PDA

View Full Version : தேவை!



தாமரை
27-11-2007, 02:19 PM
மக்களுக்குத் தேவை
ஒன்றே ஒன்றுதான்
அனைத்திலும்
அடுத்த வீட்டுக்காரனை விட
கொஞ்சம் அதிகமாக

பூமகள்
27-11-2007, 02:24 PM
மாற்றான் தோட்டத்து மல்லிகை தானே
எப்பவும் அதிகமாக மணக்கும்....!!
அழகு கவி தாமரை அண்ணா..
மக்களின் நாடி பிடித்து சொல்லும் வைத்தியரா நீங்கள்!!!! :icon_b:
எப்படி இப்படி எல்லாம்??!! :confused:
நல்ல கவி..!
சமூக சிந்தையுள்ள கவி..! :)
பாராட்டுகள் தாமரை அண்ணா.

ஓவியன்
27-11-2007, 02:28 PM
ஒரு கோட்டினைச்
சிறிதாக்கும்
அதனிலும் பெரிய கோடு.....

அந்த பெரிய கோட்டிற்காகவே
ஓட்டமிந்த வாழ்க்கை வீதியில்...

விகடன்
28-11-2007, 02:35 AM
ஒப்பீட்டு வாழும் வாழ்க்கையை உணர்த்தி நிற்கும் வரிகள்.
பாராட்டுக்கள் அண்ணா.

இதனால் நன்மையுமுண்டு,
அதாவது, ஒருவர் ஏதோ ஒரு விடயத்திலாவது தன்னிலும் ஒரு படியேனும் குறைந்தவர்களைப் பார்த்து சந்தோஷமடைந்து கொள்வான்.
குறைகளை பொருட்படுத்தாது வாழ்க்கையை சிறப்புடன் வாழ்வான்.
உதாரணத்திற்கு, விபத்தில் கால்களை இழந்தவன், கைகளையும் இழந்த ஒருவனைப்பார்த்து தன்னிலையினை இட்டு திருப்திப்பட்டுக்கொள்வான்.

அதேபோல், அயலில் இருப்பவனை விட ஒருபடி மேலிருக்க எண்ணுபவன் தரமான/ நேரிய வழியில் அதை அடைவானாகில் அது அவனுடையதும் சமூகத்தினுடையதும் முன்னேற்றத்திற்கே வழிகோலும்.

நேசம்
28-11-2007, 03:27 AM
அது மக்களுடைய தேவையில்லை அண்ணா.அது அவர்களின் விருப்பம்.சிலரின் இயல்பை பிரதிபலிப்பதா இருக்கிறது கவிதை.

அமரன்
28-11-2007, 07:13 AM
மக்களுக்குத் தேவை
ஒன்றே ஒன்றுதான்
அனைத்திலும்
அடுத்த வீட்டுக்காரனை விட
கொஞ்சம் அதிகமாக
இணை எப்படியோ...

சிவா.ஜி
28-11-2007, 07:17 AM
பேராசை.வேறென்ன சொல்வது.ஒப்பீடு எல்லா சந்தர்பங்களிலும் சரியாகாது.
தான் உயரவேண்டுமென்ற எண்ணத்தைவிட்ட மற்றவனை விட உயரவேண்டுமென்ற எண்ணம்.பட படன்னு போட்டுத் தாக்குறீங்களே தாமரை....ஆனால் அத்தனையும் நச்.

கண்மணி
28-11-2007, 07:21 AM
அப்பத்தானே அடுத்தவன் முதுகிலேறி ஆகாயம் தொடமுடியும் சிவாஜி அண்ணா!!

சுகந்தப்ரீதன்
28-11-2007, 08:15 AM
மக்களுக்குத் தேவை
ஒன்றே ஒன்றுதான்
அனைத்திலும்
அடுத்த வீட்டுக்காரனை விட
கொஞ்சம் அதிகமாக

அருமையான கண்டுபிடிப்பு...ஹா..ஹா..:lachen001:.. வாழ்த்துக்கள்..தாமரை அண்ணா..! ஏனோ என் நெஞ்சம் அந்த கொஞ்சத்தில் நிற்கிறதண்ணா..:mini023:!

ஆதி
28-11-2007, 08:55 AM
அழகிய கவிதை..

ஆனால் இதே மக்கள் பக்கத்து நாடுகளை விட கொஞ்சம் நாம அதிகமா உயரனும் என நினைத்தால் இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கும்..

-ஆதி

M.Jagadeesan
19-01-2013, 07:13 AM
மக்களுக்குத் தேவை
ஒன்றே ஒன்றுதான்
அனைத்திலும்
அடுத்த வீட்டுக்காரனை விட
கொஞ்சம் அதிகமாக

மக்களுடைய ஆசை
ஒன்றே ஒன்றுதான்
தனக்கு ஒருகண் போனால்
பக்கத்து வீட்டுக் காரனுக்கு
இரண்டு கண் போகவேண்டும்.

கும்பகோணத்துப்பிள்ளை
19-01-2013, 06:04 PM
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு
அந்த அளவு அடுத்தவீட்டுக்காரன் வைத்திருப்பதுதானோ?