PDA

View Full Version : மழை நாளில்

ஆதி
28-11-2007, 12:45 PM
பறணேறிய பழையக் கவிதையில் இருந்து..

பாதி நரைத்த தலையாய்
சாம்பல் பூத்திருக்கும்
வானம்

அப்பொழுதே அழுத விழிகளாய்
எப்பொழுது ஈரமாய் இருக்கும்
பூமி..

உடை உணத்தும் கொடியில்
மொட்டு மொட்டாய் பூக்கும்
நீர் சொட்டுக்கள்..

சமீபத்தில் துவைத்து போட்ட
துணியாய்
நீர் வடிக்கும்
இலை நுனிகள்..

மது அருந்த்திய இதழ்களாய்
மண் குலையும்..

குடையற்ற காற்று
குளிராற்றாமல்
விட்டினுள் ஓடிவரும்..

அடுக்களைப் பாத்திரங்கள்
கிரிகட் வீரர்களாய்
ஒழுகும் நீர் பிடிக்க
பரவலாய் நிறுத்த பட்டிருக்கும்..

பணியாட்களற்ற அரசராய்
தம் குடையை
தானே சுமந்து
மழை உலா வருவர்
மக்கள்..

மழைத் தவறினாலும்
தவணை தவறாமல்
மகபெறும்
எம் தெரு நாய்..

இம்முறை மூன்று
கருங்குட்டிகள்
அண்டை வீட்டின்
பின் புறத்தில்..

கண் திறக்காத நிலையில்
ஈரம் ஊறிய தரையில்
படுக்கவும் முடியாமல்
பார்க்கவும் முடியாமல்
தேம்பித் தேம்பித் அலறியது..

கேட்காத செவிகளாய்
யாவரும் அமைதிக் காத்தோம்..

விடாமல் இடிக்கின்ற இடியாய்
அலறிக்கிடந்ததைக் கேட்டு
ஆற்ற வந்து
கதறலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது
மரணம்..

-ஆதி

சுகந்தப்ரீதன்
29-11-2007, 11:15 AM
நன்றாக காட்சிகளை படம்பிடித்து இறுதியில் எதார்த்தமாய் உண்மையை உரைத்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.. கத்தும்போது கவனிக்காமல் செத்தபிறகு சிந்தை கலங்கிதானே நாளும் வாழ்கிறோம் நாமும்..! நம் கருத்தும் கருணையும் பேச்சோடும் எழுத்தோடும் நின்று விடுகிறது..! மரணத்திற்க்கு இருக்கும் கருனைக்கூட மனிதனாகிய எனக்கில்லையே..!வாழ்த்துக்கள் ஆதி...!

அமரன்
29-11-2007, 03:58 PM
ஓய்ந்த மழையின் பின்னான காட்சிகளை பார்க்கவைக்கும் வரிகள். வரிகளில் ஆங்காங்கே மழையின் பின் நெளியும் மன்புழுக்கள் போல சில எழுத்து வழுக்கள். காது பில்டர் செய்த நாயின் ஓலமும் ஓய்ந்தது.. மழைவிட்டு சிலமணித்துளிகளின் பின்னர்... அலுமினிய கிரிக்கட் ஃபீல்டர்கள் வறுமையை செப்ப.. செல்லப்பிராணிகள் தேவையா என வினாக்கிளம்ப.. அப்பிராணிகளுக்குத்தான் பிராணிகள்மேல் அதிக பற்று என்று உள்ளிருந்து ஒருவன் நங்கென்று கொட்ட.. கலங்கிவிட்டது... காலவச்சுப்பற்றிச் சுழலும் வாழ்வில் இதேபோல எத்தனை இடங்களில் காலவச்சிருப்பேன்...

ஆதி
30-11-2007, 09:27 AM
நன்றாக காட்சிகளை படம்பிடித்து இறுதியில் எதார்த்தமாய் உண்மையை உரைத்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.. கத்தும்போது கவனிக்காமல் செத்தபிறகு சிந்தை கலங்கிதானே நாளும் வாழ்கிறோம் நாமும்..! நம் கருத்தும் கருணையும் பேச்சோடும் எழுத்தோடும் நின்று விடுகிறது..! மரணத்திற்க்கு இருக்கும் கருனைக்கூட மனிதனாகிய எனக்கில்லையே..!வாழ்த்துக்கள் ஆதி...!

நன்றி சுகந்தப்ரீதன்...

பென்ஸ்
30-11-2007, 12:00 PM
நெஞ்சை தொட்டு சென்ற கவிதை....
என் அம்மா உயிர்களின் மேல் செலுத்தும் அன்புக்கு அளவில்லை என்று சொல்லுவேன்.... ஒருமுறை வழியில் ஒரு நாய் கயத்தில் புழுக்கள் இருப்பதை கண்டு வேப்பேன்னை வாங்கி விட்டு வந்தவர்... மாறு நான் வேப்பென்னையோடு சென்றவர் நாய் இறந்து கிடந்ததை கண்டு வந்து கவலையாய் ஒரு நாள் சாப்பிட கூட இல்லை....
ஊரிய்ல் பென் நாய் குட்டிகளை தூர எறிந்து விடுவார்கள், அவை அழுது செல்லும், இதை கண்டு ஆற்றாமல் எடுத்து கொண்டு வந்து சோறு கொடுப்பார்... இதனால் வீட்டை சுற்றி நாய்கள் அதிகமானாலும் பெண் நாய் என்று தூர எறிபவர்கள் குறைந்தார்கள்....
நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்...
கவிதையை வாசிக்க துவங்கிய போதே சோகத்தை தேய்க்க ஆரம்பித்து இருந்தீர்கள்... இறுதியில் இறுக்கமாய் இறுக்கிவிட்டீர்கள்....
என்றொ அலறி இறந்த ஒரு நாய் குட்டியின் ஆன்மா கண்டிப்பாக சாந்தியடையும்...

நேசம்
30-11-2007, 07:53 PM
மரணத்திற்கு பிறகு மனம் கவலைபடுவதில் என்ன இருக்கிறது.ஆனால் நம்முடைய வாழ்க்கை அப்படிதான் இருக்கிறது என்று எதார்தத்தை பிரதிபலிக்கும் கவிதை.சொன்ன விதம் பாரட்டுகுரியது.

ஆதி
01-12-2007, 01:21 PM

நன்றி பென்ஸ் அவர்கட்கு.. உங்கள் தொடர்ப் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும்..

meera
02-12-2007, 10:42 AM
ஆரம்ப வரிகளை கண்டு இது மழை பற்றிய கவிதை என்று எண்ணி படிக்க துவங்கிய எனக்கு பேரதிர்ச்சி. அழகான வரிகள்.அழ வைக்கும் வரிகள்.

அழகிய கவிக்கு பாராட்டுக்கள் ஆதி

செல்வா
02-12-2007, 11:07 AM
அழுத வானம், அழுத நாய்க்குட்டியோடு சேர்ந்து ... அழுகிறது நம்மனமும்.

ஆதி
02-12-2007, 01:08 PM
ஓய்ந்த மழையின் பின்னான காட்சிகளை பார்க்கவைக்கும் வரிகள். வரிகளில் ஆங்காங்கே மழையின் பின் நெளியும் மன்புழுக்கள் போல சில எழுத்து வழுக்கள். காது பில்டர் செய்த நாயின் ஓலமும் ஓய்ந்தது.. மழைவிட்டு சிலமணித்துளிகளின் பின்னர்... அலுமினிய கிரிக்கட் ஃபீல்டர்கள் வறுமையை செப்ப.. செல்லப்பிராணிகள் தேவையா என வினாக்கிளம்ப.. அப்பிராணிகளுக்குத்தான் பிராணிகள்மேல் அதிக பற்று என்று உள்ளிருந்து ஒருவன் நங்கென்று கொட்ட.. கலங்கிவிட்டது... காலவச்சுப்பற்றிச் சுழலும் வாழ்வில் இதேபோல எத்தனை இடங்களில் காலவச்சிருப்பேன்...

நன்றி அமரன், எழுத்து வழுக்களை திருத்திவிடுகிறேன்..

தொடர்ந்து வரும் உங்கள் பின்னூட்டத்திர்ர்கு நன்றி..

-ஆதி

ஆதி
02-12-2007, 01:14 PM
மரணத்திற்கு பிறகு மனம் கவலைபடுவதில் என்ன இருக்கிறது.ஆனால் நம்முடைய வாழ்க்கை அப்படிதான் இருக்கிறது என்று எதார்தத்தை பிரதிபலிக்கும் கவிதை.சொன்ன விதம் பாரட்டுகுரியது.

ஒரு பெரும் சம்பவம்
நடந்தது..
எல்லோரும் கூடி கூடிப்
பேசினார்கள்..
வழக்கத்துக்கு மாறாய்
அன்று எல்லோரும்
தாமதமாக தூங்கினார்கள்
அனைத்தையும் மறந்து..

இதுதான் இன்றய சுழல் இதைத்தான் கவிதைப் பேசுகிறது..

நன்றி நேசம் அவர்கட்கு.. தொடர்ந்து வரும் உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும்..

-ஆதி

ஆதி
02-12-2007, 01:18 PM
ஆரம்ப வரிகளை கண்டு இது மழை பற்றிய கவிதை என்று எண்ணி படிக்க துவங்கிய எனக்கு பேரதிர்ச்சி. அழகான வரிகள்.அழ வைக்கும் வரிகள்.

அழகிய கவிக்கு பாராட்டுக்கள் ஆதி

இதில் என்றாமை மட்டுமல்ல, என் இயலாமையையும்தான் படபிடித்து காட்டியுள்ளேன்..

நன்றி மீரா உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும்..

-ஆதி

ஆதி
02-12-2007, 01:21 PM
அழுத வானம், அழுத நாய்க்குட்டியோடு சேர்ந்து ... அழுகிறது நம்மனமும்.

இருபது வரிகளுக்கு மேல் சொன்னதை இரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள் செல்வா..

பின்னூட்டத்திற்கு நன்றி..

-ஆதி