PDA

View Full Version : ஓடாத கணங்கள்..!



பூமகள்
29-11-2007, 10:17 AM
ஓடாத கணங்கள்..!

http://img27.picoodle.com/img/img27/5/11/29/poomagal/f_angelclockm_5d9e00c.jpg

கரையாத நேரம்
கைப்பிடிக்குள்..!
ஓடாத என் வீட்டு
சுவர் கடிகாரம்..!

ஓடாத முள்..!
ஓடும் கணங்களை
ஒட்டிவைத்த
பெருமிதத்தில்..!

இரவும் பகலும்
மாறும் போது
காலக் கடிகாரம் - நேரம்
காட்டிச் சிரித்தது..!

முள்ளின் நெஞ்சின்
மமதை ஒழிந்தது..!

கடிகாரத்தின்
கண்ணாடிக்குள்
சுற்றிச் சுற்றி
புது உலகம்
படைத்தது..!

சிவா.ஜி
29-11-2007, 10:25 AM
வாவ் அருமை பூமகள்.முள்ளின் மமதை அழிந்த விதம் சொன்னது பிரமாதம்.காலத்தை கட்டிவைக்க முடியுமா.நிறையபேர் இப்படித்தான் இயலாததை இயலுமென்று நினைத்துக்கொண்டு தங்களை விரயமாக்குகிறார்கள்.கடிகாரம் சொல்லும் பாடம் அனைவருக்கும் பொருந்தும்.வாழ்த்துகள் பூமகள்.

jpl
29-11-2007, 11:25 AM
கரையாத நேரம்
கைப்பிடிக்குள்..!
ஓடாத என் வீட்டு
சுவர் கடிகாரம்..!
வித்தியாசமான கோணம்.. பூ மகள்..

ஓடாத முள்..!
ஓடும் கணங்களை
ஒட்டிவைத்த
பெருமிதத்தில்..!
ஒட்டி வைத்தினால் கரையவில்லையோ!!!!

அமரன்
29-11-2007, 03:35 PM
சுவர்க்கடிகாரங்கள் பலவகை. அவற்றுக்குத் தேவையான இயங்கு சக்திகளைக் கொடுக்கும் சக்திகள் பலவகை. சில மின்சக்தியிலும், சில நாம் கொடுக்கும் சாவியின் சக்தியிலும் இயங்கவல்லன.. உங்கள் வீட்டுக்கடிகாரம் எந்தவகை? ஒருவேளை நீங்கள்தான் தூண்டுதல் கொடுக்க மறந்து விட்டீர்களோ..

தானியங்கி
எமை இயக்கும்
தானியங்கி
கடிகாரங்களின் இயக்கம்
நம்கையில்..

பூமகள்
30-11-2007, 12:47 PM
முள்ளின் மமதை அழிந்த விதம் சொன்னது பிரமாதம்.காலத்தை கட்டிவைக்க முடியுமா.நிறையபேர் இப்படித்தான் இயலாததை இயலுமென்று நினைத்துக்கொண்டு தங்களை விரயமாக்குகிறார்கள்.கடிகாரம் சொல்லும் பாடம் அனைவருக்கும் பொருந்தும்.வாழ்த்துகள் பூமகள்.
கச்சிதமாக கருவை கண்டுபிடித்து பின்னூட்டமிட்டதற்கு மிகுந்த நன்றிகள் சிவா அண்ணா. :)

பூமகள்
30-11-2007, 01:02 PM
வித்தியாசமான கோணம்.. பூ மகள்..
ஒட்டி வைத்தினால் கரையவில்லையோ!!!!
நன்றிகள் jpl அக்கா.
ஒட்டி வைக்கப்பட்டதாய் நினைத்த முள்களின் கற்பனை மயக்கமாக இருக்கலாம் அக்கா. :)

சில மின்சக்தியிலும், சில நாம் கொடுக்கும் சாவியின் சக்தியிலும் இயங்கவல்லன.. உங்கள் வீட்டுக்கடிகாரம் எந்தவகை? ஒருவேளை நீங்கள்தான் தூண்டுதல் கொடுக்க மறந்து விட்டீர்களோ..
தானியங்கி
எமை இயக்கும்
தானியங்கி
கடிகாரங்களின் இயக்கம்
நம்கையில்..
மின்சேமித்த உருளைகளின்
சேமிப்பு கரைந்ததால்
ஓடாத கணங்கள்
சிக்கியது கண்ணில்..!

இயக்கத்தை முடுக்க - கைகளின்
இயங்குவிசை தேவை...!
மாற்று மின்சேமி மாட்டும் வரை
காலம் கடிகார முள்ளின்
கையில் சிறையாக..!

அழகான பின்னூட்டக் கவி..! யோசிக்க வைத்துவிட்டீர்கள்..!!
மிகுந்த நன்றிகள் அமரன் அண்ணா. :)

ஆதி
30-11-2007, 01:12 PM
ஓட்டங்கள் நின்ற பிறகும் - விட்டு
ஓடாத நிமிடங்கள்..

வினாடிகளை
மூச்சிறைக்க துரத்திப்பிடித்த
முட்களை பிடித்தது ஸ்தம்பிபு..

தான்னிழந்த முட்களை
மமதையையின் சேர்த்து
இழந்தன..

அழகு பூமகள்.. நல்ல கற்பனை.. நல்ல கவிதை.. வேறுப்பட்ட கரு..

வாழ்த்துக்கள்..

-ஆதி

பூமகள்
30-11-2007, 01:35 PM
அழகு பூமகள்.. நல்ல கற்பனை.. நல்ல கவிதை.. வேறுப்பட்ட கரு..
நல்லதொரு பின்னூட்ட கவி ஆதி.
வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் மிகுந்த நன்றிகள். :)

பென்ஸ்
30-11-2007, 01:48 PM
துடிப்பு நின்றும்
நாளில் இருமுறை
சரியாய் நேரம் சொன்னதே..!!!

மன்மதன்
30-11-2007, 02:37 PM
நாம கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்காமல் , அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து போயிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்கிறது கவிதை..பாராட்டுகள் பூமகள்...!

பூமகள்
30-11-2007, 03:30 PM
துடிப்பு நின்றும்
நாளில் இருமுறை
சரியாய் நேரம் சொன்னதே..!!!
ஆஹா..! ஆமாம் பென்ஸ் அண்ணா...! :)
எங்கோ படித்த நியாபகம்.
தன்னம்பிக்கைக்கு கொடுக்கும் ஊக்க பானம்..!:icon_b:
நன்றிகள் அண்ணா. :D

பூமகள்
30-11-2007, 03:31 PM
நாம கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்காமல் , அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து போயிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்கிறது கவிதை..பாராட்டுகள் பூமகள்...!
மிக அழகான பின்னூட்டக் கருத்து.
நன்றிகள் மன்மதன்ஜி. :)

நேசம்
30-11-2007, 07:10 PM
காலத்தின் அருமை உணர்த்தும் கவிதை.வழக்கம் போல் அசத்தலா தந்து இருக்குறார் பூமகள் அவர்கள். வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
01-12-2007, 06:53 AM
எல்லலோரும் பின்னூட்டமிட்டு நான் நினைத்தை சொல்லிவிட்டார்கள். படமும், கவிதையும் ஒன்றோடொன்று போட்டியிடுகிறது. கலக்குங்க பூமகள்

பூமகள்
01-12-2007, 07:05 AM
காலத்தின் அருமை உணர்த்தும் கவிதை.வழக்கம் போல் அசத்தலா தந்து இருக்குறார் பூமகள் அவர்கள். வாழ்த்துக்கள்
மிகுந்த நன்றிகள் நேசம் அண்ணா. :)

எல்லலோரும் பின்னூட்டமிட்டு நான் நினைத்தை சொல்லிவிட்டார்கள். படமும், கவிதையும் ஒன்றோடொன்று போட்டியிடுகிறது. கலக்குங்க பூமகள்
உங்கள் பின்னூட்ட ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிகள் அன்பர் ஜெயாஸ்தா. :)

இளசு
01-12-2007, 09:50 AM
காலத்தை நிற்கவைத்துவிட்டோம்
என் ஓடாத முள் இறுமாற..
பகலும், இரவும் எனக் காலம் நில்லாமல்
ஓடுவதைத் தன்னாலே - தாமதாய் உணர்ந்து
மமதை அழிந்து..
மீண்டும் கடமையில் முள்!

காலம் - இழக்கவும் இல்லை...ஏற்கவும் இல்லை
முள்ளின் மமதையை... மனமாறிய மரியாதையை!

இயற்பியலில் காலம் நான்காம் பரிமாணம்!

பாமகளின் கவிதைகளில் இது உயர் பரிமாணம்...!!

பாராட்டுகள்..

சத்தான பின்னூட்டங்கள்...ரசித்தேன்.

மின்சேமி - புதிய சொல் கற்றேன்.

பூமகள்
01-12-2007, 09:59 AM
இயற்பியலில் காலம் நான்காம் பரிமாணம்!
பாமகளின் கவிதைகளில் இது உயர் பரிமாணம்...!!
மின்சேமி - புதிய சொல் கற்றேன்.
இயற்பியலின் பரிமாணத்தை இங்கு வந்து நினைவூட்டி, அழகு கவி படைத்தமைக்கு நன்றிகள் இளசு அண்ணா.. :)

பேட்டரிக்கு மின்சேமி சரியான வார்த்தை உபயோகமா என்று தெரியவில்லை அன்பு பெரியண்ணா(:D).

தங்களைப் போன்ற தமிழ் சான்றோர் வந்து இன்னும் சிறந்த சொல்லாடல் இருந்தால் சொல்வீர்கள் என்று நம்பி காத்திருக்கிறேன். :icon_rollout:

அக்னி
01-12-2007, 11:21 AM
கால ஓட்டத்தின்
பிரதிபலிப்பு... கடிகாரம்...

நிறுத்தவும் முடியாது.
முந்தவும் முடியாது.
பிந்தவும் முடியாது.
கால நகர்வை...

காலத்தால்,
நகர்த்தப்படுகின்றோம்...
நிறுத்த முயற்சித்தால்,
எம் வாழ்க்கைதான் பின்தங்கிவிடும்...

மிக அழகாகச் சொல்கின்றது கவி...

பாராட்டுக்கள் பூமகள்...

பூமகள்
01-12-2007, 12:04 PM
அழகான பின்னூட்டக் கவியோடு,
காலத்தின் நகர்வை உரக்கச் சொன்ன
கவிநாயகர் அக்னி அண்ணாவுக்கு
நன்றிகள் கோடி..!! :)

ஆதவா
06-12-2007, 03:07 PM
ஓடாத கணங்கள்..!


கரையாத நேரம்
கைப்பிடிக்குள்..!
ஓடாத என் வீட்டு
சுவர் கடிகாரம்..!

ஓடாத முள்..!
ஓடும் கணங்களை
ஒட்டிவைத்த
பெருமிதத்தில்..!

இரவும் பகலும்
மாறும் போது
காலக் கடிகாரம் - நேரம்
காட்டிச் சிரித்தது..!

முள்ளின் நெஞ்சின்
மமதை ஒழிந்தது..!

கடிகாரத்தின்
கண்ணாடிக்குள்
சுற்றிச் சுற்றி
புது உலகம்
படைத்தது..!



எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் நேரத்தை
கட்டி வைக்கமுடியாது ஒட்டி வைக்கமுடியாது.

முடியும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கவிதை, அது அவர்களின் வாயிலாக.

சொன்னவிதத்தில் பிரமிப்பு மிகுகிறது. இதை மமதை என்று சொல்வதா? இல்லை பெருமிதம் என்று சொல்வதா?

நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்! எப்படி? நாம் ஒதுக்கினால்தானே நேரம் தானாய் மிச்சமாகும்.

கடிகார முற்கள் எண்ணும் வினாடிகளைத் தொலைப்பது நம் வாழ்வின் முக்கிய பெரும்பணியாக இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் தேடிக்கொண்டிருக்க நம்மா இயலமுடிவதில்லை,, தேடும் சமயங்களில் நாம் வினாடிகளை இழந்திருப்போம்.

ஓடாத முள் - காட்சியழகு ; காண்பது பொய் - இதுவே மெய்.

வாழ்த்துகள்

பூமகள்
08-12-2007, 09:23 AM
நல்லதொரு ஆய்வுப் பின்னூட்டம்.
நன்றிகள் ஆதவா.. :)

ஷீ-நிசி
08-12-2007, 10:51 AM
துடிப்பு நின்றும்
நாளில் இருமுறை
சரியாய் நேரம் சொன்னதே..!!!

இந்தக் கவிதை படிக்கும்போது எனக்கும் இதேதான் ஞாபகம் வந்துச்சு!

நல்ல கவிதை பூமகள்!

ஆர்.ஈஸ்வரன்
14-12-2007, 10:33 AM
கடிகாரத்தின்
கண்ணாடிக்குள்
சுற்றிச் சுற்றி
புது உலகம்
படைத்தது..!

முட்களுடன் இருந்தாலும்
முகம் சுழிப்பதில்லை
கடிகாரம்

அக்னி
14-12-2007, 01:32 PM
முட்களுடன் இருந்தாலும்
முகம் சுழிப்பதில்லை
கடிகாரம்
சூப்ப்பர்ர்ர்ர்....:icon_b:

முள்ளைத் தாங்கி
இயங்கும் கடிகாரத்தின்
வலியின் முனகலோ டிக் டிக்..?