PDA

View Full Version : நீயும்.. நானும்..ஆதி
28-11-2007, 10:30 AM
பரணேறிய என் பழையக் கவிதைகளில் இருந்து..

முட்சடங்குகள் பிண்ணிய
சாமுதாய சிறைகளின்
கைதிகள்
நீயும்..
நானும்...

வெப்ப ஆற்றாமை பொங்கும்
விழி பெருவெள்ள வழக்குக்கு

இருள் ஊறிய துணியும்
துருப் பூத்த தராசும்
ஏந்தி
தீர்ப்பு இயம்ப
நீதி மன்றங்களால் இயலாது..

சாதியை மோகித்து
மத வேட்கையில் புணர்ந்த
பெற்றவர்களுக்கு
உணர்ச்சி மீறாத நேசிப்பின்
உட்தூய்மையை
உருக்காண தெரியாது..

முட்டுக்கட்டைகளை முட்டைப்போடிகிற
முதிர் தலைமுறைகளின்
தொப்பைக் குழியில்
தீனியாவப்போவது
நம் காதலும்தான்..

வா..
காதல் சிலுவையில் இருவரும்
உற்சாகமாய் அரைப்படுவோம்
உன் கண்ணில் கண்ணீரோடு..
என் புண்ணில் உதிரத்தோடு..

நம் உயிரின் நீரை
மாந்திப் பருகி
பிரிவின் அரக்க நாவுகள்
தாகம் துடைக்கட்டும்..

-ஆதி

இளசு
28-11-2007, 07:39 PM
ஆறாத ஆழ்-சீழ்ப்புண்களை ஆற்ற
ஆக்சிஜன் செலுத்துவார்கள் புண்ணில்..

சாதி,மத புரையோடிய சமுதாய நோயாளிக்கோ
ஆக்சிஜன் அலர்ஜி..
அதனால் தடுப்பான், அகற்றுவான்.. அலறுவான்..

காயம் ஆறாமல் காலங்கள் ஓடியபடியே!

ஆக்சிஜன்கள் ஓசோனாகி அருகுமா?
தடைகள் தாண்டி புண்ணாற்ற ஆக்சிஜன் பெருகுமா?

பரண் தேடல் தொடரட்டும் ஆதி.. பாராட்டுகள்!

ஆதி
29-11-2007, 02:19 AM
உள்ளார்ந்த பார்வை பின்னூட்டத்திற்கு நன்றி இளசு அவர்கட்கு..

-ஆதி

Ram-Sunda
29-11-2007, 02:46 AM
அருமையான கவிதை
வாழ்த்துக்கள் ஆதி
தொடரட்டும் உங்கள் பரண் தேடல்

சுகந்தப்ரீதன்
29-11-2007, 10:43 AM
நம் உயிரின் நீரை
மாந்திப் பருகி
பிரிவின் அரக்க நாவுகள்
தாகம் துடைக்கட்டும்..

-ஆதி
ஆதி வலிகளாலான வார்த்தைகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன..! வாழ்த்துக்கள்.. கவிதை பரணேறினாலும் கவிதையின் கரு இன்னும் நம் கண் முன்னே உயிரோடு உலவுவது வருத்தமாகத்தான் இருக்கிறது..!

ஆதி
30-11-2007, 03:22 AM
அருமையான கவிதை
வாழ்த்துக்கள் ஆதி
தொடரட்டும் உங்கள் பரண் தேடல்

நன்றி ராம் உங்கள் பின்னூட்டத்திற்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும்..

-ஆதி

ஆதி
30-11-2007, 09:16 AM
ஆதி வலிகளாலான வார்த்தைகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன..! வாழ்த்துக்கள்.. கவிதை பரணேறினாலும் கவிதையின் கரு இன்னும் நம் கண் முன்னே உயிரோடு உலவுவது வருத்தமாகத்தான் இருக்கிறது..!

நன்றி சுகந்தப்ரீதன் உணர்சிப்பூர்வமான பின்னூட்டத்திற்கு..

-ஆதி

பென்ஸ்
30-11-2007, 11:49 AM
மலையேறி செல்லும் போது தடையும் , முள்ளும் குத்தி கிளிக்கும்... முள்ளையும் கல்லையும் குறை கூறி மடிந்து போக நினைப்பவன் சாதாரண மனிதனாகி விடுகிறானே...
இந்த சாடல் இயலாமையின் வேளிப்பாடு...
சமுதாய வேளியை தான்ட தையிரியமில்லாதனாலா???
இப்படியென்றால் எல்லோரும் சமுதாய பசிக்கு இரைதானா??? முடிவு அப்ப்டி சொல்லுகிறதே...

ஆதி
30-11-2007, 12:41 PM

பென்ஸ் அண்ணா உங்கள் பின்னூட்டத்தைப் கேள்வியைப் படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்த வரிகள்..

வாழ்க்கை என்பதுப் போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கனும்
போர்களங்கள் மாறலாம்
போர்கள் மட்டும் மாறாது

- வேடன் பட வசனம்

இங்கேயும் ஒருப் போர்க்களம் தான் நடைப்பெருகிறது.. இந்த கவிதையின் நாயகன் நாயகியை வா சிலுவையில் அரைப்படுவோம் என அழைக்கிறான் உண்மை.. ஆனால் அது தற்கொலையல்ல.. தம்பி நல்லா சமாளிக்கிறப்பா என எண்ணுவீராயின் இன்னொரு விடயத்தை நான் சொல்லிவிடுகிறேன் இந்த கவிதை, மூன்றாம் தளத்தைக்குறிவைத்து எழுதப்பட்ட கவிதை.. அதனால்தான் வழக்கமான வார்த்தைகளைக்கூட நான் பயன்படுத்தாமல் சில புதுவார்த்தைகளையும் சேர்மானமாக்கினேன்..
இக்கவிதையின் கரு காதா நாயகன் நாயகி மீது அனுதாபம் வாங்கித்தரப் படைத்த படைப்பல்ல.. நாம் சண்டை இட்டு இறப்போம், நம் அரத்த சேற்றைப் பருகியாவது இக்குமூகத்தின் அரத்த வெறி அடங்கட்டும் வரும் சந்ததி நல் வாழ்வு பெறட்டுமென கருதியே எழுதப்பட்டது..

உங்கள் அழகான கேள்விக்கு, பின்னூட்டத்திற்கும் நன்றி..

-ஆதி

பென்ஸ்
30-11-2007, 01:37 PM
பென்ஸ் அண்ணா
பென்ஸ் மட்டுமே போதுமே ஆதி...

நாம் சண்டை இட்டு இறப்போம், நம் அரத்த சேற்றைப் பருகியாவது இக்குமூகத்தின் அரத்த வெறி அடங்கட்டும் வரும் சந்ததி நல் வாழ்வு பெறட்டுமென கருதியே எழுதப்பட்டது

விதையாகி போவது நல்லதே
ஆனால்
இரையாகி போக வேண்டாமே....
இளசுவின் கையொப்பத்தில் வாசித்தது...
வெற்றிபெற்ற கலகம் ; புரட்சி
தோல்வியுற்ற முயற்ச்சி ; கலகம் (சரியா எழுதலை .. இளசு என்னை திருத்தவும்)
நம் வீழ்ச்சியை இவர்கள் வரலாற்றில் இகழ்ச்சியாகதானே காட்டுகிறர்கள்....
சமுதாயத்தை பொறுத்தவரையில் நான் குழப்பத்தில் இருக்கிறேன்... அது நல்லது என்று தோன்றும், பல கணங்களில்
எதற்க்கு இந்த கடிவாளம் என்று எரிச்சல் வரும் சில கணக்களில்....
குறிப்பு: கவிதை அருமை.

ஆதி
30-11-2007, 02:50 PM

இனித் தங்கள் சித்தப்படி அழைக்கிறேன்..

உங்கள் ஒவ்வொரு வரியும் உண்மை..

நம் நாட்டைப் பொருத்த மட்டில் சில விடயங்களை வெல்ல முடியாது..

ஒன்று சாதி இன்னொன்று மதம்..

என்ன தான் நாம் சண்டையிடத் தயாராக இருந்தாலும் வெல்ல முடிவதில்லை..

-ஆதி

செந்தமிழரசி
05-12-2007, 07:37 AM
உங்கள் எண்ணச்சிப்பியின் இன்னொரு முத்து. வித்யாசமானப் நோக்கு வேறுப்பட்டச் சொற்பயன்பாடு.

வார்த்தைகளைத் தேடிப்போவிங்களோ ?

கலக்குறீங்க ஆதி.

வாழ்த்துக்கள்.

ஆதி
05-12-2007, 09:49 AM
உங்கள் எண்ணச்சிப்பியின் இன்னொரு முத்து. வித்யாசமானப் நோக்கு வேறுப்பட்டச் சொற்பயன்பாடு.

வார்த்தைகளைத் தேடிப்போவிங்களோ ?

கலக்குறீங்க ஆதி.

வாழ்த்துக்கள்.

உண்மையில் நீங்கள் செந்தமிழரசிதான்.. பின்னூட்டத்தில் கூட உங்கள் சொல்லாளுமை அழகு..

வார்த்தைகளைத் தேடித்தான் போகிறேன்..

நன்றி செந்தமிழரசி..

-ஆதி