PDA

View Full Version : புன்னகை!



தாமரை
27-11-2007, 02:33 PM
இயற்கை
உயர்ந்த பனிச் சிகரங்கள்
அடர்ந்த காடுகள்
அருவிகள் நதிகள்
நீலக்கடல், செவ்வானம்
எத்தனையோ வேஷம் போட்டும்
உன் புன்னகையிடம்
தோற்றுதான் போகிறது

ஓவியன்
27-11-2007, 02:36 PM
பொன்னகை வாங்க
விரும்பவில்லை
உன் புன்னகையே
போதுமென்பதனால்...

நேசம்
27-11-2007, 07:58 PM
புன்னகை
வேண்டும் என்றால்
பொன்னகை வேணும்
என்பார்களா !!

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:29 AM
அது சரி அண்ணா.. தோற்றது யார்..? நீங்களா..? இயற்கையா..?

அமரன்
28-11-2007, 11:02 AM
இயற்கை
உயர்ந்த பனிச் சிகரங்கள்
அடர்ந்த காடுகள்
அருவிகள் நதிகள்
நீலக்கடல், செவ்வானம்
எத்தனையோ வேஷம் போட்டும்
உன் புன்னகையிடம்
தோற்றுதான் போகிறது

பனிசிகரங்கள் உருகுகின்றன.
அடர்காடுகள் அழிக்கப்படுகிறன
அருவிகள் நதிகள் வற்றுகின்றன.
நீலமாக தெரிந்தாலும் கலரில்லாதது கடல்
உதயமும் செவ்வானம்.அஸ்தவனமும் செவ்வானம்.

நிரந்தரமினமை, பொய்மை இரண்டும்தான் பாட்டுடைத் தலை புன்னகையோ.. வஞ்சப்புகழ்ச்சி இல்லையே. வேறுயாராச்சும் என்றால் இப்படி தோன்றாது. எழுதியது தாமரைஅண்ணா எனும்போது ஏனோ இப்படி எண்ணத்தோன்றுகின்றது..

தாமரை
28-11-2007, 11:44 AM
இயற்கை
உயர்ந்த பனிச் சிகரங்கள்
அடர்ந்த காடுகள்
அருவிகள் நதிகள்
நீலக்கடல், செவ்வானம்
எத்தனையோ வேஷம் போட்டும்
உன் புன்னகையிடம்
தோற்றுதான் போகிறது

சபாஷ். பிடி 500.

அமரன்
28-11-2007, 11:46 AM
சபாஷ். பிடி 500.
ஐ ஜாலி...ஜாலி... மிக்க நன்றி..

கண்மணி
29-11-2007, 12:52 AM
மர்மப் புன்னகைன்னு தலைப்பு வச்சிருந்தா பளிச்சுன்னு தெரிஞ்சிருக்கும். அமரன் எப்படி கண்டு பிடிச்சார். இதில ஏதோ சதி இருக்கு.

மோனாலிசா இந்தத் தலைப்பு எப்படி இருக்கு அண்ணா?

அமரன்
29-11-2007, 06:58 AM
ஆஹா...கஸ்டப்பட்டு கண்டுபிடிச்சா இப்படிவேற கிளம்பிட்டாய்ங்களா...புன்னைகையே அநேகமாக மேக்கப்தாங்க.. இதெல்லாம் மன்ற அண்ணாக்கள் சொல்லித்தந்த பாடமுங்கோவ்..

ஓவியா
30-11-2007, 08:01 PM
இயற்கை
உயர்ந்த பனிச் சிகரங்கள்
அடர்ந்த காடுகள்
அருவிகள் நதிகள்
நீலக்கடல், செவ்வானம்
எத்தனையோ வேஷம் போட்டும்
உன் புன்னகையிடம்
தோற்றுதான் போகிறது

எனக்காக எழுதின கவிதைகளை முன்பு கோர்த்து வைக்க மறந்து விட்டேன், இனி அது நடக்காது. இதோ இப்போதே...... காப்பி பேஸ்ட் பண்ணி வச்சுகிறேன். :D:D

:D:D:D:D

சிவா.ஜி
01-12-2007, 03:48 AM
எத்தனையோ அவலங்கள் நிறைந்திருந்தாலும் மொத்தத்தில் அழகை காட்டும்,இயற்கையைப் போல உள்ளிருப்பது ஆயிரமானாலும்,வெளிக்காட்டும் புன்னகை.....விரும்பி இடும் வேஷம்.
அசத்தல் தாமரை.பாராட்டுக்கள்.

ஆர்.ஈஸ்வரன்
15-12-2007, 09:18 AM
மனதுக்கு பிடித்தவர்களின் புன்னகையிடம் தோற்கத்தான் வேண்டும்