PDA

View Full Version : உன்னை



ஆதி
28-11-2007, 07:50 AM
வெவ்வேறு முகபாவனைகளால்
உன்னை நீ மறைத்தாலும்..
ஒரு சொட்டு கண்ணீர்
உன்னை எனக்கு
காட்டிக் கொடுத்து விடுகிறது..

-ஆதி

சுகந்தப்ரீதன்
28-11-2007, 08:21 AM
என்னன்னு சொல்லிருக்கலாமே ஆதியாரே...? கண்ணீருக்கும் பல வடிவங்களும் பெயர்களும் இருக்கிறதே..?! வாழ்த்துக்கள்.. உணர்வு கவிதைக்கு..?!

ஆதி
28-11-2007, 08:27 AM
என்னன்னு சொல்லிருக்கலாமே ஆதியாரே...? கண்ணீருக்கும் பல வடிவங்களும் பெயர்களும் இருக்கிறதே..?! வாழ்த்துக்கள்.. உணர்வு கவிதைக்கு..?!


உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம் அதனால் தான் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நான் சுட்டிக்காட்டவில்லை..

வாழ்த்துக்களுக்கு நன்றி சுகந்தப்ரீதன்..

-ஆதி

சிவா.ஜி
28-11-2007, 08:31 AM
சர்தான் ஆதி பொங்கிவரும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி சகஜமாய் இருப்பதாகக் காட்டிக்கொள்ள நிறைய முகபாவங்களைக் காட்டுவார்கள்.அதையும் மீறி விழுந்துவிடும் கண்ணீர்துளிக் காட்டிக்கொடுத்துவிடும்.
அருமையான அனுபவக் கவிதை.வாழ்த்துகள் ஆதி.

நேசம்
28-11-2007, 09:05 AM
சொற்ப பேரிடம் இதை நாம் பார்க்க முடியாது என்று நினைக்கிறென்.முகபாவங்களை மீறி காட்டிவிடும் கண்ணிர்துளிகள் − அற்புதமான கவிதை ஆதி வாழ்த்துக்கள்

ஆதி
28-11-2007, 09:36 AM
சர்தான் ஆதி பொங்கிவரும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி சகஜமாய் இருப்பதாகக் காட்டிக்கொள்ள நிறைய முகபாவங்களைக் காட்டுவார்கள்.அதையும் மீறி விழுந்துவிடும் கண்ணீர்துளிக் காட்டிக்கொடுத்துவிடும்.
அருமையான அனுபவக் கவிதை.வாழ்த்துகள் ஆதி.

மிக்க நன்றி சிவா.ஜி உங்கள் தொடர் பின்னூட்டத்திற்கு..

-ஆதி

ஆதி
28-11-2007, 09:38 AM
சொற்ப பேரிடம் இதை நாம் பார்க்க முடியாது என்று நினைக்கிறென்.முகபாவங்களை மீறி காட்டிவிடும் கண்ணிர்துளிகள் − அற்புதமான கவிதை ஆதி வாழ்த்துக்கள்

நன்றி நேசம் அவர்கட்கு..

-ஆதி

அமரன்
28-11-2007, 11:09 AM
அகத்தின் முகத்தை முகம் காட்டுகிறதோ இல்லையோ..
அகத்தின் முகத்தை கண்ணீர் காட்டிவிடும்.. பல சந்தர்ப்பங்களில்.
கண்ணீர் ஒரு ஆட்காட்டி.. வாழ்த்துக்கள் ஆதி.

ஆதி
28-11-2007, 11:13 AM
அகத்தின் முகத்தை முகம் காட்டுகிறதோ இல்லையோ..
அகத்தின் முகத்தை கண்ணீர் காட்டிவிடும்.. பல சந்தர்ப்பங்களில்.
கண்ணீர் ஒரு ஆட்காட்டி.. வாழ்த்துக்கள் ஆதி.

நிதர்சனம் அமரன்..

வார்த்தைகளால் சாதிக்க முடியாததைக் கண்ணீர்தானே சாதிக்கிறது..

பின்னூட்டத்திற்கு நன்றி..

-ஆதி

meera
28-11-2007, 11:14 AM
வெவ்வேறு முகபாவனைகளால்
உன்னை நீ மறைத்தாலும்..
ஒரு சொட்டு கண்ணீர்
உன்னை எனக்கு
காட்டிக் கொடுத்து விடுகிறது..

-ஆதி

உன் இதழ் பேசுவது பொய்...
உன் விழி பேசுவது மெய்...
விழியோரம் விழத்துடிக்கும்
ஒற்றை துளி...


அழகான வரிகள் ஆதி.

ஆதி
28-11-2007, 11:20 AM
உன் இதழ் பேசுவது பொய்...
உன் விழி பேசுவது மெய்...
விழியோரம் விழத்துடிக்கும்
ஒற்றை துளி...




விழுகிற துளிகளில்
பாரித்திருப்பது
வலிகள் மட்டுமல்ல
இதழ்களின் வார்த்தைகளும்தான்..



கவிஞர். மீராவை நீங்கள் அறிந்திருப்பிர் என நம்புகிறேன்..
தமிழகத்தின் சிறந்த ஒன்பது கவிஞர்களில் அவரும் ஒருவர்..

உங்கள் பெயரைப் பார்க்கிற நொடிகளிலெலாம் எனக்கு அவர் நினைவுகள்தான் வருகிறது..


நன்றி மீரா.. உங்கள் தொடர்ப் பின்னூட்டதிற்கும் வாழ்த்துக்கும்..


-ஆதி

ஓவியன்
29-11-2007, 05:08 AM
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்பது இதுதானே...!!

நல்ல வரிகள் ஆதி - பாராட்டுக்கள்..!
நீங்கள் குறிப்பிட்ட படி இந்த வரிகள் வாழ்வியலின் பல்வேறு சந்தர்பங்களுக்கும் கனகச்சிதமாகப் பொருந்தும்......

பூமகள்
29-11-2007, 08:55 AM
வெவ்வேறு முகபாவனைகளால்
உன்னை நீ மறைத்தாலும்..
ஒரு சொட்டு கண்ணீர்
உன்னை எனக்கு
காட்டிக் கொடுத்து விடுகிறது..
பல சமயம், முயன்று தோற்ற நிதர்சன உண்மை.

கண்ணீர் காட்டிக் கொடுக்கும்..
அகத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும்..
எண்ணக் குவியலையும்
மௌனத்தின் துளியாலேயே..!!

பாராட்டுகள் ஆதி..! :)

ஆதி
03-12-2007, 12:30 PM
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்பது இதுதானே...!!

நல்ல வரிகள் ஆதி - பாராட்டுக்கள்..!
நீங்கள் குறிப்பிட்ட படி இந்த வரிகள் வாழ்வியலின் பல்வேறு சந்தர்பங்களுக்கும் கனகச்சிதமாகப் பொருந்தும்......

நன்றி ஓவியரே உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும்..

-ஆதி

ஆதி
03-12-2007, 12:32 PM
பல சமயம், முயன்று தோற்ற நிதர்சன உண்மை.

கண்ணீர் காட்டிக் கொடுக்கும்..
அகத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும்..
எண்ணக் குவியலையும்
மௌனத்தின் துளியாலேயே..!!

பாராட்டுகள் ஆதி..! :)

மிக்க நன்றிகள் பூமகள் உங்கள் தொடர்ப் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும்..

-ஆதி

பென்ஸ்
17-01-2008, 05:33 PM
ஆனந்த கண்ணீரை தானே சொன்னீங்க...
என்ன பண்ணுறது... என்னை கண்டதும் வீட்டுகாரம்மாவுக்கு ஆனந்த கண்ணிர் வருது. அவள் கோப முகம் காட்டினாலும் , தெரிந்து விடுது....

ஆதவா
19-01-2008, 07:58 AM
மொழிப்பரிமாற்றங்கள் இல்லாதபோது முகம் விதைக்கும் உணர்வின் மொழி கண்ணீர். சூழ்நிலைக்குத் தக்க முகச்சாடைகளை அவிழ்த்து நீராற்றில் கழுவி நெய்யும் மொழிப்புடவை. இது அறிந்தவருக்கு தெரியும், அறியாதவருக்கு வெறும் திரவம்.

அவளைக் காண்பதில் ஆயிரம் வழிகளிருக்கும். அவள் உள்ளம் காணும் வெளிப்பாட்டு நிகழ்ச்சி கண்ணீர். பாவனைகளுக்கு ஏற்றவாறு பெருகும்.

சிலவேளைகளில் அது நம் மன அழுக்குகளைக் காட்டும் கண்ணாடி. துடைத்துவிட்டுப் போக மனம் ஒன்றாவது வேண்டும்... அந்த வேண்டுதலுக்காகக் காத்திருக்கும் பறவை. இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம்..

அவனின் தேடலின் முடிவு.. அவள் கண்களில் மட்டுமே இருக்கும்......

நல்ல கவிதை

ஆர்.ஈஸ்வரன்
19-01-2008, 09:22 AM
கண்ணீர் ஒரு வகையில் நம் தோழன் தானே