PDA

View Full Version : உருளை உடை



பகுருதீன்
29-11-2007, 07:42 AM
லிமா, நவ. 29: உருளைக்கிழங்கு என்றதுமே உணவுதான் நினைவுக்கு வரும். ஆனால் உருளைக்கிழங்குகளால் உடை மற்றும் நகைகளை வடிவமைத்து பெரு நாட்டில் அசத்தியிருக்கின்றனராம். தென் அமெரிக்க நாடான பெருவில் உருளைக்கிழங்கு அதிகம் விளைகிறது.
.
அந்நாட்டின் ஆன்டீஸ் மலைப் பகுதியில் 300க்கும் அதிகமான உருளைக் கிழங்கு ரகங்கள் விளைகின்றன.

உருளைக்கிழங்கு அந்நாட்டு மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தலைநகர் லிமாவில் உருளைக் கிழங்கு கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில்தான் உருளைக்கிழங்கால் வடிவமைக்கப் பட்ட உடையணிந்து வந்த மாடல் அழகிகள் உருளைக்கிழங்கு காதணி கள் மற்றும் நெக்லசையும் அணிந் திருந்தனராம். இவை காட்சிக்கு மட்டும்தானா விற்பனைக்குமா என்பது தெரியவில்லை.

http://www.tamilmantram.com/photogal/images/3818/medium/1_pot.jpg

நன்றி:மாலைச்சுடர்.காம்

அக்னி
29-11-2007, 06:22 PM
இவ்வகை வித்தியாசமான விந்தைச் செய்திகளை, செய்திப்பகுதியில் தனித்திரியில் தந்தால் நன்றாக இருக்கும்.

இத்திரி செய்திப்பகுதிக்கு மாற்றப்படுகின்றது...

lolluvathiyar
30-11-2007, 06:57 AM
அது காட்சிக்குதான் இருக்கும் விற்பனைக்கு இருக்க முடியாது. உருளை பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்த செய்திருப்பார்கள். கெட்டு போயிருமுல்ல.