PDA

View Full Version : புதையல்!

தாமரை
27-11-2007, 02:36 PM
புதைத்து விட
நான் சேர்த்த புதையல்
உன் நினைவுகள்

ஓவியன்
27-11-2007, 02:40 PM
நினைவுகளைப் புதைத்தேன்
மீண்டும்
முளைக்கிறதே நினைவுகளாகவே..

பூமகள்
27-11-2007, 02:47 PM
உன் நினைவு
புதையலா..? எரிகல்லா..??
புரியாமல் நிஜம்..!

அருமையோ அருமை..!
பாராட்டுகள் தாமரை அண்ணா. :)

meera
27-11-2007, 02:51 PM
உன் நினைவை
புதைத்துவிட நினைத்து
புதைந்து போனேன்
உன் நினைவில்...............

ஓவியன்
27-11-2007, 02:56 PM
உன் நினைவை
புதைத்துவிட நினைத்து
புதைந்து போனேன்
உன் நினைவில்...............

அருமை மீரா..!! :)
________________________________________________________________________________________________________________________________________
மறக்க நினைத்து விட்டு
மறந்தே போனேன்
மறக்க வேண்டும் உன்
நினைவுகளை என்று...

பூமகள்
27-11-2007, 02:59 PM
புதைமணலான
உன் நினைவில்
மீட்டெடுப்போர் இன்றி
மீளாமல் கிடக்கிறேன்..!!

ஆதி
27-11-2007, 04:33 PM
புதைத்த விட
நான் சேர்த்த புதையல்
உன் நினைவுகள்

(பு)தையல் - புதைவது நினைவுகள் மட்டுமா ?

உன் நினைவுகளை
எனக்குள் புதைத்து..
என்னைப் பிரமீடாக்கிவிடாதே..

அழகியகிய கவிதை.. அழகிய உணர்வுகள்..

நன்றி

-ஆதி

விகடன்
28-11-2007, 02:56 AM
அநுபவித்து எழுதிய வரிகளோ தாமரை அண்ணா.
அழுத்தமாக இருக்கிறது.
பாராட்டுக்கள்...
-----------------
எல்லோரும் ஏதோ எழுதுறாங்கள் தங்கள் முறைக்கு,
"கானமயில்களாட கண்டிருந்த வாங்கோழியும்...." என்பதுபோல நானும் முயற்சிக்கிறேனே.... :D:D:D

புதைக்கும்வரை தெரியவில்லை
விதைகளென்று...
உன் நினைவுகள்

என் நண்பன் ஒருவனை பார்த்து அவனின் நிலமையை நினைவில் வைத்து எழுதினேன்.

தாமரை
28-11-2007, 03:31 AM
மீரா,

நான் எழுதாமல் புதைத்த வரிகளை எப்படிக் கண்டு பிடித்தாய்? எதாவது டெலிபதி வைத்திருக்கிறாயா?

புதைத்து விட
நான் சேர்த்த புதையல்
உன் நினைவுகள்
உன் நினைவை
புதைத்துவிட நினைத்து
புதைந்து போனேன்
உன் நினைவில்

சிவா.ஜி
28-11-2007, 03:42 AM
ஆஹா தாமரையின் வரிகளும் மீராவின் வரிகளும் இணைந்து ஒரு மிக அழகான பூரணக்கவிதையை அளித்துவிட்டதே.சேர்த்துப் பாத்தாலும் சுவைக்கும்,தனித்தனியே பார்த்தாலும் இனிக்கும்.பிரமாதம்.பாராட்டுக்கள் தாமரை-மீரா.

தாமரை
28-11-2007, 03:43 AM
ஆஹா தாமரையின் வரிகளும் மீராவின் வரிகளும் இணைந்து ஒரு மிக அழகான பூரணக்கவிதையை அளித்துவிட்டதே.சேர்த்துப் பாத்தாலும் சுவைக்கும்,தனித்தனியே பார்த்தாலும் இனிக்கும்.பிரமாதம்.பாராட்டுக்கள் தாமரை-மீரா.

நேனே தாமரை:lachen001::lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:18 AM
புதைத்த விட
நான் சேர்த்த புதையல்
உன் நினைவுகள்
நான் சேர்த்து
வைத்த நினைவுகள்!
புதையலாய் என்
மனமெனும் பூமியில்!
யாருக்கும் தெரியாமல்
எனக்குள் பத்திரமாய்!

கண்மணி
28-11-2007, 09:37 AM
நான் சேர்த்து
வைத்த நினைவுகள்!
புதையலாய் என்
மனமெனும் பூமியில்!
யாருக்கும் தெரியாமல்
எனக்குள் பத்திரமாய்!

யாரந்த பூ தையல்?

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:50 AM
யாரந்த பூ தையல்?
என்னங்க...புதையலை தோண்டி எடுக்கும் முயற்சியா..? :icon_rollout:

கண்மணி
28-11-2007, 09:52 AM
என்னங்க...புதையலை தோண்டி எடுக்கும் முயற்சியா..? :icon_rollout:

ஆமாம். முகத்தை கை வச்சு மூடிகிட்டா விட்டுருவமா?:mini023:

சுகந்தப்ரீதன்
28-11-2007, 10:01 AM
ஆமாம். முகத்தை கை வச்சு மூடிகிட்டா விட்டுருவமா?:mini023:
நீங்க மட்டும் என்னவாம்..? கண்னு மட்டும்தான் தெரியுது..! நாங்க மட்டும் சிக்கிருவோமா...என்ன..?:mini023:

ஓவியன்
28-11-2007, 10:05 AM
நீங்க மட்டும் என்னவாம்..? கண்னு மட்டும்தான் தெரியுது..! நாங்க மட்டும் சிக்கிருவோமா...என்ன..?:mini023:

பலே மை டியர் பையா...!! :icon_b:
இது, இது தான் உங்ககிட்டே எனக்கு பிடிச்ச விசயமே..!! :)

சுகந்தப்ரீதன்
28-11-2007, 10:13 AM
பலே மை டியர் பையா...!! :icon_b:
இது, இது தான் உங்ககிட்டே எனக்கு பிடிச்ச விசயமே..!! :)
நன்றி அண்ணா..! எல்லாம் நீங்க கத்து கொடுத்தது தானே..?:icon_rollout:

meera
28-11-2007, 10:42 AM
மீரா,

நான் எழுதாமல் புதைத்த வரிகளை எப்படிக் கண்டு பிடித்தாய்? எதாவது டெலிபதி வைத்திருக்கிறாயா?

புதைத்த விட
நான் சேர்த்த புதையல்
உன் நினைவுகள்
உன் நினைவை
புதைத்துவிட நினைத்து
புதைந்து போனேன்
உன் நினைவில்

ஆகா,ஆமா அண்ணா டெலிபதி சரியாய் தான் வேலை செய்து .
எல்லாம் உங்க பயிற்சி தான்........:lachen001::lachen001:

அமரன்
28-11-2007, 11:28 AM
புதைத்த விட
நான் சேர்த்த புதையல்
உன் நினைவுகள்
இதுல விட என்பது என்னவோ...? :)

தாமரை
28-11-2007, 11:49 AM
நீங்க மட்டும் என்னவாம்..? கண்னு மட்டும்தான் தெரியுது..! நாங்க மட்டும் சிக்கிருவோமா...என்ன..?:mini023:

கண்மணியைக் கண்டு
இவ்வளவு வெட்கமா சுபி...
முகம் முழுசும் பார்த்தால்??

அமரன்
28-11-2007, 11:49 AM
கண்மணியைக் கண்டு
இவ்வளவு வெட்கமா சுபி...
முகம் முழுசும் பார்த்தால்??
விரியும்...

தாமரை
28-11-2007, 12:00 PM
இதுல விட என்பது என்னவோ...? :)

புதைத்து விட

அமரன்
28-11-2007, 12:04 PM
புதைத்து விட
மிக்க நன்றி அண்ணா....
என்ன கருத்துப்பட எழுதினீர்கள் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்துவிட்டது..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மதுசாரங்கள் கூட புதைத்துத்தான் வைக்கப்படுகின்றன. போதையின் வீரியம் கூடுமாமே..இதுக்கூட அந்தவகைப் புதையலோ

தாமரை
28-11-2007, 12:06 PM

சில சமயம் புதைக்கப்பட்ட காதல் கூட போதைதான். அனுபவசாலிகள் பலர் உண்டு.. இவ்விடம்..:rolleyes::rolleyes::rolleyes:

சிவா.ஜி
28-11-2007, 12:10 PM
சில சமயம் புதைக்கப்பட்ட காதல் கூட போதைதான். அனுபவசாலிகள் பலர் உண்டு.. இவ்விடம்..:rolleyes::rolleyes::rolleyes:

ஆமாம் புதைந்து போன காதலும் பரிசாகத் தருவது போதைதான்.

அமரன்
28-11-2007, 03:31 PM
சில சமயம் புதைக்கப்பட்ட காதல் கூட போதைதான். அனுபவசாலிகள் பலர் உண்டு.. இவ்விடம்..:rolleyes::rolleyes::rolleyes:

ஆமாம் புதைந்து போன காதலும் பரிசாகத் தருவது போதைதான்.
ஆமாமா... சில குடியைக் கெடுக்கிறதல்லவா...