PDA

View Full Version : குறுங்கவி



iniya
29-11-2007, 01:04 PM
வாழ்க்கை
இனிப்பா புளிப்பா?
இதயத்தை எரிக்கும் நெருப்பா?
புரிவது போலிருந்தாலும்.. புரியவில்லயா இன்னும்?
குழப்பம்!

iniya
29-11-2007, 01:05 PM
அகதி
தாயை இழந்தவன்
தாய் நிலம் தொலைத்தவன்..
தனக்குள் தான் என்றும் அழுபவன்....
அவலம்!!

அமரன்
29-11-2007, 01:39 PM
அகதி
தாயை இழந்தவன்
தாய் நிலம் தொலைத்தவன்..
தனக்குள் தான் என்றும் அழுபவன்....
அவலம்!!
கதியற்றவன் அகதி..
ஏதுமில்லாதவன் ஏதிலி..
கதி,ஏதும் வரையறைகள்
வரையறுக்கின்றன
அகதிகளையும் ஏதிலிகளையும்..!

meera
29-11-2007, 01:51 PM
வாழ்க்கை
இனிப்பா புளிப்பா?
இதயத்தை எரிக்கும் நெருப்பா?
புரிவது போலிருந்தாலும்.. புரியவில்லயா இன்னும்?
குழப்பம்!
இனிப்பும் புளிப்பும்,சோகமும் சுகமும் சேர்ந்தது தானே வாழ்க்கை.

இனியா கவிதை நன்று.

அமரன்
29-11-2007, 01:53 PM
இனிப்பும் புளிப்பும்,சோகமும் சுகமும் சேர்ந்தது தானே வாழ்க்கை.
இனியா கவிதை நன்று.
நவரசத்தோட்டம் வாழ்க்கைவட்டம்.. அப்படித்தானுங்களே மீரா...

meera
29-11-2007, 01:58 PM
அகதி
தாயை இழந்தவன்
தாய் நிலம் தொலைத்தவன்..
தனக்குள் தான் என்றும் அழுபவன்....
அவலம்!!
இது வேதனை. மீண்டும் காண முடியாத தாய் முகம் காண துடிக்கும் பிள்ளையின் நிலை.

meera
29-11-2007, 01:59 PM
நவரசத்தோட்டம் வாழ்க்கைவட்டம்.. அப்படித்தானுங்களே மீரா...
அட சரிதானுங்கோ........

சூரியன்
29-11-2007, 02:45 PM
நல்ல ஒரு கேள்வியை கவிதையாக கேட்டிருக்கிறீர்கள்.
இவை அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை.

ஓவியன்
29-11-2007, 04:26 PM
அகதி
தாயை இழந்தவன்
தாய் நிலம் தொலைத்தவன்..
தனக்குள் தான் என்றும் அழுபவன்....
அவலம்!!

ஈழத்துக் கவிஞரான புதுவை இரத்தினதுரை அவர்களின்
பாடல் வரிகளை மீண்டும் மீட்ட வைத்தன
உங்கள் வரிகள் - பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இனியா.....!!


பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகுமிடம் தெரியாமல் - இங்கு
சாகும்
வயதினில் வேரும் நடக்குதே
தங்குமிடம் தெரியாமல்

கூடு கலைந்திட்ட குருவிகள் -
இடம்
மாறி நடக்கின்ற அருவிகள்.

ஒற்றை வரம்பினில் ஓடும்
இவர்களின் ஊரில் புகுந்தது
-ஆமி
ஒரு குற்றம் செய்யாதவர் முற்றத்தில்
ஆயிரம் குண்டுகள் விழுதே
-சாமி

சோகத்தின் கோடுகள் முகத்தில்
இந்த
சொந்தங்கள் சேருமா நிலத்தில்....

கூடி மகிழ்ந்திட்ட கோயில்
வயல்வெளி யாவும் இவரிழந்தாரே
நேற்று
பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் துறந்துமே
போகும் திசை அறியாரே....

நெஞ்சில் வழிவதோ துயரம்
வழி
நீளும் திசை இவர் பயணம்.....

தாயில் மடியினில் ஆசையுடன்
தலை சாய்த்து உறங்கிய நேரம்
வந்த பேய்கள் கொளுத்திய
தீயில் எரிந்தவர்
போகும் வழியெலாம் ஈரம்

மாடுகள் கூடவா அகதி
தமிழ்
மண்ணிலே ஏனிந்த சகதி...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13546

iniya
29-11-2007, 08:00 PM
உங்கள் எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றிகள்

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 01:11 PM
இனிப்பும், கசப்பும் புளிப்பும்,சோகமும் சுகமும் சேர்ந்தது தானே வாழ்க்கை.