PDA

View Full Version : மாண்புமிகு வரதட்சணை-நிறைவுசிவா.ஜி
29-11-2007, 08:17 AM
"கமலா எல்லாம் எடுத்துவெச்சிட்டியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாயிடிச்சி."
பரசுராமன் மனைவியை பார்த்துக் கேட்டார்.கொஞ்சம் பரபரப்பாய் இருந்தார்.முகத்தில் டென்ஷன் இருந்தது.இது நாலாவது இடம்.இதற்குமுன் வந்தவர்களெல்லாம் கேட்ட வரதட்சனையை இவரால் எல்லா சொத்தையும் விற்றாலும் கொடுக்கமுடியாத நிலை.அதனால் தட்டிப் போய்விட்டது.இதுவாவது அமையுமா என்ற டென்ஷன்.

"எல்லாம் ரெடியா இருக்குங்க.வர்ஷினியும் ரெடியாயிட்டா...உங்க தங்கை வர்றதா சொல்லியிருந்தாளே அவளை வேறக் காணமே..."

"வந்துருவா...நீ போய் டிஃபன் எல்லாம் ரெடியா எடுத்து வெச்சுடு."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் தங்கையும் வந்துவிட்டாள்.உள்ளே அறையில் வர்ஷினி தன் தோழிகளுடன் அலங்காரதேவதையாக அமர்ந்திருந்தாள்.

வாசலில் கார் நிற்கும் ஓசை கேட்டு தம்பதிகள் இருவரும் லேசான பாய்ச்சலில் வாசலுக்குத் தாவினார்கள்.

"வாங்க வாங்க"

வரவேற்பை ஏற்றுக்கொண்டதைப் போல முகத்தில் புன்சிரிப்பைக் காட்டிக்கொண்டே அந்த மூன்று பேரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.மாப்பிள்ளை அழகாக இருந்தான்.அம்மா ஜாடை.கண்ணியமான தோற்றத்தில் அப்பாவும்,சாதாரனமான புடவையில் அம்மாவும் முகத்தில் சந்தோஷத்தோடு ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தார்கள்.

வழக்கமான விசாரிப்புகள் முடிந்து சிற்றுண்டி வினியோகம் நிகழ்ந்தது.உண்டு முடிப்பதற்குள் வர்ஷினி காஃபி கோப்பைகளுடன் வந்தாள்.அவளை ஏறிட்டுப் பார்த்த மாப்பிள்ளையின் அம்மா திருப்தியுடன் கணவரையும்,மகனையும் பார்த்தார்.இருவரின் முகமே சொல்லிவிட்டது அவர்களுக்கும் வர்ஷினியைப் பிடித்துவிட்டதென்பதை.ஓரக்கண்ணால் இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்த பரசுராமனும்,கமலாவும் நிம்மதியோடு பார்த்துக்கொண்டார்கள்.

"பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.மேற்கொண்டு பேசலாமே"மாப்பிள்ளையின் தந்தை சொன்னதும்,பரசுராமன் கொஞ்சம் கலக்கத்துடனே"நீங்க சொல்லுங்க என்ன எதிர்பார்க்கறீங்க?" நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டார்.அனுபவம்.

மாப்பிள்ளை கதிரவனின் பெற்றோர் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு ஒரு சிரிப்போடு"உங்க பொண்ணை மட்டும்தான் எங்க மருமகளா எதிர்பாக்கறோம்.மற்றபடி எங்களுக்கு எதுவும் தேவையில்லை.இது எங்க ரெண்டுபேரோட முடிவுமட்டுமில்லை,எங்க பையனுடையதும்தான்."

பரசுராமனால் அவர் காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை."நீங்க........." பரசுராமனின் இழுவையின் அர்த்தம் புரிந்து "என்னடா இவங்க வரதட்சனை எதுவும் வேணான்னு சொல்றாங்களேன்னு ஆச்சர்யமா இருக்கா?என்ன செய்யறது பலபேர் இந்தக் கேவலத்தை செய்யறதால,வேணான்னு சொல்லும்போது இப்படித்தான் ஆச்சர்யப்படவேண்டியிருக்கு.எங்களுக்கு கல்யாணம்ங்கற புனிதமான பந்தத்தை வியாபாரமாக்குறதுல உடன்பாடு இல்லைங்க.அதுக்காக எல்லாரும் நினைக்கிறமாதிரி மாப்பிள்ளைக்கு என்னவோ குறையிருக்குன்னு நெனைச்சிடாதீங்க.மத்திய அரசு வேலையில எஞ்சினியரா இருக்கான்.மும்பையில வேலை.எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.எங்களுக்கு ஒரே பையன்.நல்லாவே வளர்த்திருக்கோம்ன்னு நாங்களே பெருமைப் படற மாதிரிதான் வளர்ந்திருக்கான்.
எந்த கவலையுமில்லாம எங்க மருமகளை எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க.மகள் இல்லாத குறை தெரியாம இவளை மகளா ஏத்துக்குறோம்." சொன்ன சம்பந்தியைப் பார்த்து பரசுராமன் அவரையறியாமல் கைகூப்பிவிட்டார்.

திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.முதலிரவு அறையில் கதிரவன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த வர்ஷினியைப் பார்த்ததும் கதிர் அதிர்ச்சியடந்துவிட்டான்.அவள் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.எரிச்சலோடு பால் சொம்பை மேசையில் நங்கென்று வைத்தவள் அதே வேகத்தில் திரும்பி கதிரைப் பார்த்து"உன்னை யாருய்யா வரதட்சனை வாங்காம கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது.நீ என்ன பெரிய உத்தமபுத்திரனா?எனக்குன்னு வந்து வாய்ச்சியே'இந்த சிச்சுவேஷனை கதிர் சுத்தமாக எதிர்பார்க்காதது அதிர்ந்த அவன் முகத்தில் தெரிந்தது.
(தொடரும்)

sarcharan
29-11-2007, 08:59 AM
வர்ஷினி பால் சொம்பை தொப்ன்னு போட்டாளோ இல்லையோ நீங்க ஒரு புதிரை போட்டுட்டீங்க..

சீக்கிரம் தொடருங்க.நானும் கதிரவன் மாதிரி கேட்க ஆவலாய் உள்ளேன்.

பூமகள்
29-11-2007, 09:08 AM
ஆஹா..
கதை சந்தோசமா ஆரம்பிச்சி... இப்படி கோபத்தில் தொடரும் போட்டாச்சே..!
அடுத்த பதிவு சீக்கிரமா போடுங்க.. தாமதமாக்கி வர்ஷினி கோபத்திலேயே வைச்சிருக்காதீங்க சிவா அண்ணா.

"அதிகமா கோபப்பட்ட பெண் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல..!"

ஆனாலும் வர்ஷினிக்கு இத்தன கோபம் ஆகாது. கொஞ்சம் கூட அறிவில்லாம எங்க வந்து எப்படி கோபப்படுது இந்த பொண்ணு..! கோபம் அறிவை மட்டுப்படுத்திரும்னு சொன்னது சரியா தான் இருக்கு..!
கதை நடை, அருமை.
வாழ்த்துகள் சிவா அண்ணா.

அன்புரசிகன்
29-11-2007, 09:15 AM
இவ்வாறு நம்மூரில் நடந்திருக்கிறது.... ம்.. தொடருங்கள்... ஆவலுடன் நான்....


"அதிகமா கோபப்பட்ட பெண் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல..!"

இதுல அதிகமா கோபம் மட்டும் இல்லீங்க. அதிக ஆசையும் தான்.... :mini023:

சிவா.ஜி
29-11-2007, 10:16 AM
வர்ஷினி பால் சொம்பை தொப்ன்னு போட்டாளோ இல்லையோ நீங்க ஒரு புதிரை போட்டுட்டீங்க..

சீக்கிரம் தொடருங்க.நானும் கதிரவன் மாதிரி கேட்க ஆவலாய் உள்ளேன்.

நன்றி சரவணன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை மன்றத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.சீக்கிரமே தொடருகிறேன்.

சிவா.ஜி
29-11-2007, 10:19 AM
நன்றி பூமகள்.அந்த கோபத்தின் விளைவுகள் இனி தெரியும்.

சிவா.ஜி
29-11-2007, 10:22 AM
இவ்வாறு நம்மூரில் நடந்திருக்கிறது.... ம்.. தொடருங்கள்... ஆவலுடன் நான்....

இதுல அதிகமா கோபம் மட்டும் இல்லீங்க. அதிக ஆசையும் தான்.... :mini023:

எதுவுமே அளவுக்கு அதிகமானால் சரியில்லை.நன்றி அன்பு.

சிவா.ஜி
29-11-2007, 11:30 AM
வர்ஷினியே தொடர்ந்தாள்...\"நீயும் உன்னோட இந்த லட்சியக் குடும்பமும் வர்றதுக்கு முன்னால நாலு பேர் வந்தானுங்க..அவன் அவன் இவ்வளவு குடு அவ்வளவு குடுன்னு கேட்டதுல என்னை பெத்தவங்க அரண்டுட்டாங்க. இந்த முறையும் தட்டிப் போச்சுன்னா நான் காதலிக்கிற(அழுத்தி சொன்னாள்)சுரேஷையே எனக்கு கல்யாணம் செஞ்சி வெச்சிடலான்னு அவங்க பேசிக்கிட்டிருந்ததை கேட்ட அன்னையிலருந்து நீயும் அவனுங்கள்ல ஒருத்தனா ஓடிப் போயிடுவேன்னு நெனைச்சு சந்தோஷமா இருந்தேன்.என் சந்தோஷத்துல மண்ணை அள்ளிக் கொட்டற மாதிரி நீயும் உங்க அப்பா அம்மாவும் வந்து தொலைச்சுட்டீங்க.ஏன்யா உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்.கொள்கை என்ன வேண்டிக் கெடக்கு கொள்கை?உன் கூட சந்தோஷமா குடும்பம் நடத்துவேன்னு கனவுகாணாத...போ போய் ஒரு ஓரமா படு!\' ஆத்திரத்தில் கொட்டித்தீர்த்தவளாய் தலையிலிருந்த பூச்சரத்தை பிய்த்து எறிந்து விட்டு படுத்துவிட்டாள்.

கதிர் அந்த சூழ்நிலையை உணர்ந்து கொள்ளவே சிரமப் பட்டான். இவன் துளியும் எதிர்பார்க்காதது.எப்படி ரியாக்ட் செய்ய வேண்டுமென்றே தெரியாமல் சிலையாக சிறிது நேரம் நின்று விட்டு தரையில் படுக்கை விரிப்பை விரித்து படுத்துக்கொண்டான்.என்ன செய்யப் போகிறோம்.....?திரும்பத் திரும்ப அவனை அவனே கேட்டுக்கொண்டதில் தெளிவான பதில் கிடைக்காமல்,சரி போகப் போக சரியாகிவிடுவாள் என்று வழக்கமாக எல்லோரும் சமாதானமாவதைப் போல அவனுக்குள் சமாதானமாகி உறங்கிவிட்டான்.

காலையில் கதிர் வர்ஷினியை கேட்டுக்கொண்டான்.இந்த விஷயம் என் பெற்றோருக்குத் தெரியவேண்டாம் இதை மட்டும் ஒரு உபகாரமாய் எனக்குச் செய் என்று.அவனை முறைத்துவிட்டு அகன்றவளின் அன்றைய மட்டுமல்ல, மும்பைக்கு திரும்பிப் போகும்வரையான நடவடிக்கை எதுவும் தப்பு சொல்லும்படியாக இல்லை.அதுவே கதிருக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.பணி மும்பையில் என்பதால் அனைவரும் புறப்பட்டு மும்பை வந்தார்கள். மகனோடும் மருமகளோடும் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு கதிரின் பெற்றொர் திரும்ப ஊருக்குப் போய்விட்டார்கள்.அவர்கள் இருக்கும்வரை எந்த பிரச்சனையும் பகலில் இருந்ததில்லை.பூட்டியஅறைக்குள் சித்திரவதை அனுபவித்தான் கதிர்.பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்துவதைப் போல அவளின் ஒவ்வொரு சொல்லும் இருக்கும்.அவர்கள் போனதும் பகல்,இரவு என்ற எந்த வித்தியாசமுமில்லாமல் கதிரை வர்ஷினி தன்நடவடிக்கைகளாலும்,பேச்சாலும் நிறையவே நோகடித்தாள்.இனி இவள் சரியாவாள் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான் கதிர்.

அதை உறுதி படுத்துவதைப் போல அன்று அந்த சம்பவம் நிகழ்ந்தது.கதிரின் நன்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.வந்தவர்களைகூட வரவேற்க வராமல்,படுக்கையறையிலேயே படுத்திருந்தாள் வர்ஷினி.கதிரும் சமாளிப்பாக அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு அவனே அவர்களுக்கு பழச்சாறு தயாரித்துக்கொடுத்தான்.பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒரு நன்பன் சொன்ன ஜோக்கை கேட்டு அதிர்ந்து சிரித்த கதிருக்கு அவனையறியாமல் வாயு வெளியேறிவிட்டது.கொஞ்சம் சத்தத்துடன்.நன்பர்கள் அதையும் சிரிப்பில் சேர்த்துக்கொண்டு சிரிக்க கோபாவேசமாக படுக்கையறையிலிருந்து வெளியே வந்த வர்ஷினி

\'ச்சீ...கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம...நீ எல்லாம் ஒரு ஆபீஸரா...மத்தவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனுன்னு கூட தெரியல.அப்படி என்ன உன்னால அடக்க முடியாதது.கருமம்...எல்லாம் என் தலையெழுத்து\'

வெளியாட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் அவள் அப்படி அநாகரீகமாக நடந்துகொண்டதைப் பார்த்த கதிரின் நன்பர்கள் தர்மசங்கடப்பட்டு போய்விட்டார்கள்.நடு ரோட்டில் வேட்டி அவிழ்ந்ததைப் போல அவமானத்தால் குறுகிவிட்டான் கதிர்.என்றுமே இல்லாத ஆத்திரம் அன்று வந்தது.அதே வேகத்தில் வர்ஷினியை பளாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டான்.இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத வர்ஷினி திகைத்து...பின் அளவுக்கடங்காத ஆத்திரத்தில்\"என்னையா அடிச்சே...என்று கத்திக்கொண்டே திருப்பி அவனை அடித்தாள்,ஆத்திரத்திலிருந்த கதிரும் அடிக்க களேபரமானது.சட்டென்று நின்ற வர்ஷினி எதையோ முடிவு செய்தவள் போல அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டாள்.அவளின் அந்த செயல் கதிரின் கோபத்தைக் குறைத்து பயத்தைக் கொடுத்தது.ஏதாவது செய்துகொள்ளப் போகிறாளென்று பதட்டத்துடன் கதவை பலமாகத் தட்டினான்.சிறிது நேரம் கழித்து பட்டென்று கதவை திறந்து வெளியே வந்த வர்ஷினி\"தூக்குப் போட்டெல்லாம் சாக மாட்டேன்...என் சாவுக்கு நீதான் காரணம்ன்னு லெட்டெர் எழுதி வெச்சிருக்கேன்\' என்று ரவிக்கையைக் காட்டியவள்\"இந்த 12 ஆவது மாடியிலருந்து குதிச்சி சாகறேன்.அதுக்காக உனக்கும் தண்டனை கிடைக்கனும்\'என்று சொல்லிவிட்டு விரு விருவென்று ஜன்னல் பக்கம் போனாள்.கதிர் பதறிப்போய் அவளை காலைப் பிடித்து மன்னித்துவிடும்படி கெஞ்சி ஒருவழியாய் சமாதானப் படுத்தினான்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கதிர் ஒரேயடியாய்மௌனமாகிவிட்டான்.யாரிடமும் பேசுவதும் குறைந்துவிட்டது.வர்ஷினியும் அவள் இஷ்டத்துக்கு நடந்துகொண்டிருந்தாள்.நடை பிணமாக வாழ்ந்துகொண்டிருந்த கதிரை மறுபடியும் மிருகமாக்கியது சுரேஷின் மும்பை வரவு.மும்பைக்கு பணிமாற்றலில் வந்தவன் வர்ஷினியைத் தொடர்பு கொண்டான்.அவனை வீட்டுக்கே வரச் சொன்னாள்.மனைவின் முன்னாள் காதலன் என்று தெரிந்தாலும் கதிர் ஒன்றும் சொல்லவில்லை.அவனோடு அடிக்கடி வெளியே போய்வரத் தொடங்கினாள் வர்ஷினி.

அன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த கதிர் கண்ட காட்சி அவனை மிருகமாக்கியது.சுரேஷ் வர்ஷினியை பின்னாலிருந்துஅணைத்துக்கொண்டிருந்தான்.

என்னதான் மண்புழுவாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் சீறாமல் இருக்குமா?கதிரும் சீறினான்.பதிலுக்கு வர்ஷினியும்
தாண்டவமாடினாள்.சுரேஷ் போய்விட்டான்.கைகளெல்லாம் நடுங்க கதிர் நெற்றியைப் பிடித்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.முன்னே நிழலாடியது.தலையை உயர்த்திப் பார்த்தான்.வர்ஷினி வெளியே கிளம்ப தயாராகி வந்தவள் அவன் முன்னே நின்றிருந்தாள்.

\"என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம இப்படி காட்டுமிராண்டி மாதிரி நடக்குற உனக்கு....\"மேலே எதையோ சொல்ல வந்தவள் சிறிது மௌனமாகிப் பின் தொடர்ந்தாள்.\"நானே எதிர் பார்க்காத நேரத்துல அவன் அப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டான்.சரியா அந்த நேரம் பாத்து நீ வந்து நிக்கற...இதுல என்னோட தப்பு என்ன இருக்கு?\"வர்ஷினி தப்பு செய்யவில்லை என்று ஒரு ஆறுதல் தோன்றினாலும்,அவளின் கேள்வியைப் பார்த்து அந்த நேரத்திலும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.அந்த நமுட்டுச் சிரிப்பைப் பார்த்தவள் இன்னும் ஆவேசமாகி\"என்னைய்யா சிரிப்பு வேண்டி கெடக்குது...உன்னை..\"ஆத்திரமாக கதவைத்திறந்து சட்டென்று காணாமல் போனாள்.கதிருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.சற்றுமுன் நடந்த நிகழ்விலிருந்து முழுவதுமாய் வெளி வருவதற்குள்...இவள் இப்படி....ஆயாசமாக இருந்தது.மூளை மரத்துவிட்டதோ எனும்படியாக ஆதாரமில்லாமல் அறுபட்ட வாழையாய் கீழே விழுந்தான்.

வாசல் திறக்கப்பட்ட சத்தம் கேட்டு கண்விழித்தான்.வர்ஷினி...கூடவே இரண்டு போலீஸ்காரர்கள்.வந்தவர்கள் அவனை கைது செய்வதாகச் சொன்னார்கள்.ஏன் என்று கேட்டதற்கு அவன் வர்ஷினியை வரதட்சனைக் கேட்டு கொடுமைப் படுத்துவதாக அவள் புகாரளித்திருப்பதாகவும்,சட்டப்படி உடனே கைது செய்ய வேண்டியிருக்கிறது என்றும் சொன்னார்கள்.அவன் ஒரு அரசாங்க அதிகாரி என்பதால் மரியாதையாகவே நடந்துகொண்டார்கள்.ஒரு மணி நேரத்திலேயே வர்ஷினியே வந்து காவல் நிலையத்தில் தான் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகச் சொன்னதும்,அந்த காவலதிகாரி அதை மனைவி பாசம் என்ன இருந்தாலும் விட்டுப் போகுமா..என்று நினைத்துக்கொண்டு அவனை விடுதலை செய்தார்.வீட்டுக்கு வந்ததும்\"பாத்தயில்ல.....நான் நெனைச்சா எப்ப வேனுன்னாலும் உன்னை உள்ளத் தள்ளமுடியும்.\"இனிமே ஒழுங்கா இருந்துக்க..ஆமா\"எதையோ சாதித்த பெருமையில் நடையில் அழுத்தம் கூட்டி அறைக்கு சென்றுவிட்டாள்.

அடுத்து வந்த நாட்களில் அவன் நிலை காணச் சகிக்காமலிருந்தது.முகச் சவரம் செய்யாமல்,யாருடனும் எதுவும் பேசாமல்,தனக்கு ஏற்பட்ட அவமானம் தன் பெற்றோருக்குத் தெரியவே வேண்டாமென்று அத்தனையையும் உள்ளுக்குள்ளேயே வைத்து மறுகிக்கொண்டு,சரியாகச் சாப்பிடாமல்....ஒருநாள் ரோட்டில் விழுந்து செத்துப்போனான்.

துக்க வீட்டுக்கு வந்தவர்களில் ஒருவர் அவனின் நன்பனைப் பார்த்து\"என்னப்பா இது இந்த சின்ன வயசிலேயே போய்ட்டாரே எதனால இறந்தார்?\"

நன்பன் கேட்டவரை பார்த்து.............

\"வரதட்சனைக் கொடுமை\" என்றான்.

அன்புரசிகன்
29-11-2007, 12:21 PM
ஆண்டவா... என் எதிரிக்கும் இந்த நிலை வேண்டாமப்பா....

மனது கனத்துவிட்டது சிவா....

sarcharan
29-11-2007, 12:41 PM
இவளைப்போல கல் நெஞ்சக்காரிகள் இன்னும் இந்த உலகில் நிறைய பேர் உள்ளார்கள்.
இவர்களுக்கெல்லாம் அந்நியன் படத்தில வர்ற மாதிரி தான் பழிவாங்கணும்.

இதற்கெல்லாம் காரணம் சட்டம் அவர்களுக்கு பல விதங்களிலும் சாதகமாயிருப்பதால்தான்.

உண்மையில் பெண்களைப்போல கொடுமையானவர்கள் யாரும் இல்லை.
அதனால் தான் middle east நாட்டினர் அவர்களை அடக்கி ஆள்கின்றனர்.
மற்ற நாட்டினரும் அதை சில விஷயங்களில் அப்படி செய்ய வேண்டும்.

iniya
29-11-2007, 01:18 PM
ஆகா சந்தோசத்துல ஆரம்பிச்சு இப்படி சோகமா முடிச்சுடேங்களே. மனசு கனத்துவிட்டது. உங்கள் கதை நன்றாக இருக்கிறது.

lolluvathiyar
29-11-2007, 02:40 PM
அருமையான கதை சிவா ஜி இது கதை மட்டும் அல்ல நான் சிலர் வாழ்வில் பார்த்த உன்மை சம்பவம். ஒரு வீட்டில் பொய் புகாரா அவமானம் அடைந்த கனவன், அவன் தாய் தந்தை தங்கை அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். எனக்கு ஒரு
அதனால் எப்படி பின்னூட்டம் இடுவது என்று தெரியவில்லை.

வக்கீல் நன்பர் இருகிறார், அவர் சொன்ன விசயம் இது
வரதட்சனை கொடுமைகளும் நிறைய நடகிறது. ஆனால் அதில் 99 % புகார் செய்யபடுவதில்லை. அதே சமயம் 99 % புகார் செய்யபட்ட கேஸ் எல்லாம் உங்கள் கதை போல பொய்யானவை.


இதற்கெல்லாம் காரணம் சட்டம் அவர்களுக்கு பல விதங்களிலும் சாதகமாயிருப்பதால்தான்.


இதுவும் உன்மைதான், சட்டம் சாதகாம் என்பதை விட அதை நடைமுரை படுத்தும் விதம் முற்றிலும் தவறாகவே இருகிறது. வரதட்சனை அல்லது பாலியல் புகார் கொடுத்தால் விசாரிக்காமல் கைது செய்யும் நடை நீண்ட நாட்களாக இருந்தது வந்தது, 90 % புகார் போலியானவை என்று கண்டு பிடித்த பின் உச்ச நீதி மன்றம் புகாரை பெற்று விசாரிக்காமல் கைது செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருகிறது.

மதி
30-11-2007, 02:09 AM
நல்லவனா இருக்கறது கூட பல நேரங்களில் தப்பு போலிருக்கு. இவ்வளவு வைராக்யத்தோடு இருந்த பெண் கதிரை கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் காதலித்தவனோடு ஓடியாவது போயிருக்கலாம். தானும் வாழாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டவனையும் வாழவிடாமல்.. முடிவில் மனது கனத்துவிட்டது. கதையாயினும் ஏதோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி ஒரு உணர்வு.. அதற்கு பஞ்ச் டயலாக்.."வரதட்சிணை கொடுமை"..

வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
30-11-2007, 04:22 AM
ஆண்டவா... என் எதிரிக்கும் இந்த நிலை வேண்டாமப்பா....

மனது கனத்துவிட்டது சிவா....

இதைத்தான் சொல்வார்கள் மனைவி அமைவதெல்லாம் என்று.ஒரு ஆணின் வாழ்க்கை எப்படி அமையுமென்பது மனைவி அமைவதைப் பொறுத்துதான் அன்பும்.சில வ்விதிவிலக்குகள் இப்படி அமைந்து விடுகிறது.

சிவா.ஜி
30-11-2007, 04:26 AM
இதற்கெல்லாம் காரணம் சட்டம் அவர்களுக்கு பல விதங்களிலும் சாதகமாயிருப்பதால்தான்.


சிலர் அந்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாகப் பயன்பாடுத்திக் கொள்கிறார்கள் சரவணன்.பெண்களைப் போல தேவதைகளும் இல்லை,சில பெண்களைப் போல பிசாசுகளும் இல்லை.அந்த சில பெண்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.அதற்காக அவர்ர்களுக்கு தனிப்பட்ட முறையில்தான் தண்டனை கிடைக்கவேண்டுமே தவிர சட்டம் போட்டு அடக்குவது சரியில்லை. நன்றி சரவணன்

சிவா.ஜி
30-11-2007, 04:27 AM
ஆகா சந்தோசத்துல ஆரம்பிச்சு இப்படி சோகமா முடிச்சுடேங்களே. மனசு கனத்துவிட்டது. உங்கள் கதை நன்றாக இருக்கிறது.

நன்றி இனியா.சில சமயங்களில் சோகத்தையும் பதிவு செய்ய வேண்டியுள்ளதே.

சிவா.ஜி
30-11-2007, 04:30 AM
அருமையான கதை சிவா ஜி இது கதை மட்டும் அல்ல நான் சிலர் வாழ்வில் பார்த்த உன்மை சம்பவம். வரதட்சனை அல்லது பாலியல் புகார் கொடுத்தால் விசாரிக்காமல் கைது செய்யும் நடை நீண்ட நாட்களாக இருந்தது வந்தது, 90 % புகார் போலியானவை என்று கண்டு பிடித்த பின் உச்ச நீதி மன்றம் புகாரை பெற்று விசாரிக்காமல் கைது செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருகிறது.

இந்தக் கதையிலும் முக்கால் பாகம் உண்மைதான் வாத்தியார்.அந்த சமயத்தில் நீங்கள் குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இல்லாததால்,உடனடி கைது நடந்தது.நிலைமை மாறியிருப்பது வரவேற்கத்தக்கது.நன்றி வாத்தியார்.

சிவா.ஜி
30-11-2007, 04:33 AM
நல்லவனா இருக்கறது கூட பல நேரங்களில் தப்பு போலிருக்கு. இவ்வளவு வைராக்யத்தோடு இருந்த பெண் கதிரை கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் காதலித்தவனோடு ஓடியாவது போயிருக்கலாம். தானும் வாழாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டவனையும் வாழவிடாமல்.. முடிவில் மனது கனத்துவிட்டது. கதையாயினும் ஏதோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி ஒரு உணர்வு.. அதற்கு பஞ்ச் டயலாக்..\"வரதட்சிணை கொடுமை\"..

வாழ்த்துக்கள்..
நல்லவராய் இருப்பதில் தப்பில்லை மதி,நெளிவு சுளிவு த்ரிந்து நடந்துகொள்ள வேண்டியுள்ளது.வர்ஷினி ஓடிப் போவதென்றால் எப்போதோ ஓடிப் போயிருப்பாள்.இவர்கள் ஒரு கேரக்டெர்கள்.வெளியில் சுயமுகம் தெரியாத கொடுமைக்காரர்கள்.நன்றி மதி.

மதி
30-11-2007, 04:53 AM
உண்மை சிவா அண்ணா..
என்னைப்பாத்து நல்லவன்னு சொல்லிட்டான்னு அழுவதில் என்றும் பயனில்லை..

யவனிகா
30-11-2007, 06:19 AM
ஆண்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கவே இருக்கிறது அண்ணா...அருமையான எதிக்கோணத்திலிருந்து கதையை எழுதியிருக்கிறீர்கள். கொண்டு சென்ற விதமும் நன்றாகவே இருந்தது.வரதட்சனைக் கொடுமையால் ஆண்கள் கூட பாதிக்கப் படுகிறார்களே...அவர்களுக்குக் காணிக்கை ஆகட்டும் உங்களது இந்தக் கதை.வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
30-11-2007, 06:24 AM
நன்றிம்மா யவனிகா.சிலரருக்குத்தான் இப்படி நிகழ்கிறது என்றாலும்,மனதை நோகச்செய்யும் நிகழ்வு.என் நன்பனின் வாழ்க்கையில் ஏற்பட்டதை என்னால் முடிந்த அளவு பதிவு செய்தேன்.

sarcharan
01-12-2007, 07:02 AM
நல்லவனா இருக்கறது கூட பல நேரங்களில் தப்பு போலிருக்கு. இவ்வளவு வைராக்யத்தோடு இருந்த பெண் கதிரை கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் காதலித்தவனோடு ஓடியாவது போயிருக்கலாம். தானும் வாழாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டவனையும் வாழவிடாமல்.. முடிவில் மனது கனத்துவிட்டது. கதையாயினும் ஏதோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி ஒரு உணர்வு.. அதற்கு பஞ்ச் டயலாக்.."வரதட்சிணை கொடுமை"..

வாழ்த்துக்கள்..
சரியாய்ச் சொன்னீர்கள் மதி

மதி
01-12-2007, 07:10 AM
கதை எழுதினவங்ககிட்ட தான் கேக்கணும்...
நீங்க சொன்ன அடையாளம் யாருக்கும் பொருந்தலியே..

பூமகள்
01-12-2007, 07:29 AM
மௌன ராகம் கதை மாதிரி போகுதே... சரி திருந்திருவான்னு பார்த்தா... இப்படி பண்றாளே பாவி..! இந்த பொண்ணுனால, மொத்த பெண்ணினத்துக்கும் கேவலம்.
இப்படியும் பெண்கள் இருக்காங்கன்னு சிவா அண்ணா பதிவில் தான் படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்..!

என் நன்பனின் வாழ்க்கையில் ஏற்பட்டதை என்னால் முடிந்த அளவு பதிவு செய்தேன்.
இந்த கதை நிஜமா சிவா அண்ணா?
இப்ப தான் புரியுது... என்ன சுத்தி இருக்கவங்களும், நானும்(:)) எவளோ நல்லவங்கன்னு..!! :D:D

சிவா.ஜி
01-12-2007, 08:03 AM
இந்த கதை நிஜமா சிவா அண்ணா?
இப்ப தான் புரியுது... என்ன சுத்தி இருக்கவங்களும், நானும்(:)) எவளோ நல்லவங்கன்னு..!! :D:D

உண்மைதான் பூ.நாமெல்லாம்..மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.இருக்கும் சின்ன பிரச்சனைக்கே எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு சலிச்சுக்கறோம்...ஆனா என்னுடைய நன்பன் மாதிரி இத்தனை கஷ்டங்கள் அனுபவிப்பவரைப் பார்க்கும்போது நாம் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர்கள் என்று தோன்றுகிறது.

அன்புரசிகன்
01-12-2007, 09:15 AM
இப்ப தான் புரியுது... என்ன சுத்தி இருக்கவங்களும், நானும்(:)) எவளோ நல்லவங்கன்னு..!! :D:Dhttp://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif

சிவா.ஜி
01-12-2007, 09:25 AM
அதே அதே அன்பு.....!!!!

இளசு
01-12-2007, 09:33 AM
Exceptions cannot disprove a Law.

சில சம்பவங்கள் நிஜத்தில் இதைவிடக் கொடிய பெண்களால் நடந்தேறியிருக்கின்றன.. இனியும் நடக்கும்.

ஆனாலும் 80% விதியின் படி, - ஒரு செயல் 80 சதம் அதன் நோக்கத்தை நிறைவேற்றினால் அது வெற்றி - வரதட்சணைச் சட்டமும் அதன் கடுமையும் தேவையே..

பெரும்பாலான ஆண்கள் குடும்பமும், சிறுபானமையான இவ்வகைப் பெண்கள் மனமும் மாறினால்தான் உண்டு.

உண்மைக்கதையை நேர்த்தியாய்ச் சொன்ன சிவாவுக்குப் பாராட்டுகள்..

தலைப்பில் ண்,ணை-க்குப்பதிலாக ன்,னை - என கதாசிரியர் எழுதியது -
எழுத்துபிழையா? இல்லை ஏதாவது '' டைரக்டோரியல் டச்சா''?

சிவா.ஜி
01-12-2007, 09:44 AM
தலைப்பில் ண்,ணை-க்குப்பதிலாக ன்,னை - என கதாசிரியர் எழுதியது -
எழுத்துபிழையா? இல்லை ஏதாவது \'\' டைரக்டோரியல் டச்சா\'\'?

நன்றி இளசு.
முதல் ண் -க்கு பதில் ன் இட்டது மட்டும்தான்(மாண்பு குறைந்த என்ற அர்த்தத்தில்)தெரிந்து செய்தது.இரண்டாவது அடியேனின் தவறு.சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

பூமகள்
01-12-2007, 09:44 AM
http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif http://www.lovetack.com/home/images/smilies/smi_cry.gif
இப்போ என்ன சொல்லிட்டேனு.. இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்றீங்க அன்பு அண்ணா??:rolleyes::icon_shok::icon_nono:

அதே அதே அன்பு.....!!!!
நீங்களும் கூட சேர்ந்து அழறீங்க... சிவா அண்ணாவுக்கே இது அடுக்குமா??!!:icon_shok::huh:

சிவா.ஜி
01-12-2007, 09:48 AM
இப்போ என்ன சொல்லிட்டேனு.. இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்றீங்க அன்பு அண்ணா??:rolleyes::icon_shok::icon_nono:

நீங்களும் கூட சேர்ந்து அழறீங்க... சிவா அண்ணாவுக்கே இது அடுக்குமா??!!:icon_shok::huh:

இது ஆனந்தக் கண்ணீர் தங்கையே....ஆனந்தக்கண்ணீர்.ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டீயேம்மா....

அமரன்
04-12-2007, 04:09 PM
அண்மையில் குமுதத்தில் ஒருகட்டுரை படித்தேன். பெண்கள் பாதுகாப்புச்சட்டங்கள், விதிகளால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான உதவி மையம் சென்னையில்(?) உருவாக்கப்பட்டுள்ளதாம். நாள்தோறும் அவர்களுக்கு கிடைக்கும் புகார்களும், மையத்தின் அங்கத்தவர் எண்ணிக்கையும் உலகவெப்பநிலையப் போல அதிகரித்துச் செல்கின்றதாம். அந்த ஆச்சரியத்தின் விரிவு சற்று சுருங்கும் நேரத்தில் மீண்டும்..

இம்முறை சிவாவால் எப்படி உண்மைகளை (சதவீதம் குறைவாக இருந்தாலும்) மையப்படுத்தி எழுத முடிகின்றது. வரதட்சணைக் கொடுமை இனி ஆண்களுக்கும்தான் என்பது போல முடித்திருப்பது முத்தாய்ப்பு. மனதாரப் பாராட்டுகின்றேன் சிவா.

சிவா.ஜி
05-12-2007, 03:19 AM
நன்றி அமரன்.அப்படி ஒரு கட்டுரை வந்திருக்கிறதா...படிக்க வேண்டும்.நீங்கள் சொல்லியுள்ள படி சதவீதம் குறந்துதானிருக்கிறது. கூடிய விரைவில் அதிகரிக்குமென்றே தோன்றுகிறது.அன்மையில் கூட என் உறவுக்காரர்களில் ஒருவர் கைதானார்.மனைவியின் போலிப் புகாரின் அடிப்படையில்.அவரும் மென்பொருள் துறையில் இருப்பவர்தான்.

அன்புரசிகன்
05-12-2007, 03:52 AM
இது ஆனந்தக் கண்ணீர் தங்கையே....ஆனந்தக்கண்ணீர்.ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டீயேம்மா....

அஹ்.... :eek: :sprachlos020:

அப்போ நானும் அதே அதே....

நான் எஸ்கேப்... :auto003:

சிவா.ஜி
05-12-2007, 03:54 AM
அஹ்.... :eek: :sprachlos020:
அப்போ நானும் அதே அதே....

ஆமா நீங்களும்தான்.....

அமரன்
05-12-2007, 06:22 AM
என்னால் முடிந்தால் அந்தக்கட்டுரையை உங்களுக்கு அனுப்புகின்றேன் சிவா. அவர்கள் சொல்கின்றார்கள் காட்டுத்தீ வேகத்தில் எண்ணிகை அதிகரிக்கின்றதாம். பத்திரிக்கைகள், அமைப்ப்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்திப் பழகிவிட்டார்கள் என்றே ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் யோசித்தபோது இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

மனோஜ்
05-12-2007, 05:06 PM
நேஞ்சை அழவைத்த கதை சிவா அவர்களே
பெண்களிலும் இப்படி கொடுமை உடையவர் இருப்பது கொடுமைதான்

சிவா.ஜி
06-12-2007, 03:21 AM
இயல்பு மாறி இருப்பது எதுவுமே கொடுமைதான் மனோஜ்.பெண்மையே மென்மை என்பதுதான் உலகவழக்கு...ஆனால் இங்கோ அந்த மென்மைமாறி உயிர்க்கொல்லியாகிவிட்டது வேதனைதான்.நன்றி மனோஜ்.

இதயம்
06-12-2007, 07:47 AM
இந்த கதையையும், உங்களுடைய மற்ற பதிவுகளில் பெண்களைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களையும் நான் புரிந்த வகையில் (திருமணம் செய்யும் அல்லது திருமணம் ஆகிவிட்ட) பெண்கள் மீது உங்களுக்கு அதிருப்தி ஏற்பட ஏதோ காரணம் இருக்கிறது. அது நீங்கள் பார்த்த, கேட்ட, உணர்ந்த காரணமாக இருக்கலாம். நான் இதை சொல்லக்காரணம் இந்த கதையின் ஓட்டத்தில் பெண்கள் மீதான வெறுப்பை ஒரு கதாசிரியராக வாசகர்களிடையே திணிக்க முயன்றிருப்பது தெரிகிறது..!! இந்த கதையின் சம்பவங்கள் இந்தியப்பெண்களின் குண நலன் தெரிந்த, கணவனை மிக உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிற பெண்களை அறிந்த எனக்கு நம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், சிவா எழுதிய விதத்தை பார்க்கும் போது இது கற்பனை கதை கூட இல்லை, நிகழ்ந்த நிஜமோ என எண்ணத்தோன்றுகிறது. காரணம், கதையின் சம்பவங்கள், உரையாடல்கள் ஆகியவற்றை எழுதிய நேர்த்தி..!!

கெட்டப்பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எப்போதும் மறுப்பதற்கில்லை. தனக்கு பிடிக்காதவனை திருமணம் செய்வது இந்திய திருமணங்களில் மிக இயல்பாக நடக்கக்கூடிய காரியம். அதற்கு பெற்றோரின் வற்புறுத்தல், சாதி, மத, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இருக்கும். அப்படி பொருந்தாத வாழ்க்கை அமையும் போது கிடைத்ததை வைத்து, தன்னை மா(தே)ற்றிக்கொண்டு திருப்தியுடன் வாழ்பவர்கள் இருக்கிறார்கள். மறக்க வழியில்லாமல் கடைசி வரை அந்த கணவனுடன் நல்ல மனைவியாக வாழமுடியாதவர்களும் இருக்கிறார்கள். கணவனின் சமூக கௌரவம், மரியாதை மனைவியை சார்ந்து இருப்பதால் அவனை பழி தீர்ப்பது என்பது பெண்களுக்கு அத்தனை பெரிய காரியமல்ல.! எனக்கு தெரிந்த சில பெண்கள் கணவன் தன் சொல்வதற்கு கட்டுப்படச்சொன்னாலோ அல்லது தங்கள் சொல்லுக்கு கணவன் கட்டுப்படாமல் போனாலோ கையிலெடுக்கும் ஆயுதம் தற்கொலை தான். அதற்கு இந்திய சட்டங்கள் பெரும் ஆதரவாக இருப்பதும் உண்மை தான். இந்த கதையின் மோசமான முடிவிற்கு மோசமான பெண் வர்ஷிணி தான் காரணம் என்று சிவா உணர்த்த முயன்றிருப்பது உண்மைக்கு கிடைத்த தோல்வியாக கருதுகிறேன். இத்தனை பிரச்சினைக்கும் அடிப்படைக்காரணம் பொருத்தமற்ற திருமணத்தை செய்து வைத்த நம் திருமண முறையும், வர்ஷிணியின் பெற்றோரும் தானே சரியான காரணம்..? குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவன் மிக மோசமானவன். மோசமாக நடந்து கொண்ட வர்ஷிணிக்கு விதவை என்ற பட்டம் கிடைத்து அதன் மூலம் அவளுக்கு கொடுமைகள் அளித்து தண்டனை தர முடிந்தது. ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படைக்காரணமான பெற்றோருக்கும், சமூகத்திற்கும் என்ன தண்டனை தருவது..? யார் தருவது..?

ஒரு சில கெட்ட பெண்களை வைத்து ஒட்டுமொத்த பெண்ணினத்தை குற்றப்படுத்துவதை விட, பெரும்பாலான நல்ல பெண்களை வைத்து பெண்ணினத்தை உயர்த்திப்பேசுவது நியாயமானதாக இருக்கும்..!! என் பார்வையில் கெட்ட பெண்கள் மிகச்சில.. நல்ல பெண்கள் மீதமெல்லாரும்..!! கதையின் கடைசியில் நண்பர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன வரதட்சிணை கொடுமை என்ற வார்த்தை முத்தாய்ப்பாய் தெரிகிறது. ஆனால், அந்த பதில் கதிரின் முடிவிற்கு பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை (காரணம், கதிர் வரதட்சிணையை விரும்பவில்லை. வர்ஷிணியும் வரதட்சிணை கொடுக்க வேண்டும், கொடுக்க கூடாது என்பது பற்றி கவலைப்படவில்லை). அப்படி இருக்கும் பட்சத்தில் சொன்னால் நானும் தெரிந்து கொள்கிறேன்..!!

சிவா.ஜி
06-12-2007, 11:01 AM
நன்பர் இதயத்துக்கு மிக்க நன்றி இத்தனை ஆழமான,அறிவுப்பூர்வமான அலசலுக்காக.உங்களின் கேள்விகளுக்கும்,சில கருத்துக்களுக்கும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை.இந்த கதையைப் பொறுத்தவரை நான் என் சொந்தக்கருத்தை திணிக்கவில்லை.கண்டதைக் கேட்டதை வைத்து, உரையாடல்களை மட்டும் சொந்தமாய் அமைத்திருக்கிறேன்.
வர்ஷினி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம்.இவளைப்போன்றவர்களை சாதாரனமாக நாம் சமூகத்தில் பார்க்கமுடியும்.மூன்றாம் மனிதர் இருக்கிறாரே என்ற எண்ணம் கூட இல்லாமலும்,கணவர் பொறுப்புள்ள பதவியில் இருகிறாரே என்ற எண்ணமும் இல்லாமல் கேவலமாகப் பேசும் பெண்கள் உண்டு.வெகு சிலரேயாயினும் இருப்பது உண்மை.
சொல்ல மறந்த கதை என்ற படம் வந்தபோதும் சிலர் இப்படித்தான் கூறினார்கள்.சமூகத்தில் எங்கோ ஓரிரு இடங்களில் நடப்பதை காட்ட வேண்டுமா என்று.ஒன்றோ இரண்டோ நடக்கிறதென்பது சத்தியம்.இதனால் நான் பெண்கள் எல்லோரும் இப்படிப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை,அப்படி சொல்லவும் முடியாது.
மேலும்,வரதட்சணை கொடுமை என்று ஏன் முடித்திருக்கிறேனென்றால்...கதிரும் கேட்க்கவில்லை,வர்ஷினியின் பெற்றோரும் நிர்பந்திக்கப்படவில்லை...ஆனால்...அவன் வரதட்சணை வாங்காததுதான் வர்ஷினிக்கு அவள் விரும்பியவன் கிடைக்காமல் போனதற்கு காரணம்,என்பதாலும்,அதே காரணத்தை வைத்துதான் அவள் கதிரை காவல் நிலையம் வரைக் கொண்டுபோனாள் என்பதாலும்...அவன் முடிவுக்குக் காரணம் வரதட்சணைக் கொடுமை என்று சொன்னேன்.இதில் கதிரின் மென்மையான குணமும் அவன் சாவுக்குக் காரணம்.குடும்ப கௌரவம் என்ற காரணமும்தான்.
மிக நன்றி இதயம்.

lolluvathiyar
06-12-2007, 12:57 PM
சிவாஜியின் இந்த கதைக்கு மிக அருமையாக விளக்கம் தந்திருகிறீர்கள் இதயம் அவர்களே. அதிலும் உன்மைக்கு தோல்வி என்ற வார்த்தை மிக பிரமாதம்.ஒரு சில கெட்ட பெண்களை வைத்து ஒட்டுமொத்த பெண்ணினத்தை குற்றப்படுத்துவதை விட, பெரும்பாலான நல்ல பெண்களை வைத்து பெண்ணினத்தை உயர்த்திப்பேசுவது நியாயமானதாக இருக்கும்..!!

ஆம் தற்சமயம் ஒரு சில பென்கள்தான் இருகிறார்கள். ஆனால் இன்று பென்கள் வளர்க்கபடும் சூல்நிலை, வெளியில் அவர்கள் செதுக்கபடும் விதம், முற்றிலும் ஆண்களுக்கு எதிரான சட்டநடைமுரைகள் (சட்டங்கள் அல்ல) மெல்ல பென்களை மாற்றி வருகின்றன. சிகரெட் மதுபானம் ஆபாசம் போன்ற தீய குணங்கள் அதிகரித்து கொன்டு இருப்பது போல் சுதந்திரம் என்ற பெயரில் வருங்கால பென்களுக்கு இ ந்த குணம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. அதற்க்கு டீவி சிரியல்கள் நிரைய உதவி கொண்டு இருகிறது.

இந்திய குடும்பங்களின் ஆனிவேரே மனைவிதான், வருங்காலத்தில் அந்த ஆனிவேர் ஆட்டம் கண்டுவிடும் என்றே தோன்றுகிறது.தனக்கு பிடிக்காதவனை திருமணம் செய்வது இந்திய திருமணங்களில் மிக இயல்பாக நடக்கக்கூடிய காரியம். அதற்கு பெற்றோரின் வற்புறுத்தல், சாதி, மத, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இருக்கும்.


பிடிக்காததுக்கு காரனம் என்னவேண்டுமானாலும் இருக்கலாம், பிடிக்கவில்லை என்றால் பெற்றோரை எதிர் த்திருக்க வேண்டும், ஆனால் அதை இவர்கள் எதிர்க்க கனவன் மட்டும்தான் கிடைத்தானா? கனவன் மட்டுமா இளிச்சவாயன்.இத்தனை பிரச்சினைக்கும் அடிப்படைக்காரணம் பொருத்தமற்ற திருமணத்தை செய்து வைத்த நம் திருமண முறையும், வர்ஷிணியின் பெற்றோரும் தானே சரியான காரணம்..?

அவர்கள் குற்றவாளி ஆக மாட்டார்கள். ஒன்னா காதல் பன்னி ஓடி போய் கரம் பிடிக்க தைரியம் வேண்டும், அல்லது அந்த லவ்வை தூக்கி எறிய தைரியம் வேண்டும். இது காதல் அல்ல என்று தான் சொல்வேன். உன்மையான காதல் என்றால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் துனிந்து நிற்கும் தைரியம் தானாக வந்திருக்கும். ஒரு பென்னை அவ்வளவு சாமான்யமாக நிர்பந்திக்க முடியாது.
அதனால் என்னை பொருத்தவரை இந்த பெற்றோர் குற்றவாளிகள் அல்ல. கனவனும் குற்றவாளி அல்ல. பெண் குற்றவாளி. குற்றும் செய்ய தூண்டியது சபலிஸ்டுகள் வகுத்த கொடுரூமான சட்ட நடைமுரை. பெண் அழுதால் நீதியை மறந்துவிடும் காவலர்கள்.
(தற்பொழுது உச்ச நீதி மன்றத்தில் சில மாற்றம் கொண்டு வந்திருகிறார்கள்)

இதன் மூலம் நன்பர் சிவாஜி ஒரு நல்ல மெசேஜை தந்திருகிறார். நாம் நமது பிள்ளைகளை திருமனம் செய்து வைக்கும் போது அவளிடம் நன்றாக கருத்து கேட்டு தான் அடுத்த காரியம் பார்க்க வேண்டும். அடுத்த ஜெனரேசனை மாற்றுவோம்.

MURALINITHISH
26-08-2008, 10:20 AM
நல்லவனாய் இருந்தது தப்பில்லை அதை வெளிபடுத்திய விதம் தவறு முதல் நாள் வந்து காதலனை கை பிடிப்பேன் என்று சொன்னவளை அவன் கையையே பிடித்து கொள் என்று அனுப்பி இருக்காமல் அவளிடம் அடங்கி போனது தவறு ஆண் என்று அடங்கி போகிறானோ அன்றே பெண் ஆங்காரம் கொள்கிறாள் பெண்மையை போற்றலாம் தவறில்லை பெண்மையிடம் போராட கூடாது அந்த மாதிரி நிலைமை வந்து விட்டால் ஆண் அவன் தன்மையை வெளி கொணர்ந்தே ஆக வேண்டும்

சிவா.ஜி
26-08-2008, 12:43 PM
பெண்மையிடம் போராடக்கூடாது என்ற உங்கள் கருத்து மிகச் சரிதான். அதை அறியாததாலேயே இந்தக் கதையின் நாயகன் அழிந்தான். மிக்க நன்றி முரளி.