PDA

View Full Version : மறக்கப்படுவது!



தாமரை
27-11-2007, 02:44 PM
மறக்கப்படுவது
நீ நான் நிஜம்
எல்லாமும்தான்
வருத்தப்படுவதற்கு
எதுவுமில்லை
நாம் மறந்தவைகள் போல
நாமும் ஓர்நாள்

ஓவியன்
27-11-2007, 02:46 PM
மறக்கப் படுவதால் தான்
வாழ்க்கையில் இன்பம்
இன்னும்
மறக்கப் படாமலிருக்கிறது...

பூமகள்
27-11-2007, 02:52 PM
மறப்பவை மறக்கவும்
மற்றவை நினைக்கவும்
மட்டுமான வாழ்வில்
மகிழ்ச்சிக்கு ஏது தாழ்வு..!!

அழகான கவி..!
அசத்தல் தாமரை அண்ணா. :)

ஆதி
27-11-2007, 04:48 PM
வா..
மறதியின் இருட்டில்
இருவரும் பயணிப்போம்..

- அப்துல் ரகுமான் - மின்மினிகளால் ஒரு கடிதம்.

நிதர்சனம்.. ஆழமான உட்கருத்து..

நன்றி

-ஆதி

இளசு
27-11-2007, 07:04 PM
மாற்றம் மட்டுமே மாறாதது..
மறக்கப்படுவது மட்டுமே மறக்கப்படாதது..

தாமரைத்தத்துவம் ஆழம் அதிகம்.

ஆதியின் மேற்கோளும் பொருத்தம்..

பாராட்டுகள்!

நேசம்
27-11-2007, 07:18 PM
மறக்க் கூடியதை மறந்தால் தான், மற்றவை மறக்கமால் இனிமையா இருக்கும்.அழகான கருத்தை உள்ளடக்கிய கவிதை தந்த தாமரை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:42 AM
தாமரை சித்தரின் தத்துவபடியே நானும் இந்த கவிதையை மறந்துட்டேன்.. அதுக்காக யாரும் வருத்தபட வேணாம்.. நீங்களும் இத மறந்துடுங்க..?! தத்துவ கவிதை அருமை அண்ணாச்சி..!

கண்மணி
28-11-2007, 09:47 AM
தாமரை சித்தரின் தத்துவபடியே நானும் இந்த கவிதையை மறந்துட்டேன்.. அதுக்காக யாரும் வருத்தபட வேணாம்.. நீங்களும் இத மறந்துடுங்க..?! தத்துவ கவிதை அருமை அண்ணாச்சி..!

சித்தர் பெரியப்பாவைச் சொல்றீங்களா? (அண்ணாவோட அப்பா பேரு சித்தேஸ்வரன்னு கேள்விப்பட்டேன்!)

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:52 AM
சித்தர் பெரியப்பாவைச் சொல்றீங்களா? (அண்ணாவோட அப்பா பேரு சித்தேஸ்வரன்னு கேள்விப்பட்டேன்!)
செல்வரைத்தான் சித்தரென்றேன்..! சித்தேஸ்வரரும் நல்லாதான் :lachen001:இருக்கு..?!

ஓவியன்
28-11-2007, 10:00 AM
யாரிங்கே நம்ம செல்வண்ணாவைக் கலாய்க்கிறது...??:sprachlos020:

நல்லா கலாயுங்கப்பா, நம்மாளே தான் முடியலை நீங்களாவது பண்ணுங்க....!!

meera
28-11-2007, 10:51 AM
மறக்கப்படுவது
நீ நான் நிஜம்
எல்லாமும்தான்
வருத்தப்படுவதற்கு
எதுவுமில்லை
நாம் மறந்தவைகள் போல
நாமும் ஓர்நாள்

அண்ணா, அழகு கவி.எதார்த்தமான தத்துவம் இனிமையாய் இருக்கிறது.

அமரன்
28-11-2007, 11:04 AM
நாமும் ஒருநாள் மறக்கபடுவோம்.
மறைந்துவிடுவோம்..
நாம் மறந்தவைகள் மறையுமா?

சிவா.ஜி
28-11-2007, 11:04 AM
உண்மைதான், வருத்தப்பட என்ன இருக்கிறது?எல்லாம் மறந்துபோகும்,மறைந்துபோகும்...இதுதான் நிஜம்.
தத்துவ மழையாப் பொழியறீங்க....அசத்தல் வரிகள்.

M.Jagadeesan
19-01-2013, 08:06 AM
மறக்கப்படுவது
நீ நான் நிஜம்
எல்லாமும்தான்
வருத்தப்படுவதற்கு
எதுவுமில்லை
நாம் மறந்தவைகள் போல
நாமும் ஓர்நாள்

நாமும் ஓர்நாள் ஏன் மறக்கப்படவேண்டும் ? பூத உடம்புகள் மறக்கப்படலாம்; ஆனால் புகழுடம்புகள் மறக்கப்படுவதில்லை.

கும்பகோணத்துப்பிள்ளை
19-01-2013, 06:25 PM
நானாயிருந்த நான் மறக்கப்படும்வரை எதுவும்
மறக்கப்படுவதில்லைதான்
அனால் மறந்த வலிகள்!
நானிருக்கும்வரையிருக்குமே!
மறதியென்னும் நியதியென்றும்
இனிமை கொல்லும் வியாதி!

மஞ்சுபாஷிணி
20-01-2013, 06:24 AM
மறக்கப்படுவது
நீ நான் நிஜம்
எல்லாமும்தான்
வருத்தப்படுவதற்கு
எதுவுமில்லை
நாம் மறந்தவைகள் போல
நாமும் ஓர்நாள்

யதார்த்தமான கவிதை... மிக அருமை தாமரை...