PDA

View Full Version : தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம்rambal
03-04-2003, 10:51 AM
தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம்

அன்பான தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு...
ரசிகன் எழுதிக் கொள்வது,
சமீப காலமாக வந்த திரைப்படங்கள் பற்றி
கொஞ்சம் மனது விட்டுப் பேசலாம் என்றுதான்,
அது என்னவோ ஆரம்பத்துல நல்லாதாங்க இருந்துச்சு
உங்களோட படைப்புகள் எல்லாம்....
ஆனால் வர வர கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையா
இப்போ வர்ர எல்லா படங்களுமே காதலப்பத்தித்தான்...
அது என்னவோ
பாக்காம காதல்...
பாத்துட்டும் பாக்காம காதல்...
சொல்லாமலே காதல்,
சொல்லியும் சொல்லாமல் காதல்...
கேக்காத காதல்...
இப்படி காதலை பலவிதமா காமிச்சு
காதல் மேல மதிப்புக்குப் பதிலா
வெறுப்பாகிப்போச்சு...(அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு)
சரி...
என்னடா தமிழ் சினிமாவே இப்படி ஆகிப்போச்சேன்னு பாத்தா
திடீர்னு
ரவுடிங்களை மையமா வச்சு படமெடுக்க ஆரம்பிச்சிட்டீங்க..
ஒரே அடிதடி வெட்டு குத்து அரிவாள்
இப்படி சகல ஆயுதங்களையும் காமிச்சிட்டீங்க..
சும்மாவே தெக்கத்திக்காரங்களுக்கு (மதுரை, ராம்னாடு, திருநெல்வேலி) வீரம் ஜாஸ்தி..
அங்குட்டு எத்தன பேரு கத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க தெரியுமா?
இதுல புதுசா ஒரு ட்ரெண்டு என்னன்னா
ரவுடிங்களைக் காதலிக்கிறதுதான் இப்ப ·பேசன்...
சரி இந்தக்கூத்து ஒரு பக்கம்...
இன்னொரு பக்கம்
செண்டிமெண்ட்ங்ற பேர்ல நீங்க அடிக்கிற கூத்து...
பாசம்ங்ற பேருல அண்ணன் தம்பி நாலு பேருனு
குடும்பத்தோட (எங்கயுமே நடக்காத பாசம்) பாசம்ங்ற பேருல
ஏனய்யா கொடுமை பண்றிங்க...
குடும்பத்துல வேற எதுவுமே நடக்காதா?
அண்ணன் சொல்லுவாராம்..
தம்பிங்க கேப்பாங்களாம்...
அப்புறம் இரண்டு நண்பர்கள் பத்தினது..
நட்புக்காக, மீசைக்கர நண்பா இப்படி வேற ஒரு சைடு கூத்து...
சரி நட்பு, குடும்பம் எல்லாம் ஓகே.
அதுக்காக,
காதுல பூவை சுத்துனாப் பரவாயில்லை...
பூக்கூடையே வச்சா எப்படி?
சரி இது எல்லாத்தையும் சகிச்சுக்கலாம்..
ஆனா இப்ப புதுசா ஒரு ட்ரெண்டு செட் ஆயிருக்கே...
இந்த ஸ்கூலுப்பசங்களை வைச்சு
அந்த வயசுல என்ன பண்ணுவாங்கனு காமிச்சு...
ஒரு படம் வந்தாப் பரவாயில்லை...
அதைப்பத்தி ஆராய்ச்சிப்பண்ணி
அதே மாதிரி கதையை பலவிதமா சொல்லி..
ஸ்கூல் பசங்களையும் கெடுக்றதுன்னு முடிவு பண்ணிட்டிங்க...
சும்மாவே அந்த வயசு ஒருமாதிரி..
இதுல நீங்க வேற ஏனய்யா
எரியும் நெருப்புல எண்ணைய ஊத்துற மாதிரி
இருக்கிற ஒன்னு ரெண்டு நல்ல பசங்களையும் கெடுக்கணும்னு
குறியாத் திரியுரிங்க?
அப்பக்கப்ப அன்பே சிவம் மாதிரி ஒரு சில நல்ல படங்கள் வருது..( அதுவே ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தழுவல்னு கேள்வி. அந்த விசாரணைய அப்புறம் வைச்சுக்கலாம்)
இல்லைனு சொல்லலை...
உங்களுக்கு வேற யோசிக்கவே தெரியாதா?
இதுல அப்பைக்கப்ப பேட்டி வேற..
இந்தப் படத்துல கதையே கிடையாது...(மின்னலே டைரக்டர்)
இந்தப் படத்தை விளம்பரப்பட்ம் மாதிரி எடுத்ருக்கோம்...(ரட்சகன் டைரக்டர்)
தம்மாத்துண்டு இடுப்புதான் கதையே... அதுலதான் 2 கோடி கொட்னோம்.. (குஷி டைரக்டர்)
உங்க படங்கள்ளதான் கதையே இல்லைனு ஊருக்கேத் தெரியுமே...
பின்ன நீங்க வேற அதை தம்பட்டம் அடிக்றீங்க...
கொஞ்சம் குடும்பத்தோட போய் பாக்ற மாதிரி படம் எடுங்கள்..
நீங்கள்லாம் உங்க குடும்பத்தோட போய் பாக்க மாட்டீங்களா?
பட பூஜைக்கு முன்னாடி கதையை ரெடி பண்ணுங்க...
அப்புறமா படம் எடுங்க...

மற்றவை அடுத்த கடிதத்தில்...

சரி வர்ட்டா...

இப்படிக்கு,
தமிழ் ரசிகன்...

Narathar
03-04-2003, 11:09 AM
சரி வர்ட்டா...

இன்னொறு தெனாவட்டோட வாங்க.................

anushajasmin
03-04-2003, 01:49 PM
அப்படியே கொஞ்ச நாள் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. நல்ல தமிழ் படமா எடுக்கிறார்கள் என்றாலாவது பார்த்து தொலைக்கலாம்..

அருள்மொழி வர்மன்
03-04-2003, 02:59 PM
ராம்பால்,
இந்த தெனாவெட்டை ஒரு சில படிக்க தெரிந்த தமிழ் சினிமா டைரக்டர்களாவது பார்க்கமாட்டார்களா என்று மனம் ஆதங்கப்படுகிறது. நெத்தியடியாக அடிச்சிருக்கீங்க.

அன்புடன்,
அ.வ.

kaathalan
04-04-2003, 12:36 PM
என்னவென்று சொல்வது புதிதாக வந்த, வருகின்ற தமிழ் படங்களை........ எனக்கு தெரிந்தவர்கள் பொதுவாக சொல்கிறார்கள் தாங்கள் ஒரு தமிழ் படத்தை 3 மணிநேரமாகப்பார்ப்பதில்லையாம்.
குறைந்தது 30 தொடக்கம் 45 நிமிடங்களில் பார்த்து முடித்துவிடுவார்கலாம். கடைசியாக என்ன நல்ல தமிழ் படம் பார்த்தனீர்கள் என்றால் யோசிக்கவேண்டியுள்ளது........ என்ன செய்வது இவர்களை அதாங்க இயக்குனர்களையும் கதாநாயகர்களையும்.........

நீங்கள் இயக்குனர்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளீர்கள்
கதாநாயகர்களை தவிர்த்து. இதில் பகிடி அஜித் வில்லன் பட பேட்டியில் தான் இனிமேல் கிராமத்து ரசிகனைத்தான் சந்தோசப்படுத்த விரும்புகிறாராம். அப்படியேதான் தனது படங்களும் இனி இருக்குமாம். எடுக்கிற படங்களை நல்லாக ரசிக்ககூடியதாக எடுத்தால் இதுவெல்லாம் தேவையே இல்லை.

மன்மதன்
11-04-2004, 05:29 AM
அவங்களை பார்த்து நாம கேள்வி கேட்பதும், அதுக்கு பதில் கேள்வி கேட்பதும் சகஜமாகி விட்டது. ராம்பால் குறிப்பிட்ட அத்தனை படங்களும் வெள்ளிவிழா படங்கள்.. ஆகவே இந்த கடிதத்தை ஒரு ரசிகன் எழுதியதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு விமர்சகன் எழுதியதாக எடுத்துக்கொள்ளலாம்.