PDA

View Full Version : கயிறு!

தாமரை
27-11-2007, 02:38 PM
ஒருமுழக்கயிறு
தாலியும் ஆகலாம்
தூக்கும் ஆகலாம்
ஆனாலும்
எப்பொழுதும் அதில் ஒரு தலை
தொங்கிக்கொண்டு

ஓவியன்
27-11-2007, 02:42 PM
தாலியும் தூக்கும்
தீர்மானிக்கப் படுகிறது
தூக்கி சுமக்கும்
தலைகளால்....

பூமகள்
27-11-2007, 02:49 PM
தொங்கப்பட்ட தலை
தூக்கி நிறுத்தும் கிரேனாக
மஞ்சள் கயிறு..!!

தாமரை
27-11-2007, 02:57 PM
தொங்கப்பட்ட தலை
தூக்கி நிறுத்தும் கிரேனாக
மஞ்சள் கயிறு..!!

தொங்கப்பட்ட தலை??? - அடிப்பாவிகளா!!

ஓவியன்
27-11-2007, 03:06 PM
தொங்கப்பட்ட தலை??? - அடிப்பாவிகளா!!

ஐயையோ இதை தலை மணியா அண்ணா பார்க்கக் கூடாது......!! :)

தாமரை
27-11-2007, 03:10 PM
தொங்கிய தலை - அதாகத் தொங்கும்
தொங்கப்பட்ட தலை - வேற யாரோ தொங்க விட்டிருக்காங்க

யவனிகா
27-11-2007, 03:11 PM
ஒருமுழக்கயிறு
தாலியும் ஆகலாம்
தூக்கும் ஆகலாம்
ஆனாலும்
எப்பொழுதும் அதில் ஒரு தலை
தொங்கிக்கொண்டு

கயிறு நிர்மாணிப்பதில்லை...
தொங்கலாமா...
தொங்க விடலாமா...என்று
கட்டும் கைகளே
நிர்மாணிக்கின்றன...

ஓவியன்
27-11-2007, 03:12 PM
தொங்கிய தலை - இயலாமை
தொங்கபட்ட தலை - வன்முறை

ஓவியன்
27-11-2007, 03:15 PM
தாலியும் தூக்கும்
தீர்மானிக்கப் படுகிறது
தூக்கி சுமக்கும்
தலைகளால்....

உங்கள் கவியுடன் ஒத்திசைகிறேன் யவனிகா...
அதனையே நானும்
என் கவியில் வலியுறுத்தினேன்...

கயிறு நிர்மாணிப்பதில்லை...
தொங்கலாமா...
தொங்க விடலாமா...என்று
கட்டும் கைகளே
நிர்மாணிக்கின்றன...

பூமகள்
27-11-2007, 03:16 PM
தொங்கப்பட்ட தலை??? - அடிப்பாவிகளா!!
ஐயய்யோ...!! :sprachlos020::eek:
தவறா புரிஞ்சிட்டீங்களா?? :icon_ush::icon_ush:
கட்டியவரின் மானத்தை காக்கும் வேலியாக இருப்போம் என்பதை தான் சொல்ல வந்தேன் அண்ணா.

தொங்கப்பட்ட தலை
தூக்கி நிறுத்தும் கிரேனாக
மஞ்சள் கயிறு..!!
தொங்கப்பட்ட தலை - ஏதோ காரணத்தால் மற்றவர்களால் துன்பப்பட்டு துவண்டு தொங்கும் தலை..!

இப்படி எல்லாரும் சேர்ந்து அடிக்க வந்துராதீங்க..!! :eek::sprachlos020:

தாமரை
27-11-2007, 03:19 PM
கயிறு நிர்மாணிப்பதில்லை...
தொங்கலாமா...
தொங்க விடலாமா...என்று
கட்டும் கைகளே
நிர்மாணிக்கின்றன...

தொங்கும் தலைகள்

கணவன்
மனைவி
கணவனின் காதலி
மனைவியின் காதலன்
மணப்பெண்ணின் தாய் / தந்தை
மணமகணின் தாய் / தந்தை

இப்படி எத்தனை எத்தனையோ.. இவற்றில் கட்டும் கையான கணவன் நிர்ணயிப்பது எதை எதை????

ஆதி
27-11-2007, 03:30 PM
கயிறு! என்ற தலைப்பைப் பார்த்தவுடன் பொறியில் தெரித்த கவிதை இதுதான்..

மாட்டுக்கும்
மங்கைக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு
இருவரையும் கட்டுவதுதான்
இங்கு வழ்க்கம்..

ஒருமுழக்கயிறு
தாலியும் ஆகலாம்
தூக்கும் ஆகலாம்
ஆனாலும்
எப்பொழுதும் அதில் ஒரு தலை
தொங்கிக்கொண்டு

தமரையண்ணா படிக்கும் விதங்களை சார்ந்து புரிகிற பொருள் பொதிந்த கவிதை இது.. இருந்தாலும் சில ஐயங்களும் எழுகின்றன..

தூக்கில் போட்டவன் தலை மட்டும்தான் தொங்கும்..
தாலியைப் பொருத்தமட்டில் கட்டியவன் கட்டப்பட்டவள் இருவரின் தலையும் அல்லவா தொங்கும்.. ஆக தாலியில் தொங்குவது இரு தலையில்லையா ?

இதுவே என் குறுமதிக்கு எட்டாத சிறு ஐயம்..

நன்றி

-ஆதி

தாமரை
27-11-2007, 03:36 PM

ஒரு தலை மட்டுமே என்று சொல்லவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட தலைகளும் தொங்கலாம்!!!!

இளசு
27-11-2007, 07:38 PM
திரிக்கப்படாத கருத்துகளால்
திரிக்கப்பட்டு நீளும் கயிறு!

வாழ்த்துகள் தாமரைக்கும் ஏனைய திரியாளர்களுக்கும்!

leomohan
28-11-2007, 05:33 AM
ஒருமுழக்கயிறு
தாலியும் ஆகலாம்
தூக்கும் ஆகலாம்
ஆனாலும்
எப்பொழுதும் அதில் ஒரு தலை
தொங்கிக்கொண்டு

அருமை. அப்ப மோதிரம் போட்டு தொங்குபவர்களுக்கு................:)

கண்மணி
28-11-2007, 05:34 AM
அருமை. அப்ப மோதிரம் போட்டு தொங்குபவர்களுக்கு................:)

பென்ஸை கேட்டு பார்ப்பமா???:lachen001:

சுகந்தப்ரீதன்
28-11-2007, 08:58 AM
ஒருமுழக்கயிறு
தாலியும் ஆகலாம்
தூக்கும் ஆகலாம்
ஆனாலும்
எப்பொழுதும் அதில் ஒரு தலை
தொங்கிக்கொண்டு
ஒரு முழக்கயிறு
வேலியும் ஆகலாம்!
ஒரு உயிரின்
வேரையும் அறுக்கலாம்!
அது இருக்கும்
கைகளை பொறுத்து
இறுகலாம்;இளகலாம்!

வாழ்த்துக்கள்..அண்ணாச்சி..! வகை வகையான் கவிதைக்கு...!

அமரன்
29-11-2007, 04:12 PM
ஒருமுழக்கயிறு
தாலியும் ஆகலாம்
தூக்கும் ஆகலாம்
ஆனாலும்
எப்பொழுதும் அதில் ஒரு தலை
தொங்கிக்கொண்டு
சரிதான்..
ஒருகாலத்தில் தாலியிலும், நெற்றிப்பொட்டிலும் கணவனின் உயிர் இருக்கு என்று நினைத்தார்கள். சமீபகாலமாக பொட்டுக்கு விலக்களித்து தாலியை மட்டும் உயிர்க்கூடாக நினைகின்றார்கள். ஆகமொத்தம் நீங்கள் சொல்வது சரிதான்.. இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம்..
தூக்கு மேடையில் பலகை நகர மரணம் நெருங்கும்.. அதேபோல வாழ்வுமேடையில் (மணமேடையில்) எது நகரவேண்டும்..

தாமரை
29-11-2007, 04:45 PM

நம்பிக் கை பிடித்தவரின் நம்பிக்கை!

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 01:15 PM
நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் போலத்தானே.

M.Jagadeesan
21-01-2013, 10:35 AM
தூக்குக்கயிறு ஏறினால் , தாலிக்கயிறு இறங்கும்.