PDA

View Full Version : இருக்கலாம்

ஆதி
28-11-2007, 11:48 AM
உன்னைப்
பிரியும் பொழுதுகளில்
வழிகிற
ஏக்கங்களில் ஆழங்களில்
நடமாடலாம்

ஏதேதோ தேவதைகள்..

கசியும்
உன் உதட்டின் மௌனங்களில்
ஒளிந்தும் இருக்கலாம்

இல்லாத ஒரு காதல்
இயலாத ஒரு அணைப்பு
எனக்கான ஒரு மென்மை..

-ஆதி

அறிஞர்
28-11-2007, 11:57 AM
இல்லாத ஒன்றில்...
இருக்கலாம்.. என்ற நம்பிக்கை....

தொடருங்கள்.. ஆதி...

ஆதி
28-11-2007, 12:26 PM
இல்லாத ஒன்றில்...
இருக்கலாம்.. என்ற நம்பிக்கை....

தொடருங்கள்.. ஆதி...

நம்பிக்கை அச்சில்தான் - இங்கு
நாட்கள் சுழல்கிறது..

நன்றி அறிஞர் ஐய்யா..

-ஆதி

சுகந்தப்ரீதன்
29-11-2007, 11:18 AM
ஏக்கத்தை எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. வாழ்த்துக்கள் வசீகரித்த வரிகளுக்கு...!நாளைய பொழுதும் நம்பிக்கையோடு..!

அமரன்
29-11-2007, 03:27 PM
பிரியசகியின் காதலுக்காக ஒரு ஜீவன். அவள் தன்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொருகணத்தையும் பழகிப்பிரியும் கணங்களாக நினைந்துருகி.. உருக்கத்தின் உச்சமாக காதல்தூதுத்தேவதைகளை பிரிவுச்சொட்டுகளில் தேடியபடி.. அவள் உள்ளம் நிரம்பிய மௌனம் இதழ்கள் வழி கசியும்போது காதல் பேசாத என்ற ஏக்கத்துடன்.. நாளையபொழுதாவது அவளோடு என்ற நம்பிக்கையுடன்..

இன்னொரு கோணமாக... நட்பு என்னும் கடலில் ஒளிந்துள்ள காதல் முத்து எப்போது கைவரப்பெறும் வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கைகலந்த ஏக்கத்துடன்..

கவிஞரின் கோணம் எக்கோணமாயினும் கோணலில்லாத கவிதை.. பாராட்டுகள் கவிஞரே..

ஆதி
30-11-2007, 09:06 AM
ஏக்கத்தை எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. வாழ்த்துக்கள் வசீகரித்த வரிகளுக்கு...!நாளைய பொழுதும் நம்பிக்கையோடு..!

நன்றி சுகந்தப்ரீதன் உங்கள் தொடர்ந்து வரும் உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டிர்க்கும்..

-ஆதி

ஆதி
30-11-2007, 09:13 AM
பிரியசகியின் காதலுக்காக ஒரு ஜீவன். அவள் தன்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொருகணத்தையும் பழகிப்பிரியும் கணங்களாக நினைந்துருகி.. உருக்கத்தின் உச்சமாக காதல்தூதுத்தேவதைகளை பிரிவுச்சொட்டுகளில் தேடியபடி.. அவள் உள்ளம் நிரம்பிய மௌனம் இதழ்கள் வழி கசியும்போது காதல் பேசாத என்ற ஏக்கத்துடன்.. நாளையபொழுதாவது அவளோடு என்ற நம்பிக்கையுடன்..

இன்னொரு கோணமாக... நட்பு என்னும் கடலில் ஒளிந்துள்ள காதல் முத்து எப்போது கைவரப்பெறும் வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கைகலந்த ஏக்கத்துடன்..

கவிஞரின் கோணம் எக்கோணமாயினும் கோணலில்லாத கவிதை.. பாராட்டுகள் கவிஞரே..

நீங்கள் குறிப்பிட்டது போல பல்வேறு கோணங்களை மனதில் வைத்து எழுதப்பட்ட பின்நவினதுவக் கவிதை இது.. நாம் எந்த மனநிலையில் இதைப் படிக்கிறோமோ அந்த மனநிலைக்கும் சூழலுக்கும் தகுந்தாற் போற் அர்த்தம் விளங்க கூடியக் கவிதை..

மிக்க நன்றி அமரன் உங்கள் உள்ளார்ந்தப் பார்வைக்கும் பின்னூட்டத்திற்கும்..

-ஆதி

பென்ஸ்
30-11-2007, 01:43 PM
கவிதைகள் இனிமையானவை...
ஏனேனில் அவை உணர்வுகள் சம்பந்தபட்டவை.
அதிலும் காதலின் ஏக்கம் போன்ற மென்மையான உணர்வுகளை சொல்லும் போது முழுமையடையவில்லை என்றும் தோன்றும் கவிதைகள் கூட அழகாக தெரியும்....
பிரிவின் தனிமையில் வரும் ஒரு இயல்பான எதிர்பாப்புதான்...
ஆனால் அழகாக சொல்லபட்டிருக்கிரது.

ஆதி
30-11-2007, 03:47 PM

பின்னூட்டத்திற்கு நன்றி பென்ஸ் அவர்கட்கு..

-ஆதி

ஆதவா
06-12-2007, 02:48 PM
உன்னைப்
பிரியும் பொழுதுகளில்
வழிகிற
ஏக்கங்களில் ஆழங்களில்
நடமாடலாம்

ஏதேதோ தேவதைகள்..

கசியும்
உன் உதட்டின் மௌனங்களில்
ஒளிந்தும் இருக்கலாம்

இல்லாத ஒரு காதல்
இயலாத ஒரு அணைப்பு
எனக்கான ஒரு மென்மை..

-ஆதி

இல்லாத காதலை நண்பர்களிடம் காட்டிய அனுபவமுண்டு, காதல் இருக்கும் போதே இல்லாமல் இருப்பதாகவும் கூட...

எதுவும் கிடைக்காத வரையிலும் கனவுகளே எனக்குப் பொருட்கள்.
இயலாத அவை, எனக்கான மென்மை.

வாழ்த்துகள் ஆதி.

ஆதி
06-12-2007, 04:55 PM
இல்லாத காதலை நண்பர்களிடம் காட்டிய அனுபவமுண்டு, காதல் இருக்கும் போதே இல்லாமல் இருப்பதாகவும் கூட...

எதுவும் கிடைக்காத வரையிலும் கனவுகளே எனக்குப் பொருட்கள்.
இயலாத அவை, எனக்கான மென்மை.

வாழ்த்துகள் ஆதி.

நிதர்சனம் ஆதவா, பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

-ஆதி