PDA

View Full Version : புகை பிடித்தால் அறிவாளியாகலாம்..!இதயம்
28-11-2007, 04:53 AM
தான் அறிவாளியாகவேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. அதற்கு முன் ஒரு முன்னோட்டம். பொதுவாக வழுக்கத்தலை இருந்தால் அவர் அறிவாளியாக இருப்பார் என்ற கருத்து நம்மிடையே நிலவுகிறது. ஒரு விஞ்ஞானி, சிந்தனையாளர் உள்ளிட்ட அறிஞர்கள் வழுக்கைத்தலையுடன் இருந்தால் அவர்கள் சிந்தித்ததில் அறிவாளியானதுடன், முடி கொட்டி வழுக்கை தலையரும் ஆனார் என்பது சொல்லப்படாத உண்மை. ஆனால், சிந்தனை என்ற விஷயத்தை மறந்து விட்டு, மூளை என்ற உறுப்பையே பயன்படுத்தாமல் வெறும் முடி உதிர்தலால் வழுக்கையடைந்தவர்களும் தன்னை என்று அறிவாளி என்று சொல்லிக்கொள்ளும் கொடுமையும் நடக்கிறது..!

அப்படி முடி கொட்டினாலே அறிவாளி தான் என்று நம்புவர்களுக்கு ஒரு நற்செய்தி..! புகைப்பிடித்தலால் வெகு சீக்கிரம் முடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது என்று சமீபத்திய கண்டுபிடிப்பு சொல்கிறது. எனவே, நீங்கள் சிந்திக்காமல் முடி கொட்டி அறிவாளி ஆக வேண்டும் என்று எண்ணினால் புகை பிடிக்க ஆரம்பியுங்கள். இதனால் வெகு சீக்கிரம் முடி கொட்டி அறிவாளி ஆவீர்கள்..! நீங்கள் சீக்கிரம் அறிவாளியாக என் வாழ்த்துக்கள்..!!

இந்த கண்டுபிடிப்பு சம்பந்தமான சுட்டி..! (http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=2ab167d8-c556-43fb-8509-dab7ad53ed42&&Headline=Cigarettes+can+make+men+go+ bald)

(குறிப்பு: வழுக்கை உள்ளவர்களை கிண்டலடிக்கும் நோக்கத்தில் இதை பதிக்கவில்லை. புகையின் தீமையை புரியவைக்க நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.)

lolluvathiyar
28-11-2007, 06:26 AM
ஆகா ஏன் இதயம் இப்படி பயமுறுத்துகிறீர்கள். சரி சரி முதல்ல அறிவு குரைந்தபிறகுதானே புகை பிடிக்க ஆரம்பிகிறோம். நான் என்ன சொல்லரது.
சரி பயனுள்ள தகவல்

நுரையீரல்
28-11-2007, 06:42 AM
யோகாவில் ஒரு நிலை இருக்கிறது, அது மூச்சை உள்ளிழுத்து பின்னர் வெளியிடுவது - இதனால் உடலும், உள்ளமும் தூய்மையாகும். நவீன அறிவியல் மருத்துவத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது - மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின்னர் வெளியேற்றுவது நல்லது.

ஆனால் இதயம் போன்ற வீக்கானவர்கள் மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றும் ரிஸ்கான காரியங்களைச் செய்ய வேண்டாம். காரணம் - ஏடா கூடமா இழுக்கப்பட்ட மூச்சு, உள்ளுக்குள்ள போய் எங்கேயாவது ஸ்டக் ஆயிடுச்சுனா.....

மேற்கண்ட அறிவியல் மற்றும் யோகா சமாச்சாரங்களை யாரும் முறையாக பின்பற்றுவதில்லை. அதுவே புகப்பிடிக்கும் நபர்களைக் கவனியுங்கள். இதை அடிக்கடி செய்வர்.

இவர்கள் வாயில் வைத்திருக்கும் சிகரெட் (நேசம் போன்றவர்கள் பீடி), அதிலிருந்து வரும் புகையை மிகவும் நேர்த்தியாக உள்ளிழுத்து, சிறிது நேரம் உள்ளே வைத்து தம் கட்டி, பின்னர் அதை இதய(ம்) வடிவிலோ (அ) சுருள் வடிவிலோ புகையாக வெளியேறச் செய்வர். இதைப் பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும். ஒருசிலர் (நான், வாத்தியார்) பார்வையாளர்களின் (இதயம்) கண்ணிலிருந்து புகை வரும் பார் என்று கூறி, பார்வையாளன் ஏமாறும் சமயத்தில் அவர் கையில் சுறுக் என்று சூடு போட்டு சிரித்தும் மகிழ்வர்.

மேற்கூறிய புகைப்பிடித்தல் மூலம் இவர்கள் யோகா மற்றும் மருத்துவம் சொன்ன விஷயங்களை முறையாக பின்பற்றுகிறார்கள். வெறுமனே ஏரோபிக்ஸ் செய் என்றால் யாரும் செய்யமாட்டார்கள். அதுவே இசையுடன் சேர்ந்த பாடல்களை ஒலிக்கச் செய்து ஏரோபிக்ஸ் செய் என்றால் செய்வார்கள்.

அதைப்போலத்தான் புகைபிடிப்பவர்களும், தங்களது யோகா (மூச்சை உள்ளிழுத்து தம் கட்டி, பின்னர் வெளியேற்றுதல்) செய்வதற்கு சிகரெட்டை பயன்படுத்துகிறார்கள். இதுவும் கூட ஒருவகை தியானமே.

சமிபகாலத்திய அறிவியல் கண்டுபிடிப்பு, தேவைக்கதிகமாக (இதயத்தைப் போல்) சிந்தித்து அதுவே டென்ஷனாக மாறி சர்க்கரை நோய் வந்தவர்களும் உண்டு.

அதுவே சிகரெட் பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது கிடையாது. அதற்காக சர்க்கரை நோய் வந்தவர்கள் சிகரெட் குடிக்க வேண்டாம்.

சர்க்கரை நோய் வர வேண்டாம் என்று நினைப்பவர்கள் மட்டும் அளவாக குடித்துக் கொள்ளலாம். எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு வார்த்தையுண்டு. இருந்தாலும் அதிகமாக புகைப்பிடித்தலும் (செயின் ஸ்மோக்கர்ஸ்) உடலுக்குக் கேடு தான்.

அதனால் எப்பவெல்லாம் கல்யாண வீட்டுக்குப்போய் ஒரு வெட்டு, வெட்டுகிறீர்களோ, அப்பவெல்லாம் பீடா போடுவது போல்.

எப்பவெல்லாம் பீடா போடுகிறீர்களோ, அப்பவெல்லாம் சிகரெட் குடிப்பது போல்.

எப்பவெல்லாம் சிகரெட் குடிக்கிறீர்களோ, அப்பவெல்லாம்........

........ அளவாக செய்தால், இந்த நாள் மட்டுமில்லை, எந்த நாளும் இனிய நாளே.... ஓஓஓஓஓஓஓஓஓஓஓ.... இதெப்படியிருக்கு இதயம் அவர்களே.....

சிவா.ஜி
28-11-2007, 06:46 AM
லொள்ளு தாங்க முடியலப்பா....இந்த புள்ளிராஜாவுக்கு யாராவது மௌனவிரதமிருக்க கத்துக்கொடுங்களேன்.

அன்புரசிகன்
28-11-2007, 07:18 AM
அட.... அப்போ முழு மொட்டையானா prof ஆகலாமா??? :D :D :D

அது சரி... புகை பற்றி கதைத்தால் இங்கு ஒருவர் ரொம்ப புகைக்கிறாரே... என்ன காரணம் எருமைக்கு லாடம் கட்டிய புகழ் இதயமே??? (நன்றி வாத்தியார் > நேசம்)

இளசு
28-11-2007, 07:28 AM
நன்றி இதயம் -

புகைத்தால் முதுமை இல்லை - இளமையில் மரணம்!
புகைத்தால் திருடன் வரமாட்டான் - இரவில் இருமல்!

இப்படியும் படித்திருக்கிறேன்!

புகையால் சர்க்கரைநோய் வராது என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பம்மாத்து .. ஆராய்ச்சி அது இதுன்னு முலாம் பூசி விற்பவர் பின்னால் சிகரெட் கம்பெனிகள் இருக்கக்கூடும்.

புகையால் தடுக்கப்படும் நோய்கள் என மருத்துவ உலகம் நம்புவது
இரண்டே இரண்டுதான். ஆனால் ஆயிரம் டிகிரி வெப்ப சிகரெட் நுனி, நூற்றுக்கணக்கான நச்சுகள் செலுத்தும் புகை ஏற்படுத்தும் நோய்கள் ஒன்றல்ல..இரண்டல்ல....

அடுத்த தலைமுறைக்கு என் முதல் வேண்டுகோள் -

புகை பழகாதீர்கள்...
அது கம்பளி மூட்டையல்ல..
நினைக்கும்போது இறக்கிவைக்க!
கரடி.. அணைத்தால் விடாது..
உயிர்த்தீ அணையும் வரை!

ஓவியன்
28-11-2007, 07:33 AM
புகைத்தலின் தீமைகளை எத்தனைபேர் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் இன்னும் இந்தப் பழக்கத்திற்கு எத்தனையோ பேர் அடிமைப் பட்டுக் கிடக்கிறார்களே..!! :frown:

மதி
28-11-2007, 07:43 AM
புகையின் மகத்துவத்தை இப்படி சொல்லீட்டீங்களே..
அறிவு குறைந்தவர் புகைப்பிடிக்கலாம்..மூளையில்லாதவர்..?

அன்புரசிகன்
28-11-2007, 07:50 AM
புகையின் மகத்துவத்தை இப்படி சொல்லீட்டீங்களே..
அறிவு குறைந்தவர் புகைப்பிடிக்கலாம்..மூளையில்லாதவர்..?

உங்களுக்காக மருத்துவ ஆலோசனை கேட்குறீர்களா??? :lachen001:

lolluvathiyar
28-11-2007, 07:55 AM
புள்ளிராஜா நீங்க எல்லாம் ஜோக்காதானே சொன்னீங்க, சீரியசா இல்லையே. புகை பிடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் விடமுடியாவிட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்வார்கள், அது மற்றவர்களுக்கு பொருந்தாது.

(மூச்சை உள்ளிழுத்து தம் கட்டி, பின்னர் வெளியேற்றுதல்) செய்வதற்கு சிகரெட்டை பயன்படுத்துகிறார்கள். இதுவும் கூட ஒருவகை தியானமே.

யோகா காற்றை தான் உள்ள* இழுக்க* சொல்லி இருக்கு ந*ச்சுகாற்றை அல்ல*.எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு வார்த்தையுண்டு.

அப்படிதான் ஆரம்பிக்கும் ஆனா அதுக்கு அப்பரம் நாம அளவோட இருந்தாலும் சிகரெட் அளவோட இருக்க விடாது. (அனுபவத்தில் சொல்லறேன்)
பழகினவங்க, திருந்தராங்களோ இல்லையோ பழகாதவர்கள் இனிமே பழகாம இருக்கனும். யாரையும் பழகாம பாத்துகனும்.

இதயம்
28-11-2007, 07:57 AM
புகையின் மகத்துவத்தை இப்படி சொல்லீட்டீங்களே..
அறிவு குறைந்தவர் புகைப்பிடிக்கலாம்..மூளையில்லாதவர்..?

உள் குத்து வச்சி பேசுறதே உங்களுக்கு வழக்கமா போச்சி மதி..! நீங்க நேரடியாவே மூளையில்லாத ராஜாவுக்கு..?-ன்னே கேட்கலாம்..! நம்ம மாப்ள அதுக்கெல்லாம் கோவிச்சிக்கவே மாட்டார்.. ஏன்னா, அவர் இதை விட கேவலமான திட்டையெல்லாம் வாங்கி, டிஷ்யூ பேப்பரால துடைச்சி தூரப்போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கிற ஆளு அவர்...!!

அது சரி... புகை பற்றி கதைத்தால் இங்கு ஒருவர் ரொம்ப புகைக்கிறாரே... என்ன காரணம் எருமைக்கு லாடம் கட்டிய புகழ் இதயமே??? (நன்றி வாத்தியார் > நேசம்)

தம்பி அன்பு..! நீங்கள் மூளையில்லாதோர் சங்கத்துல சந்தா கட்டி நிரந்தர உறுப்பினரா ஆன மாதிரி தெரியுது..! அதான் லாட பேச்செல்லாம் வருது..! எருமை மாட்டுக்கு லாடம் கட்டுனவன்டி நான்..!! எனக்கு உங்களை மாதிரி க(ப)ன்(னி)னுக்குட்டிகளுக்கு லாடம் கட்டுறது ஒரு பெரிய மேட்டரே இல்ல..!! புள்ளை புடிக்கிறவங்க கூடயெல்லாம் கூட்டு வச்சிக்கிட்டு என்னை கலாய்க்கிறது சரியில்லன்னு இப்பவே சொல்லிக்கிறேன்..!!

நான் சொன்னது மண்டையில ஏறலைன்னா அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க... வருத்தப்படுவீங்க... வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பீங்க..! (நன்றி: சூரியன் எஃப்.எம்)

இதயம்
28-11-2007, 08:06 AM
புள்ளிராஜா நீங்க எல்லாம் ஜோக்காதானே சொன்னீங்க, சீரியசா இல்லையே.

(புள்ளை பிடிக்கிற)பிஸினஸ்ல பார்ட்னர்ங்கிறதுக்காக புள்ளிராஜா சொல்றதையெல்லாம் நம்பலாமா வாத்தியார்..? சின்னப்புள்ளதனமால்ல இருக்கு.?? செய்றது கெட்டதா இருந்தாலும், குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியோடு நீங்க கூட்டு வச்சிருக்கிறது நியாயமில்ல... நாளை பின்னக்கி புள்ளைங்க பிச்சை எடுத்து கொண்டு வந்த காசுல நீங்க சரியான பங்கு குடுக்கலைன்னு உங்க குடிசை மேல அவர் குண்டு வீசமாட்டார்னு என்ன நிச்சயம்..?! யோசிங்க..!!

அன்புரசிகன்
28-11-2007, 08:10 AM

நேசம்: நம் தலைவருக்கு இப்படி பெரும் தண்டனை கொடுத்த இதயம்!............

அமரன்: ஒழிக..............

மதி
28-11-2007, 08:17 AM
உங்களுக்காக மருத்துவ ஆலோசனை கேட்குறீர்களா??? :lachen001:

ஹி.ஹி... கண்டுபிடிச்சிட்டீங்களா...? :icon_ush::icon_ush::icon_ush:

நுரையீரல்
28-11-2007, 08:19 AM
புகைத்தால் முதுமை இல்லை - இளமையில் மரணம்!
இளமையில் மரணமடைபவர்கள் எல்லாம் புகை பிடிப்பவர்களா?

புகைத்தால் திருடன் வரமாட்டான் - இரவில் இருமல்!
இரவில் இருமல் வந்தவன் புகை பிடிப்பவனா?

புகையால் சர்க்கரைநோய் வராது என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பம்மாத்து .. ஆராய்ச்சி அது இதுன்னு முலாம் பூசி விற்பவர் பின்னால் சிகரெட் கம்பெனிகள் இருக்கக்கூடும்.
இது உண்மையாக இருக்கக் கூடாதா? காசு மிச்சம், கடைசிக்கு ஃப்ரியாவாவது சிகரெட் பிடிக்கலாம்..

அடுத்த தலைமுறைக்கு என் முதல் வேண்டுகோள் -

புகை பழகாதீர்கள்...
அது கம்பளி மூட்டையல்ல..
நினைக்கும்போது இறக்கிவைக்க!
கரடி.. அணைத்தால் விடாது..
உயிர்த்தீ அணையும் வரை!
இளசு அண்ணாவின் வேண்டுகோளே, எனது வேண்டுகோளும்......

காசை கரியாக்குவது தான் புகைப்பிடித்தால் என்பது. புகைப்பிடிப்பதை ஆரம்பிப்பவர் அனைவரும் அதை ஒரு ஸ்டைலாகவே நினைத்து புகைக்கின்றனர்.

புகைப்பிடித்தால் பசிக்காது....
உண்ணும் உணவின் உண்மையான சுவையை நாவறியாது...

Health Warning: Smoking is a main cause of lung cancer, lung diseases and of heart and arteries diseases. எனது சிகரெட் பாக்கெட்டில் உள்ள வாசகங்கள். இதோ இந்த சிகரெட் பாக்கெட்டை தூக்கியெறியப் போகிறேன் (உள்ள தான் சிகரெட் இல்லையே)

மதி
28-11-2007, 08:25 AM
உள் குத்து வச்சி பேசுறதே உங்களுக்கு வழக்கமா போச்சி மதி..! நீங்க நேரடியாவே மூளையில்லாத ராஜாவுக்கு..?-ன்னே கேட்கலாம்..! நம்ம மாப்ள அதுக்கெல்லாம் கோவிச்சிக்கவே மாட்டார்.. ஏன்னா, அவர் இதை விட கேவலமான திட்டையெல்லாம் வாங்கி, டிஷ்யூ பேப்பரால துடைச்சி தூரப்போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கிற ஆளு அவர்...!!

அட..இதென்னது..?
உள் குத்து வெளி குத்தெல்லாம் எனக்குத் தெரியாது...
நான் ரொம்ப பயந்த சுபாவம்... :eek::eek:

அன்புரசிகன்
28-11-2007, 08:29 AM
இளமையில் மரணமடைபவர்கள் எல்லாம் புகை பிடிப்பவர்களா?
இரவில் இருமல் வந்தவன் புகை பிடிப்பவனா?
இது உண்மையாக இருக்கக் கூடாதா?

இவற்றிற்கெல்லாம் முதல்ல புகைப்பிடிப்பவர்களுக்கு 3 கேள்வி.

திருமணம் ஆகிவிட்டதா?
பிள்ளைகள் உள்ளனரா?
அவர்களின் (மனைவி + பிள்ளை) நலத்தில் அக்கறை இல்லையா?

புகைப்பிடித்து தான் ஆகவேண்டும் என்று இருப்பது தவறல்ல. அது தப்பு.... (தெரிந்து செய்வதால்) ஆனால் ஒரு நன்மை செய்யுங்கள். திருமணம் குழந்தைகள் எனும் சொற்களை உங்கள் அகராதியிலிருந்து நீக்குங்கள்.

சுகந்தப்ரீதன்
28-11-2007, 08:50 AM
புகைப்பிடித்து தான் ஆகவேண்டும் என்று இருப்பது தவறல்ல. அது தப்பு.... (தெரிந்து செய்வதால்) ஆனால் ஒரு நன்மை செய்யுங்கள். திருமணம் குழந்தைகள் எனும் சொற்களை உங்கள் அகராதியிலிருந்து நீக்குங்கள்.
அன்பு அண்ணா...புகைபிடித்து தான் ஆக வேண்டும் என்று அகராதி பன்னுறவங்களுக்கு ஏது அகராதி..?:mini023: