53 PM
மன்றத்து மகளிரணியின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க பிரார்த்திக்கின்றேன்...

அப்பவே ஓவியாக்கா ஆசிர்வாதத்துல...
யவனியக்காவோட மாஸ்டர் பிளான்ல...
பூமகள் அக்கா தலமையில
ஆட்டோ அனுப்பியாச்சி...

செல்வா.... எதுக்கும் கொஞ்ச நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது நல்லது.....

மலர்
29-11-2007, 11:15 PM
எழுதுவது இதுதான் முதல் முறை எனவே தவறு இருந்தால் குறிப்பிடுங்கள் திருத்திக் கொள்ளுகிறேன்...அட.. இதுதான் முதல் முறையா...
அப்படி தெரியவில்லை...
பாராட்டுக்கள் செல்வா...:icon_b:
நாம எல்லாரும் திருக்குறள் பள்ளிகூடத்துல படிச்சுருப்போம். அறம் பொருள் தவிர வேற ஏதும் படிக்க விடமாட்டாங்க. அடடா...
வருத்தமாக்கும்...:D:D

என்னங்க பாட்டு புடிச்சுருக்கா நல்லாருக்குல்ல இப்படி இன்னும் நெறய இருக்கு ஒண்ணொண்ணா பாக்கலாம் சரியா.
ஆனா ஆண்களே ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க அண்ணிக்கும் சரி இண்ணிக்கும் சரி பொண்ணுங்க மாறவே இல்ல அப்படியே தான் இருக்காங்க.
அப்பவும் சரி.. இப்பவும் சரி..
பொண்ணுங்க பொண்ணுங்களாகவே தான் இருக்காங்க...:icon_rollout:
ஒருவேளை பசங்க மாறிட்டாங்களோ...:confused::confused:
ஏதோ என்னால முடிஞ்ச கலகம் உண்டாக்கியாச்சு ஆகா...
அடுத்த நாரதர் .....:sauer028::sauer028:

lolluvathiyar
30-11-2007, 06:55 AM
ஆகா ஆகா அருமை அருமை அதுவும் குறளை விட கடைசியில் நீங்க திருவாய் மலர்ந்து ஒன்னு சொன்னீன்களே பென்னுக என்னிக்கு ஒரே மாதிரிதான் அதுதான் சூப்பர். அந்த பாயின்டுக்கு பிடியுங்க 100 இபணம்

மலர்
30-11-2007, 07:03 AM
ஆகா ஆகா அருமை அருமை அதுவும் குறளை விட கடைசியில் நீங்க திருவாய் மலர்ந்து ஒன்னு சொன்னீன்களே பென்னுக என்னிக்கு ஒரே மாதிரிதான் அதுதான் சூப்பர். அந்த பாயின்டுக்கு பிடியுங்க 100 இபணம்

உண்மையில் செல்வா குடுத்து வைத்தவர் தான்...
பின்ன
வாத்தியாரு அண்ணா கையில இருந்து 100அய்கேஷ் என்றால் சும்மாவா...:D:D:D
நான் எல்லாம் அவரிடமிருந்து ஒரே ஒரு ரூபா தான் வாங்கியிருக்கேன்..:icon_rollout::icon_rollout:

வாத்தியாரு அண்ணா...
எல்லா பென்னும் ஓரே மாதிரி ஓரே மாடல்லயா வருது..:confused::confused:

சிவா.ஜி
30-11-2007, 07:12 AM
வாத்தியாரு அண்ணா...
எல்லா பென்னும் ஓரே மாதிரி ஓரே மாடல்லயா வருது..:confused::confused:

அப்படி போடும்மா தின்னவேலி அருவாவை.....பென்னும்,பெண்ணும் ஒண்ணா?

செல்வா
30-11-2007, 04:19 PM
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..
நல்ல கவிதை இல்லீங்களா? என்ன அருமையான கற்பனை இல்லியா? ஆனால் இதே கற்பனைய 2000 வருடங்களுக்கு முன்னால ஓருத்தர் கற்பனை பண்ணிருக்காருண்ணா நம்புவீங்களா?

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து 1127

காதலி சொல்றாங்க என்னோட காதலர் என் கண்ணுக்குள்ளே இருக்குறாரு எங்க நான் இமைக்கு மை போட போக அவருக்கு எதாவது ஆயிடப்போகுதுண்ணு நான் இப்பல்லாம் கண்மையே போடுறதில்ல..
இது எப்டிங்க இருக்கு.?

நம்ம சுசியும் அவங்க தோழியும் பேசிக்குறாங்க

சுசி : போடி இவளே காதலிக்க ஆரம்பிச்சதுலருந்து நீ ரொம்ப மாறிட்ட

தோழி : என்னடி சொல்ற அப்படி எல்லாம் எதுவும் இல்ல

சுசி : இல்லடி இப்பல்லாம் நீ சூடா எதுவுமே சாப்பிடுறதில்ல

தோழி : ஓ அதுவா. அதுவந்துடி (வெட்கத்துடன்).
அவரு என் நெஞ்சுக்குள்ள இருக்குறாரா அதான் நான் சூடா சாப்பிட்டு அவருக்கு எதாவது ஆயிடுச்சுண்ணா என்னடி பண்றது அதான் சூடா எதுவும் சாப்பிடுறதில்ல

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து 1128

சுசி : (அதிர்ச்சியுடன்) அடிப்பாவி (சுதாரித்து) ஹி ஹி. நான் கூட வீட்டுலருக்கும் போது சூடா எதுவும் சாப்பிடுறதில்ல

தோழி : (ஆவலுடன்) அப்படியா.

சுசி : ஆமா ரெண்டு வாட்டி சண்ட வந்தப்போ கொதிக்குற குழம்ப அவர் மேல கடாசிட்டன் அதுலருந்து வீட்டுல சூடா எதுவும் சமையல் பண்ண விடுறதில்ல. அப்படியே பண்ணாலும் உடனே எடுத்து ஃபிரீசர்ல வச்சிருவார்.
(தோழி முகத்துல ஈ ஆடல. )

- மீண்டும் சந்திப்போம்

செல்வா
30-11-2007, 09:26 PM
சுவாரசியமான எழுத்து நடை...
இத்திரி, சோலையாக செழிப்புற வாழ்த்துகின்றேன்...
நாம் தொடர, தொடருங்கள் செல்வா அவர்களே...


நன்றி அக்னி அவர்களே... நான' எழுத காரணமே நீங்கள்தானே...

செல்வா
30-11-2007, 09:31 PM
அப்பவே ஓவியாக்கா ஆசிர்வாதத்துல...
யவனியக்காவோட மாஸ்டர் பிளான்ல...
பூமகள் அக்கா தலமையில
ஆட்டோ அனுப்பியாச்சி...

செல்வா.... எதுக்கும் கொஞ்ச நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது நல்லது.....

வரசொல்லுங்க வேகமா... எல்லாரும் தமிழ் மன்றத்துல என்னவிட ரொம்ப ரெம்ப பெரியவங்க... அக்கா ஆசீர்வாதம் பண்ணுங்கக்காண்ணு கால்ல விழுந்துடுவோமில்ல....


நன்றி மலர்........

அக்னி
30-11-2007, 09:32 PM
திருக்குறள் விளக்கங்களை சமகால நடப்பில் ரசிக்கவைக்கின்றீர்கள்...
எந்தக் கருத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையாக, குறள்கள் உள்ளன என்பது நிதர்சனம்...
அவற்றினை அழகுற, இலகுவாகக் கூறுகின்றீர்கள்...
பாராட்டுக்கள் செல்வா அவர்களே...

இலக்கியச்சோலைக்காக 500 iCash.

செல்வா
30-11-2007, 09:37 PM
ஆகா ஆகா அருமை அருமை அதுவும் குறளை விட கடைசியில் நீங்க திருவாய் மலர்ந்து ஒன்னு சொன்னீன்களே பென்னுக என்னிக்கு ஒரே மாதிரிதான் அதுதான் சூப்பர். அந்த பாயின்டுக்கு பிடியுங்க 100 இபணம்
நன்றி வாத்தியரய்யா..... ஆகா எனக்கு முதல்போணியே நீங்கதான்... ரொம்ப நன்றி

செல்வா
30-11-2007, 09:44 PM
திருக்குறள் விளக்கங்களை சமகால நடப்பில் ரசிக்கவைக்கின்றீர்கள்...
எந்தக் கருத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையாக, குறள்கள் உள்ளன என்பது நிதர்சனம்...
அவற்றினை அழகுற, இலகுவாகக் கூறுகின்றீர்கள்...
பாராட்டுக்கள் செல்வா அவர்களே...

இலக்கியச்சோலைக்காக 500 iCash.

மிக்க நன்றி அக்னி அவர்களே.. உங்கள் ஆதரவு என்னை ஆனந்தமடையச் செய்கிறது

செல்வா
30-11-2007, 09:49 PM
நாம எல்லாருமே சின்ன வயசுலருந்தே எழுதிட்ருக்கோம் இல்லியா? சிலேட்-குச்சிலருந்து பேப்பர் பென்வர நிறய பொருட்கள பயன்படுத்திருப்போம். கள்ளிச்செடி, குட்டிச்சுவரு, மரத்து மூடு இங்கல்லாம் நம்ம பேரு, நமக்கு புடிச்சவங்க பேரு, நமக்கு புடிக்காதவங்களோட பட்டப்பேரு எல்லாமே எழுதிருப்போம். இன்னும் கொஞ்சபேரு ஒருபடி மேல போயி அவங்க கையவே சிலேட்டாகவும் கத்தி, பிளேடு, ஊசி இதெல்லாம் குச்சியாவும் பயன்படுத்திருப்பாங்க. இப்படி என்ன பொருள் பயன்படுத்தி எழுதும் போதும் ஒரு விசயம் நாம கவனிக்குறதே இல்ல என்ன தெரியுமா நாம எப்போ எழுதினாலும் என்ன எழுதினாலும் எப்பவுமே நம்ம கவனம் எழுதுகோல் மேல இருக்காது நீங்க யாராவது எப்பவாவது கவனிச்சுருக்கீங்களா? ஆனா இந்த விசயத்த ஒருத்தர் கவனிச்சு அத உதாரணமா பயன்படுத்தீருக்காருண்ணா எவ்வளவு ஆச்சரியமான காரியம் இல்லியா

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து 1285


ஏற்கெனவே எனக்கு குறள் ரொம்ப பிடிக்கும் ஆனா இந்த குறள் வாசிச்ச பிறகு வள்ளுவன் என்ற ஒரு கவிஞன் அப்படியே வானமளவுக்கு உயர்ந்து நிற்கிறார். இது காதலன் காதலி ரெண்டு பேருக்குமே பொருந்தும். எழுதும்போது கண்ணுக்கு தெரியாத எழுதுகோல் போல தன் காதலன் (அ) காதலிய பார்ககும் அவங்களோட குற்றங்குறைகள் எதுவும் கண்ணுக்கு தெரியாமல் போகிறதுண்ணு சொல்றார் வள்ளுவர். என்ன ஓரு அருமையான குறள் இல்லியா?

செல்வா
30-11-2007, 09:52 PM
காதலிக்குறவங்க பலர் பகல்ல சமர்த்தா தான் இருப்பாங்க ஆனா இராத்திரி படுக்கைக்குப் போய்ட்டாங்கண்ணா ஆளே மாறிப்போய்டுவாங்க. ஏதோ அவங்க காதலர்(லி) பக்கத்துலருக்குறதா நெனச்சு கட்டிப்புடிச்சுப்பாங்க, முத்தம் குடுத்துப்பாங்க ஏதேதோ பேசிப்பாங்க. இதெல்லாம் தப்புண்ணு யாரும் கவலைப்பட வேண்டியதில்ல ஏண்ணா 2000 ஆண்டுக்கு முன்னாலருந்தே இதெல்லாம் இருந்துருக்கு.

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தவர் ஆவர் விரைந்து


காதலி தன்னோட தோழிகிட்ட சொல்றா. நான் தூங்கும் போது என்பக்கத்துல வந்து என் தோள்ல சாஞ்சுக்குற என் காதலர் நான் முழிச்சுக்கிட்டதும் வேகவேகமா என்னோட இதயத்துல போய் ஒளிச்சுக்கிறார்.
_________________________________________________________________________
எங்க தமிழ் வாத்தியார் அடிக்கடி ஒரு புதுக்கவிதை சொல்லுவார்

பெண்ணே நீ ஒருமுறை பார்த்தாய்
என்மனதில் முள்தைத்தது
எங்கே இன்னொருமுறையும் பார்
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்


ஆகா நல்லாருக்கே கவிதை. நல்லாருக்கில்லீங்களா. ஆனா அப்புறமா திருக்குறள்ளயும் இதேபோல ஒரு கவிதை பார்த்தேன் ஆச்சரியம் தான் போங்க..

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து


காதலன் சொல்றான் அப்ப்பா இந்த பொண்ணோட கண்ணுக்கு தான் எவ்வளவு சக்தி. எனக்கு நோய உண்டாக்குறதும் குணமாக்குறதும் எல்லாமே இவளோட கண்பார்வைலே இருக்கு

செல்வா
30-11-2007, 09:56 PM
அழக வர்ணிக்குறதுன்னா கவிஞர்களுக்கு எல்லாம் அல்வா சாப்பிடுறது மாதிரி. அதிலயும் பெண்கள வர்ணிக்குறதுண்ணா சொல்லவே வேண்டாம் அமுதம் சாப்பிடுற மாதிரி .. நம்ம தமிழ்க் கவிஞர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ ண்ணு இன்பத்துப்பால் ஆரம்பிக்குற வள்ளுவர்,

பரப்பிய முல்லை முகைவென்ற பல்லினாய் என்று சொல்லிய மாறன் பொறையனார்,

கழுநீர் மலர்க்கண்ணாய் என்றெழுதிய கண்ணன் சேந்தனார்,

தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க ஏமக்கிழத்தி என்ற இன்னிலை பொய்கையார்

ஐமயெழி லுண்கண் மயிலன்ன சாயலாய் என்ற மதுரை கண்ணங்கூத்தனார்,

சூதள வளவெனு மிளமுலைத் துடியள வளவெனு நுண்ணிடைக்
காதள வளவெனு மதர்விழிக் கடலமு தனையவர் என்று பரணி பாடத்துவங்கிய செயங்கொண்டர்

குவளையொடு பொதிந்த குளவி நாறுநின் நறுநுதன் என்ற மோசி கீரனார்,

முல்லையின் முகையும் முருக்கின் இதழுங்
காட்டுங் கைரவ வாயாய் - என்ற சுந்தரம்பிள்ளை,

கோதை சுமந்த கொடிபோ லிடைநுடங்க புகழேந்தி ,

பாளைபோல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு பட்டுக்கோட்டை,


இன்னிக்கி 50 கிலோ தாஜ்மஹால்னு வைரமுத்து சொல்லி
காதல் பிசாசுங்கறவரை எவ்வளவோ பேரு எழுதிருக்காங்க

இந்த ஒரு பெரிய பட்டியல்லருந்து கொஞ்சம் பாடல்கள் பாக்கலாமா..?

நேசம்
01-12-2007, 02:41 AM
செல்வா கலக்கிட்டிங்க.ஆனால் பென்னுங்க மாறிட்டாங்க ன்னு தான் எங்களுக்கு வருத்தம்(ஆனால் ஒருத்தருக்கு ரொம்ப சந்தோஷம்)புதியவர்களை ஊக்கப்படுத்தும் விதமா,வாத்தியின் சிஷ்யனும் 100

lolluvathiyar
01-12-2007, 07:39 AM
செல்வா உங்களுக்கு கல்யானம் ஆயிருச்சா, இல்ல காதல் என்னும் கடலில் சிக்கிவிட்டீர்களா, காதல் திருகுறள் போட்டு தாக்கரீங்க.
மன்றத்தில் மீனாகுமார் நிரைய குரள் தந்து விளக்கினார். அடுத்தபடியாக நீங்கள் காமத்து பால் தந்து விளக்கி வருகிறீர்கள்.
தொடர்ந்து இந்த சேவையை செய்யவும். இங்க நிரைய பேரு அந்த பிரச்சனையில மாட்டி தவிக்கராங்க*

மலர்
01-12-2007, 07:45 AM
சுசி : ஆமா ரெண்டு வாட்டி சண்ட வந்தப்போ கொதிக்குற குழம்ப அவர் மேல கடாசிட்டன் அதுலருந்து வீட்டுல சூடா எதுவும் சமையல் பண்ண விடுறதில்ல. அப்படியே பண்ணாலும் உடனே எடுத்து ஃபிரீசர்ல வச்சிருவார்.

ஓ...இங்க மதுரை
ஆட்சி.....:D:D

மலர்
01-12-2007, 07:47 AM
வரசொல்லுங்க வேகமா... எல்லாரும் தமிழ் மன்றத்துல என்னவிட ரொம்ப ரெம்ப பெரியவங்க... அக்கா ஆசீர்வாதம் பண்ணுங்கக்காண்ணு கால்ல விழுந்துடுவோமில்ல....

காலில விழுற மாதிரி விழுந்து...
அப்படியே வாரிவுடுறதுக்கு...
என்ன ஒரு வில்லத்தனம்.... :eek::eek:


இருங்க எங்க படையை திரட்டிட்டு வாரேன்..

மதி
01-12-2007, 07:50 AM
செல்வா..
குறளும் குறளுக்கான விளக்கங்களும் அருமை...
இன்னும் நிறைய தொடருங்கள்..

சிவா.ஜி
01-12-2007, 08:21 AM
அட்றா சக்கை அட்றா சக்கை.......அசத்துறீங்க செல்வா.அதிலும் உங்க பட்டியல்...பின்னிட்டீங்க.சங்க காலத்துல ஆரம்பிச்சு இந்தக்கால பிசாசுவரைக்கும் நீங்க போட்ட பட்டியல் தூள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை...கடல்,இரயில்,யானை..அதேபோல எத்தனைமுறை,எத்தனை விளக்க உரையில் படித்தாலும் ஆச்சர்யமூட்டுபவை அய்யனின் பாக்கள்.உங்கள் பார்வையில் தேனாக சுவைக்கிறது.வாழ்த்துகள்.(மலைப்புடன்,அன்புடன் என் சிறிய பரிசு 500 இ-பணம்)

மலர்
01-12-2007, 08:39 PM
அட்றா சக்கை அட்றா சக்கை.......அசத்துறீங்க செல்வா.அதிலும் உங்க பட்டியல்...பின்னிட்டீங்க.சங்க காலத்துல ஆரம்பிச்சு இந்தக்கால பிசாசுவரைக்கும் நீங்க போட்ட பட்டியல் தூள்.

சிவா அண்ணா...
இன்னைக்கு அண்ணிகிட்ட பேசலாம்னு இருக்கேன்...
பேசவா,,,,:D:D

செல்வா
01-12-2007, 09:05 PM
அது ஒரு இனிமையான மாலைப் பொழுது, பரபரப்பு நிறைந்த அந்த நகரத்தின் நிலைக்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது அந்த பூங்கா இல்லை இல்லை சோலை (பூக்கள் இருந்தால்தானே பூங்கா) பூக்கள் அடர்ந்த பூங்காக்களையே ஏறெடுத்துப் பார்க்க யாரும் இல்லாத இந்த காலத்தில் இந்த மரச்சோலையை யாரும் கவனிக்காதது இயல்புதானே ஆனால் அது என்ன என்னால் நம்ப முடியவில்லையே யாரோ ஒரு இளைஞன் தரையில் அமர்ந்து புற்களை பிடுங்கி;க் கொண்டிருக்கிறான் அடடா இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா?... ஆனால் என்ன அவன் முகத்தில் ஒரு கலக்கம் யாரையோ தேடுவது போன்ற பரபரப்பு கதிரவன் வேறு தன் வேலை நேரம் முடியப்போவதை சோம்பலாக சொல்லிக் கொண்டிருந்தது நேரமாக ஆக நம்மவரின் (கமல் இல்லீங்க) பொறுமை எல்லை கடக்கிறது. பிடுங்குவதற்கு வேறு புற்கள் இல்லாமல் போக ஆத்திரமெல்லாம் கை வழியாக பயணம் செய்து பிடுங்கப்பட்ட புற்கள் மேல் விழுந்தது. வேருடன் பிடுங்கப்பட்ட புற்கள் எல்லாம் வேர் வேறு இலை வேறாக விழுந்து கொண்டிருக்க பிடுங்கப்பட்ட புற்களும் தீரப்போகும் தருவாயில் சட்டென்று வேலைநிறுத்தம் செய்தன விரல்கள் .. என்ன ஆகியது என்றறிய நமது பார்வை அந்த புற்களிலிருந்து பிடுங்கி அவன் பார்வை சென்ற திசையை நோக்கியது
ஆ அதோ .. அங்கே வருவது . கதைகளில் சொல்லப்படும் ரம்பை, ஊர்வசி, ரதி போன்ற தேவதையா. அல்லது காட்டிலிருந்து மிகவும் அழகிய மயிலொன்று வழிதவறி வந்து விட்டதோ.. அல்லது காதுகளில் அழகிய கம்மல் அணிந்த மானிடப் பெண்தானோ? என்னவென்று அறிய இயலாமல் எனது நெஞ்சம் இப்படி கலங்குகிறதே

(அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு)

இதுவரை கொல்லும்; ஆயுதங்களில் கொடியது துப்பாக்கி, குண்டு, அணு ஆயுதம், சுனாமி, பூகம்பம் என்று தான் எண்ணியிருந்தேன்.. ஆனால் அவை எல்லாவற்றிலும் கொடிய ஒர் ஆயுதத்தை இந்த பெண்ணின் அழகிலும் பார்வையிலும் பார்க்கின்றேன்

(பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து)

நல்லவேளை இந்த பொண்ணோட கண்ணின் பெரும்பகுதிய இவளோட புருவமே மறச்சுருச்சு இல்ல என்னோட நெலம என்ன ஆயிருக்குமோ நெனைக்கும்போதே நடுக்கமா இருக்கு

(கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்)

இதுக்கு மேல கண்கள பாக்க முடியாம என்னோட பார்வைய விலக்குனா அவ மார்மேல போட்டுருக்கும் துப்பட்டாவ பார்க்கும்போது எனக்கு கோவில் திருவிழாவுல மத்தகத்துல பட்டம் வச்சு அழகு படுத்தப்பட்ட யானையோட முகம்தான் ஞாபகம் வருது..

(கடாஅக் களிற்றின்மேற்; கட்படாம் மாதர்
புடாஅ முலைமேல் துகில்)

உணவுப்பண்டங்கள் எல்லாம் சாப்பிட்டாதான் சுவை எல்லாம் சேர்ந்து இன்பமா இருக்கும் ஆனா பாவிமகள பார்த்தாலே போதும் போலருக்கே.. சோறு தண்ணி எதும் வேண்டாம் மனசு சில்லுணு வானத்துல பறந்த மாதிரி இருக்கே.

(உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று)

நங்..ஆ. நங்..நங்நங். அய்யோ குட்டுறத நிறுத்துடி வலிக்குது..
வலிக்கட்டும் வலிக்கட்டும் ஏன்யா நான் ஒருத்தி இங்க கழுத மாதிரி கத்திட்டுருக்கேன் அத கவனிக்காம என்ன பகல்லேயே கனவு கண்டுட்டுருக்குறீரு போய் மளிகை சாமான் வாங்கிட்டுவாரும்ணா
அப்போது தான் எனக்கே புரிந்தது .
கழுதை கழுதை மாதிரி கத்தாம வேற எப்படி கத்துமாம; முனகிக் கொண்டே செருப்பை காலில் மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கினேன்
என்னவோய் முனகுறீரு சத்தமா சொல்லும் ஓய் என் தர்ம பத்திரகாளி குரல் பின்னால் கேட்டது அலட்சியம் செய்து கொண்டே நடந்தேன் மனதிற்குள்

பேயோகொல் பிசாசுகொல் ஆயிரம்
நாவு கொண்ட காளியோகொல்
ஈண்டு வந்ததே என்னை
கொல்லாமல் கொலைசெய்ய..!

அட எனக்கு கூட கவிதை வருதே.!
:icon_rollout:

சிவா.ஜி
02-12-2007, 03:52 AM
சிவா அண்ணா...
இன்னைக்கு அண்ணிகிட்ட பேசலாம்னு இருக்கேன்...
பேசவா,,,,:D:D

நீ அரட்டை பகுதிக்கு வா....பேசிக்கிறேன்.

lolluvathiyar
02-12-2007, 06:21 AM
ஆகா செல்வா சும்ம கலக்கீட்டே வர்ரீங்க, கடைசியில அடி வாங்கீட்டீங்களா (ம் உங்க வீட்டலயும் அப்படி தானா).
மேலும் மனைவிகிட்ட அடி வாங்கிய கனவனை பற்றி குறள் ஏதாவது இருகிறதா?

மலர்
03-12-2007, 09:41 PM
வலிக்கட்டும் வலிக்கட்டும் ஏன்யா நான் ஒருத்தி இங்க கழுத மாதிரி கத்திட்டுருக்கேன் அத கவனிக்காம என்ன பகல்லேயே கனவு கண்டுட்டுருக்குறீரு போய் மளிகை சாமான் வாங்கிட்டுவாரும்ணா
அப்போது தான் எனக்கே புரிந்தது .
செல்வா இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கே டூ மச்சா தெரியலை...
இத அப்படியே கோட் பண்ணி உங்க மனைவிக்கு அனுப்பிவைக்கிறேன்

கழுதை கழுதை மாதிரி கத்தாம வேற எப்படி கத்துமாம; முனகிக் கொண்டே செருப்பை காலில் மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கினேன்
என்னவோய் முனகுறீரு சத்தமா சொல்லும் ஓய் என் தர்ம பத்திரகாளி குரல் பின்னால் கேட்டது அலட்சியம் செய்து கொண்டே நடந்தேன் மனதிற்குள்
அதை விட அது ஒண்ணு சூப்பரா பண்ணும்..
என்ன தெரியுமா..
ஓங்கி ஒரு உதை குடுத்திருந்தா இப்படி பேசமாட்டீங்க...பேயோகொல் பிசாசுகொல் ஆயிரம்
நாவு கொண்ட காளியோகொல்
ஈண்டு வந்ததே என்னை
கொல்லாமல் கொலைசெய்ய..!
அட எனக்கு கூட கவிதை வருதே.! :icon_rollout:

அணைய போடும் விளக்கு பிரகாசமாய் எரியுமாம்...
யவனியக்கா ஒரு நிமிஷம் இந்த திரிய பாருங்களேன்

செல்வா
04-12-2007, 08:21 AM
செல்வா கலக்கிட்டிங்க.ஆனால் பென்னுங்க மாறிட்டாங்க ன்னு தான் எங்களுக்கு வருத்தம்(ஆனால் ஒருத்தருக்கு ரொம்ப சந்தோஷம்)புதியவர்களை ஊக்கப்படுத்தும் விதமா,வாத்தியின் சிஷ்யனும் 100

நேசம் காட்டிய நேசத்திற்கு நன்றிகள்....

செல்வா
04-12-2007, 08:30 AM
காலில விழுற மாதிரி விழுந்து...
அப்படியே வாரிவுடுறதுக்கு...
என்ன ஒரு வில்லத்தனம்.... :eek::eek:
இருங்க எங்க படையை திரட்டிட்டு வாரேன்..
நல்லா பாத்துக்கோங்கபா.... நான் எதும் சொல்லல... அவங்களே... படைய திரட்டிட்டு வரேன் காலில விழுற மாதிரி விழுந்து...
அப்படியே வாரிவுடுண்ணு சொல்றாங்க....
இவங்கள நம்பி வரக்கூடிய படைய நெனச்சா.. எனக்கு ...
:traurig001: :traurig001: தான் வருது.....

செல்வா
04-12-2007, 08:33 AM
செல்வா..
குறளும் குறளுக்கான விளக்கங்களும் அருமை...
இன்னும் நிறைய தொடருங்கள்..

நன்றி மதி


அட்றா சக்கை அட்றா சக்கை.......அசத்துறீங்க செல்வா.அதிலும் உங்க பட்டியல்...பின்னிட்டீங்க.சங்க காலத்துல ஆரம்பிச்சு இந்தக்கால பிசாசுவரைக்கும் நீங்க போட்ட பட்டியல் தூள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை...கடல்,இரயில்,யானை..அதேபோல எத்தனைமுறை,எத்தனை விளக்க உரையில் படித்தாலும் ஆச்சர்யமூட்டுபவை அய்யனின் பாக்கள்.உங்கள் பார்வையில் தேனாக சுவைக்கிறது.வாழ்த்துகள்.(மலைப்புடன்,அன்புடன் என் சிறிய பரிசு 500 இ-பணம்)

நன்றி சிவா....

செல்வா
04-12-2007, 09:03 AM
அதை விட அது ஒண்ணு சூப்பரா பண்ணும்..
என்ன தெரியுமா..
ஓங்கி ஒரு உதை குடுத்திருந்தா இப்படி பேசமாட்டீங்க...


ஏங்க வயித்தெரிச்சல கெளப்பறீங்க ஏதோ ரெண்டு வாரமாத்தான் நிம்மதியா இருக்கன் அதயும் கெடுத்திருவீங்க போலருக்கே...அணைய போடும் விளக்கு பிரகாசமாய் எரியுமாம்...

யார சொல்றீங்க புரியலியே..... :confused:

செல்வா
04-12-2007, 06:54 PM
இந்தாங்க சார் ஹலோ சார். யோவ் உன்னைத்தான்யா வழியவிட்டு ஒதுங்கி நில்லுய்யா
அதுவரை யாரையோ சொல்கிறார்கள் என்றிருந்த நான் காதுக்கு பக்கத்தில் குரல் கேட்கவும் வேகவேக மாக விலகினேன்.
பொண்டாட்டி பக்கத்துலருந்தா கண்ணுதான் தெரியாதுண்ணா காதுகூடவா கேட்காம போய்டும்..
குரலை இந்த காதில் வாங்கி அந்த காதில் தொலைத்துவிட்டு நிமிர்ந்தால் மேலிருந்து இரண்டு கண்கள் என்னை எரித்துக் கொண்டிருந்தது யாருடையது என்று சொல்லவும் வேண்டுமோ? வேறுயார் என்னில் பாதி இல்லை இல்லை என்னை முழுமையாக வாங்கிக்கொண்டு உயிரை மட்டும் தவணை முறையில் வாங்கிவரும் என் சகதர்மினி தான்.
மேற்சொன்ன சம்பவம் நடந்து கொண்டிருக்கும் இடம் : எங்கள் ஊர் பேருந்து நிலையம் (அப்டின்னா அதுதங்க பஸ் ஸ்டான்ட் (ஓ அதுவா ஒழுங்கா முதல்லயே தமிழ்ல சொல்ல வேண்டியது தானேய்யயா) அப்டின்னு யாரும் சொல்ல மாட்டீங்கண்ணு நம்புறேன்) நேரம் : கெட்ட நேரம் (எனக்கு மட்டும் தான் அதுனால நீங்க கவலைப்படாம வாசிக்கலாம்). என் அருமை மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போறாங்க (காரணம் எல்லாம் கேக்காதீங்க அப்புறம் என் அம்மா வீட்டுக்கு போக கூட உரிமையில்லியாண்ணு உங்க மேலேகூட வழக்கு போட்டுடுவாங்க ).
நானும் கூட வரட்டுமாண்ணு தெரியாம ஒரு கேள்வி கேட்டேன். ஆடடா என்னங்க நீங்க உங்கள கூப்பிடாம நான் வேற எங்கயாவது போய்ருக்கனா? இப்போ எங்க வீட்டுக்கு தானே போறேன் போய்ட்டு திரும்ப உடனே நாளக்கி காலைல கிளம்பி வந்துருவன் நீங்க எதுக்கு வெட்டியா அலஞ்சிகிட்டு நீங்க நிம்மதியா வீட்டுல உக்காந்து ஓய்வெடுங்க நான் தான் உங்களுக்கு புடிச்ச சாப்பாடா பாத்து பாத்து பண்ணி வச்சுருக்கனே (ஆமா பாத்து பாத்து தான் பண்ணினா ஆனா எத பாத்து பண்ணுனா சமையலையா பாத்து பண்ணுனா டி.வில ஓடிட்டுருந்த விளம்பரங்களையும் இடைல இடைல வந்துட்டு போன மெகா தொடர்களையும் பாத்து பண்ணுன) நீங்க சாப்டுட்டு நிம்மதியா தூங்குங்க.
கொஞ்ச நேரம் என்னால நம்பவே முடியல அட யாரு இது இவ்ளோ அக்கரையா பேசுறது உண்மையிலே என்னோட மனைவிதானாண்ணு சந்தேகம் வந்துடுச்சு ஒரு கணம் என் அருமை மனைவிய நான் காதலிச்ச காலம் ஞாபகம் வந்தது.
என்னங்க அதிசயமா பாக்குறீங்க சொன்னா நம்புங்கங்க நாங்க காதலிச்சு தாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம். (கண்டிப்பா இந்த இடத்துல நான் ஃபிளாஷ்பேக் போட்டே ஆகணும் கொஞ்சம் மனச திடப்படுத்திகிட்டு பாத்து சை.. வாசிச்சு முடிச்சுடுங்க)
அப்போ நான் இளங்கலை இரண்டாமாண்டு படிச்சிட்டுருந்தேங்க ஒரு நாள் எங்க தமிழ் வாத்தியாரு குற்றாலக் குறவஞசிலருந்து சில பாட்டுக்கள் சொன்னாரு அந்த பாடல்களோட நடை எனக்கு ரொம்ப பிடித்துப் போச்சு. அதனால புத்தக சாலைல போய் அந்த புத்தகத்த எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்

இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங் கொண்டையாள் - குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும் இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு நுதலினாள்

(கறுத்து திரண்ட கார்மேகத்தை சுற்றி சுருட்டி வைத்ததைப் போன்ற கொண்டையை உடையவள்;,
காதுவரை நீண்ட கெண்டைமீன் வடிவத்தை ஒத்த இரு கண்களும் பார்ப்பவர்களின் நெஞ்சை பறிக்கக்கூடியதாய் இருக்கிறது, முள்முருங்கை மரத்தின் மலர்ப்போன்று சிவந்த உதடுகளைக் கொண்ட இப்பெண்ணின் நெற்றியோ பிறைச்சந்திரனைப் போன்று வளைந்து விளங்குகிறது)

அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும் புருவத்தாள் - பிறர்
அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப் பருவத்தாள்
கரம்பு போலினித்து மருந்துபோல் வடித்த சொல்லினாள் - கடல்
கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள்

(இவளுடைய வளைந்த புருவத்தை பார்க்;கும் விற்கள் கூட இந்த புருவத்தைப் போல் நாம்; வளைந்திருந்தும் இதற்கிருப்பதில் பாதியளவு அழகு கூட தம்மிடம் இல்லையே என்று குறைப்பட்டுக் கொள்கின்றன கடலிலிருந்து பெறப்பட்ட முத்துக்கு நிகரான பற்களையும், மருந்து போல கசப்பான வார்த்தைகளை உரைத்தாலும் கரும்பு போல இனிமையாக நம் காதுகளுக்கு கேட்க வைக்கும் இனிமையான குரலையும் கொண்ட இந்த பெண்ணின் வயது என்னவென்று கேட்டால் என்னால் ஒன்று தான் சொல்லமுடியும்; பார்ப்பவர்களின் அறிவை மங்கிப்போகுமாறு செய்யும் அழகு நிறைந்த வயதைக் கொண்டவள்)

கல்லுப் பதித்ததங்கச் செல்லக் கடகமிட்ட செங்கையாள் - எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக்கிடக்குமிரு கொங்கையாள்
ஒல்லும் கருத்தர் மனக்கல்லுஞ் சுழிக்குமெழில் உந்தியாள் - மீதில்
ஒழுங்கு கொண்டுள்ளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள்

(கற்கள் பதித்த தங்க வளையல்கள் அணிந்தவள், கச்;சைக்குள் இருந்தும் அடங்காமல் திமிரும் மார்பைக் கொண்ட இவளின் பின்னெழில்கள் கடுமையான விரதங்கள் பூண்ட தவசிகளின் கல்மனத்தையும் கலக்கிவிடுகிறது. உண்பதற்கு பந்தியமர்ந்திருப்பது போன்று இவள் உடலெங்கும் அணிவகுத்து நிற்கும் சிறிய ரோமங்களைப் பார்த்த மாத்திரத்தில் நம்மனம் கொள்ளை போகிறது)

துடிக்கு ளடங்கியொரு பிடிக்கு ளடங்குஞசின்ன இடையினாள் - காமத்
துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத் தொடையினாள்
அடுக்கு வண்ணச்சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் - மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும் நடையினாள்

(உடுக்கையைப் போன்று ஒரு கையின் பிடிக்குள் அடங்கிவிடும் சின்ன இடையை கொண்ட இவளின் கால்கள் காமத்தை தூண்டும் கதலி வாழைத் தண்டுகளைப் போல உள்ளது. ஆழகிய தனது நிறத்துக்கு பொருத்தமான சேலையை மடிப்பு கலையாமல் உடுத்தி இவள் அன்னப்பறவையைக் காட்டிலும் சின்ன அடியெடுத்து வைத்து அழகு நடைபயில்பவள்)

ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்த என் முன்னால் நிழலாடியது நிமிர்ந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி ஆச்சரியம் இதுவரை படித்த உரைக்கு உதாரணம் காட்டுவது போல் இவள் என் கண்களுக்குள் வந்துவிட்டாள் அதோடு நிற்காமல் என் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கு கொள்வதாக கூறி என் வாழ்விலும் வந்து விட்டாள்.
(உங்களுக்கு பிடித்த இசை ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் கடந்தகாலம் நிறைவுற்றது)
உங்களுக்கு நேரம் போகலண்ணா ஒண்ணு பண்ணுங்க போய் சிவாஜி படத்துக்கு பதிவு பண்ணிட்டு வாங்க (அதானே பார்த்தன் என்னடா இவ்ளோ நேரம் பாசம் பொத்துட்டு வருதேண்ணு)
திடீரென்று ஏதே நினைத்துக் கொண்டவனாய் அடடா.. பேசிட்டுருந்ததுல தண்ணீர் வாங்க மறந்துட்டன் இதோ வந்துட்டன். (அப்பாடா அதுக்கு மேல ஏதும் கேக்காம நழுவியாச்சு)
வேண்டுமென்றே பக்கத்திலிருந்த கடையை புறக்கணித்து விட்டு சற்று தூரத்தில் சென்று தண்ணீர் வாங்கி திரும்பும் போது பேருந்து நகர ஆரம்பித்தது
எட்டி தண்ணீர் குடுவையை கொடுத்துவிட்டு வேகமாக திரும்பினேன்
என்னங்க சிவாஜி பட
ஹா..ஹா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா நான் சுதந்திர மனுசன்
உள் மனசின் சந்தோச கூச்சலில் வெளிச்சத்தம் எதுவும் கேட்கவில்லை

(பி.கு. : எழுதப்பட்ட காலம் சிவாஜி வெளிவந்து உலகையே(?) உலுக்கிய நேரம்...)

அக்னி
05-12-2007, 05:22 PM
எம் உணர்வை பதித்து, உருகியே எமை உயர்த்தும் எழுதுகோல்,
தூக்கத்தில் தோள் சாயும் காதல்,
தைத்த முள்ளை எடுக்கும் பார்வை முள்,
என்று எளிமையான திருக்குறள் விளக்கங்களும்,

அழகுப் பாவையரின் உச்சவலு அசைவுகளும்,
அன்புத் துணையாளின் கவர்ச்சி அங்கங்களும்,

இடையிடையே, செருகி நின்று, சிரிப்பூட்டும் பேச்சுக்களின் வரிவடிவங்களும்,
பொக்கிஷப் பதிவுகள்...

மிகுந்த பாராட்டுக்கள் செல்வா...

இலக்கியச்சோலை தமிழ்மன்றத்தின் இன்னுமொரு செல்வம்...
சேரட்டும், சேரட்டும், சேர்ந்து கொண்டே இருக்கட்டும்...

செல்வா
07-12-2007, 07:23 AM
எம் உணர்வை பதித்து, உருகியே எமை உயர்த்தும் எழுதுகோல்,
தூக்கத்தில் தோள் சாயும் காதல்,
தைத்த முள்ளை எடுக்கும் பார்வை முள்,
என்று எளிமையான திருக்குறள் விளக்கங்களும்,

அழகுப் பாவையரின் உச்சவலு அசைவுகளும்,
அன்புத் துணையாளின் கவர்ச்சி அங்கங்களும்,

இடையிடையே, செருகி நின்று, சிரிப்பூட்டும் பேச்சுக்களின் வரிவடிவங்களும்,
பொக்கிஷப் பதிவுகள்...

மிகுந்த பாராட்டுக்கள் செல்வா...

இலக்கியச்சோலை தமிழ்மன்றத்தின் இன்னுமொரு செல்வம்...
சேரட்டும், சேரட்டும், சேர்ந்து கொண்டே இருக்கட்டும்...

பாராட்டுக்களுக்கு நன்றி... அக்னி.....

சிவா.ஜி
07-12-2007, 07:32 AM
மன்றத்தின் பெருமை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருக்கிறது.வளமான இலக்கியச்சுவையை கொஞ்சமும் குறையாமல்....நகைச்சுவையெனும் முந்திரியிட்டு நீங்கள் பரிமாறும் அழகு அசத்துகிறது செல்வா.இதே பாணியில் யவனிகாவும் இளைக்கலாம் வாங்க திரியை வெகு அழகாகக் கொடுத்தார்கள்.மன்ற உறவுகளின் இப்படிப்பட்ட அசத்தும் திறமைகளைப் பார்த்து மனம் பரவசப்படுகிறது.வாழ்த்துகள் செல்வா.

ஆதவா
07-12-2007, 08:04 AM
அருமையான கட்டுரை செல்வா... இலக்கிய பரிமாறல்கள் வலுத்துவருகிறது நம் மன்றத்தில்.....

அதிலும் காமத்தை (காதல்) எடுத்து உரைத்தது இன்னும் அருமை.... எனக்கு நீண்ட நாட்களாக இந்த ஆவல் இருந்தது... காமத்துப் பாலில் உள்ளவற்றை தனியாக எடுத்து கொடுக்கவேண்டுமென்று.... நேரம் இல்லாமை, என்னை பின்னுக்குத் தள்ளிவிட்டது...

என் மனதில் இருந்த அத்தனையும் இங்கே கொட்டுகிறேன்... இதைவிட சந்தர்ப்பம் எனக்கு வாய்க்காது என்று நினனக்கிறேன்... . (கொஞ்சம் லேட்டுன்னா எல்லாருமே முந்திக்கிறாங்கலே!!!)

காதல் ஒரு சாபவரம் என்பேன். அது சாபமாகவும் இருக்கிறது, வரமாகவும் இருக்கிறது. காதலர்கள் காதலுலகில் நாயகர்கள், ஒரு இணைக்கு ஒரு உலகம். கற்பனைகள் நிறைந்த மாஉலகம். காதலை சிறப்பித்துச் சொல்லவேண்டுமெனில் அதற்கு இங்கே இடம் பற்றாது. காதலைப் பற்றி காதலர்களைவிட கவிஞர்கள் நன்றாக பேசுவார்கள். எந்த ஒரு கவிஞனும் காதலைத் தொடாமல் இருந்ததில்லை. காதலைத் தொட்டவனெல்லாம் கவிஞனுமில்லை. நம் மன்றத்தில் உலாவும் ஷீநிசிக்கள் காதல் வேள்வியில் நெய் ஊற்றிகள்.

நம் இலக்கியங்கள் நம்மை எப்படி காதலிக்கச் சொல்லுகின்றன? செல்வாவின் எடுத்துக் காட்டுக்களை நானும் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினனக்கிரேன்.... (கொஞ்சம் திருக்குறள் புத்தகம் தேவையப்பூ!!)

இன்றைய உலகில் காதல் செய்வாரைக் காட்டிலும் காதலை எதிர்ப்பார் அதிகம். இது என் நாட்டைப் பொறுத்தவரையில், பிறநாட்டு வரலாறு இங்கே இணைக்கப்படவில்லை. காதல் எதிர்ப்பாளர்கள் காதல் புரியாமல் இருப்பார்களா? நிச்சயம் இல்லை. பிறந்த பூச்சிக்கும் காதலுண்டு. துறந்த துறவிக்கும் காதலுண்டு. ஒவ்வொரு விதத்திலும் ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கச் செய்கிறது. காதல் பொதுவானது. யாவரையும் ஈர்க்கச் செய்வது. காதலுக்கு சில தகுதிகள் தேவை. அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் போர்த் தொழில் புரிபவனையே காதல் புரிவதாகக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் காதலனுக்குத் தேவையான தகுதியாக அது இருந்தது. உங்கள் உள்ளத்தில் காதல் மலர்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு என்ன தகுதி என்பதைக் கணக்கே கொள்ளவேண்டும். சாதி, மதம், மொழி, இனம், கடந்து வருவது காதல். காதல் உலகில் கவிதையே இறைவன், கவிதையே சாதி, கவிதையே மொழி, எல்லாமுமே!

பெரும்பாலும் ஆண் பிள்ளைகள் எளிதில் காதலில் விழுந்துவிடுகிறார்கள். பெண் விழிகள் பின்னிய வலையில் தெரியாமல் சிக்கிக் கொள்ளுகிறார்கள். இது யார் தவறு? பெண்களின் தவறா? இல்லை ஆண்களின் தவறா? இரண்டுமில்லை. காதல் வருவது வயதின் முதிர்ச்சி, அதை சரியே செய்வது அனுபவ முதிர்ச்சி. "

ஏதிலார் போல பொது நோக்கு நோக்கல், காதலில் உள்ளது.. அதாவது தெரிந்தவரைக் கூட தெரியாதவர் போல பொத்தாம் பொதுவாக நம்மைப் பார்ப்பது. இது பெண்களுக்குக் கைவந்த கலை. அப்படி ஏதும் செய்கிறார்களா?

முதலில் நாம் காதலைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். நம்மால் இது முடியாது என்ற சோர்வு நமக்குள் வரக்கூடாது.

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

ஆகவே காதலுக்கு முதலில் முடிவெடுத்தல் அவசியம். அசாவாமை என்பது கடும் முயற்சி என்பது பொருளாகும். காதல் என்ன வியாபாரமா, கடும்முயற்சி எடுத்து வெற்றிபெற, இல்லை விளையாட்டா என்று நீங்கள் கேட்கலாம். காதல் உங்களுக்கு வாழ்க்கை. உங்கள் வாழ்வின் பெரும்பகுதி வரலாறு. அதை முடிவெடுப்பதில் அவசரமோ தவறோ இருக்கவும் கூடாது. அவசரப்பட்டு வெளியே வரும் காதல் என்றுமே நீடிக்காது. ஆக, அதில் கடும்முயற்சி எடுத்து வெற்றிபெறுவதில் தவறில்லை...

நீங்கள் காதலுக்குத் தயாராகும் முன்னர் நீங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.. உங்கள் மன அடக்கம், வீரம், திறமை போன்ற அகபுற அழகுகளை ஊக்குவிக்கவேண்டும்.. காதல் இணையை நம்மால் உள்ளத்தே பூட்டி வைக்கமுடியுமா என்ற சந்தேகம் இல்லாத உள் அரண் வேண்டும்...

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைபடுத்தும்
பற்றற்கு அரியது அரண்.

உங்களை எந்த ஒரு எதிர்ப்பு தாக்கினாலும், எந்த விதத்தில் தாக்கினாலும், அதாவது, நண்பரோ, உறவினரோ, உறவுகளைக் காட்டி அச்சுறுத்தி எதிர்த்தாலும், உங்கள் உடன் இருக்கும் குடும்பத்தார் (அறைபடுத்தும்) அல்லது உங்கள் உள்ளமே கூட எதிர்த்தாலும்..... நீங்கள் உங்களின் மனதை எந்தவிதத்தில் அரணமைத்து காக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, பற்றற்கு அரியது..

மலரினும் மெல்லிது காமம். ஆகவே அதன் மென்மையை நான் உணர்ந்துகொள்ளவேண்டும். நம்முள் காதலை எடுத்து ஊற்றிக்கொள்ளவேண்டும். உள்ளக் களித்தலும் காணமகிழ்தலும் காமத்திற்கு உண்டு. நம் மன சந்தோசம் காதலில் உண்டென்பதை புரிந்துகொண்டு காதலுக்குள் மூக்கை நுழைக்கவேண்டும். நம் இணையினைப் புரிந்துகொண்டு அதன்படி நடத்தலே உள்ளக் களிப்பும் மகிழ்வும் உண்டாகுமென்பதை நான் சொல்லியும் தெரியவேண்டியதில்லை.

போதுமப்பா! இதுக்குமேல முடிஞ்சா நாளைக்கு தொடருகிறேன்.... (அடுத்த திரியையும் பார்க்கவேண்டாமா?)

செல்வா
12-12-2007, 10:34 PM
தெரு முனையில் நுழையும் போதே பலகார வாசனை மூக்கை துளைத்தது. யாரு வீட்டுலப்பா இப்படி ஒரு விசேட சமையல்! எதும் பண்டிகை கூட இல்லியே? என்று மனதுக்குள் எண்ணியபடி நன்றாக வாசம் பிடித்தேன். ஹ்ம்ம் என் வீட்டுலயும் தான் ஒருத்தி இருக்காளே புருசன் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு ருசியா சமயல் பண்ணி குடுக்கணுமே ம்ம்ம் அதுக்கெல்லாம் கொடுத்து வச்சுருக்கணும். இனிமே அடுத்த பிறவில தான் இந்த ஆசை எல்லாம் நிறைவேறும் போலருக்கு.. என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தேன். அடடே என்ன அதிசயம் இது! .. இந்த வாசனை என்னோட வீட்டுலருந்துதான் வருது.. வீடுதவறி வந்துட்டனா? சுற்நும் முற்றும் பார்த்து ஒருதடவை உறுதிப்படுத்திக் கொண்டேன். மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தேன் எனக்கு முதுகு காட்டிக்கொண்டு என் மனைவி வேலையில் மும்முரமாக இருந்தாள். அடுப்பில் நெய் காய்ந்து கொண்டிருந்தது. நெய்யில் முந்திரியை போட்டுக்கொண்டிருந்தவள் என் வருகையை உணர்ந்து திரும்பி வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றாள்.
வந்துட்டீங்களா வாங்க தண்ணி எடுத்து வச்சிருக்கேன் போய் கை; கால் கழுவிட்டு போய் திண்ணைல உக்காந்துருங்க தோ ரெடியாயிடும்
ஆச்சரியம் தாளாமல்! என்;னடா என்ன விசேசம்? சமையல் எல்லாம் பலமாருக்கு. என்று கேட்டேன். அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது போய் தயாரா உக்காருங்க வந்து சொல்றன் முகத்தை தீவிர மாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
சரி என்னமோ விசேசம் போலருக்கு . என்று கை கால் கழுவ சென்றேன். திடீரென்று மனதுக்குள் ஒரு கவலை அழுத்தமாய் வந்து அமர்ந்து கொண்டது. அய்யய்யோ இன்னிக்கி எதாவது விசேசமா? நான் மறந்துட்டனா? அப்புறம் அதுக்கு வேற ஒரு மூச்சு பாட்டு வாங்கி கட்டிக்கணும். மனதிற்குள் ஒவ்வொரு முக்கிய நாள்களாக வந்து போனது.. கல்யாண நாள் .. இல்லை காதலை சொன்ன நாள்? அதுவும் இல்லை .. வேற என்னோட பிறந்த நாள்? இல்லியே அது செப்டம்பர் 5 தானே ஒரு வேளை அவளோட பிறந்த நாளோ? இல்லியே மனதுக்குள் பல நினைவுகள் வந்து போனது சரி வருவது வரட்டும் சமாளிக்கலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு.. போய் சோபாவில் அமர்ந்தேன்.. சன்னலுக்கு வெளியே எதிர் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண்கள் நான்கு பேராக சேர்ந்து சுவாரசியமாக பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் குதூகலப்பேச்சு கலகலப்பாக என் காதுவரை கேட்டுக் கொண்டிருந்தது.
சட்டென்று மூக்குக்கு பக்கத்தில் வாசம் வீசியது தலை அதுவாக திரும்பியது விழிகள் வியப்பால் விரிந்தன.. எனக்கு முன்னால் தட்டு தெரிந்தது அதில் கேசரி, லட்டு, மைசூர் பாகு போன்ற இனிப்புகள் நிறைந்திருந்தது தட்டை ஒரு கரம் பற்றியிருந்தது. இன்னொரு கரத்தில் ஒரு துண்டு மைசூர் பாகு இருந்தது அதுவும் என் வாய்க்கு அருகில் நீண்டிருந்தது.
இந்தாங்க சாப்பிடுங்க அட காதுகளுக்கு கூட சுவையறியும் தன்மை வந்துவிட்டதே என் காதில் தேன் பாய்கிறதே.. காது இனித்தது தலை நிமிர்ந்தது ஆகா மஞ்சளில் குளித்த வெள்ளை ரோசாவுக்கு கண், காது, மூக்கு வாய் படைத்தது யாhர்.. வெட்கம் தோய்ந்த என் மனைவியின் முகம் தெரிந்தது.
ஆகா செல்வா.. ரொம்ப நாளக்கி அப்புறமா அதிர்ஷ்டம் உன்பக்கம் வீசுதுடா கப்புனு புடிச்சுக்க. உள்ளுணர்வு எச்சரிக்க வேகமாக கரத்திலிருந்த பாகை விழுங்கிவிட்டு அவள் கரம் பற்றி தட்டை வாங்கி வைத்துவிட்டு இழுத்து பக்கத்தில் அமர்த்தினேன். இடது கையால் அவள் தோளை அணைத்துக் கொண்டு வலக்கரத்தால் அவள் முகத்தில் வந்து படர்ந்த முடிக்கற்றைகளை விலக்கியபடி அவள் கன்னங்களை வருடிக்கொண்டே என்னடா செல்லம் என்ன விசேசம் இனிப்பு எல்லாம் தூள்பறக்குது.. இன்னிக்கி யாரோடவும் பிறந்தநாள் கூட இல்லியே..
சட்டென்று என் கரத்தைப் பற்றி தன் கரங்களுக்குள் சிறைவைத்துக் கொண்டாள். மெதுவாக என் விரல்களை நீவியபடி சொல்லத்தொடங்கினாள்.
என்ன மன்னிச்சுருமா? உன்ன மன்னிக்கணுமா எதுக்கு? இல்லமா உனக்கு தமிழ் ரொம்ப புடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் இப்பல்லாம் நீ கதை, கவிதை, கட்டுரைண்ணு பேசும்போது நான் காது குடுத்து கேக்குறது இல்ல. உன்ன உற்சாகப் படுத்துறது இல்ல.. ஆனா நான் தப்பு பணறண்ணு தோணுது. முன்னால காதலிக்கும் போது பாராட்டுன அளவுக்கு அப்புறமா உனக்கு நான் காது குடுக்குறதே இல்ல..
நான் மௌனமாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவள் தலைகுனிந்தபடியே தொடர்ந்தாள்
நேத்திக்கு அம்மாவீட்டுக்கு போனப்ப என் பழைய தோழி சுசிலாவ பார்த்தேன். ஆவ உன்னபத்தி நெறய சொல்றா.. நீ எதோ சைட்ல எழுதுறியாமே அது நல்;லாருக்குண்ணு சொன்னா. அடுத்ததா நீ என்ன எழுதப்போற, என்கிட்ட படிச்சு காட்டுனியாண்ணு கேட்டா. முதல்ல நீதானே வாசிப்ப எதாவது விமர்சனம் பண்ணுவியா?ண்ணு என்கிட்டயே கேட்டா எனக்கு என்ன பதில் சொல்றதுண்ணு தெரியல.. அப்போதான் உன்னவிட்டு ரொம்ப விலகி வந்துட்டனோண்ணு தோணுச்சு உன்ன பத்தி மத்தவங்க சொல்லி கேக்க வேண்டியிருக்கேணு கஷ்டமாருந்துச்சு
என்னோட நிலைய வர்ணிக்க தமிழ்ல வார்த்தைகளே இல்லீங்க உண்மையிலே எந்தவொரு மனுசனுக்கும் தன்னோட மனைவிகிட்டருந்து பாரட்டு கேக்குறதவிட சந்தோசமான விசயம் வேற இல்லீங்க. மத்தவங்க கிட்டருந்து பாராட்டு வாங்குறது பெரிய விசயமே இல்ல. தன் மனைவியே மனசார பாரட்டறது எவ்ளோ பெரிய விசயம். அதுவும் என் மனைவி மன்னிப்பே கேக்குறா அப்படிண்ணா என் நிலமை எப்படிருக்கும்ணு நீங்களே நெனச்சுக்குங்க. கொஞ்சம் தலைக்கனம் கூடிப்போனதென்னவோ உண்மைதான்.
அதுனால இனிமே நான்தான் உங்களோட எழுத்துக்கள முதல்ல படிப்பேன். சுரி சொல்லுங்க அடுத்ததா இலக்கிய சோலைல என்ன எழுதப்போறீங்க
எனக்கு அப்படியே தூக்கி தலைக்குமேல வச்சாப்புல இருந்துச்சு என்னமோ பெரிய கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுனமாதிரி மெதப்புல தொண்டைய செருமிக்கிட்டே பேச ஆரம்பிச்சேன் வரக்கூடிய பின்விளைவுகள் எதப்பத்தியும் யோசிக்காமஅதோ வெளிய பந்தடிக்குறாங்களே அவங்கள பாத்தா உனக்கு என்ன தோணுது
எனக்கு பந்து விளையாடுறாங்கண்ணு தோணுது ஏன் உனக்கு வேற ஏதும் தோணுதா? (அவள் குரலில் தொனத்த சிறிய மாற்றம் அப்போது எனக்கு தெரியவே இல்லை)
எனக்கு குற்றால குறவஞ்சில சில பாடல்கள் ஞாபகம் வருது.

கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடிபிந் தடியிடைபோய் மூன்றடிநா லடிநடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகியிட சாரிவல வாரிசுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்கஅயன் ஆயிரங்கண் படைத்திலானே

(பூமுடிந்த கூந்தல் கலைந்து விழ முன்னும் பின்னுமாக மூன்று நான்கு அடிகள் நடந்து தனது தோழிப்பெண்களுடன் சேர்ந்து சந்தோசமாக களித்துப் பேசியபடி வசந்தவல்லி பந்தடிக்கும் காட்சியைக் காண கண்கள் ஆயிரம் எனக்கு இல்லையே)

பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே
மந்தர முலைக ளேசலாட மகரக் குழைகளுசலாடச்
சுந்தர விழிகள் பூசலாடத் தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப் (பந்)

பொன்னி னொளிவில் வந்துதாவிய மின்னினொளிவு போலவே
சொன்ன யத்தினை நாடிநாடித் தோழியருடன் கூடிக் கூடி
நன்ன கர்த்திரி கூடம் பாடி நகுர்தத் திகுர்தத் திகுர்தத் தொம்மெனப் (பந்)

(காதிலணிந்த மீன்வடிவம் கொண்ட கம்மல்கள் ஊஞ்சல் போல ஆட
அழகான கண்கள் இரண்டும் தங்களுக்குள் சண்டையிட
பெரிதாக மூச்சு விடுவதால் மார்புக்கூடு ஏறிஇறங்க
பொன்னிலிருந்து தெறித்து வரும் மின்னல்போல
பறந்துவரும் பந்தினைத் தேடி தேடி தோழியருடன் சேர்ந்து பந்தடித்தாள்)

ஏதோ பெரிய கதாகாலட்சேபம் முடித்த பாவனையோடு சிறிது கேசரி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தேன்

(இந்த கதய இதோடே நிறுத்திருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும் .. ஆனா விதி யாரை விட்டது?)


அதோ கைல பந்து வச்சுகிட்டு பொண்ணு ஒரு பொண்ணு வராளே அவகிட்ட எத்தன பந்திருக்கு சொல்லு?
இதென்ன கேள்வி ஒண்ணு தான்
இல்லை ஐந்து
ஐந்தா? கேள்விக் குரலில் சந்தேகம் தொனித்தது எனக்கோ அது இனித்தது.

வருசங்க வீதி தன்னில் வசந்தபூங்கோதை காலில்
இருபந்து குதிகொண்டாட இருபந்து முலைகொண்டாட
ஒருபந்து கைகொண்டாட ஒரு செப்பி லைந்து பந்துந்
தெரிகொண்டு வித்தை.


வெளியே பார்த்துக்கொண்டே சொல்லிக் கொண்டிருந்த என் மனதுக்கு ஏதோ விபரீதம் என்று தோன்ற விருட்டென்று திரும்பினேன். பத்திரகாளி அவதாரமாய் என்னவள் என்முன்னால் நின்று கொண்டிருந்தாள். அப்போது தான் என் புத்திக்கு உறைத்தது.. இடுப்பில் கைவைத்து நின்று கொண்டு முறைத்துப் பார்த்தவள். ஏதும் பேசாமல் விடுவிடென்று உள்ளே சென்றாள்.
கொஞ்ச நேரத்துக்கு உள்ளிருந்து மேசை இழுபடும் சத்தமும் புத்தகங்கள் கிழிபடும் சத்தமும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக ஏதோ எரியும் வாசம் வந்தது. மனதிறகுள் நினைத்துக் கொண்டேன் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு மீண்டும் புத்தகங்கள் வாங்க பணம் சேமிக்க வேண்டியது தான் என்று.

மலர்
13-12-2007, 04:41 PM
தேவை தான் செல்வாவுக்கு இது தேவை தான்...
எழுதின கையை பேசின வாயை எல்லாம் உடைக்காம:D:D வெறும் பேப்பரை மட்டும்
கிழிச்சி எறிச்சிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு செல்வா...:traurig001::traurig001:

செல்வா
15-12-2007, 01:42 AM
தேவை தான் செல்வாவுக்கு இது தேவை தான்...
எழுதின கையை பேசின வாயை எல்லாம் உடைக்காம

:D:D வெறும் பேப்பரை மட்டும்
கிழிச்சி எறிச்சிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு செல்வா...:traurig001::traurig001:
ஹி...ஹி.... கைய கால .. உடச்சிட்டு கடினப்படுறது .. மறுபடியும் அவங்க தானுங்களே..... ஒருதடவ பட்ட அனுபவம் போதுமே...ஹி..ஹி....

ஆனாலும் உங்களுக்கு எவ்ளோ... நல்லமனசு....... புல்லரிக்குதுங்க....

lolluvathiyar
15-12-2007, 05:50 AM
அருமை செல்வா அருமை மிக அருமை, மனைவி இனிப்பு பரிமாரிய அனுபவத்தை சூப்பராக விளக்கி இருந்தீர்கள். கடைசியில ஓவரா இலக்கிய குனத்தை காட்டி அடிவாங்கி விட்டிர்களா.


உண்மையிலே எந்தவொரு மனுசனுக்கும் தன்னோட மனைவிகிட்டருந்து பாரட்டு கேக்குறதவிட சந்தோசமான விசயம் வேற இல்லீங்க.

உன்மைதானுங்க, ஏதோ நீங்க எல்லாம் கவிதை டேலன்டு வச்சிருக்கீங்க, இலக்கனம் அப்படி இப்படினு பேசி பாராட்டு வாங்கிக்குவீங்க (மிஸ்பையர் ஆச்சுனா அடியும் வாங்கிக்குவீங்க).
நான் எப்படீங்க பாராட்டு வாங்கரது, எனக்கு இந்த கவிதை கதை எல்லாம் வராதுங்க, விவாத தான் பன்னுவேன், அத அங்க சொல்ல ஆரம்பிச்சாலே அடிதான் விழுது. ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க.


எழுதின கையை பேசின வாயை எல்லாம் உடைக்காம

மலர் ஏன் இந்த கொலைவெறி பாவம் அப்பாவி தமிழ் மொழி பற்றுடைய இலக்கியவாதியா இப்படியா சொல்லரது. இரு உனக்கு லொள்ளபுரி வரலாற்றில் வக்கறேன் ஆப்பு

எனக்கு பள்ளியில் படித்த இந்த ஒரு பாட்டு மட்டுமே நினைவில் எப்பவுமே நினைவில் இருக்கிற*து, இதை தான் மனைவியிடம் அடிகடி பாடிகாட்டுவேன் ராகத்துடன்.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக்
குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட
இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட
மலர்ப் பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.

ஆனா இதன் முழு அர்த்தத்தை கேட்டு எனக்கு நோஸ் கட் கொடுத்து விட்டாள் என் மனைவி, இதன் விளக்கு உரையை தந்து உதவ வேண்டும். எனக்கு இலக்கிய அறிவு இருக்குனு போய் இன்னிக்கே பந்தா விடலாம்னு தான்

யவனிகா
15-12-2007, 02:44 PM
இந்தத் திரியவே நான் லேட்டாத்தான் பாத்தேன்...நல்ல விசயம்...கண்டிப்பாக செல்வாவை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

மலரு சந்தடி சாக்கில என்ன வாறாதே..பின்னால வருத்தப்படுவே.....

செல்வா
15-12-2007, 03:25 PM
இந்தத் திரியவே நான் லேட்டாத்தான் பாத்தேன்...நல்ல விசயம்...கண்டிப்பாக செல்வாவை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

எதுக்குங்க அக்கா..... எவ்வளவு அடி வாங்குனாலும் மறைக்காம... சொல்லிடறேண்ணா..... ஹி...ஹி... சும்மா சொன்னேன்..
நன்றி அக்கா..

செல்வா
15-12-2007, 04:32 PM
உன்மைதானுங்க, ஏதோ நீங்க எல்லாம் கவிதை டேலன்டு வச்சிருக்கீங்க, இலக்கனம் அப்படி இப்படினு பேசி பாராட்டு வாங்கிக்குவீங்க (மிஸ்பையர் ஆச்சுனா அடியும் வாங்கிக்குவீங்க).

பெரும்பாலான நேரம் இதுதாங்க நடக்கும்..... :traurig001:மலர் ஏன் இந்த கொலைவெறி பாவம் அப்பாவி தமிழ் மொழி பற்றுடைய இலக்கியவாதியா இப்படியா சொல்லரது. இரு உனக்கு லொள்ளபுரி வரலாற்றில் வக்கறேன் ஆப்பு

அப்படி கேளுங்க வாத்தியார்....

மிக்க நன்றி..... வாத்தியாரய்யா.. உங்க பாராட்டுக்களுக்கு...

செல்வா
19-12-2007, 09:40 AM
ஆச்சு கடைசியா நான் கவிதை கதைண்ணு பேனா எடுத்து ஒரு மாசமாச்சு. என்னங்க பண்றது நடந்து முடிஞ்ச உள்நாட்டு கலவரத்தோட பாதிப்பு இன்னும் அடங்குன பாடில்ல. மேல நடந்த நிகழ்ச்சிக்கு அப்புறமா அலுவலகம் போகும் போது தவிர மத்த நேரத்துல பேனாஇ பேப்பர் போன்ற பொருள எல்லாம் தொடுறதுக்கே அனுமதி இல்ல. செய்தித்தாள் கூட வெப்சைட்லதான் போய் படிக்குறன்னா பாத்துக்குங்க.

ஒரு நாள் இராத்திரி தூங்க ரொம்ப நேரமாயிருச்சு.. போய் படுத்தா தூக்கம் வரல (நீங்க நெனைக்குறது தப்பு கொசுத்தொல்லை இல்லீங்க என் பொண்டாட்டியோட குறட்டை தொல்லை தான்)

எதாவது எழுதியே ஆகணுமுண்ணு மூளை எல்லாம் பரபரக்குது.(அட உனக்கு மூள எல்லாம் இருக்கா? ஷ்ஷ் சத்தம் போடாதீங்கப்பா என் பொண்டாட்டி முழிச்சுக்கப் போறா அப்புறம் எங்கிட்ட இல்லாதது எப்படி உங்கிட்ட இருக்கலாம்ணு புடுங்கிப்பா).
கணிணிக்கு உயிர்கொடுத்து.. மன்றத்துல நுழைஞ்சு... என்ன சொல்லாம்ணு யோசிக்கும் போது. ஒண்ணுமே உதயமாகல.... என்னடா ராமா இது எனக்கு வந்த சோதனை அப்படிண்ணு வாய்விட்டே சொல்லிட்டன்.... என்னடா ராமா? அட ராமா?... அட இராமனே... வழிகாமிச்சுட்டான்... இராமயணத்திலருந்து சில பாடல்கள்..உடனே... மூளையின் சேமிக்கப்பட்ட செல்களிலிருந்து விடுபட்டு மனதில் படமமாய் விரிந்தன...

விதியினை நகுவன அயில் விழி பிடியின்
கதியினை நகுவன அவர் நடை கமலப்
பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம்.

(விதியைப் பார்த்து சிரிக்கிறது அவள் கண்கள்இ யானையின் நடையைப்பார்த்து சிரிக்கிறது அவள் நடைஇ
குளத்தில் குவிந்திருக்கும் தாமரை மொக்குகளைப் பார்த்து சிரிக்கிறது அவளுடைய கொங்கைகள்இ
வுhனில் உலாவும் வெண்ணிலவினை பார்த்து சிரிக்கிறது அவள் முகம். அதாவது அவற்றின் அழகு எதுவும் அவள் அங்கங்களின் அழகுக்கு இணையாகவில்லையாம்)

பகலினோடு இகலுவ படர் மணி மடவார்
நகிலினோடு இகலுவ நளி வளர் இளநீர்
துகிலினோடு இகலுவ சுதை புரை நுரை கார்
முகிலினோடு இகலுவ கடி மண முரசம்

(பகலைப் போல் ஒளிர்கிறது அவள் அணிந்துள்ள ஆபரணங்கள் இ நன்கு வளர்ந்த இளநீரைப் போலுள்ளது அவள் மார்புகள்இ நுரையைப் போலுள்ளது அவள் அணிந்துள்ள ஆடைஇ அவள் மணம் புரிவதற்கென முழங்கப்படும் முரசத்தின் ஒலியானது கார்மேகத்தின் இடியொலியை ஒத்துள்ளது)
.
ஒருவாறு..... மனஅமைதி கிடைத்தார்போல் உணர.. கைகளிரண்டையும்.. தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறித்தேன்.... உயர்த்திய கரங்கள் மறுபடி கீழே வரமறுக்க.. என்னாயிற்று என்று திருமபிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி.... இரண்டு வளைக்கரங்கள்.. வலுவாகப் பிடித்துக்கொள்ள...

மனதிற்குள்..(மாட்டுனாண்டா..மானஸ்தன்..) :fragend005:

"ஏன்யா.... எனக்கா மூளை இல்ல....? உமக்கு மட்டும் ரொம்பவே மூளை இருக்கா.. பாரும் போய் நீரு வாங்கிப்போட்டுருக்குற.. காய்கறிகள போய் பாரும் அதுசொல்லும்.... உம்ம மூளையோட இலட்சணத்த........................
( ஏன் இவ்வளவு நீளத்துக்கு புள்ளிகள்னு பாக்குறீங்களா? அதுக்கு மேல அவங்க பேசுனதெல்லாம் எங்களுக்குள்ள மட்டும்.ஹிஹி?) "

மன்றத்து உறுப்பினர் ஒருத்தர் புலம்புறது கேட்குது
"அடபாவமே. அப்புறமும் ஏண்டா இப்படி நீயும் கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டத்துக்குள்ளாக்குற?"

என்னங்க பண்ணுறது..
ஆடிய காலும் பாடுன வாயும் சும்மாருக்காதுண்ணு கேட்டுருப்பீங்க அதோடு கூட எழுதுன கையும் சேர்த்துக்கோங்க ...!:)

செல்வா
19-12-2007, 10:09 AM
எப்பவும் பொண்ணுங்களப் பத்திதான் எழுதுவியாடா?
வேற எதும் எழுதமாட்டியா?
அப்டிண்ணு நெறய பேரு நெனச்சதால.(ஹி..ஹி.. இந்த தடவ அடிகொஞ்சம் அதிகமாயிடுச்சு.. அது சரியாகுற வர நல்லபுள்ளயா இருக்கலாம்ணு தான்..)
கொஞ்சம் வித்தியாசமா சில பதிவுகள் கம்பராமாயணப் பாட்டு எழுதுனதால அதோட தெடர்ச்சியா சில கம்பரின் கவிதைகள்

என்னப்பொறுத்தவரை திருக்குறள், சிலப்பதிகாரத்துக்கு அடுத்தபடியா தமிழோட சிறந்த புத்தகம் கம்பராமாயணம்தான். ஆனா கவிநயம் பாக்கும்போது கம்பர் மத்த எல்லாரயும் விட முதல்ல இருக்காரு. கவிச்சக்கரவர்த்திண்ணு சொல்ல சரியான ஆள் தான்.
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்ணு சொல்லுவங்க அது ரொம்ப சரி. (இப்படி ஒரு கவிஞன் வீட்டுலருந்தா நானே கவிதைல கலக்குவேன் அப்படி இருக்கும்போது கட்டுத்தறி கவிபாடுறது பெரியவிசயமா என்ன.)
வைரமுத்து ஒரு கேள்வி பதில்ல உங்களைக் கவர்ந்த சங்ககாலக் கவிஞர் யாருண்ணு கேட்டதுக்கு
சந்தேகமே இல்லாம கம்பர் தான். முக்கி முக்கி மூன்று எதுகை எழுதிகிட்டு நாலாவது எதுகைக்கு நாக்கு தள்ளுகிற கவிஞர்கள் மத்தில அனாயாசமா எதுகைகள் எழுதித்தள்ளியிருக்கும் கம்பன் காவிச்சக்கரவர்த்திதான்;. அப்டிண்ணு சொன்னாரு.

கம்பரோட கவிதைகள்ள எனக்கு ரொம்ப புடிச்ச கவிதை இது. இந்த கவிதைகளில் கம்பருடைய சொல்லாற்றலைப் பார்க்கலாம்

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயநடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே

(கார்மேகம் கூடி மழை பொழிந்து உழவர் பெருமக்களுடைய ஏர் ஒழுங்காக நடக்குமெனில் உலகில் இயல் இசை நாடகங்கள் குறைவின்றி நடக்கும் திருமுறைகள் கூறுவது போன்று அறம் சீர்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும் படைவீரர்கள் தொய்வின்றி வாழ்வார்கள் இந்த உலகில் நடக்கவேண்டிய நல்லவை அனைத்தும் குறைவின்றி நடக்க உயிர்களுக்கு பசி மட்டும் நடக்காது அதாவது இருக்காது.)

அதுமட்டும் இல்லை அடுத்த பாட்ட பாருங்க

இப்பொழுதுஇ எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

நீ காட்டுக்கு போணும்ணு சொன்னதும் இராமனின் முகத்தோற்றம் அப்போது தான் மலர்ந்த தாமரைப் பூவை ஒத்திருந்ததாக கூறும் கம்பர்

ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே

இராமன் காட்டுக்கு செல்வதை கேட்டு பசுக்கள அழ அதைப்பார்த்து கன்றுகள் அழ அன்று பூத்த பூக்கள் எல்லாம்அழ நீர் வாழ் பறவைகள் அழ கள்ளுண்டவர்களும் சோகம் தாழாமல் அழ யானைகள் அழ போர்குதிரைகள் கூட அழுகின்றன.

ஆகா கம்பர் கம்பர் தாங்க
இப்படிப்பட்ட பெருங்கவிஞர்கள் கிடைத்தது தமிழின் பாக்கியம் - ஆனால் இத்தனை சிறப்புடைய கவிகள் இருந்தும்
தமிழின் சிறப்பு உலகமுழுதும் உணரப்படாதது
தமிழன்னையின் துரதிர்ஷ்டம்......
வேற என்ன சொல்ல

lolluvathiyar
20-12-2007, 10:20 AM
இத்தனை சிறப்புடைய கவிகள் இருந்தும் தமிழின் சிறப்பு உலகமுழுதும் உணரப்படாதது தமிழன்னையின் துரதிர்ஷ்டம்.

ஆமா செல்வா காரனம் தமிழில் பழைய சிறந்த கவிதைகள படைப்புகள் அனைத்தும் இரைநம்பிக்கையை சார்ந்து வருவது, நம் மக்களுக்கு பக்தி குரைந்து விட்டது, அதன் விளைவு மொழியின் சிறுப்பும் குரைய துவங்குகிறது

செல்வா
20-12-2007, 05:39 PM
ஆமா செல்வா காரனம் தமிழில் பழைய சிறந்த கவிதைகள படைப்புகள் அனைத்தும் இரைநம்பிக்கையை சார்ந்து வருவது, நம் மக்களுக்கு பக்தி குரைந்து விட்டது, அதன் விளைவு மொழியின் சிறுப்பும் குரைய துவங்குகிறது
என்னோட சிற்றறிவுக்கு.... என்ன தோன்றுகிறது என்றால்..... திருக்குறளை உலகமறியச் செய்த அளவுக்கு மற்ற இலக்கியங்கள் போகாததிற்கு காரணமும் இந்த மதம் தானோ எனத் தோன்றுகிறது.... மதம் சார்ந்த படைப்புக்களின் வட்டம் குறுகியது தானே....?

யவனிகா
03-01-2008, 01:29 PM
செல்வா தமிழ் இலக்கியத்த கரைச்சுக் குடிச்சவங்க போல நீங்க...மேற்கோள்களுடன் அழகிய நடையில் அசத்தலாய் எழுதுகிறீர்கள்...

சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா? அதில் வரும் "மாசறு பொன்னே...வலம்புரி முத்தே...காசறு விரையே...கனியே...தேனே...."தெரியுமா...தெரிந்தால், உங்கள் பாணியில் கலக்குங்கள் பார்க்கலாம்...

மலர்
06-01-2008, 05:35 AM
செல்வா நலமா தான் இருக்காரா.. :icon_rollout: :icon_rollout:
இல்லை அண்ணி கொடுத்த அடியில்....................... :D :D
அடுத்த பதிவை இன்னும் காணொமே.?? :confused: :confused:

செல்வா
06-01-2008, 06:38 AM
செல்வா நலமாத்தான் இருக்கார்... அவரோட அலுவலகத்திலருக்குற சர்வர்க்கு தான் உடம்பு சரி இல்ல... அதனால... அவருக்கும் நேரம் சரியில்லாம ஆயிடுச்சு. கவலைப் படாதீங்க கூடிய சீக்கிரம் அடுத்த அடி வாங்கிடுவாருண்ணு நம்புவோம்...

செல்வா
07-01-2008, 10:06 PM
அன்று ஓய்வுநாள் அடுத்த வாரம் கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவுக்காக ஊருக்குப் போகணும்ணு முடிவு பண்ணினதால கடைத்தெருவ வீட்டுக்கு கொண்டு வரணும்ணு பாகீரதன விடப் பிரயத்தனம் பண்ணிய என்னருமை துணைவியை துணைக்கு பக்கத்து வீட்டு பத்மாக்காவை போகச் சொல்லிவிட்டு
(அப்புறம் என்னங்க.. குண்டூசி வாங்கணும்னாவே மூணுகடை ஏறி இறங்குற ஆளு நம்மாளு. இதுல அன்னிக்கு வாங்குனது இதவிட பெருசா இருந்துச்சே , இது என்ன குண்டூசி ஒல்லியா இருக்கு குண்டா இல்ல இருக்கும் இப்படி எல்லாம் கடைக்காரன் கிட்ட கேட்டா பரவால்லியே வாங்குறதயும் வாங்கிகிட்டு என் காதுக்குள்ள ஓய்ங் சத்தம் வீடு வற்ரது வர தீராதே. ஹம் பள்ளிக் கூடம் போறதுக்கு அடம் புடிக்குற சுட்டிப்பையன் தோத்தான் போங்க. சும்மாருந்த வயித்துக்கு வலிய கொண்டுவந்து அதை நிருபிக்க வெட்டியா ரெண்டுதடவை கழிப்பறை போய்)
கடினப்பட்டு வாங்குன சுதந்திரத்த நிம்மதியாத் தூங்கலாம் என நினைத்து படுக்கையில் சாய்ந்து சற்று கண்ணயரும் நேரம்

டமார் . டமார்..

டிங் டாங் ணு ஒலிச்ச வீட்டு அழைப்பு மணி என் மண்டைக்குள்ள அப்படி ஒரு தாக்குதல ஏற்படுத்தியிருந்திச்சு.

யார்ரா அவன் இந்த நேரத்துல. மனுசன தூங்கவும் விடமாட்டானுகளா நிம்மதியா நானே கொஞசநேரத்துக்கு நிம்மதிய கடன் வாங்கி வச்சுருக்கன் அதயும் அனுபவிக்க விடமாட்டானுக போலரக்கேண்ணு முனகிட்டே..

பாதி திறந்தும் பாதி மூடிய விழிகளுமாய் . லுங்கியைச் சரியாக்கிக் கொண்டே சன்னல் வழியாப் பார்த்தன்.

பார்த்தா வெளிய என் வயசுள்ள ஒரு அழகான பொண்ணு நின்னு கைய ஆட்டி ஹாய்.. அப்டின்னா

ஒட்டிட்டுருந்த பாதி தூக்கமூம் கலஞ்சிருச்சு
யார்ரா இவணு மனசுக்குள்ள நெனச்சுட்டே . கதவ திறந்து அந்த புன்னகையில் வாயெல்லாம் பல்லாக நின்னிருந்த அந்த முகத்த பார்த்தேன்..

நீங்க.. நீ. சோபியா தானெ

அப்பாடா கண்டுபிடிச்சிட்டியே. என்ன . உள்ள வரலாமா? இப்டி வாசலயே அடச்சிட்டு நிக்கிற. தள்ளு (வேகவேகமாக விலகினேன்)

அப்பாடா உன் வீட தேடிக்கண்டு புடிச்சி வந்து சேர்றதுக்குள்ள போதும் போதும் ணு ஆச்சி

க்ளக்..க்ளக்.க்ளக்.ஸ்.ஸ் அப்பாடா.

ரொம்ப தாகம் ஏண்டா வீட்டுக்கு வந்தவங்கள உக்காரச் சொல்லமாட்டியா.(முழிக்கிறேன்) ஆமா உன் ஆசைமனைவி எங்க. காணோம்..... வீடு சூப்பரா வச்சுருக்காங்க உன் கல்யாணத்தப் போ பாத்தது உன் மனைவிய
அவ... (என் வாயிலருந்து அ முடியிறதுக்குள்ள.)
இரு வந்திர்ரன் அப்படிண்ணு சொல்லிட்டு பின் கட்ட நோக்கிப் போனா


தொடரும்......

என்ன பாக்குறீங்க ஏன் தொடரும் போட்டுருக்குறேன்னா....?
யவனியக்கா நீங்க கேளுங்களேன்.... சிவாண்ணா நீங்க கேளுங்களென் ... ஓய் ஓவியரே நீராவது(தண்ணீர் இல்லப்பா... பச்சை சட்டையாச்சே கொஞ்சம் மரியாதை குடுக்கலாம்ணுதான் (இதயம் ஏன் நமுட்டுச் சிரிப்பு?)) கேளும் ஓய்.......... சரி நானே சொல்லிடுறன்


பொய்க்காரணம் :
மணி விடிகாலை 2 ஆச்சுங்க தூக்கம் கண்ண கட்டுது....

உண்மைக்காரணம் :
எல்லாரும் பென்ஸ் ஓட்டுறாங்க நாம மாருதியாவது ஓட்டலாணுதான்

(சத்தியமா சஸ்பென்ஸ தாங்க சொல்றன். பாருங்க ஓவியன் தப்பு தப்பா புரிஞ்சுக்கிறாரு..... )

எஸ்கேப்.....................

சிவா.ஜி
08-01-2008, 11:04 AM
ஏற்கனவே காளியாத்தா....இப்ப பத்ரகாளியாத்தாளா மாறுனா உங்க டப்பா டான்ஸ் ஆடிடும்.சட்டு புட்டுன்னு உங்க மனைவி வர்றதுக்குள்ள சோபியாவை முன்னறையில வந்து உக்காரச் சொல்லுங்க.
ஆனாலும் மன்றத்துல இந்த வியாதி இவ்ளோ அதிகமா பரவியிருக்கறது நல்லால்ல...ஆமா (மாருதி ஓட்டறேன்னு சொல்லிட்டு பென்ஸ் ஓட்றீங்களா)

lolluvathiyar
08-01-2008, 12:52 PM
(அப்புறம் என்னங்க.. குண்டூசி வாங்கணும்னாவே மூணுகடை ஏறி இறங்குற ஆளு நம்மாளு.

மூனு கடைதானே பரவாயில்ல, நாங்கெல்லாம் 30 கடை ஏறி இறங்குவோம். (ஏனா அதுக்கு மேல கோயமுத்தூர்ல குன்டூசி கடை இல்ல)
இதுவரை உருட்டியது போதாதென்று இனி தோழி வேற வந்தாச்சா, நேர சமயல் ரூம் போயாச்சா. இனி நீங்க சட்னிதான்.

ஆதி
11-01-2008, 09:01 AM
செல்வா முதலில் என்னை மன்னிக்கவும், இந்தப் பகுதிக்கு பெரும்பாலும் வராமல் போனதற்கு, திருக்குறள்தானே தன் பானியில் சொல்கிறார் செல்வா என இந்தப் பகுதியில் உண்மையில் ஒரு அலட்சியம் கொண்டு விட்டேன்..

கம்பராமயணத்தையும் எடுத்து கையாண்ட விதம் உண்மையில் என்னை மிக கவர்ந்தது, திருக்குற்றாலக் குறவஞ்சி, என்னை மிகவும் கவர்ந்த நூல் எத்தனைமுறைப் படித்தாலும் சலிப்பு தட்டாத நூல்.. நானும் அதன் சந்தங்களில் சிக்குண்டு என்னையே பறிக்கொடுத்த நூல்..

கவியரசர் கூட துலாபாரம் படத்தில் ஒரு பாடல் திருக்குற்றாலக் குறவஞ்சி சாயலில் எழுதி இருப்பார்..

செவ்வரி ஓடிய கண்ணகள் இரண்டினில் சேலொடு வேலாட
கொவ்வை இதழ்களும் கொத்துமலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட
தெய்வ ரதத்தினில் சேலை மறத்தைதிட சிற்றிடைத் தள்ளாட..
- கண்ணதாசன்..

வைரமுத்துவும் அதன் தாக்கத்தில்..

தூக்கு நிறுத்திய கொண்டையாள் - விழி
தாக்கி தகர்த்திடும் கெண்டயாள்..
என்றும்..


இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே

இந்த வரிகளை காதலன் படத்தில் என்னவளே என்னவளேப் பாட்டில் பயன் படுத்தி இருப்பார்..

அறுமை செல்வா இன்னும் இலக்கியச் சோலையில் பலப் பூக்கும் முத்தொல்லாயிரத்தையும் அள்ளி தெளித்து கோலமிட அன்புடன் வேண்டுகிறேன்..


இத்தனைத் திறனையும் மறைத்து வைத்துக் கொண்டு, கவிதை எழுத தெரியாது எனச்சொல்ல பொய்வாய் புலவர்தானே நீங்கள்..

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பொய்வாய் புலவா உனக்கு..

அன்புடன் ஆதி

மலர்
23-01-2008, 05:52 AM
இதுவரை உருட்டியது போதாதென்று இனி தோழி வேற வந்தாச்சா, நேர சமயல் ரூம் போயாச்சா. இனி நீங்க சட்னிதான்.
எனக்கும் அப்பிடி தான் தோணுது.. ஆனா வாத்தியாரு அண்ணா சட்னின்னு சொல்லிட்டீங்க வெங்காய சட்னியா இல்லை தக்காளி சட்னியான்னு சொல்லலை ஹீ..ஹீ..,,,,??

செல்வா இவ்ளோ நாள் வாங்கின அடி பத்தாது... இன்னைக்கு அண்ணி வந்து ஒரு அர்ச்சனையை கும்பாபிஷேகத்துல ஆரம்பிச்சி அப்படியே திருவிழா நடத்துனா பாக்க எவ்ளோ ஜாலியா இருக்கும்..:D:D

சுகந்தப்ரீதன்
27-04-2008, 07:33 AM
செல்வா உண்மையிலேயே அசந்துவிட்டேன் நான் உங்களின் இலக்கிய அறிவைக் கண்டபொழுது..!! பொதுவாக நான் தமிழ்வழி கல்வியில் படித்திருந்தபோதும் எனக்கு வந்த தமிழாசிரியர்கள் அத்தனை ஆர்வமாய் இலக்கியத்தை பற்றியோ இலக்கணத்தை பற்றியோ எங்களுக்கு விவரித்தது கிடையாது..!!

சொந்த முயற்சியில்தான் நான் உரைநடையைக்கூட ஓரளவு கற்றுக்கொண்டேன்.. ஆனால் இலக்கியத்தை பற்றி அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தும் அதற்கான வாய்ப்பு கிட்டாமலும் வழிதெரியாமலும் இருந்திருக்கிறேன்..!! எப்போதாவது இலக்கியம் பற்றிய கட்டுரையை படித்தாலும் அதைபற்றி தெளிவான அறிவில்லாததால் கொஞ்சநேரத்திலேயே அதை மூடிவைத்துவிடுவேன்.. அப்படித்தான் ஆரம்பத்தில் இத்திரியின் ஆரம்பபதிவை கண்டுவிட்டு இது ஏதோ நமக்கு சம்மந்தமில்லாத பகுதியென்று இதுவரை இங்கே வராமலே இருந்திருக்கிறேன் நான்..!!

எதேச்சையாக என்னையறிமால் இத்திரியில் இன்று உள் நுழைந்தபோதுதான் உங்களிடம் இலக்கிய அறிவு கொட்டிக்கிடப்பதை கண்டுக்கொண்டேன்..!! இலக்கியத்தை இப்படி சுவராசியமாக விவரிப்பவர்கள் மிககுறைவு..அதுவும் நகைச்சுவையுடன் என்பது நடக்கவியலாத காரியம் போன்றது..!! ஆனால் நீங்கள் அதை அத்தனை எளிதாக செய்திருக்கிறீர்கள்... பின் ஏன் அதை நிறுத்திவிட்டீர்கள்... தயவுசெய்து மேலும் தொடருங்கள் இலக்கியசோலையில் வந்து அமர்ந்துசெல்ல ஆவலுடன் நானிருக்கிறேன்..!!

இத்தனைநாள் இங்கே வராமல் இருந்ததற்க்கு எனது வருத்தத்தை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்....!! இதுபோல எத்தனையோ நல்லதிரிகள் நம்மால் புறக்கணிக்க படுகிறதோ என்ற குற்ற உணர்வுக்கூட எனக்குள் இருக்கு செல்வா..!! கற்றுக்கொள்ள எவ்வளவோ மன்றத்தில் இருக்க இத்தனைநாள் மேம்புல்லை மட்டுமே மேய்ந்திருக்கிறேன் என்று தெளிவாக தெரிகிறது எனக்கு..!! அதற்கு உதவிய உங்கள் திரிக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள் செல்வா...!!

கடைசியா ஒரே ஒரு கேள்வி: உண்மையிலேயே உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா அண்ணா..??????!!!!

கீதம்
05-05-2011, 11:44 PM
சுகந்தவாசன் கேள்வி கேட்டதாலோ என்னவோ அணைந்துபோயிருக்கும் இத்திரியை மேலெழுப்புவதில் பெருமை கொள்கிறேன்.

இலக்கியங்களின் கனிச்சுவையைச் சாறெடுத்துக் கொடுத்து கவிரசம் பருகச் செய்த செல்வாவுக்கு கோடி நன்றிகள்.

அன்றைய கற்பனையே அமுதாய் இனித்ததே... இன்று இன்னமும் இனிக்குமே... :)மன்றம் வந்து இத்திரியை மேலும் மெருகேற்றினால் என்ன? செல்வாவை அன்போடு அழைக்கிறேன். எங்கிருந்தாலும் வாங்க செல்வா.