PDA

View Full Version : ஹைக்கூ 07 - பலிகடா



meera
28-11-2007, 12:25 PM
பக்குவமாய் வளர்த்ததெல்லாம்
பருவம் வந்ததும்
பலிக்கடா ஆக்குவதற்குத்தானோ???????
- பட்டுபுழு

சிவா.ஜி
28-11-2007, 12:27 PM
ஆடும்,கோழியும்கூட அப்படித்தானுங்க....சில நேரங்களில் மகள்களும்.
நல்ல ஹைக்கூ.பாராட்டுக்கள் மீரா.

கண்மணி
28-11-2007, 12:30 PM
பக்குவமாய் வளர்த்ததெல்லாம்
பருவம் வந்ததும்
பலிகடா ஆக்குவதற்க்குத்தானோ???????
- பட்டுபுழு

சில கூட்டுப் புழுக்கள்
விட்டும் வைக்கப்படுகின்றன
அடுத்த தலைமுறையின்
மானம் காக்க!

meera
28-11-2007, 12:31 PM
ஆடும்,கோழியும்கூட அப்படித்தானுங்க....சில நேரங்களில் மகள்களும்.
நல்ல ஹைக்கூ.பாராட்டுக்கள் மீரா.

நன்றி சிவா.ஜி. சகல ஜீவராசிகளுக்கும் இது பொறுந்தும்:sprachlos020:

meera
28-11-2007, 12:33 PM
சில கூட்டுப் புழுக்கள்
விட்டும் வைக்கப்படுகின்றன
அடுத்த தலைமுறையின்
மானம் காக்க!

பட்டுக்கென்றே வளர்க்கும் புழுக்களை விட்டுவிடுவார்களா கண்மணி.

எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லையே

கண்மணி
28-11-2007, 12:36 PM
பட்டுக்கென்றே வளர்க்கும் புழுக்களை விட்டுவிடுவார்களா கண்மணி.

எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லையே

ஆமாம். சில புழுக்களையாவது பட்டுப் பூச்சிகள் ஆக விடாவிட்டால் அடுத்த தலைமுறை பட்டுப் புழுக்களுக்கு எங்கே போவது??

விதை நெல் எனத் தனியே எடுத்து வைப்பதில்லையா?

meera
28-11-2007, 12:42 PM
ஆ புரிந்துவிட்டது

கண்மணி
28-11-2007, 12:43 PM
ஆ புரிந்துவிட்டது

அடுத்தது இ..:D:D:D

அமரன்
28-11-2007, 03:26 PM
அடுத்தது இ..:D:D:D
இ க்கு அடுத்து மூன்று ஈயா...
பார்த்துங்க அழகியதமிழ்மகன் எஃபெடில் வாய்க்குள் பூந்து காதுக்கால வந்திடப்போகுது...

கண்மணி
29-11-2007, 12:48 AM
இ க்கு அடுத்து மூன்று ஈயா...
பார்த்துங்க அழகியதமிழ்மகன் எஃபெடில் வாய்க்குள் பூந்து காதுக்கால வந்திடப்போகுது...

அதான் பல்லாலேயே கோட்டை கட்டி இருக்கமில்ல.. உம்மை மாதிரி பொக்கை வாயா இருந்தா தானே ஈ நுழையும்.:rolleyes:

சுகந்தப்ரீதன்
29-11-2007, 04:07 AM
பக்குவமாய் வளர்த்ததெல்லாம்
பருவம் வந்ததும்
பலிகடா ஆக்குவதற்க்குத்தானோ???????
- பட்டுபுழு
மீரா.. பட்டு புழுவை எடுத்துவிட்டால் இன்னும் பக்குவமாய் இருக்கும் கவிதை.. எல்லா உயிர்களுக்கும் பொருந்துகிற மாதிரி... மனிதனும் ஓர் உயிரினம் தானே..?:icon_rollout:

ஓவியன்
29-11-2007, 04:13 AM
பக்குவமாய் வளர்த்ததெல்லாம்
பருவம் வந்ததும்
பலிகடா ஆக்குவதற்க்குத்தானோ???????
- பட்டுபுழு

வலிக்கிறது.....

பாராட்டுக்கள் மீரா..!!

ஓவியன்
29-11-2007, 04:15 AM
உம்மை மாதிரி பொக்கை வாயா இருந்தா தானே ஈ நுழையும்.:rolleyes:

அட, அட...!!

அமரனுக்குப் பொக்கை வாயா...??

ஐயா ஜாலி, ஜாலி..!! :icon_rollout::icon_rollout::icon_rollout:

meera
29-11-2007, 11:41 AM
மீரா.. பட்டு புழுவை எடுத்துவிட்டால் இன்னும் பக்குவமாய் இருக்கும் கவிதை.. எல்லா உயிர்களுக்கும் பொருந்துகிற மாதிரி... மனிதனும் ஓர் உயிரினம் தானே..?:icon_rollout:
சரிதான் சுகந்தப்ரியன்.உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன். நன்றி.

meera
29-11-2007, 11:42 AM
வலிக்கிறது.....

பாராட்டுக்கள் மீரா..!!
பாராட்டுக்கு நன்றி ஓவியன்

ஜெயாஸ்தா
29-11-2007, 11:56 AM
பட்டுப்புழுக்களுக்கு நன்றி...!

ஆமாம் அதுதானே.... ஒரு அதிகுறுங்கவிதைக்கு கருத்தாய் அமைந்தது.

sarcharan
29-11-2007, 12:52 PM
ஆடும்,கோழியும்கூட அப்படித்தானுங்க....சில நேரங்களில் மகள்களும்.
நல்ல ஹைக்கூ.பாராட்டுக்கள் மீரா.

உங்கள் கதையை படித்த பின்:

சில நேரங்களில் மகன்களும்.

கண்மணி
29-11-2007, 12:57 PM
உங்கள் கதையை படித்த பின்:

சில நேரங்களில் மகன்களும்.

புரியுது சரவணன் புரியுது.. ஆனா ஆனா அண்ணன் பேச்சைக் கேக்காத தம்பிகளைப் பத்தி நீஈங்க என்ன நினைக்கிறீங்க?

ஆதவா
30-11-2007, 07:45 AM
என்னாங்க,,, நீங்க ஏதும் பெண்ணைப் பத்தி சொல்லலியே??

ஆர்.ஈஸ்வரன்
09-12-2007, 09:50 AM
பக்குவமாய் வளர்த்ததெல்லாம்
பருவம் வந்ததும்
பலிகடா ஆக்குவதற்க்குத்தானோ???????
- பட்டுபுழு

பலிகிடா என்று ஏன் நினைக்கிறீர்கள். நல்லது தான் அதிகமாக் நடக்கிறது.

M.Jagadeesan
19-01-2013, 08:18 AM
பக்குவமாய் வளர்த்ததெல்லாம்
பருவம் வந்ததும்
பலிக்கடா ஆக்குவதற்குத்தானோ???????
- பட்டுபுழு


இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே !

என்பதுதான் உலகநியதி.