PDA

View Full Version : பதில் தேடும் கேள்விகள்



சிவா.ஜி
28-11-2007, 12:00 PM
புல்லினம்,பூண்டினம்
அழித்தலே பாவமெனில்
உயிரினம் அழிக்கனும்
எனுமெண்ணம்
ஏன் தோன்றனும்?

கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
மனிதனில் மனிதனை
ஏன் இங்கு கண்டிலோம்?

மத்தகத்தில் மதநீர் ஊறின்
மரணமுண்டாக்கும்
மாமத யானை!
மனதகத்தில் மதமூறின்
மரணமுண்டாக்குமோ
மனிதனின் ஆணை?

அறிஞர்
28-11-2007, 12:05 PM
உயிரினம் அழிக்கனும்
எனுமெண்ணம்
ஏன் தோன்றனும்?

மனிதனில் மனிதனை
ஏன் இங்கு கண்டிலோம்?


நெறியற்ற வாழ்க்கையில் தோன்றுவது தான்
அடுத்தவரை அழிக்க நினைக்கும் எண்ணம்....

அன்பு ஒன்றே பதில்..

உண்மையான அன்பை ஒவ்வொருவரிடம் பகிரும்போது...
எல்லா கேள்விகளுக்கு பதில் கிட்டும்

அருமை.. சிவா...

சிவா.ஜி
28-11-2007, 12:08 PM
சத்திய வார்த்தைகள் அறிஞர்.அன்பு ஒன்றே இவற்றை மாற்றக்கூடிய சக்தி படைத்தது.மிக்க நன்றி.

ஆதி
28-11-2007, 12:11 PM
புல்லினம்,பூண்டினம்
அழித்தலே பாவமெனில்
உயிரினம் அழிக்கனும்
எனுமெண்ணம்
ஏன் தோன்றனும்?


குஜராத்தின் வீதிகளில்
யானைகள் நுழைந்தன
ஒன்றுமே நிகழ்வில்லை
மனிதர்கள் நுழைந்தார்கள்
பிணங்கள் விழுந்து கிடந்தன
காரணம்
அவர்களுக்கு மதம் பிடித்திருந்தது..

- மூ.மேத்த




கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
மனிதனில் மனிதனை
ஏன் இங்கு கண்டிலோம்?


புலி புலியைக்கொன்றதில்லை..
மனிதன் மனிதனைக் கொல்கிறான்

- வைரமுத்து



மத்தகத்தில் மதநீர் ஊறின்
மரணமுண்டாக்கும்
மாமத யானை!
மனதகத்தில் மதமூறின்
மரணமுண்டாக்குமோ
மனிதனின் ஆணை?

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே!

- திருமூலர் - திருமந்திரம் - சித்தர் பாடல்கள்

அழகிய கரு.. அருமையான கவிதை.. தேவையான கேள்விகள்..

-ஆதி

meera
28-11-2007, 12:12 PM
கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
மனிதனில் மனிதனை
ஏன் இங்கு கண்டிலோம்?



அருமையான சிந்தனை சிவா.ஜி.ஆனால் இந்த நிலை எப்போது மாரும் என்று ஏங்க மட்டுமே முடிகிறது நம்மால்.

சரியான கேள்வி.

சிவா.ஜி
28-11-2007, 12:14 PM
மிக அருமையான எடுத்துக்காட்டுகளுடன் அழகான பின்னூட்டம் ஆதி.மிக்க நன்றி.(ஆனால் அந்த புளிதான் இடிக்கிறது.சரி செய்து விடுங்களேன்)

ஆதி
28-11-2007, 12:17 PM
மிக அருமையான எடுத்துக்காட்டுகளுடன் அழகான பின்னூட்டம் ஆதி.மிக்க நன்றி.(ஆனால் அந்த புளிதான் இடிக்கிறது.சரி செய்து விடுங்களேன்)

புலி - புளி யாகிவிட்டது.. :D

மாற்றிவிட்டேன் சிவா.ஜி அவர்களே..

சிவா.ஜி
28-11-2007, 12:21 PM
அருமையான சிந்தனை சிவா.ஜி.ஆனால் இந்த நிலை எப்போது மாரும் என்று ஏங்க மட்டுமே முடிகிறது நம்மால்.

சரியான கேள்வி.

அதற்கு அறிஞர் சொன்னதுதான் சரியான வழி மீரா.அன்புசெய் அன்பு கிடைக்கும்.இதை அனைவரும் செய்யும்போது இந்த கேள்விகளுக்கு பதிலும் கிடைக்கும்.
நன்றி மீரா.

சுகந்தப்ரீதன்
29-11-2007, 11:29 AM
பதில் தேடும் கேள்விகள்.. விடியல் தொலைத்த இரவுகளாய்..! சிந்தனை சீர்கெட்டு போனால்.. தன்துணையையும் கூறிட்டு பார்க்கும் கொடிய இனமல்லவா..மனித இனம்..! மனமிருந்தால் மட்டுமே மார்க்கமுண்டு.. பதில் தேடும் கேள்விகளுக்கும்.. அப்பாவி மனிதர்களுக்கும்..இந்த மண்ணில்..! வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!

சிவா.ஜி
29-11-2007, 11:34 AM
சிந்தனை சீர்கெட்டு போனால்.. தன்துணையையும் கூறிட்டு பார்க்கும் கொடிய இனமல்லவா..மனித இனம்..!

மிகச் சரியாய் சொன்னீர்கள் சுகந்த்.சிந்தனையின் சீர்கேடுதான் இத்தகையா கொடுமைகளுக்குக் காரணம்.பக்குவம் வரவேண்டும்.எப்போது....?
நன்றி சுகந்த்

அமரன்
29-11-2007, 01:36 PM
கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
மனிதனில் மனிதனை
ஏன் இங்கு கண்டிலோம்?


கல்லிலும் மண்ணிலும் கடவுளைக் கண்டதால்த்தான் பிரச்சினையே. இயற்கையில் கண்டு தொழுதிருந்தால் இயர்கையை சிதைத்து இருக்கமாட்டோம். மனித மனங்களில் இறைவனை தரிசித்து இருந்தால் அடித்துக்கொள்ளமாட்டோம். அன்பே சிவம் என்பதை விட அன்பே இறை என்பதை ஒவ்வொருவரும் நன்கறிந்து செயல்பட்டால் எல்லாம் சரியாகும்.

நேசம்
29-11-2007, 03:43 PM
சிவா அண்ணனின் அழகான கேள்விகளுக்கு பதில் நம்மிடையே இருக்கின்றன்.அந்த பதில்கள் நம்முடைய சிந்தனை தூண்ட வேண்டும்.சிந்தனை வடிவங்கள் செயல் படுத்தும் போது பதில்கள் முழுமையடைகின்றன

சிவா.ஜி
30-11-2007, 04:36 AM
மனித மனங்களில் இறைவனை தரிசித்து இருந்தால் அடித்துக்கொள்ளமாட்டோம். அன்பே சிவம் என்பதை விட அன்பே இறை என்பதை ஒவ்வொருவரும் நன்கறிந்து செயல்பட்டால் எல்லாம் சரியாகும்.

மிகச் சரியான வாக்கு அமரன்.மனிதமனங்களில் இறைவன் வாழுகிறான் என்று முழுதாய் நம்பினாலே அழிக்கும் குணம் அகன்றுவிடும்.நன்றி அமரன்.

சிவா.ஜி
30-11-2007, 04:37 AM
சிவா அண்ணனின் அழகான கேள்விகளுக்கு பதில் நம்மிடையே இருக்கின்றன்.அந்த பதில்கள் நம்முடைய சிந்தனை தூண்ட வேண்டும்.சிந்தனை வடிவங்கள் செயல் படுத்தும் போது பதில்கள் முழுமையடைகின்றன

கண்டிப்பாக நல் சிந்தனைகள் செயல்படுத்தப்படும்போது நல் விளைவுகளே நிகழும்.நன்றி நேசம்.

யவனிகா
30-11-2007, 06:13 AM
நல்ல கவிதை அண்ணா...
மதங்களற்ற உலகம் அமைந்தால் தான் மட்டுமே மதச்சண்டையும் இல்லாமல் ஆகும். அப்படி ஒன்று அமைய நேரிடின் வேறொன்றுக்காக அடித்துக் கொள்ளும் மனித இனம். என்ன செய்ய?

சிவா.ஜி
30-11-2007, 06:26 AM
அடிப்படையில் மனிதன் மாறினால்தான் ஆரோக்கியமான மாற்றம் நிகழும்.நம்பிக்கையோடு காத்திருப்பதை தவிர நாம் என்ன செய்ய முடியும்.

lolluvathiyar
30-11-2007, 10:58 AM
அருமையான வரிகள் சிவாஜி, மிகவும் நுட்பமாக சிந்திக்க வேண்டிய வரிகள். கவிதை பக்கமே எட்டி பாக்காதவன் ஏதோ ஒரு உ ந்துதலில் இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.

பதில் தேடும் கேள்விக்கு என்னால் முடிந்த பதில்


புல்லினம்,பூண்டினம்
அழித்தலே பாவமெனில்

தேவை இல்லாமல் ஒரு உயிரினத்தை அழிக்க கூடாது என்று சொல்வதற்க்கு சற்று அதிகபடியான உவமையாக சொல்ல பட்டிருக்கலாம்.

உனவு தேவைக்கு உயிரினத்தை அழிக்கலாம் அது இயற்கை ஆனால் வேடிக்கைக்கு உயிரனத்தை அழிக்க கூடாது (பூனை செய்வது, அதனால் தான் பூனையை அனைத்து மதங்களும் அபசகுணமாக கருதுகின்றனர்)




கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்[QUOTE]

கடவுளுக்கு மனித வடிவம் கொடுக்க பட்டிருக்கு ஏன் மனிதன் தான் கடவுள் என்பதை உனர செய்ய. விலங்குகளை வாகனமாக படைக்க பட்டிருக்கு ஏன் ஒரே மூச்சில் விலங்குகளை அழிக்க கூடாது என்பதற்க்காக.


[QUOTE=சிவா.ஜி;304446]
மனிதனில் மனிதனை
ஏன் இங்கு கண்டிலோம்?

ஆமா வம்புக்குனே மத நூல்களை படிச்சா என்ன பன்னறது





மனதகத்தில் மதமூறின்
மரணமுண்டாக்குமோ
மனிதனின் ஆணை?

மதம் தவறல்ல, மனிதன் கையில் எது கிடைச்சாலும் அதை தவறாக தான் பயன்படுத்துவான் என்று மத நூல்களே சொல்லி தந்திருகிறது


இயற்கையில் கண்டு தொழுதிருந்தால் இயர்கையை சிதைத்து இருக்கமாட்டோம்.

இயற்கையை தான் சிர்பமாக படைத்தான் மனிதன். இரைவனுக்கு பஞ்ச பூதங்களையும் வனங்கினான்.


அன்பே சிவம் என்பதை விட அன்பே இறை என்பதை ஒவ்வொருவரும்

சிவம் என்பது இரைவன் என்று அர்த்தம்.
அல்லா என்பதும் இரைவன் என்று அர்த்தம்.

மொழிதெரியாததால் அவை எல்லாம் பாத்திரங்கள் ஆகிவிட்டன.


நம்பிக்கையோடு காத்திருப்பதை தவிர நாம் என்ன செய்ய முடியும்.

காத்திருப்பது வீன், தன்னி தொளித்து விட வேண்டும்.

நேற்று நிலத்துக்கு போர் நடந்தது
இன்று எரிபொருளுக்கு போர் நடக்கிறது
நாளை குடிநீருக்கு போர் நடக்கும்

அனைத்துக்கும் இரைவனை துனைக்கு இழுப்பான்.
ஆனால் இரைவன் சொன்னதோ அத்தனையும் விட்டு தொலை என்றுதான்.

சிவா.ஜி
01-12-2007, 03:11 AM
நேற்று நிலத்துக்கு போர் நடந்தது
இன்று எரிபொருளுக்கு போர் நடக்கிறது
நாளை குடிநீருக்கு போர் நடக்கும்

அனைத்துக்கும் இரைவனை துனைக்கு இழுப்பான்.
ஆனால் இரைவன் சொன்னதோ அத்தனையும் விட்டு தொலை என்றுதான்.
மிக மிக உண்மையான கருத்து வாத்தியார்.விட்டுத் தொலைத்தால் நிம்மதி.ஆனால் இன்னும் வேண்டுமென்பதல்லவா எல்லா பிரச்சனைக்களுக்கும் காரணம்.

ஆதவா
06-12-2007, 02:56 PM
புல்லினம்,பூண்டினம்
அழித்தலே பாவமெனில்
உயிரினம் அழிக்கனும்
எனுமெண்ணம்
ஏன் தோன்றனும்?

கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
மனிதனில் மனிதனை
ஏன் இங்கு கண்டிலோம்?

மத்தகத்தில் மதநீர் ஊறின்
மரணமுண்டாக்கும்
மாமத யானை!
மனதகத்தில் மதமூறின்
மரணமுண்டாக்குமோ
மனிதனின் ஆணை?

ரொம்ப சிக்கனமாக ஒரு கவிதை.

அழித்தல் பாவம் என்பது நாமாய் விதித்தது... இரக்கச்சொட்டுகளோடு யாரோ ஒருவர் எழுதி விசிறிய ஓலைத் துண்டு... ஆனால் அழித்தல் (தேவைப்படின்) தேவைப்படுகிறது... அஃறிணைகளுக்கு.

மனிதர்களை உதைக்க நாம் கருவிலேயே கற்றுக் கொண்டோம் - எஸ்.விஜயன்.

மனிதனில் மனிதனை நாம் காண்வது கடினம். கடலில் கரைந்த மண்ணைத் தேடவியலாது.

கவிதை சொல்வதும் அதுதான், அன்பு என்ற ஆயுதம், இப்போது அதையும் ஆயுதமாக்கவேண்டிய கட்டாயம். அந்த அன்பிலேதான் வளைக்கமுடியும்... எல்லாமுமே

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்... இது எந்த பக்கத்திற்கும் பொருந்தும்.

வாழ்த்துகள் அண்ணா

ஷீ-நிசி
06-12-2007, 03:56 PM
மிக சிறப்பான கேள்விகளை ஏந்தி நிற்கிறது கவிதை!
இப்படியான மனிதர்களையும் தாங்கி நிற்கிறது இப்பூமி!

ஆதி தொகுத்தளித்த பதில்கள் அழகு!

எந்த உயிரினமும்
ஆயுதம் ஏந்திவதில்லை
எதிராளியுடன் சண்டையிடுவதற்கு!

மனிதனைத் தவிர!

வாழ்த்துக்கள் சிவா! ஜி!

பூமகள்
06-12-2007, 05:16 PM
சுருங்கச் சொல்லி எப்படித்தான் இப்படியான சீரிய கருத்துகளை சிறப்பாய் தொடுக்கிறீர்களோ தெரியவில்லை...!!:icon_b:

அற்புதமான கவி சிவா அண்ணா. இப்படியான ஒரு நிலைப்பாடு வரவேண்டும் விரைவில்.

எனது ஆசையும் பிராத்தனையும் இதுவே..!!

சிறந்த கவி தொடுத்தமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!! :)

சிவா.ஜி
07-12-2007, 06:18 AM
மிக்க நன்றிம்மா பூமகள்.அனைவரது விருப்பமும் அதுவேயாகும்போது நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் நிகழும்.நம்பிக்கையுடன் காத்திருப்போம்.