PDA

View Full Version : இலவசமாக தமிழில் இணையதளம்



ஆர்.ஈஸ்வரன்
28-11-2007, 06:21 AM
இலவசமாக தமிழில் இணையதளம் உருவாக்க என்ன செய்ய வேண்டும்.

தமிழ் யுனிகோடு சாப்டுவேரை விண்டோஸ் 98ல் இலவசமாக பதிவதற்கான இணையதளம் உள்ளதா

leomohan
28-11-2007, 08:35 AM
Yahoo! Geocities, Tripod, Googlepages போன்ற தளங்கள் இலவசமாக இடவசதி தருகின்றன. அவற்றில் கணக்கு துவங்கி இணைய தளங்களை வடிவமைக்க துவங்க வேண்டியது தான்.

இவை அனைத்தும் யூனிகோட் utf-8 ஆதரிப்பதால் நீங்கள் சுலபமாக ஒருங்குறியில் html பக்கங்களை எழுத துவங்கலாம்.

இ-கலப்பை, முரசொலி போன்ற மென்பொருட்கள் தமிழில் எழுத வசதியாக உள்ளன.

jaffna library எனும் தளம் இணையதளத்தில் இருந்த படியே தமிழில் பக்கங்கள் அமைக்க உதவுகின்றன.

நம் மன்றத்திலேயே கீழே சென்றால் சுலபமாக தமிழில் தட்டச்சு செய்யலாம். இது விண்டோஸ் 98ல் இருந்தும் வெப் ப்ரவுசர் மூலம் பயன்படுத்த வசதியாக இருக்கும். எந்த மென்பொருளும் தேவையில்லை.