PDA

View Full Version : உயிர்த்தோழன்!



ஷீ-நிசி
27-11-2007, 04:54 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Uyirthozhan.jpg


கைப்பிடி அளவு இதயம்,
கைத்தடி நழுவும் வரையும்,

நிரப்பிக்கொண்டேயிருக்கிறது,
எண்ணற்ற நினைவுகளை -அதில்
கொஞ்சமே கொஞ்சந்தான்,
பெண்ணற்ற நினைவுகள்!!

அனைவருக்குமே,
ரகசிய சிநேகிதன்!!
அவரவர் இதயம் மட்டுந்தான்!

படுக்கையிலே!! -நாம்
படுக்கையிலே.......

துக்கமிகுந்து ஏங்கினாலும்,
ஏக்கமிகுந்து தூங்கினாலும்,

நம் நிலை கண்டு, "துடிப்பது"
"துடித்துக்கொண்டேயிருப்பது"
நம் இதயம் மட்டும்தான்.....

இதயத்தில் ஓட்டையாம்!!!
இருப்பதும் கூட சிறப்புதான்!!

சேமிக்கப்படும் சோகங்களில்,
சிலவாவது செலவாகுமே!!
ஓட்டையின் வழியே.....

இதயம்!!

இறைவன் ஒவ்வொருவனுக்கும்
ஒட்டியனுப்பிய உயிர்த்தோழன்!

நாம் இறந்தபிறகும்
நம்மோடே இறந்துவிடுவதால்..

இதயம்!!

"உயிர்த்தோழன்" தான்!

இளசு
27-11-2007, 07:00 PM
இதயம்...
நெஞ்சம்..
உள்ளம்..

தஞ்சைக்கு முன்னர் பழையாறு போல..

மூளைக்கு முன்னர் உணர்வுகளின் இருப்பிடமாய் உணரப்பட்ட
அறிவியல் முன்னாள் தலைநகரம்..

காதலியல், கவிதையியலில் எந்நாளும் இளமை மாறா ஒரே நகரம்!

கையை முஷ்டி செய்து மடக்கினால் - அதுதான்..இதய அளவு..

அதனால்தான் கவியரசு சொன்னான் -

கையளவு ''உள்ளம்'' வைத்து
கடல்போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி!!!

இங்கே அழகான அறிவியல் உண்மைகளை
அவருக்கே உரித்தான அழகியல் பார்வைகொண்டு
ஷீ-நிசி - விளையாடிவிட்டார்!

இதயம் விம்முகிறது - மகிழ்ச்சியில்!

வாழ்த்துகள் ஷீ!

ஷீ-நிசி
28-11-2007, 03:05 AM
நன்றி இளசு ஜி! சுவைபட சொல்லியுள்ளீர்கள்!

நேசம்
28-11-2007, 03:17 AM
நாம் இறந்தபிறகும்
நம்மோடே இறந்துவிடுவதால்..

இதயம்!!

"உயிர்த்தோழன்" தான்!

அழகான வரிகளை கொண்டு இதயம் - உயிர் தோழன் தான் அழகான கவி தந்த ஷீ-நிசிக்கு வாழ்த்துக்கள் - பாரட்டுக்கள்

ஷீ-நிசி
28-11-2007, 03:53 AM
நன்றி நேசம்!

சிவா.ஜி
28-11-2007, 03:58 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Uyirthozhan.jpg


கைப்பிடி அளவு இதயம்,
கைத்தடி நழுவும் வரையும்,
--------------------------------------------------------
மிக அருமையான வரிகள்.நல்ல சிந்தனை.
----------------------------------------------------------------
இதயத்தில் ஓட்டையாம்!!!
இருப்பதும் கூட சிறப்புதான்!!

சேமிக்கப்படும் சோகங்களில்,
சிலவாவது செலவாகுமே!!
ஓட்டையின் வழியே.....
-------------------------------------------------------------
அசத்தல் சிந்தனை.அபாரம் ஷீ-நிசி.மிகவும் கவர்ந்த வரிகள்
--------------------------------------------------------

சந்தம் விளையாட தந்த இந்தக் கவிதை அற்புதம்.வாழ்த்துகள் ஷீ.

ஆதவா
28-11-2007, 04:07 AM
இதயக் கவிதையா ஷீ!! ??? அருமை.

பிறிதொருநாள் நேரம் சுவைக்க பதிலைத்
தருகிறேன் என்னினிய நண்ப*
.

ஷீ-நிசி
28-11-2007, 04:46 AM
நன்றி சிவா ஜி....

நன்றி ஆதவா :)

ஆதி
28-11-2007, 07:01 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Uyirthozhan.jpg


அருமையான கவிதை ஷீ-நிசி..

சந்தம் சிந்தி துவங்கிய வரிகள் இன்னும் அருமை..

வாழ்த்துகள், பாரட்டுக்கள்..

-ஆதி

ஷீ-நிசி
28-11-2007, 09:06 AM
நன்றி ஆதி!

அறிஞர்
28-11-2007, 12:02 PM
இதயத்தை.. காதலின் உறுப்பாக மட்டும் எண்ணி பலர் கவிதை வடிப்பர்...

இங்கு நண்பனாக....

அருமை ஷீ-நிசி..

ஷீ-நிசி
28-11-2007, 03:36 PM
இதயத்தை.. காதலின் உறுப்பாக மட்டும் எண்ணி பலர் கவிதை வடிப்பர்...

இங்கு நண்பனாக....

அருமை ஷீ-நிசி..

அட! மிக வித்தியாசமாக சிந்திச்சிருக்கீங்க... நன்றி அறிஞரே!

leomohan
28-11-2007, 06:18 PM
கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா எனும் பாடலை போல உங்களுக்கு படம் கிடைத்ததும் கவிதை எழுத மனம் வருகிறதா அல்லது கவிதை எழுதி விட்டு அதற்கான படத்தை தேடுகிறீர்களா. மீண்டும் நல்ல கவிதை உங்களிடமிருந்து.

ஷீ-நிசி
29-11-2007, 05:24 AM
கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா எனும் பாடலை போல உங்களுக்கு படம் கிடைத்ததும் கவிதை எழுத மனம் வருகிறதா அல்லது கவிதை எழுதி விட்டு அதற்கான படத்தை தேடுகிறீர்களா. மீண்டும் நல்ல கவிதை உங்களிடமிருந்து.


நன்றி மோகன் ஜி!

இரண்டுமே தான்.... ஆனால் இந்தக் கவிதை

கவிதை எழுதியபின் சேர்த்த படம்!

பூமகள்
29-11-2007, 05:42 AM
என்னே அழகான படம்..! அதை விட அழகான வரிகளுடன் கவி..!

ஷீயின் கவிதைகள் எப்போதுமே ஒரு முத்திரை பதிக்கும்.

ஷீயின் கவிதைகள் முன் என் விமர்சனங்கள் கூட விரல் தாண்டி வர மறுத்து வெட்கி நிற்கிறது.

அற்புத சொல்லாடல். அபார சிந்தனை..!

இதயத்தை காதலர்களுக்கென்றே குத்தகைக்கு விட்டிருக்கும் நிலையில், இதயத்தையே தோழராக்கி பார்த்த வித்தியாசமான கோணம் அசர வைக்கிறது.

வாழ்த்துகள் ஷீ...!

நல்ல கவிதை:)+அழகான படம்:)(எங்கப்பா பிடிக்கிறீங்க இப்படியான சூப்பர் படங்களை..!:sprachlos020:) கொடுத்ததற்காக என் 500 இ-பணம் அன்பளிப்பு.

ஷீ-நிசி
29-11-2007, 05:50 AM
என்னே அழகான படம்..! அதை விட அழகான வரிகளுடன் கவி..!

ஷீயின் கவிதைகள் எப்போதுமே ஒரு முத்திரை பதிக்கும்.

ஷீயின் கவிதைகள் முன் என் விமர்சனங்கள் கூட விரல் தாண்டி வர மறுத்து வெட்கி நிற்கிறது.

அற்புத சொல்லாடல். அபார சிந்தனை..!

இதயத்தை காதலர்களுக்கென்றே குத்தகைக்கு விட்டிருக்கும் நிலையில், இதயத்தையே தோழராக்கி பார்த்த வித்தியாசமான கோணம் அசர வைக்கிறது.


வாழ்த்துகள் ஷீ...!

நல்ல கவிதை:)+அழகான படம்:)(எங்கப்பா பிடிக்கிறீங்க இப்படியான சூப்பர் படங்களை..!:sprachlos020:) கொடுத்ததற்காக என் 500 இ-பணம் அன்பளிப்பு.





நன்றி பூமகள்...

படத்த ரைட் கிளிக் செய்து Propoerties பாருங்க... அங்கருந்துதான் புடிச்சேன்....:icon_ush:



நெஜமா அங்கருந்துதான்...:mini023:

ஓவியன்
29-11-2007, 10:04 AM
"இதயம்", "காதல்" இந்த இரண்டுக்கும் இடையேயான அறிவியியல் ரீதியிலான தொடர்பு என்ன....???
காதல் இதயத்திலிருந்து உதயமாவதாகக் கொள்ளப்படுவது உண்மையில் சரிதானா...??
அப்போது மூளையின் செயற்பாடுதான் என்ன...???

இப்படி பல சந்தேகங்கள் எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு, ஆனால் இதுவரை விடை கிடைத்தபாடில்லை. என்னைப் பொறுத்த வரை அறிவியல் ரீதியாக இதயமென்பது குருதியை உந்தும் ஒரு பம்பி, ஆனால் ஆனால் கவிஞர்கள், காதலர்கள் மத்தியில் இதயத்துக்கு கிடைக்கும் இடம் மகத்துவமானது...

அறிவியல் ரீதியாக சிந்திப்பதைத் தவிர்த்து ஷீயின் கவிதையை எடுத்து நோக்கினால், அதில் அழகியியல் நிரம்பி வழிகிறது கூடவே உதிரியாக காதலும்....

அந்த இரண்டும் படிப்பவர் மனதைக் கொள்ளையிட்டு நிற்கின்றன...


கொஞ்சமே கொஞ்சந்தான்,
பெண்ணற்ற நினைவுகள்!!


வித்தியாசமான சிந்தனையும் வார்த்தைப் பிரயோகமும் அசத்தல் ஷீ..!! :icon_b:

சுகந்தப்ரீதன்
29-11-2007, 10:23 AM
ஷி-நிசியாரே..பொறாமையாய் இருக்கு எனக்கு..? எப்படி முடிகிறது.. வார்த்தைகளை வளைத்து போடும் திறமை உங்களுக்கு..? உங்களுக்காக வார்த்தைகள் தானாக வளைகிறாதா..? இல்ல நீங்கள்தான் வார்த்தைகளை வளைத்து பிடிக்கிறீர்களா..? பொறாமையுடன் வாழ்த்துகிறேன் கவிஞரே..! பொறுத்துக் கொள்ளுங்கள்..!

jpl
29-11-2007, 11:17 AM
கொஞ்சமே கொஞ்சந்தான்,
பெண்ணற்ற நினைவுகள்!!
உண்மை தான் ஓவியன் இதையே தான் நான் குறிப்பிட நினைத்தேன்.முந்திக் கொண்டீர்களே...


இதயத்தில் ஓட்டையாம்!!!
இருப்பதும் கூட சிறப்புதான்!!

சேமிக்கப்படும் சோகங்களில்,
சிலவாவது செலவாகுமே!!
ஓட்டையின் வழியே.....

இந்த உருவகத்திற்கு இப்படியும் ஒரு பயனா?


படுக்கையிலே!! -நாம்
படுக்கையிலே.....

நம் நிலை கண்டு, "துடிப்பது"
"துடித்துக்கொண்டேயிருப்பது"
நம் இதயம் மட்டும்தான்.....
இரு பொருள் வார்த்தையாடல் வளமான கற்பனை.
சிந்தனைச் சுரங்கத்திலிருந்து மீண்டுமொரு அற்புத புனைவு ஷீ-நிசி.

ஷீ-நிசி
29-11-2007, 04:22 PM
நன்றி ஓவியன்! நன்றி ப்ரீதன்...

நன்றி லதாம்மா... எதையெல்லாம் நான் ரசிகனாய் ரசித்தேனோ அதையெல்லாம் அழகாக சொல்லியுள்ளீர்கள்!