PDA

View Full Version : மழை!-(கவிதைப் போட்டி கவி)



பூமகள்
29-11-2007, 10:01 AM
அன்பு மன்ற செல்வங்களே..!

எனது இந்தக் கவி, கவிதைப் போட்டியில் பங்கு பெற்றது. இங்கு உங்களின் விமர்சனங்களுக்காக அதனைத் தனித்திரியாக்கி உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
மழை..!!

http://img30.picoodle.com/img/img30/5/11/29/poomagal/f_nightrainm_5f40d68.jpg



மழை இரவில்
கருக்கல் பயணம்..!!


ரகசியம் பு(உ)ணர
கரு மேக முகடு
கவ்விய இரவை
போர்வையாக்கியதால்
புலப்பட்டது காரிருளாயினும்
காட்டிக்கொடுக்க காத்துக்கிடந்தன
வானத்து எட்டப்பர்கள்..!!


சிதறிய கொலுசின் சிப்பாய்களாய்
மேகத்திரை(சிறை) தப்பித்து
நட்சத்திர மின்மினிகள்
கண்சிமிட்டி ஒளி சிந்தி
காட்சிக் கொடுத்தன...!!


முகில்கள் தழுவலின்
ஓங்கிய உரசல்
இடிகளாய் வந்து
இடித்துரைத்துக்
காட்டிச் சென்றன..!!


முகிலின் பு(உ)ணரல்
முரண்பட்டதால்
வாள் கொண்டு
போரிட்டதை மின்னல்
வெட்டி வெட்டி
வந்துரைத்துப் போயின..!!


மேக மைந்தன் முரணில்
முட்டி வென்றதால் வானம்
மகிழம்பூக்களாய் முகில்ப்பூக்கள் தூவி
வரவேற்க..!! - பூமிக்கு
பூமழையாக பொழிந்ததுவே..!!

சுகந்தப்ரீதன்
29-11-2007, 10:57 AM
மழைக்கவிதையா இது..? எனக்கு மரபு கவிதை போல் தெரிகிறது..!

மேக மைந்தன் முரணில்
முட்டி வென்றதால் வானம்
மகிழம்பூக்களாய் முகில்ப்பூக்கள் தூவி
வரவேற்க..!! - பூமிக்கு

மழைப்போல கொட்டுகிறது நல்ல கற்பனை வளம்.. கவிதையில்.. வாழ்த்துக்கள் பூமகள்..!

பூமகள்
30-11-2007, 01:17 PM
மழைக்கவிதையா இது..? எனக்கு மரபு கவிதை போல் தெரிகிறது..!
ப்ரீதன்.... ஏதும் திட்டனுமா நேரா திட்டனும்... அதுக்காக, இப்படியா மரபுக் கவிதைன்னு சொல்லி கிண்டல் பண்றது?? :icon_ush::icon_ush::rolleyes::D

மழைப்போல கொட்டுகிறது நல்ல கற்பனை வளம்.. கவிதையில்.. வாழ்த்துக்கள் பூமகள்..!
ரொம்ப நன்றிகள் ப்ரீதன்.