PDA

View Full Version : பூட்டிய கதவு!

தாமரை
29-11-2007, 04:42 PM
1990, ஆகஸ்டு மாதம். மும்பை.
நான் நெல்கோ கம்பெனியில் சேர்ந்த புதுசு. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் தானே ஈஸ்டில் ஒரு அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்தோம். நான் தான் முன்னால நின்னு வாடகை பேசி முடிச்சேன்..

இராமகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ். அப்பதான் கட்டி முடிக்கப்பட்ட புது கட்டிடம். மாசம் 1000 ரூபா வாடகை, 3000 ரூபா அட்வான்ஸ்.

7 வது மாடியில் எங்க அபார்ட்மெண்ட். அது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட வீடு (உங்க கற்பனைக் குதிரையைக் கடிவாளத்தை இறுக்கிப் பிடிச்சு நிறுத்துங்க. அது இல்லைப் பிரச்சனை).

கதவைத் திறந்தால் ஹால். முதல் மூணடி தாண்டினால், கீழ் வீடு தெரியும். கண்ணாடி மாதிரி தளம் இல்லிங்க. தளமே கிடையாது. 6 வது மாடி அபார்ட்மெண்டும் 7 வது மாடி அபார்ட்மெண்டுக்கும் அப்படி ஒரு கனெக்ஷன், 4 மாடிக்கு அப்ரூவல் வாங்கிட்டு ஏழு மாடி கட்டி இருக்காங்க. முனிசிபாலிட்டியை ஏமாத்தி அப்ரூவல் வாங்கறதுக்காக அப்படி ஹாலுக்கு கான்கிரீட் போடாம 7 மாடியை நான்கு மாடியா காட்டி இருந்தாங்க. அந்த மூணடி ஹாலிலே உள்ள போனா ஒரு ரூம், கிச்சன் அப்புறம் பாத்ரூம் இவ்வளவுதான் வீடே!..

முதலில் நான் தான் குடியேறினேன். ஒரு வாரம் தனிக்காட்டு ராஜா. எங்களுக்கு வெள்ளிக்கிழமைதான் விடுமுறை. அந்த வியாழக் கிழமை மாலை கார்த்தி எங்கிட்ட வெள்ளிக்கிழமை நைட் லக்கேஜ் எடுத்துகிட்டு நானும் வந்திடறேன் என்று சொன்னான். அதுவரை அவன் தங்கி இருந்தது மும்பை வீ.டி. அருகில் மஸ்ஜித் பந்தரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கட்டிடத்தில் இருந்த இண்டஸ்டிரியல் டைமண்ட்ஸ் இண்டியா லிமிட்டெடுடைய கெஸ்ட் ஹவுஸில், அதன் கேட்டை இரவூ 10 மணிக்கு மூடி விடுவார்கள். அப்புறம் அடுத்த நாள் காலையில் தான் திறப்பார்கள்.

வெள்ளிக்கிழமை எனக்கு கார்த்தி வருவது சுத்தமா மறந்து போயிடுச்சி. நான் ஒன்பது மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டு தூங்கி விட்டேன்..

அந்த வீட்டுக் கதவுக்கு உள்பூட்டு, அதாவது கதவிலேயே பொருத்தப் பட்ட பூட்டு உண்டு. ஆனால் அதற்கு சாவிதான் இல்லை, அதனால் வீட்டுக்குள் இருக்கும் போது உள்பூட்டையும் வீட்டிற்கு வெளியே செல்வதானால் தனிப்பூட்டையும் உபயோகித்தோம்.

சனிக்கிழமை காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு ஆஃபீஸ் பஸ் பிடிக்க போனேன். என்ன ஆச்சர்யம் கார்த்தி பஸ் ஸ்டாண்டில் பெட்டி படுக்கையுடன். அடடே கார்த்தி நீ தாதர் பஸ்ல தானே வருவ, தாணா எப்படி வந்தே என ஆச்சர்யமாய் கேட்டேன்.

கார்த்தி என்னை எரித்து விடுவது போலப் பார்த்தான். .ஏண்டா ராத்திரி 10:30 ல இருந்து 11:30 வரைக்கும் கதவைத் தட்டோ தட்டுன்னு தட்டறேன் திறக்காம இப்ப கேள்வி கேட்கறயா? நான் தான் வர்ரேன்னு சொல்லி இருந்தன்ல.. ஏன் பூட்டு போட்டே? கடைசியில இந்தப் பாடாவதி லாட்ஜில இடங் கெடச்சது பிழைச்சேன். இல்லாட்டி ரெயில்வே பிளாட்ஃபார்ம்தான் என்று தாளிச்சுட்டான்..

ஸாரி எனக்கு மறந்துருச்சி.. சத்தியமா வேணும்னு செய்யலை.. எனக்குத் தூக்கம் வந்தா ஒண்ணும் தெரியாது அப்படி இப்படின்னு கால்ல விழாத குறையா மன்னிப்பு கேட்டுகிட்டேன்..

இதோட கதை முடிஞ்சது அப்படின்னு நினைச்சிங்களா? இல்லை. இன்னும் இருக்கு.

தொடரும்.

தாமரை
29-11-2007, 05:09 PM
ஆறு மாசம் கழிந்தது.. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் நல்ல நண்பர்கள். அதுமாதிரி ஒத்த மனசிருக்கறவங்க கெடைக்கிறது ரொம்ப கஷ்டம். தினம் காலை ஆஃபீஸ் போவோம். மாலை ஆஃபீஸ் முடிஞ்சதும் தாதர் போவோம். அங்கிருந்து வி.டி, யோ, மஸ்ஜித் பந்தரில் இருக்கும் மெடல் பவுடர் கம்பெனி (மெப்கோ, அட ஆமாங்க பாம்பே ப்ராஞ்ச் ஆஃபீஸ் எங்களுக்கு சொந்த வீடு மாதிரி, அத்தனை ஸ்டாஃபும் எங்க ஃப்ரண்டஸ்), இண்டஸ்டிரியல் டைமண்ட் கம்பெனி எல்லாம் போவோம். எக்கச்சக்கமா சினிமா பார்ப்போம். நைட் மாதுங்காவில் சாப்டுட்டு தானே வர ராத்திரி பத்துப் பதினோரு மணி ஆயிடும். அப்புறம் தூக்கம், மறுநாள் ஆஃபீஸ்.. வெள்ளிக்கிழமையான பாம்பேயில் எங்கேயாச்சும் போவோம். சுத்துவோம்...

சரி கதைக்கு வருவோம்.. அன்னிக்கும் அப்படித்தான், மாதுங்காவில் சாப்டுட்டு தானே வந்து உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தோம். கார்த்தி ஃபோன் பண்ணிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டான். நானும் சந்துருவோம் ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம் அப்புறம் கதவைப் பூட்டிகிட்டு தூங்கிட்டோம்.

அடுத்த நாள் காலையில நான் குளிச்சுட்டு வெளிய வந்தா கதவு தட்டற சத்தம் வந்தது. அட யாருடா அது இந்த நேரத்தில அப்படின்னு கதவைத் திறந்து பார்த்தா கார்த்தி நின்னுகிட்டு இருந்தான். கண்ணு செக்கச் செவேர்னு இருந்தது. பெர்முடாஸ் டவுசரும் டீசர்ட்டுமாய் முகமெல்லாம் ஜிவுஜிவுன்னு எக்கச்சக்கமாய் கோபம்.

என்னடா காலன்காத்தால எங்க போயிட்டு வர்ர என்று கேட்டதும் தான் தாமதம் என்னடா, இதோ ஃபோன் பண்ணிட்டு வர்ரேன்னு சொல்லிட்டுதானே போனேன்.. அரை மணி நேரத்துக்குள்ள அப்படி என்ன தூக்கம், கதவை உடைச்சா கூட எந்திரிக்க மாட்டீங்களா? நீ தான் கும்பகர்ணன்னா சந்துரு அதுக்கு மேல இருக்கானே,

போனதடவையாவது கைல காசு இருந்துச்சி. லாட்ஜில போய் தூங்கினேன்.. ஃபோன் பண்ணி எம்ப்டி பாக்கெட்டோட இருந்தண்டா, மொட்டை மாடியில போய் தூங்கி எந்திரிச்சி வர்ரேன்னு சொன்னான். அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. ஆயிரக்கணக்கான ஸாரி சொன்னாலும் பாவமில்லையா அவன்..

கதை முடிஞ்சிருச்சின்னு நினைச்சீங்கன்னா அது தப்பு. மிகப் பெரிய ஆண்டி கிளைமேக்ஸ் இருக்கு.. கொஞ்சம் பொறுங்க சொல்றேன்.

தொடரும்.

ஓவியன்
29-11-2007, 05:15 PM
பூட்டிய கதவு..
நாலு மாடிக்கட்டிடத்துக்குள் ஏழு மாடி அபார்மெண்டுகள்....
ஹாலிலே இருந்து பார்த்தால் கீழுள்ள அபார்மெண் தெரியும்...
சாவியில்லாத பூட்டு....
நண்பனை மறந்து தூக்கம் போடும் ரூம் மேட்....

ஞாபகப் பகிர்வின் சுவராசியத்திற்கு இதனை விட வேறு என்ன வேண்டும்..
தொடருங்க அண்ணலே..!! :)

ஓவியன்
29-11-2007, 05:21 PM
ஹீ,ஹீ!!

பாவம் கார்த்தி...!!
இப்படிப் பாடாய்ப் படுத்தி இருக்கீங்களே....

அண்ணியை நினைத்தால் கவலையாக இருக்கிறது, இதே போன்று எத்தனை தரம் எங்கேயாவது இடை நடுவில் விட்டுட்டு நீங்க பாட்டுக்கு வந்திருப்பீங்களோ...???!! :D:D:D:rolleyes:

அமரன்
29-11-2007, 05:26 PM
அண்ணே... படுத்ததும் தூங்கிடுவீங்களா நீங்க... தூக்க டானிக் ஏதாச்சும் பயன்படுத்துவதில்லையே.

கள்ளம் கபடமில்லா உள்ளம்கொண்டோருக்கு படுத்ததும் உறக்கம் கண்ணைக் கட்டுமாம்.. அதான் உங்கள் இருவருக்கும் கார்த்தி கதவு தட்டினது கேட்கல.

அப்புறம் உங்க நண்பர் கார்த்தியை எனக்குப் பிடிக்கலை. உங்களை அவர் புரிஞ்சுக்கவே இல்லை.. நீங்க எப்படிப்புரிஞ்சு வெச்சிருக்கீங்க பாருங்க..

ஆறு மாசம் கழிந்தது.. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் நல்ல நண்பர்கள். அதுமாதிரி ஒத்த மனசிருக்கறவங்க கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்

அதுசரி கார்த்திக்கு மட்டும் ஏனிப்படி நடந்துச்சு.. அடுத்தது உங்களுக்கா...

அக்னி
29-11-2007, 05:40 PM
கார்த்திக்கு பிளான் பண்ணிச் செய்த மாதிரி இருக்கு...
கார்த்தி இதுக்காக, ஒருவேளை உங்களையெல்லாம் வெளியே விட்டு பூட்டிட்டாரோ?

தாமரை
29-11-2007, 06:07 PM
ஒருசமயம் இளங்கோ வீட்டிற்கு வந்திருந்தான். இளங்கோ கார்த்திக்கு நண்பனின் நண்பன், பூனாவில் வேலை செஞ்சிகிட்டு இருந்தான். வெள்ளிக்கிழமை எல்லாம் ஊர் சுத்தி பொழுதைக் கழிச்சுட்டோம். . சனிக்கிழமை மதியம அவனுக்கு ட்ரெய்ன். மிக விளக்கமாக அவனிடம் பூட்டைக் கொடுத்து வீட்டைப் பூட்டி சாவியை கதவுக்கடியில் போட்டுவிட்டு போய்விடச் சொன்னோம். (இல்லை இல்லை அவன் சாவியைக் கொண்டு போகலை. கொண்டு போனாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆளுக்கொரு சாவி வச்சிருக்கோம். அது நண்பர்களுக்குன்னு வச்சிருந்த எக்ஸ்ட்ரா சாவி)

சாயங்காலம் திரும்ப வந்தோம். இன்னிக்கு என்னன்னா மூணு பேரும் தனித்தனிய பிரிஞ்சுட்டோம். எதோ வேலை இருக்குன்னு கார்த்தி டைரக்டா தாணே போயாச்சு (ஆஹா மாட்டினீங்களான்னு நீங்க ஆர்வத்தோட கேட்கறது புரியுது) சந்திரு அவங்க அத்தை வீட்டுக்குப் போயிட்டான், நான் தாதர் போய் அங்கிருந்து மெடல் பவுடர் கம்பெனிக்குப் போயிட்டேன்.

இராத்திரி 8 மணி, மாதுங்காவில சாப்பிட்டு விட்டு தாணே வந்தேன், மனசில ஏதோ தப்பு நடந்திட்ட மாதிரி ஒரு ஃபீலிங். வீட்டுக்கு போனேன். கதவு நீங்க நினைக்கிற மாதிரியே தான் உள் பூட்டு பூட்டி இருந்தது. தட்டினேன்த் தட்டினேன் கதவு உடையற மாதிரி தட்டினேன். யாருமே திறக்கல. என்ன செய்யறதுன்னு தெரியலை. மொட்டை மாடிதான் கதின்னு உறுதி ஆயாச்சு.. சரின்னு போய் ஒரு டீ சாப்டுட்டு வரலாம்னு வெளிய வந்தேன்.. கேட் பக்கத்தில வரும் போது சந்துரு எதிரில் வந்தான். அவனுக்கு கதை முழுசும் சொன்னேன். அவனும் நானும் மறுபடியும் போய் ஒரு அரைமணி நேரம் தட்டு தட்டுன்னு தட்டினோம். கதவு திறக்கலை. சரி 10:00 மணிக்குள்ள மஸ்ஜித் போயிடுவோம்னு சொல்லி நானும் சந்துருவும் கிளம்பி தாணே ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து கார்த்தி வெளியே வந்து கொண்டிருந்தான்,,,

தொடரும்.

தாமரை
29-11-2007, 06:35 PM
அப்ப நீ இல்லையா உள்ள? மூணு பேரும் ஒரே குரலில் அதிர்ச்சியா கேட்டுகிட்டோம். ஒரு வேளை உடம்பு சரியாயில்லாத இளங்கோ உள்ளயே மயங்கிட்டானோ. அவனுக்கு எதாச்சும் ஆகிட்டா என்ன செய்ய? இன்னொரு முறை போய் முயற்சி செய்வோமேன்னு திரும்பி வந்தோம். இளங்கோ உள்ள மயங்கிக் கிடப்பான்ங்கிற நினைப்பே எங்களுக்கு பயமா இருந்திச்சி. போய் இன்னும் ஒரு மணி நேரம் முயற்சி செய்யலாம்.. எதாவது செய்தே ஆகணும் என்கிற நிலைமைக்குப் போயாச்சு. இன்னிக்கு கதவை உடைச்சாவது உள்ளே போய்த்தான் ஆகணும் என்கிற முடிவெடுத்தாச்சு. சூடா டீ குடிச்சிட்டு மூணு பேரும் விறுவிறுன்னு வேகமா அபார்ட்மெண்ட் வந்தோம்.

கீழ் வீட்டில யாராவது இருந்தாலாவது அவங்க ஹால்ல இருந்து எங்க ஹாலுக்கு அப்படி இப்படி ஏறித்தாவிப் போகலாம். ஆனால் எங்களுக்கு கீழ ரெண்டு ஃப்ளோரும் காலி. யாருமே இல்லை. போய் படபடன்னு கதவைத் தட்டினோம். டொம் டொம்னு முட்டி மோதினோம் பில்டிங்க்ல இருந்த எல்லாரும் முழிச்சிருப்பாங்க.. நிறைய பேர் மேல வந்துட்டாங்க. எங்களைச் சுத்தி ஒரே கூட்டம். க்யா ஹூவா? வாட் ஹேப்பண்டு என்று ஒரே இரைச்சல்.. நாங்களோ பயங்கர டென்ஷனில் இருந்தோம். ஒரு பக்கம் அவமானமாய் இருந்தது. மறுபக்கம் பயமாய் இருந்தது.
அப்போது....

தொடரும்.

(சம்பவத்தின் முடிவுப்பகுதியை கற்பனை பண்ணி பதியுங்க பார்ப்போம்..:icon_b: நாளை இதே நேரம் கதை முடியும் நேரம்)

மலர்
29-11-2007, 07:14 PM
அடுத்த நாள் காலையில நான் குளிச்சுட்டு வெளிய வந்தா கதவு தட்டற சத்தம் வந்தது. அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. ஆயிரக்கணக்கான ஸாரி சொன்னாலும் பாவமில்லையா அவன்..

அய்யோ கார்த்தி பாவம்...

இருந்தாலும் இப்படியா தூங்குறது...

அதுசரி காலையில எழுந்தபிறகும் கூடவா கார்த்தி நினைவு வரலை,,

தாமரை
29-11-2007, 07:16 PM
அய்யோ கார்த்தி பாவம்...

இருந்தாலும் இப்படியா தூங்குறது...

அதுசரி காலையில எழுந்தபிறகும் கூடவா கார்த்தி நினைவு வரலை,,

சுத்தமா நினைவே இல்லை. :D:D:D

மலர்
30-11-2007, 12:07 AM
சம்பவத்தின் முடிவுப்பகுதியை கற்பனை பண்ணி பதியுங்க நான் நினைக்கிறேன்... உள்ள இளங்கோ நல்லா தூங்கினாரோ என்னவோ...????

அப்படி மட்டும் தூங்கியிருந்தாருன்னா இளங்கோ உங்க எல்லாருக்கும் அண்ணன்..

கும்பகர்ணனுக்கு மட்டும் தம்பி....:icon_b:

மதி
30-11-2007, 12:32 AM
ஹ்ம்ம்...
முதல் ரெண்டு சம்பவங்களும் ஏற்கனவே சொல்லிருக்கீங்க... உங்க்க தூக்கத்தால் உங்க நண்பர்கள் பட்ட பாட்ட பத்தி.. கடைசியா இதென்ன... யார் தான் உள்ள இருந்தது...
தெரியலியே...? ஏதாவது ஆவி வேலையா இருக்குமோ..? இல்லை அவர் உங்களை விட கும்பகர்ணனா?

தாமரை
30-11-2007, 12:45 AM

பிரதீப் திருமணத்திற்குச் சென்றபோது தூக்கத்தை நேரில் பார்த்த இருவரில் ஒருவர் ஆச்சே நீங்க! தெரியாமல் இருக்குமா என் தூக்கத்தின் வலிமை!

மதி
30-11-2007, 12:47 AM
பிரதீப் திருமணத்திற்குச் சென்றபோது தூக்கத்தை நேரில் பார்த்த இருவரில் ஒருவர் ஆச்சே நீங்க! தெரியாமல் இருக்குமா என் தூக்கத்தின் வலிமை!
அதே அதே...சபாபதே...

சிவா.ஜி
30-11-2007, 04:48 AM
அடப்பாவமே...இரண்டுமுறையும் கார்த்திதான் மாட்டினாரா?அதற்கெல்லாம் சேர்த்துதான் அடுத்தமுறை எல்லோருக்கும் அந்த கதவு அல்வா குடுத்திடிச்சின்னு நெனைக்கிறேன்.
இளங்கோ உள்பக்கமா கதவை பூட்டிட்டு கீழ்தளத்துக்குப் போய் வெளியே போய்ட்டாரான்னா...அதுவும் முடியாது.கீழ்தளத்துல யாரும் இல்லைன்னு வேற சொல்றீங்க.அப்ப வழக்கமா உபயோகிக்கற பூட்டை உபயோகிக்காமல் வேற பூட்டைப் போட்டு பூட்டிட்டு போய்ட்டாரா...?சஸ்பென்ஸை உடைச்சுடுங்க தாமரை.
நான் மும்பையில் வாழ்ந்துகொண்டிருந்த சமயத்தில்தான் நீங்களும் இருந்திருக்கிறீர்கள்.மாதுங்கா கன்செர்ன்-ல சுடச் சுட சாதம், சாம்பார் சூப்பரா இருக்கும்.

மதி
30-11-2007, 04:57 AM
அது என்னாச்சுன்னா...என்ன நடந்ததுன்னா....

சரி..வேண்டாம்.. நான் சொல்ல மாட்டேன்.. இன்னும் கொஞ்சம் யோசிங்க..

அட..எனக்கும் தெரிஞ்சிருந்தா இன்னேரம் சொல்லிருக்க மாட்டேனா.. மொத ரெண்டு விஷயத்த பத்தி சொன்னவர் மூணாவது நிகழ்ச்சிய சொல்லலியே..

lolluvathiyar
30-11-2007, 06:49 AM
இளங்கோ உள்ள பூட்டீட்டு குளிச்சிட்டு வரும் போது ஹாஸ் ஓட்டைவழியா கீழ்தளத்துக்கு விழுந்திருக்கனும். அங்கிருந்து மேல ஏற டிரை பன்னி ஸ்லிப் ஆகி அந்த ஓட்டை வழியா மூனாவது தளத்துக்கு விழுந்திருக்கனும். அப்புரம் அந்த வீட்டுகாரங்க கிட்ட சமாதானம் பேசி கிளம்பி போயிருக்கனும். அப்பா சாமி நம்மை ஏனுங்க கற்பனை பன்ன விடரீங்க. சொல்லிருங்க*

அமரன்
30-11-2007, 07:07 AM
அது என்னாச்சுன்னா...என்ன நடந்ததுன்னா....
சரி..வேண்டாம்.. நான் சொல்ல மாட்டேன்.. இன்னும் கொஞ்சம் யோசிங்க..
அட..எனக்கும் தெரிஞ்சிருந்தா இன்னேரம் சொல்லிருக்க மாட்டேனா.. மொத ரெண்டு விஷயத்த பத்தி சொன்னவர் மூணாவது நிகழ்ச்சிய சொல்லலியே..
நீங்களும் துவங்கியாச்சா. எங்கே போய் முடியப்போகுதோ..

மதி
30-11-2007, 07:16 AM
ஹ்ம்ம் எல்லோரும் வம்புக்கிழுக்கறதையே பொழப்பா வச்சிருக்காங்க..

ஆதவா
30-11-2007, 08:32 AM
(சம்பவத்தின் முடிவுப்பகுதியை கற்பனை பண்ணி பதியுங்க பார்ப்போம்..:icon_b: நாளை இதே நேரம் கதை முடியும் நேரம்)

எனக்கு விடை தெரியும், ஆனா அதை நாளைக்குத்தான் சொல்லுவேன்..... ஹி ஹி

அமரன்
30-11-2007, 08:34 AM
எனக்கு விடை தெரியும், ஆனா அதை நாளைக்குத்தான் சொல்லுவேன்..... ஹி ஹி
எனக்கும் எனக்கும்..நானும் நானும்..ஹி ஹி

மதி
30-11-2007, 08:36 AM
எனக்கும் எனக்கும்..நானும் நானும்..ஹி ஹி

ஜிங்ச்சா..
ஜிங்க்ச்சா..:rolleyes:

அமரன்
30-11-2007, 08:37 AM
ஜிங்ச்சா..
ஜிங்க்ச்சா..:rolleyes:
நெஜம்மா:)

ஆதவா
30-11-2007, 08:43 AM
எனக்கும் எனக்கும்..நானும் நானும்..ஹி ஹி

பாத்துங்க, நான் பதிவு போட்ட நேரத்திலதான் பதில் சொல்லுவேன்னு ப்ளேட்டை மாத்தினாலும் மாத்திடுவார்.... ஜாக்கிரதை.

தாமரை
30-11-2007, 09:48 AM
நான் நினைக்கிறேன்... உள்ள இளங்கோ நல்லா தூங்கினாரோ என்னவோ...????

அப்படி மட்டும் தூங்கியிருந்தாருன்னா இளங்கோ உங்க எல்லாருக்கும் அண்ணன்..

கும்பகர்ணனுக்கு மட்டும் தம்பி....:icon_b:

:lachen001::lachen001::icon_rollout::icon_rollout::icon_rollout::lachen001::lachen001:

தாமரை
30-11-2007, 09:49 AM
இளங்கோ உள்ள பூட்டீட்டு குளிச்சிட்டு வரும் போது ஹாஸ் ஓட்டைவழியா கீழ்தளத்துக்கு விழுந்திருக்கனும். அங்கிருந்து மேல ஏற டிரை பன்னி ஸ்லிப் ஆகி அந்த ஓட்டை வழியா மூனாவது தளத்துக்கு விழுந்திருக்கனும். அப்புரம் அந்த வீட்டுகாரங்க கிட்ட சமாதானம் பேசி கிளம்பி போயிருக்கனும். அப்பா சாமி நம்மை ஏனுங்க கற்பனை பன்ன விடரீங்க. சொல்லிருங்க*

வாத்தியாரே! அவரு உம்மை மாதிரி ஒல்லி இல்லியே!:rolleyes:

தாமரை
30-11-2007, 09:52 AM
அடப்பாவமே...இரண்டுமுறையும் கார்த்திதான் மாட்டினாரா?அதற்கெல்லாம் சேர்த்துதான் அடுத்தமுறை எல்லோருக்கும் அந்த கதவு அல்வா குடுத்திடிச்சின்னு நெனைக்கிறேன்.
இளங்கோ உள்பக்கமா கதவை பூட்டிட்டு கீழ்தளத்துக்குப் போய் வெளியே போய்ட்டாரான்னா...அதுவும் முடியாது.கீழ்தளத்துல யாரும் இல்லைன்னு வேற சொல்றீங்க.அப்ப வழக்கமா உபயோகிக்கற பூட்டை உபயோகிக்காமல் வேற பூட்டைப் போட்டு பூட்டிட்டு போய்ட்டாரா...?சஸ்பென்ஸை உடைச்சுடுங்க தாமரை.
நான் மும்பையில் வாழ்ந்துகொண்டிருந்த சமயத்தில்தான் நீங்களும் இருந்திருக்கிறீர்கள்.மாதுங்கா கன்செர்ன்-ல சுடச் சுட சாதம், சாம்பார் சூப்பரா இருக்கும்.

அந்த நாட்கள்ல முதல் மழை வரும் நாட்களை எப்படி எல்லாம் கொண்டாடுவோம் தெரியுமா?? அபார்ட்மெண்ட்ல் இருக்கற அத்தனை இளைஞர் இளைஞி பட்டாளமும் மொட்டை மாடியில் மழையில் நனைந்து டான்ஸ் ஆடி... ஆஹா அதுவல்லவா பொற்காலம்.

அக்னி
30-11-2007, 10:19 AM
(சம்பவத்தின் முடிவுப்பகுதியை கற்பனை பண்ணி பதியுங்க பார்ப்போம்..:icon_b: நாளை இதே நேரம் கதை முடியும் நேரம்)
இளங்கோ, கதவை வெளியே பூட்ட மறந்துவிட்டார். இது தெரியாமல், பூட்டாத கதவை, திறந்து பார்க்காமல், தட்டிக் கொண்டிருக்கின்றனர்...
ஆக உள்ளேயும், வெளியேயும் கதவு பூட்டப்படவில்லை...
அப்படித்தானே..?

மயூ
30-11-2007, 10:22 AM
ஐயோ.. ஐயோ...
இப்படி ஒரு க்ளைமாக்சா... கடவுளே.....!!!! செல்வன் அண்ணாக்கு எழுத கற்றுக் கொடுக்க வேண்டுமா?? ஒரேயடியாகக் கலக்கியிருக்கிறார்... பேஷ்...!!!!

என்னைப் பொறுத்தவரையில் கதவை உடைக்க முயற்சிக்கும் போது இளங்கொவும் எதாவது காரணத்தால் மீண்டு வந்திருப்பாhர்..... எல்லாருக்கும் தலை விறைத்த்திருக்கும்...!!!

அதுக்குப்பிறகு என்னாச்சு என்று எனக்கு ஊகிக்க முடியேல... பல வழிகள் இருந்தாலும் எது பொருந்தும் என்று எண்ணுவது கடினமாக உள்ளது.

மயூ
30-11-2007, 10:25 AM
அந்த நாட்கள்ல முதல் மழை வரும் நாட்களை எப்படி எல்லாம் கொண்டாடுவோம் தெரியுமா?? அபார்ட்மெண்ட்ல் இருக்கற அத்தனை இளைஞர் இளைஞி பட்டாளமும் மொட்டை மாடியில் மழையில் நனைந்து டான்ஸ் ஆடி... ஆஹா அதுவல்லவா பொற்காலம்.

ஆகா....... அப்படி வேறெல்லாம் நடந்திருக்கின்றதா???? ஹா... ஹா..... என்ஜாய் பண்ணிருக்காரு எங்க அண்ணாச்சி...!!!!!

தாமரை
30-11-2007, 03:58 PM
கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த அவர் க்யா ஹுவா எனக் கேட்க,
"ஹமார தோஸ்த் அந்தர் பஸ்கயா, தபியத் கராப் ஹை! சாபி நஹிஹே" என சொன்னோம்

ஜரா ஹட்டோ என முன்னால் வந்தவர் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தார். கதவு என்னவோ மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி டக்குன்னு திறந்திருச்சி.. உள்ளே போய் பார்த்தா இளங்கோ இல்லை, பூட்டு நாங்க வச்ச இடத்திலேயே இருந்தது. அவன் உள்பூட்டை ரிலீஸ் செய்து கதவைப் பூட்டிட்டு போயிட்டான் படுபாவி..

சரி சரி.. உங்க கேள்வி புரியுது உங்க வீட்டுச் சாவி உங்க கிட்டயே கிடையாது அப்புறம் எப்படி கீழ் வீட்டுக்காரங்க கிட்டன்னு கேட்கறீங்க. அது எங்க வீட்டுக் கீ. இல்ல. V.I.P சூட்கேஸ்ல சைட் லாக் போட தருவாங்களே ஒத்தைப் பல் சாவி.. அதே சாவிதான்.

அவ்வளவு மட்டமான பூட்டு அது, இது தெரியாம நாங்க அதை ஒரு திண்டுக்கல் பூட்டாட்டம் நெனச்சி, அதுவும் பாவம் கார்த்தியை படாத பாடு படுத்தி...

அடுத்த நாள் இளங்கோ ஃபோன் பண்ணினான். அவனைத் திட்டனும்னு தோணலை..

மூணு மணி நேரப் போராட்டத்திற்கு அவனைத் திட்டறதா., இல்லை ரொம்ப நாளா எங்களை வில்லனாக்கிய அந்தப் பூட்டுப் பிரச்சனையை தீர்த்ததற்காக பாராட்டுவதா?

சூட்கேஸ் சாவிகள் எங்க பிரச்சனையைத் தீர்த்து கார்த்தியை காப்பாற்றின.

ஆமாம் இளங்கோ நல்லவரா - கெட்டவரா?

அக்னி
30-11-2007, 04:38 PM
இளங்கோ நல்லவரா கெட்டவரா என்பது இருக்கட்டும்...
ஆனா, ஆனா...
நீங்க மூணு பேரும் ரொம்ப அப்பாவிங்க போலிருக்கே...
பார்த்தா நம்ப முடியலியே....
இருக்கட்டும் இருக்கட்டும்...

அமரன்
30-11-2007, 04:49 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா...
பூட்டு மட்டமா.. வாத்தியாரு ஒரு கதை சொல்வாரு.. யாரோ ஒரு பிரபல்யமான விஞ்ஞானி சின்னக்கணக்குக்கு கால்குலேட்டரை பயன்படுத்தினாராம்.. கடைக்காரன் சட்டுன்னு சொன்னதும் திகைச்சாராம். அதுபோல சில நேரங்களில் எல்லோருக்கும் நடப்பது வழக்கம்.. எதிர்பாராத திருப்பம்.

பூமகள்
30-11-2007, 04:53 PM
முதல் பகுதி மட்டும் தான் படிச்சேன் தாமரை அண்ணா.!
மூணடியில் வரவேற்பறையா??!!!!
மும்பையைப் பொருத்தவரை.. 4 பேர் தங்கும் அறையில் 20 பேர் தங்கும் அவலமிகுந்த நெருக்கடியான நகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், ஹால் இவ்வளவு குறுகியதாய் பார்த்ததே இல்லை.

தாமரை அண்ணா வீட்டுக்கு யாரும் அவர் தூங்கும் போது போயிராதீங்க...!!

நேசம்
30-11-2007, 07:43 PM
இப்படியேல்லாம் தூங்க வரம் பெற்று இருக்க வேண்டும்.ஆனால் அதுக்கு கும்பகர்ணா தம்பிங்க மாதிரி இருக்க கூடாது தாமரைண்ணா..

lolluvathiyar
01-12-2007, 06:56 AM
நல்லவர்தான் பின்ன பூட்ட திறக்கரத சொல்லி கொடுத்திருக்காரே, எல்லாரும் ஓவியர் போல இருக்க முடியுமா?
ஏன் ஓவியரே நான் சொன்னது சரிதானே, நீங்க எந்த பூட்டையும் திறக்கு திறமைசாலினு பூமகள் சொன்னாங்க*

மயூ
01-12-2007, 02:34 PM
ஹி.. ஹி.. ஹி.. எப்படி நீங்கள் எல்லாரும் அந்தக் கூட்டத்துக்கு முன்னாடி... அசடு வழிய நின்றிருப்பியள் என்று யோசிச்சுப் பாக்கிறன்... ஹி.. ஹி... ஹி...

நல்லவர்தான்... இல்லாவிட்டால் இன்று இப்படி சுவைபட வாசிக்க ஒரு பதிவு கிடைத்திருக்குமா????

ஆதவா
01-12-2007, 03:11 PM
வி.ஐ.பி சூட்கேஸ் சாவியா? அடப்பாவமே! அவ்ளோ மட்டமான பூட்டா?

இருந்தாலும் கார்த்திக்கை திட்டி மன்னிச்சுடுங்க... கூட இருந்த அத்தனை பேரும் என்னமா நெனச்சுட்டிருந்திருப்பாங்க???!!!!

கண்மணி
01-12-2007, 03:44 PM
வி.ஐ.பி சூட்கேஸ் சாவியா? அடப்பாவமே! அவ்ளோ மட்டமான பூட்டா?

இருந்தாலும் கார்த்திக்கை திட்டி மன்னிச்சுடுங்க... கூட இருந்த அத்தனை பேரும் என்னமா நெனச்சுட்டிருந்திருப்பாங்க???!!!!

அண்ணே கண்ணை கணிணி திரைப்பக்கம் திருப்பி வச்சு தட்டச்சு செய்ங்க.. ப்ரவுசிங் செண்டர் தான்,... அதுக்காக இப்படியா சுத்தி சுத்தி பிரவுஸ் பண்ணிகிட்டே இருக்கறது?

mukilan
02-12-2007, 05:08 AM
நான் கூட பாழடைஞ்ச பங்களான்னதும் ஏதோ இந்தி மோகினியோட நெஞ்சம் மறப்பதில்லைனு ஆட்டம் போட்டிருப்பீங்கன்னு ஸ்ரீதர் ரேஞ்சுக்கு நினைச்சிட்டு வந்தா மணிரத்னம் ரேஞ்சில இங்க ஒருத்தர் பட்டையைக் கிளப்பறாரு. அவரை நிறுத்தச் சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்தறேன்.!!!!!

தாமரை
02-12-2007, 06:41 AM

முகிலன், இதுகொஞ்சம் ஓவராத் தெரியலை.. பூட்டிய கதவில வந்து பாழடைந்த மண்டபத்துக்கு விமர்சனம் எழுதறீரே!:confused:

ஓவியன்
02-12-2007, 03:02 PM
சரி சரி.. உங்க கேள்வி புரியுது உங்க வீட்டுச் சாவி உங்க கிட்டயே கிடையாது அப்புறம் எப்படி கீழ் வீட்டுக்காரங்க கிட்டன்னு கேட்கறீங்க. அது எங்க வீட்டுக் கீ. இல்ல. V.I.P சூட்கேஸ்ல சைட் லாக் போட தருவாங்களே ஒத்தைப் பல் சாவி.. அதே சாவிதான்.

அடடா இதுவா விசயம், நான் எதோ ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பீங்கனு நினைத்தால், இப்போதுதானே புரிகிறது நண்பர்கள் மூவரும் ஒரு வி.ஐ.பி சூட்கேஸை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருக்கிங்கனு....!! :icon_rollout:

அதுக்கு ஆயிரம் ரூபா வாடகை, மூவாயிரம் ரூபா அட்வான்ஸ்....
ஹீ,ஹீ...!!
யாரோ நல்லாத் தான் உங்களை ஏமாத்தி இருக்காங்க.....
பேசாம ஒரு வி.ஐ.பி சூட்கேஸை சொந்தமாக வாங்கித் தங்கியிருக்கலாம்...!! :icon_b:

தாமரை
02-12-2007, 03:30 PM

வாங்கலாம் தங்கலாம்.. ஆனால் அந்த சூட்கேஸை எங்க வைக்கிறதுங்கரதுதான் பிரச்சனை..
:aetsch013:

ஓவியன்
02-12-2007, 03:41 PM
வாங்கலாம் தங்கலாம்.. ஆனால் அந்த சூட்கேஸை எங்க வைக்கிறதுங்கரதுதான் பிரச்சனை..
:aetsch013:

இந்தப் பெரிய உலகத்திலே உங்க சூட்கேஸை வைக்க ஒரு சின்ன இடமாவது கிடைக்காமலா போகப் போகுது...!! :rolleyes:

பேசாம ஒரு பெரிய சூட்கேஸை வாங்கி அதற்குள் அந்த சின்ன சூட்கேஸை வைத்து அதற்குள் தங்கிக்கோங்கோ...!! :icon_b:

(பெரிய சூட்கேஸை எங்கே வைக்கிறது எண்டெல்லாம் கேட்கபடாது..!!)

தாமரை
02-12-2007, 04:09 PM

இது கூடத் தெரியாமல் உங்க அண்ணனா இருக்க முடியுமா.. சூட்கேஸ் கடை ஓனர் மாமனாராகிட்டா?

mukilan
02-12-2007, 04:19 PM
முகிலன், இதுகொஞ்சம் ஓவராத் தெரியலை.. பூட்டிய கதவில வந்து பாழடைந்த மண்டபத்துக்கு விமர்சனம் எழுதறீரே!:confused:

சரி! சரி! இதெல்லாம் நமக்குள்ள வச்சிருந்திருக்கலாம். நான் உங்க பாழடைஞ்ச மண்டபத்தைதான் திரியின் மேல் பார்த்தேன். ஆனா படிச்சதென்னவோ நீங்க பூட்டின கதவை. மாத்தி பின்னூட்டிட்டேன். :D:D இதுக்கான பின்னூட்டத்தை அந்த பதிவில போட்டிருக்கேனா??

தாமரை
02-12-2007, 04:39 PM
ம்ம் இன்னும் நாலு கதை படிச்சால் அப்புறம் கோடங்கி கிட்ட பூசைக்கு அழைச்சிகிட்டு போகணும் போல இருக்கு!

mukilan
02-12-2007, 04:43 PM
அப்படியெதுவும் நடக்காது! நீங்க ஒரே நாள்ல பல பதிவுகள் போட்டீங்களா எல்லாவற்றையும் படித்து எதுக்குப் பின்னூட்டம் போடறதுன்னு தெரியாம குழம்பி புத்தி மாறி... (இப்படி எதையோ போட்டுகோங்க) அப்படி ஆயிட்டேன். ஆமா நீங்க இந்த அனுபவங்களையெல்லாம் அநிருத்தப் பிரம்மராயர் கிட்ட சொல்லியிருக்கீங்களோ?

தாமரை
02-12-2007, 05:00 PM

ம்ம் வயசுக்குத்தகுந்த கதைகளையெல்லாம்

ஆதவா
03-12-2007, 08:00 AM
அண்ணே கண்ணை கணிணி திரைப்பக்கம் திருப்பி வச்சு தட்டச்சு செய்ங்க.. ப்ரவுசிங் செண்டர் தான்,... அதுக்காக இப்படியா சுத்தி சுத்தி பிரவுஸ் பண்ணிகிட்டே இருக்கறது?

ஏம்மா? ஏன் இப்படி? என்னாச்சு?

logini
29-05-2008, 11:54 AM
நீங்க 3 பேரும் முழிச்சிட்டு நிற்பதாக கற்பனை பன்னி பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஆனாலும் உங்களுக்கு கார்த்திக் மேல ஏதோ கோபம் இருந்திருக்கு.

விகடன்
29-05-2008, 02:25 PM
பிரச்சினை தரும் பூட்டை உடைத்து எறிந்துவிட்டு நல்லதொரு பூட்டு போட சிந்திக்காமல் ஒவ்வொருவராக மனச்சங்கடத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகிவிட்டு இப்போது இளங்கோ வல்லவர? கெட்டவரா?? என்று அவர் மீது ஏன் பழி போடுகிறீர்கள். முதலில் உங்களுடைய சோம்போறித்தனத்திற்கு வையுங்கள் ஆப்பு. :D

இளங்கோ ஒரு வழிகாட்டி. உங்கள் அறியாமையை, சோம்போறித்தனத்தை உங்களுக்கு அனுபவம் என்னும் அதியுன்னத ஆசானை வைத்து பாடம் கற்பித்த மனிதன்.

தாமரை
29-05-2008, 03:38 PM
பிரச்சனை பூட்டில் இல்லை விராடா! எவ்வளவு நல்ல பூட்டு அது தெரியுமா? இளங்கோவுக்கு விளக்கமாச் சொல்லியும் வில்லங்கமாச் செஞ்சுட்டுப் போயிட்டார். எதுக்குடா கையில ஒரு சாவியைக் குடுத்து, பூட்டைக் கொடுத்து பூட்டச் சொல்றாங்கன்னு யோசிக்கத் தேவையில்லையா?

சோம்பேறித்தனம் என்றால் என்ன விராடா? ஏன்னா எங்க மும்பை வாழ்க்கையைப் பார்த்தால் பரபரன்னு நாங்க சுத்திகிட்டே இருப்போம். இருந்த வீட்டுக்குச் செய்யறா காரியங்கள் கம்மி. பேச்சுலர்னா அப்படித்தான். வீட்டு வேலையை விட வெளிவேலைகளுக்குத் தான் முக்கியத்துவம். வீடுன்னா, தூங்க, குளிக்க அவ்வளவுதான். மற்றபடி சுத்திகிட்டேதான் இருப்பாங்க..

பூட்டுங்கறது வீட்டுக்குள்ள எதையாவது வச்சிருந்தா பாதுகாக்க போடலாம்.. இருக்கறது ஒரு 15 20 செட் துணி.. அவ்வளவுதான். அதுக்கு அந்தப் பூட்டு போதுமே!

சோம்பேறித்தனம்னா ஒண்ணுமே செய்யாம இருக்கறது. பொறுப்பில்லாத்தனம்னா செய்ய வேண்டியதைச் செய்யாம இருக்கிறது..

நான் சொல்லி இருக்கனே.. அந்த வீட்டை பில்டர் விக்கறதா இருந்தது,.. இடைப்பட்ட காலத்தில நாங்க தங்கி இருந்தோம். ஒரு புது அபார்ட்மெண்ட் வாங்கறவனுக்கு அதில ஒரு குறையும் தெரியாமல் இருக்கற மாதிரி அப்படியே புதுசாவே வச்சிருந்தோம். (எவ்ளோ நல்ல மனசு பாருங்க எங்களுக்கு).. எதையுமே மாத்தலை!!!
.

விகடன்
29-05-2008, 03:48 PM
என்னண்ணே??
தமாசா சொன்னதிற்கெல்லாம் விளக்கம் கொடுக்கிறீங்க???

சிமலீசு போட்டுக்காட்டியுமா புரியல?

தாமரை
29-05-2008, 04:10 PM
நானும் தமாசாத்தானே சொல்லி இருக்கேன்..

சோம்பேறித்தனம்னு சொல்லாதீங்க.. பொறுப்பில்லைன்னு சொல்லுங்க. அப்படின்னு!!!