PDA

View Full Version : பட்டறிவு...!!



ஓவியன்
28-11-2007, 02:18 PM
வேகமாய் ஓடிய
என் ஓட்டம் தடக்கென
தடக்கியது ஒரு நாள்...!!

சுருக்கென்று பாதம் தொட்டு
உச்சிக்கு பரவியது வலி,
காலைத் தூக்கி
பரிட்சித்ததில் ஆழமாய்
ஒரு நெருஞ்சி முள்...!!

ஆனாலும் உதடு கடித்து
முள் வலி மறைத்து
தொடர்ந்தும் ஓடினேன்...!!

உள்ளே ஒளிந்த முள்
வலியாய் உயிரெடுத்தது
ஒரு நாள்.
விளைவாய் காயம்
சீழ், வலி, இரத்தம்
வைத்திய செலவு
இத்தியாதி, இத்தியாதி...!!

இப்போதெல்லாம்
முள் தைத்தால் உடன்
எடுத்து அகற்றி விட்டே
மீள நான் ஓடுகிறேன்....!!

ஆதவா
28-11-2007, 02:47 PM
முற்கள் இருப்பது நம் அஜாக்கிரதையைப் போக்க,

ஹி ஹி...

விரிவான விமர்சனம் பின்பு வரும்...

பூமகள்
28-11-2007, 02:57 PM
அண்ணா..!
என் போலவே...
ஒரு அழகான க(வி)தை சொல்லும் விதத்திலான கவிதை அருமை..!

விரிவாக விமர்சனம் கொடுக்க இப்போ முடியவில்லை. பின்பு வந்து இங்கு மறுபதிப்பு செய்கிறேன். பொறுத்தருள்க என் அன்பு ஓவியன் அண்ணா.

(அப்பாடா.. ஒரு சீட்டு போட்டு இடம் பிடிச்சாச்சி..!:D:D)

அமரன்
28-11-2007, 03:08 PM
ஏம்பா..விமர்சனம் பண்ணுவதை ஃபார்மாலிட்டியாக்கிட்டீங்களே...:rolleyes::rolleyes:

ஓவியன்
28-11-2007, 03:16 PM
விரிவான விமர்சனம் பின்பு வரும்...

வராவிட்டால் உதை விழும்..!! :D

அமரன்
28-11-2007, 03:17 PM
வராவிட்டால் உதை விழும்..!! :D
முதல்ல மன்றத்துக்கு ஒழுங்காக வரச்சொல்லுமய்யா ஆதவரை...

ஆதவா
28-11-2007, 03:17 PM
வராவிட்டால் உதை விழும்..!! :D

கண்டிப்பா, உம்ம பல பதிவுகள் இப்படித்தான் நான் விட்டுவிட்டேன்... ஒரு நாளைக்கு பொறுமையா எடுத்தெழுதனும்...


முதல்ல மன்றத்துக்கு ஒழுங்காக வரச்சொல்லுமய்யா ஆதவரை...

இன்னும் பத்துநாட்களில் சரியாகும் என்று நினைக்கிறேன்.

ஓவியன்
28-11-2007, 03:18 PM
அண்ணா..!
[COLOR="Navy"]என் போலவே...
ஒரு அழகான க(வி)தை சொல்லும் விதத்திலான கவிதை அருமை..!


ஓ அப்படியா...?? :D:D:D :rolleyes:

அமரன்
28-11-2007, 03:19 PM
ஓ அப்படியா...?? :D:D:D :rolleyes:
கள்ளச்சிரிப்பழகரே...இது நல்ல சிரிப்பா..நமட்டுச்சிரிப்பா..


இன்னும் பத்துநாட்களில் சரியாகும் என்று நினைக்கிறேன்.
:icon_b::icon_b::icon_b: :icon_rollout::icon_rollout::icon_rollout:

ஓவியன்
28-11-2007, 03:20 PM
முதல்ல மன்றத்துக்கு ஒழுங்காக வரச்சொல்லுமய்யா ஆதவரை...

ஆதவா!!

ஒழுங்கா மன்றத்துக்கு வாரும்...!!
ஓகே அமரன் சொல்லியாச்சு...!! :)

இளசு
28-11-2007, 06:32 PM
எதிரியை முளையில் கிள்ளிவிட வள்ளுவன் சொல்லும் மார்க்கம் -
இளைதாகக் கொல்க முள்மரம்!

காய்த்த பின் களைய முற்பட்டால் - கையைப் பதம் பார்த்துவிடும்!

வெளியே நிற்கும் முள்மரத்துக்கே - காலத்தே அகற்றல் தேவை!
உள்ளேறிய நெ(ரு)ஞ்சி முள்ளுக்கு - அப்போதே அகற்றல் நிச்சயம் தேவையே!

A stitch in time saves nine!

வாழ்க்கைப் பாடம் - கற்க இரு வழிகள்:

விலை மிக்கது- தானே கற்றால்..
விலை மதிப்பற்றது - பிறர் கண்டு கற்றால்..

எந்த வழியாகிலும் - கற்பது முக்கியம்!
கல்லாமலே காலம் போனால் - காலிழக்க வரும்!


பாராட்டுகள் ஓவியன்!

jpl
29-11-2007, 03:20 AM
இப்போதெல்லாம்
முள் தைத்தால் உடன்
எடுத்து அகற்றி விட்டே
மீள நான் ஓடுகிறேன்....!!

வாழ்வின் யதார்த்த வரிகள்.....ஓவியன்....


ஆனாலும் உதடு கடித்து
முள் வலி மறைத்து
தொடர்ந்தும் ஓடினேன்...!!
ஆயினும் நாமனைவரும் கடைபிடிப்பது இதை தான்.
பட்டப்பின் தான் பட்டுத் தெளிகிறோம்.

சிவா.ஜி
29-11-2007, 03:28 AM
வாழ்க்கையின் எதார்த்தப் பாடம்.முள் என்பது உருவகமாக,சொல்லிச்செல்வது பலவகையாக.தற்காலிகமாக தாங்கிய வலி,வேதனையாக மாறுமுன் களைவது சிறப்பு.
அருமையான கவிதை அளித்த ஓவியனுக்கு வாழ்த்துகள்.

நேசம்
29-11-2007, 04:21 AM
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை பாடங்களா எடுத்து கொள்ள வேண்டும்.யாதர்தத்தை பிரதிபலிக்கும் அழகான வரிகளை உள்ளடக்கி கவி தந்த ஒவியனுக்கு வாழ்த்துக்கள் − பாரட்டுக்கள்

சுகந்தப்ரீதன்
29-11-2007, 06:15 AM
ஒடுகிற போது எங்கே தெரிகிறது.. முற்களும் வலிகளும்.. ஓடி முடித்து ஓய்வாய் அமருகையில் தான் ஒவ்வொன்றாய் வலிக்கிறது உடலோடு சேர்ந்து உள்ளமும்.. வாழ்த்துக்கள் அண்ணா.. வாழ்க்கை கவிதைக்கு..!

ஷீ-நிசி
29-11-2007, 06:56 AM
இங்கே காலில் குத்தியது முள்.....

உடனே அகற்றிடவேண்டும்... இல்லையேல் முள் தன் வேலையை காட்டிவிடும்..

காலிற்காக ஓட்டத்தை இழக்கலாம்...

ஓட்டத்திற்காக காலை இழக்கலாமோ?!

மறைவாக இருக்கும் முட்கள் நிறைய...

விரிவான போதனை...

வாழ்த்துக்கள் ஓவியன்...

(கவிதைத்தனம் கொஞ்சம் குறைவாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது!)

அமரன்
29-11-2007, 07:27 AM
பூமிப்பந்து சுழல்வேகம் மாறாதுபோனாலும் சுழற்சியின் விளையான ஈர்ப்பினால் நடமாடும், உயிரிகளில் பரிணாமத்தில் மேலானவர்களாக நம்பப்படுகின்ற மனிதன், புவிமேற்பரப்பில் ஓடுவேகம் நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இது அதி கரிப்புத்தரும் விடயங்களுக்கு ஊக்கியாக இருப்பதையும் மறுக்க இயலாது. முன்னுக்கு ஓடுபவனை முட்டித்தள்ளிவிட்டு ஓடினால்த்தான் அவனைவிட வளமாக வாழலாம் என்ற நினைப்பு, முண்ணனி ஓட்டக்காரனாக திகழ்ந்தால்த்தான் வாழலாம் என்பதாக திரிபுற்று, எப்படியாச்சும் முண்ணனிக்கு வர எடுக்கும் முனைப்புகள்சில அருவருப்பை தருகின்றன..

அப்ப்டியான நிலையில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொருத்தனுக்கும் தடையாக எத்தனையோ. அவற்றை மிதித்து முன்னேறுபவர்கள் ஒட்டுண்ணியாக அதையும் எடுத்துக்கொண்டு போகின்றனர். இன்னும் சிலர் அதை அகற்றி, அதே இடத்தில் வைத்துவிட்டு அப்பால் நகர்கின்றனர். முன்னவர்களால் பாதிப்பு அவர்களுக்கும் அவர்களை சார்ந்த சிலருக்கும். பின்னவர்களால் பலருக்கு.. இங்கே ஓவியன் சொன்னது முன்னவர்களை..

எமது ஜாக்கிரதைத்தன்மையை செறிவாக்க இப்படியான தடைகள் அவசியம். தடைகளை உடைத்து போராடி பெறாதது ருசிக்காது. மதிப்புத் தெரியாதது. எம்மை அழிவுபாதையில் இட்டுச்செல்லும். த்டையை முற்றாக நாசமாக்கினால் பெறுதியின் கனதியும், மனத்திருப்தியும் அதிகமாகும். ஒட்டுண்ணியாகக் கொண்டுபோனால் ஆணி ஆக்கும். காலை வைத்து நடக்கவே முடியாத நிலை ஏற்படும். வருமுன்காப்பாக உடனடியாக அகற்றுவது உத்தமமானது. குறைந்தபட்சம் எங்காவது ஓரிடத்தில் ஆசுவாசபுத்திக்கொண்டு நாட்டுவைத்தியமாக சுட்ட கத்திரிக்காயை கட்டி முள்ளை அகற்றலாம்..

கவிதையின் சில இடங்களில் பொருத்தமில்லாத சொற்கள் இருப்பது போல தெரிகின்றது.



வேகமாய் ஓடிய
என் ஓட்டம் தடக்கென
தடக்கியது ஒரு நாள்...!!

தடக்கென என்பது தனியாக அர்த்தம் கொடுக்குமா என்பது புரியவில்லை. ஓவியன் அல்லது வேறு யாராச்சும் விளக்கினால் தெரிந்துகொள்கின்றேன். (இது எனது கற்றலுக்காக. ஓவியன் தப்பாக நினைக்கமாட்டார் என எண்ணுகின்றேன்). " தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை இனிக்க இனிக்க மனம் கேட்குது பாட்டு" என்ற வரிகளில் த்டக்கு வேறு அர்த்தம் கொடுக்கின்றதே..அதேபோல தடக்கியது என்பது தடங்கியது என்று வந்திருக்கவேண்டுமோ....


எப்படியோ நல்ல கருத்துச் சொன்ன ஓவியனுக்கு பாராட்டும் பாடுபொருளை கவனத்தில் எடுத்து நடந்து வளம்பெற எனது வாழ்த்தும்

ஓவியன்
29-11-2007, 04:46 PM
A stitch in time saves nine!

வாழ்க்கைப் பாடம் - கற்க இரு வழிகள்:

விலை மிக்கது- தானே கற்றால்..
விலை மதிப்பற்றது - பிறர் கண்டு கற்றால்..

எந்த வழியாகிலும் - கற்பது முக்கியம்!
கல்லாமலே காலம் போனால் - காலிழக்க வரும்!

பாராட்டுகள் ஓவியன்!

அருமையான பாடம் அண்ணா...!!

வந்தபின் காப்பதிலும் வருமுன் காப்பதும், முளையிற் கிள்ளியெறிவதும் சாலச் சிறந்ததே....

மிக்க நன்றி உங்கள் கருத்துச் செறிந்த பின்னூட்டத்திற்கு....

ஓவியன்
29-11-2007, 04:48 PM
ஆயினும் நாமனைவரும் கடைபிடிப்பது இதை தான்.
பட்டப்பின் தான் பட்டுத் தெளிகிறோம்.

உண்மைதான் லதா அவர்களே..!!

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்..!!

ஓவியன்
29-11-2007, 04:54 PM
வாழ்க்கையின் எதார்த்தப் பாடம்.முள் என்பது உருவகமாக,சொல்லிச்செல்வது பலவகையாக.தற்காலிகமாக தாங்கிய வலி,வேதனையாக மாறுமுன் களைவது சிறப்பு.
அருமையான கவிதை அளித்த ஓவியனுக்கு வாழ்த்துகள்.
உண்மைதான் சிவா, இந்த உருவகம் வாழ்க்கையின் பல்வேறு படி நிலைகலுக்கும் பொருந்தி வரும்....

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு....


வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை பாடங்களா எடுத்து கொள்ள வேண்டும்.யாதர்தத்தை பிரதிபலிக்கும் அழகான வரிகளை உள்ளடக்கி கவி தந்த ஒவியனுக்கு வாழ்த்துக்கள் − பாரட்டுக்கள்
உண்மைதான் நேசம் அனுபவத்திலும் சிறந்த ஆசான் வேறு யார்...??
மிக்க நன்றி நண்பரே..!!

ஒடுகிற போது எங்கே தெரிகிறது.. முற்களும் வலிகளும்.. ஓடி முடித்து ஓய்வாய் அமருகையில் தான் ஒவ்வொன்றாய் வலிக்கிறது உடலோடு சேர்ந்து உள்ளமும்.. வாழ்த்துக்கள் அண்ணா.. வாழ்க்கை கவிதைக்கு..!
உண்மைதான் சுகந்தா, ஓடுவதில் தெரியாத வலிகள், ஆற அமர இருந்து நாம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்கையில் தான் ஆழமாக ஊடுறுவி நிற்கிறது.....

மிக்க நன்றி சுகந்தா...!! :)

ஓவியன்
29-11-2007, 04:56 PM
விரிவான போதனை...

வாழ்த்துக்கள் ஓவியன்...

(கவிதைத்தனம் கொஞ்சம் குறைவாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது!)

உண்மைதான் ஷீ...!!

இப்போது பார்கையில் கவித்துவம் குறைந்ததாகவே தெரிகிறது, மிக்க நன்றி உங்கள் சுட்டிக் காட்டலுக்கு....

அடுத்து வரும் கவிதைகளில் கவனத்திற் கொள்கிறேன்... :)

மிகுந்த நன்றிகள் உங்கள் ஆக்கபூர்வமான பின்னூட்டலுக்கு....

ஓவியன்
29-11-2007, 05:04 PM
அமரனின் கவித்துவப் பார்வை அசத்தல்....

இப்படியான அலசல்களுக்காகவே ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதலாம் போலுள்ளதே..
தடக்கென என்பது தனியாக அர்த்தம் கொடுக்குமா என்பது புரியவில்லை. ஓவியன் அல்லது வேறு யாராச்சும் விளக்கினால் தெரிந்துகொள்கின்றேன். (இது எனது கற்றலுக்காக. ஓவியன் தப்பாக நினைக்கமாட்டார் என எண்ணுகின்றேன்).
அமரா..!!

யாராவது பயங் கொள்ளும் சந்தர்பங்களில் இதயம் "தடக்", "தடக்" என அடித்தது என்பார்கள், அது இதயத்தின் சத்தத்தையும் ஒரு வகை அதிர்சியுற்றதையும் குறிக்கும். இவ்வாறே தீடீரென ஏற்படும் அதிர்சிகளைக் குறிக்கவும் இந்த "தடக்" என்பதைப் பாவிப்பதுண்டு. அதனைக் கருத்திற் கொண்டே, வேகமாக ஓடிக் கொண்டிருக்கையில் அந்த வேகத்தை "தடக்" என அதிர்சியுற செய்தது அந்த முள் எனபதை உணர்த்தவே அந்த சொல்லைப் பாவித்தேன்.