PDA

View Full Version : அப்பன் - மகன்

தாமரை
27-11-2007, 02:35 PM
மகன்
நீ தவறென்று
தட்டிக் கழித்ததெல்லாம்
சரியென்று நிரூபிக்க
போராடுபவன்
அப்பன்
மகன் வெல்லும் பொழுதெல்லாம்
சந்தோஷப்படுபவன்

ஓவியன்
27-11-2007, 02:38 PM
அப்பன் வந்த வழி - மகன்
மகன் போகும் வழி - அப்பன்..!!

பூமகள்
27-11-2007, 03:23 PM
மகன் - முரண்பட்டதை நேராக்க..!
அப்பன் - நேரானதை முரணாக்கி
நேரானதுக்காக மகனை
போராட வைக்க..!!

இளசு
27-11-2007, 06:34 PM
பாராட்டுகள் தாமரை...

சட்டென எனக்குள் ஒரு எசப்பாட்டு:

ஒரு பயணி முடித்த இடம்..
மறு பயணி தொடங்கும் இடம்..

எத்தனை எல்லைகள் ...எனக்கு எட்டாமல்..
இதோ அமர்ந்துவிட்டேன்..
என் வாரிசு உனக்கு வசப்படுமா?
இங்கிருந்தே காண்பேன்..
வசமானால் மகிழ்வேன்..
என் பயணக்கதையா?
தவறுகள் குறைக்க... ?
தடைகள் கடக்க?

கேட்டுத்தெளிவதை விட
பட்டுத்தெளியவைக்கும்
வாழ்க்கைக் கல்லூரியில்
வம்சா வம்சம் புதிய பாடத்திட்டம்!

முன்வாழ்த்துகள் மகனே!

விகடன்
28-11-2007, 03:02 AM
அப்பன் மகன் உறவை அற்புதமாய் சித்தரிக்கும் குறுங்கவிதை.
அழகாக இருக்கிறது.
பாராட்டுக்கள் அண்ணா

சிவா.ஜி
28-11-2007, 03:39 AM
தட்டிக்கோடுக்காமல்,தட்டிக்கழித்ததையெல்லாம் தட்டுத்தடுமாறி வெற்றியாக்கிய தனையனை தாமதமானாலும் தட்டிக்கொடுக்கும் அப்பன்.சுவாரசியமான உறவு.சுகமான உறவு அப்பன்-மகன் உறவு.

தாமரை
28-11-2007, 03:43 AM
இதை புரிந்து கொள்ள்ளும் ஒரே ஜீவன்
அம்மாதான்

ஆதவா
28-11-2007, 03:49 AM
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு
கொஞ்சம் மாத்தித்தான் எழுதுங்களேன்.

தாமரை
28-11-2007, 03:51 AM
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு
கொஞ்சம் மாத்தித்தான் எழுதுங்களேன்.

பித்த மனம்
பிள்ளை பெத்து
கல்லு மனம்

மாத்தி எழுதியாச்சுங்களே!!!:lachen001::lachen001:

ஆதவா
28-11-2007, 03:56 AM
பித்த மனம்
பிள்ளை பெத்து
கல்லு மனம்

மாத்தி எழுதியாச்சுங்களே!!!:lachen001::lachen001:

பித்த மனம் பிறப்பதில்லை அண்ணா, ஆனால் கல்லு மனம் உண்டல்லவா?

தாமரை
28-11-2007, 04:04 AM
பித்த மனம் பிறப்பதில்லை அண்ணா, ஆனால் கல்லு மனம் உண்டல்லவா?

உனக்கு கவிதை புரிஞ்சதா இல்லையா?:confused:

ஆதவா
28-11-2007, 04:14 AM
உனக்கு கவிதை புரிஞ்சதா இல்லையா?:confused:

புரிஞ்சது... அதனால்தான் அப்படி ஒரு பின்னூட்டம் கொடுத்தேன். (வேற அர்த்தம் வெச்சுருக்கீங்களா?)

பித்த மனதோட பிள்ளை பெத்ததால் பெற்றவன் மனம் கல்லு... இது நீங்க எழுதியது.

பித்த மனதோடு எந்த குழந்தையும் பிறப்பதில்லை. இது நான் எழுதியது.

தாமரை
28-11-2007, 04:18 AM
புரிஞ்சது... அதனால்தான் அப்படி ஒரு பின்னூட்டம் கொடுத்தேன். (வேற அர்த்தம் வெச்சுருக்கீங்களா?)

பித்த மனதோட பிள்ளை பெத்த*தால் பெற்ற*வ*ன் மன*ம் க*ல்லு... இது நீங்க* எழுதிய*து.

பித்த* ம*னதோடு எந்த* குழந்தையும் பிற*ப்ப*தில்லை. இது நான் எழுதிய*து.

இல்லையே! பித்த மனம்- எதுக்கு பிள்ளை பெத்துக்கறம்னே தெரியாத பைத்தியக்கார பெற்றோர் மனம் (சிலர் தன் ஆண்மையை நிரூபிக்க, சிலர் சொத்துக்கு வாரிசாக, சிலர் கடைசி காலத்தில காப்பாத்த என எதுக்கெதுக்கோ பிள்ளை பெத்துக்கறாங்க இல்லையா?)
பிள்ளை பெற்று அந்த எண்ணங்கள் நிறைவேறாததால, அந்த முரட்டு ஆசைகளை நிறைவேத்திக்க குழந்தைகளை கஷ்டப்படுத்தி, மனம் கல்லாய் போயிடற்றது இல்லையா??

ஆதவா
28-11-2007, 04:21 AM

அதுதானே பார்த்தேன். இது இரண்டாவது அர்த்தம். ஆனா நான் சொன்ன அர்த்தமும் உண்டே!

அப்படியே நீங்க சொல்றபடி பார்த்தாலும் அது பெத்தவங்க தப்புத்தானே தவிர பிள்ளைங்க தப்பு இல்லை.

மதி
28-11-2007, 04:27 AM
அட...ஏன் அடிச்சுக்கறீங்க...

தாமரை..நேத்து சும்மா ஒரு பேச்சுக்காகத் தானே கேட்டேன்.. இப்பல்லாம் நீங்க திரி தொடங்கறதில்லேன்னு..அதுக்காக இப்படியா...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா..

ஓவியன்
28-11-2007, 04:42 AM
அட...ஏன் அடிச்சுக்கறீங்க...

தாமரை..நேத்து சும்மா ஒரு பேச்சுக்காகத் தானே கேட்டேன்.. இப்பல்லாம் நீங்க திரி தொடங்கறதில்லேன்னு..அதுக்காக இப்படியா...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா..

ஆமா, நேற்று ரொம்ப சந்தோசமா இருந்திச்சு அண்ணா ஒவ்வொரு திரியாகத் தொடங்க தொடங்க நானும் தேடித் தேடிப் பின்னூட்டம் இட்டேன்....

இது என்றும் தொடரட்டும்........!!

மதி
28-11-2007, 04:48 AM
ஆமா, நேற்று ரொம்ப சந்தோசமா இருந்திச்சு அண்ணா ஒவ்வொரு திரியாகத் தொடங்க தொடங்க நானும் தேடித் தேடிப் பின்னூட்டம் இட்டேன்....

இது என்றும் தொடரட்டும்........!!

எது தினமும் தாமரையை உசுப்பேத்தறதா?
:eek::eek::eek::eek:

ஓவியன்
28-11-2007, 04:52 AM
எது தினமும் தாமரையை உசுப்பேத்தறதா?
:eek::eek::eek::eek:

அடா, அடா..!!
எப்படியெல்லாம் விளக்கம் எடுத்துக்குறாங்க...!! :eek:

தாமரை
28-11-2007, 05:19 AM
அதுதானே பார்த்தேன். இது இரண்டாவது அர்த்தம். ஆனா நான் சொன்ன அர்த்தமும் உண்டே!

அப்படியே நீங்க சொல்றபடி பார்த்தாலும் அது பெத்தவங்க தப்புத்தானே தவிர பிள்ளைங்க தப்பு இல்லை.

நீங்க கொஞ்சம் தானே மாத்தி எழுதச் சொன்னீங்க.. முழுசா மாத்தச் சொல்லலியே!:icon_b:

கண்மணி
28-11-2007, 05:39 AM
ஆமா, நேற்று ரொம்ப சந்தோசமா இருந்திச்சு அண்ணா ஒவ்வொரு திரியாகத் தொடங்க தொடங்க நானும் தேடித் தேடிப் பின்னூட்டம் இட்டேன்....

இது என்றும் தொடரட்டும்........!!

அதாவது நீங்க ஒரிஜினிலா எழுதறதிலிருந்து தப்பிக்கப் பாக்கறீங்க.. இல்லையா அண்ணா!

சுகந்தப்ரீதன்
28-11-2007, 08:39 AM
மகன்
நீ தவறென்று
தட்டிக் கழித்ததெல்லாம்
சரியென்று நிரூபிக்க
போராடுபவன்
அப்பன்
மகன் வெல்லும் பொழுதெல்லாம்
சந்தோஷப்படுபவன்

யானைக்கும் அடி சறுக்குதோ..? மகனுக்கான விளக்கத்தை அப்பனிடம் கூறிய நீங்கள்.... அப்பனுக்கான விளக்கத்தை யாரிடம் கூறுகிறீர்கள்..?

ஒன்று செய்ய்யுங்கள்..அண்ணா..!
நீ தவறென்று-என்ற இடத்தில்-தந்தை தவறென்று -மாற்றுங்கள்.. மற்றவருக்கு கூறுவது போல் அமையும்! இல்லையெனில்
மகன் வெல்லும்-என்பதை- நீ வெல்லும் - என்று மாற்றுங்கள்.. அப்போது முதல் ஐந்து வரிகள் மகனை பற்றி அப்பனிடம் கூறுவது போலவும்..கடைசி மூனு வரிகள்..அப்பனை பற்றி மகனிடம் கூறுவது போலவும் அமையும்...!
அப்பனே முருகா..! இப்ப என்ன காப்பாத்து எங்கண்ணங்கிட்ட இருந்து..?:icon_rollout:

தாமரை
28-11-2007, 09:06 AM

நான் அப்பன் தானேப்பா? என் மகனுக்குச் சொல்ற மாதிரி போட்டிருக்கேன். என்ன

மகன் நீ
தவறென்று
தட்டிக் கழித்ததெல்லாம்
சரியென்று நிரூபிக்க
போராடுபவன்

அப்பன் (நான்)
மகன் வெல்லும் பொழுதெல்லாம்
சந்தோஷப்படுபவன்

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:12 AM
நான் அப்பன் தானேப்பா? என் மகனுக்குச் சொல்ற மாதிரி போட்டிருக்கேன்.
அப்ப சரிதான் அண்ணா...!:icon_rollout:

தாமரை
28-11-2007, 11:45 AM
அப்ப சரிதான் அண்ணா...!:icon_rollout:

அப்பாவும் சரிதான்

கமலன்
11-12-2007, 01:16 PM
அப்பப்பா மக்களை பெற்றெடுத்த மகராசன்கள், அனுபவித்து எழுதுகிறீர்களோ?.

மனசில் மகனுக்கு
எதிர்கால கதாநாயகன் அப்பா.

அப்பனுக்கு கவலை
தனயன் செய்யா சாதனை.

மகனுக்கு கொ ப செ
லஞ்சம் வாங்கா அம்மா.

குறைக்க முடியாதது
அப்பனின் பிடிவாதமெனும் பழக்கம்.

செவிசாய்க்க உருவான
மத்தளமெனும் கருவி அம்மா.

அப்பா பெயரை
தன்னரியாமல் அழிக்கும் மகன்.

இதுவே நம்மிந்திய
எடுத்துக்காட்டு நடுத்தர குடும்பம்.

பென்ஸ்
11-12-2007, 01:23 PM

சபாஷ் தாமரை....:icon_b:

கமலன்... என்னதாம் அப்பாவை நாம் ரோல்மாடலாக எடுத்து கொண்டாலும், சில காலங்களுக்கு பிறகு அப்பாகள் மகனை ரசிக்க துவங்குவது ஏனோ???:redface::icon_ush::icon_ush::D

யவனிகா
11-12-2007, 01:38 PM
அப்பன் − உயிரை குடுத்ததோடு
உன் பணி முடிந்ததென்று
உயிரை விட்டு விட்டாய்...

மகள் − நான் உயிர் குடுத்துப்
பெற்ற மகனின் முகத்தில்
உன் முகச்சாயல் தேடுகிறேன்....

பொண்ணுங்க அப்பா− மகள் அப்படின்னு தான எழுத முடியும்?

தாமரை
11-12-2007, 01:41 PM
அப்பன் − உயிரை குடுத்ததோடு
உன் பணி முடிந்ததென்று
உயிரை விட்டு விட்டாய்...

மகள் − நான் உயிர் குடுத்த*
பெற்ற மகனின் முகத்தில்
உன் முகச்சாயல் தேடுகிறேன்....

பொண்ணுங்க அப்பா− மகள் ந்னு தான எழுத முடியும்?

அப்பா மகளின் உறவே அலாதி,, அணு அணுவாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..

அதை நாலு வரிகளில் அடக்க முடியாது.. முடிந்த வரையில் எழுதுகிறேன்.. கூடிய விரைவில்

யவனிகா
11-12-2007, 01:45 PM
அப்பா மகளின் உறவே அலாதி,, அணு அணுவாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..

உண்மை தான்...அனுபவிக்கக் குடுத்து வைக்காத எங்களைப் போன்றவர்களுக்கு...உங்களின் கவிதைச் சுகமாவது கிடைக்கட்டும்....விரைவில் ஆரம்பியுங்கள்.