PDA

View Full Version : முதிர்ந்த முகில்கள்



ஆதி
27-11-2007, 06:08 PM
பரணேறிய என் பழைய கவிதைகளில் இருந்து..


பக்கத்து வீட்டுக்காரிகளே
கொறிப்பதற்கு ஏதுமில்லாததால்
என் அகவையை
சவைக்காதீர்கள்..

இரண்டாயிரம் ஆண்டுகளாய்
இரத்தம் உறிஞ்சும் வரதட்சனை
அட்டைப் பூச்சிகளை
நசுக்க துனியாமல்
நக்கல் சொற்களால்
என் குரல்வளை நெரித்து
கூர்வாள் நாக்கால் என்னை
கூரு போடாதீர்கள்..

அடுக்களையுடன் முடிகிற உரிமையில்
ஆயுள்காப்பீடு அற்ற அடுப்பில்
மாமியாரின்
மண்ணெண்ணை சோதனைக் கூடத்தில்
நாத்தனார்களின் கை முத்தத்தில்
சில சமயங்களில் கணவர்
சிகரெட் அனைக்கும் புண்களுடன்
வாழுதற்குதான் வரதட்சனையா ?

பூப்படைந்தும் பயனற்று
கண்ணீர் விறகுகளில்
உடன்கட்டை ஏறும் கனவுகளை
உணர இயலாத சில பெற்றவர்கள்
முதல் வகுப்பில் பயணச்சீட்டு
எடுத்து தர தாகாததால்
திருமண வாகனத்தில்
இரண்டாம் வகுப்பில்
அமர்த்தி விடுகிறார்கள்..

தமயந்திக்காகவே பிறந்திருந்தாலும்
அதிக வரதட்சனைக் கொடுத்ததால்
அடுத்தவளை மணந்த நளன்களை
எத்தனை..

சொர்க்கத்தில் அல்ல
வர்க்கத்தில் தான் முடிவாகிறது
இன்றைக்கும்
பல திருமணங்கள் இங்கு..


-ஆதி

இளசு
27-11-2007, 06:52 PM
வாழ்த்துகள் ஆதி..


முதிர்கன்னி, வரதட்சணை என
கவிதைப்பரணின் பழைய ஏடுகளை
காப்பீடு, இரண்டாம் வகுப்பு என
புதிய வீச்சால் சொன்ன யுக்தி - மெச்சுகிறேன்!

பரணை இன்னும் தேடுங்கள்..

(கவியரசர் வரிகளான உங்கள் கையெழுத்து வாசகங்கள் - எனக்கு(ம்) மிகப்பிடிக்கும்)

leomohan
28-11-2007, 05:37 AM
ஆயுள்காப்பீடு அற்ற அடுப்பு...................பலே அற்புதமான வார்த்தை விளையாட்டு.

பரணேறிய கவிதை அதனால் ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் இன்றைய நிலையில் தாய்-தந்தையரை விட்டு தனி குடித்தனம் போகும் பிள்ளைகள் அதிகமாவிடுவதால் தவிப்பது அந்த சோதனைக் கூடத்தில் இருப்பது மாமனார்களும் மாமியார்களும் தான்.

ஆதி
28-11-2007, 07:06 AM
வாழ்த்துகள் ஆதி..


முதிர்கன்னி, வரதட்சணை என
கவிதைப்பரணின் பழைய ஏடுகளை
காப்பீடு, இரண்டாம் வகுப்பு என
புதிய வீச்சால் சொன்ன யுக்தி - மெச்சுகிறேன்!

பரணை இன்னும் தேடுங்கள்..




நன்றி இளசு அவர்கட்கு.. உங்கள் பின்னூட்டத்திற்கும் ஊக்கதிற்கும் மிக்க நன்றி..

-ஆதி

ஆதி
28-11-2007, 07:10 AM
ஆயுள்காப்பீடு அற்ற அடுப்பு...................பலே அற்புதமான வார்த்தை விளையாட்டு.

பரணேறிய கவிதை அதனால் ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் இன்றைய நிலையில் தாய்-தந்தையரை விட்டு தனி குடித்தனம் போகும் பிள்ளைகள் அதிகமாவிடுவதால் தவிப்பது அந்த சோதனைக் கூடத்தில் இருப்பது மாமனார்களும் மாமியார்களும் தான்.

லியோமோகன் அவர்களே, இந்த கவிதைகள் எழுதி சுமார் ஐந்தாண்டுக்கு மேல் இருக்கும்..

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு..

-ஆதி