PDA

View Full Version : முடிவு!



தாமரை
27-11-2007, 02:42 PM
ஆரம்பத்தின் இறுதி
இறுதியின் ஆரம்பம்
இருந்தாலும்
இடைப்பட்ட காலத்தில்
மறக்கப்படுவது
முடிவு

ஓவியன்
27-11-2007, 02:44 PM
ஒவ்வொரு ஆரம்பமும்
இறுதியை நோக்கியா
இல்லை
முடிவை நோக்கியா...?!!

meera
27-11-2007, 02:49 PM
ஆரம்பத்தின் இறுதி
இறுதியின் ஆரம்பம்
இருந்தாலும்
இடைப்பட்ட காலத்தில்
மறக்கப்படுவது
முடிவு


ஒரு காரியத்தின் கடைசி மூச்சை எட்டும் போதல்லவா முடிவு ஏற்படுகிறது. அண்ணா எனக்கு இந்த கவிக்கு அர்த்தம் சொல்வீர்களா???:smilie_abcfra:


புரியாமல் விழிக்கும் சின்ன பெண் மீரா:eek::eek::eek:

பூமகள்
27-11-2007, 02:54 PM
ஆரம்பத்தின் இறுதி
இறுதியின் ஆரம்பம்
இருந்தாலும்
இடைப்பட்ட காலத்தில்
மறக்கப்படுவது
முடிவு
முடிவு தெரிந்தால்
முனைப்பான பயணம்
வாய்க்காது...!!
விசித்திரம் நிகழ
இடைப்பட்ட காலம்
புதிராகவே போகட்டும்
முடிவு நோக்கி..!!:icon_rollout:

தாமரை
27-11-2007, 02:54 PM
ஆரம்பத்தின் இறுதி
இறுதியின் ஆரம்பம்
இருந்தாலும்
இடைப்பட்ட காலத்தில்
மறக்கப்படுவது
முடிவு


நிகழ்வுகள் சக்கரமாய்.. . மகப்பேறே மறுபிறப்பு, செத்துப் பிழைத்தேன் என்பார்கள்.. அப்படி ஆரம்பத்தின் இறுதியில் தெரிவது முடிவு.. அதே போல் இறுதிகாலத்தின் ஆரம்பத்தில் தள்ளாமை வருவதும் அதேதான். இடைப்பட்ட காலத்தில் தான் மனிதன் என்ன ஆட்டம் போடுகிறான்!

meera
27-11-2007, 02:57 PM
நிகழ்வுகள் சக்கரமாய்.. . மகப்பேறே மறுபிறப்பு, செத்துப் பிழைத்தேன் என்பார்கள்.. அப்படி ஆரம்பத்தின் இறுதியில் தெரிவது முடிவு.. அதே போல் இறுதிகாலத்தின் ஆரம்பத்தில் தள்ளாமை வருவதும் அதேதான். இடைப்பட்ட காலத்தில் தான் மனிதன் என்ன ஆட்டம் போடுகிறான்!


ஆ ஆ உண்மைதான் அண்ணா.

தாமரை
27-11-2007, 03:13 PM
ஒவ்வொரு ஆரம்பமும்
இறுதியை நோக்கியா
இல்லை
முடிவை நோக்கியா...?!!

இறுதி முடிவை நோக்கி!

தாமரை
27-11-2007, 03:15 PM
முடிவு தெரிந்தால்
முனைப்பான பயணம்
வாய்க்காது...!!
விசித்திரம் நிகழ
இடைப்பட்ட காலம்
புதிராகவே போகட்டும்
முடிவு நோக்கி..!!:icon_rollout:

முடிவு தெரிய வேண்டாம்
இலக்கு இருக்க வேண்டுமல்லவா
அதுவும் புதிரானால்
அது விசித்திரம் இல்லை
வேதனை

பூமகள்
27-11-2007, 03:19 PM
முடிவு தெரிய வேண்டாம்
இலக்கு இருக்க வேண்டுமல்லவா
அதுவும் புதிரானால்
அது விசித்திரம் இல்லை
வேதனை
இங்கே இலக்கு
முடிவென்று கொண்டால்
முடிவு நோக்கி
பயணித்து நல்லவை செய்வதில்
பிழையென்ன?

ஓவியன்
27-11-2007, 03:23 PM
இறுதி முடிவை நோக்கி!

இல்லை முடிவின் இறுதியை நோக்கி...!! :)

தாமரை
27-11-2007, 03:28 PM
இங்கே இலக்கு
முடிவென்று கொண்டால்
முடிவு நோக்கி
பயணித்து நல்லவை செய்வதில்
பிழையென்ன?

இலக்கு முடிவல்ல
பலசமயங்களில்
மைல்கற்கள்..

ஒரு இலக்கு முடிந்ததும்
அடுத்த இலக்கு!

இளசு
27-11-2007, 07:34 PM
தர்மனின் வியப்பு..
தாமரைக் கவிதையாய்..

இன்று நான்! நாளை நீ!!
மயான வாசகம்..


தத்துவ விசாரம், விட்டேத்தி மனம், நிலையாமை போற்றல்..
அதைப் படிக்கும் அந்த நொடி..

சொத்து, பெருமை, சந்தோஷ வேட்டை -
வீடு திரும்பியதும் மறுபடி

leomohan
28-11-2007, 05:32 AM
ஆரம்பத்தின் இறுதி
இறுதியின் ஆரம்பம்
இருந்தாலும்
இடைப்பட்ட காலத்தில்
மறக்கப்படுவது
முடிவு

நச்.................................

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:10 AM
ஆரம்பத்தின் இறுதி
இறுதியின் ஆரம்பம்
உறுதியான பிறகு
எதற்கு வேண்டும் எனக்கு
முடிவை பற்றிய நினைவு..?!