PDA

View Full Version : இயற்கை!



தாமரை
27-11-2007, 02:18 PM
அழுகிறாள் சிரிக்கிறாள்
முறைக்கிறாள் விழிக்கிறாள்
மனிதன் கைகளில்
சிக்கி
பைத்தியமாகிவிட்ட
இயற்கை!

ஓவியன்
27-11-2007, 02:24 PM
மனிதனின் எதிர்காலத்தை நினைத்து அழுகிறாள்
அவன் அறியாமையை நினைத்துச் சிரிக்கிறாள்
அவனை படைத்தவனைப் பார்த்து முறைக்கிறாள்
மொத்தத்தில் அவனோடு சேர்த்துத் தன்னைப் ஏன்
படைத்தது ஏனெனத் தெரியாமல் விழிக்கிறாள்.....

பூமகள்
27-11-2007, 02:32 PM
"மழையாய் அழுது..
பூவிதழ் கொண்டு சிரித்து,
சுனாமியாய் பொங்கி முறைத்து,
சூரியனாய் விழித்து,
ரசாயன கலவை ஊசியால்
பச்சை ரத்தம் மாசாகி, - அரைப்
பைத்திய இயற்கை, முழுமையடைய
கந்தக காற்றை சுவாசித்தபடி
ரத்தம் சொட்டக் கிடக்கிறாள்..!!" :frown::frown:

உண்மை நிலையை, சமூகக் கருத்தை வலியுறுத்திய கவி.
நன்றிகள் அண்ணா.

நேசம்
27-11-2007, 08:01 PM
மனிதன் இயற்கைக்கு செய்த பாவத்துக்கு,இயற்கை காட்டும் கோபத்தை ஆண்டவனின் செயல் என்று சொல்பவர்களை நினைத்து என்ன செய்வது தாமரை அணணா

leomohan
28-11-2007, 05:34 AM
அழுகிறாள் சிரிக்கிறாள்
முறைக்கிறாள் விழிக்கிறாள்
மனிதன் கைகளில்
சிக்கி
பைத்தியமாகிவிட்ட
இயற்கை!

அந்த கோபத்தில் சில நேரம்
சுனாமிகளை தூக்கியும் எறிகிறாள்.

சிவா.ஜி
28-11-2007, 05:43 AM
எத்தனைக் கொடுமை செய்தாலும் கட்டிய பாவத்துக்கு அவனுக்கு ஆக்கிப்போட்டு அவனை வாழவைக்கும் இல்லாளைப் போல இயற்கையும் தன் கடமையை சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறது.ஆனால் மனிதன்தான் அதை நல்லமுறையில் பேண மறந்துவிட்டான். புத்திவருமா?

அமரன்
28-11-2007, 07:06 AM
பைத்தியம் என்றாலே
முரட்டுத்தனமான வெளிப்பாடோ
பிறழ்வும் அதிலுள்ளடக்க்மோ..


மாரி மாறி
மக்கள் வாழ்வில்
மாரி..!

++++++++++++++++++++++++++
ஆடிக்காத்தில்
அம்மியும் பறக்குமாம்
அடிக்கடி ஆடி...
பறக்கின்றன
வசிப்பிடங்களும்
வசிப்பிடங்கள் விட்டு உயிர்களும்..
++++++++++++++++++++++++++
கோடைகாலக் கொடை
வசந்தம்
கோடைக்காலக் கொலை
வரட்சி..
இயற்கையிடத்தில்
எத்தனையோ கண்ணகிகள்..
++++++++++++++++++++++
விழிவீச்சில்
எத்தனையோ வீழ்ச்சி
இதுதான்
கண்மூடித்தனமான காதலோ..

ஆதி
28-11-2007, 07:47 AM
இயற்கையை சிதைக்கிற நகரத்தில் இருந்து ஒரு நல்ல கவிதை.

-ஆதி

சுகந்தப்ரீதன்
28-11-2007, 08:18 AM
அது சரி.. கையில் சிக்கும் அளவுக்கு இயற்கைதான் சிறுசா..? இல்லை மனிதனின் கைதான் பெரிசா..? இதெல்லாம் உங்க ரவுசா...? வாழ்த்துக்கள் தாமரை அண்ணா..தொடருங்கள் தாராளாமாய்..?!

தாமரை
28-11-2007, 09:03 AM
அது சரி.. கையில் சிக்கும் அளவுக்கு இயற்கைதான் சிறுசா..? இல்லை மனிதனின் கைதான் பெரிசா..? இதெல்லாம் உங்க ரவுசா...? வாழ்த்துக்கள் தாமரை அண்ணா..தொடருங்கள் தாராளாமாய்..?!

உளி உடைத்த மலை

நாகரா
23-03-2009, 11:50 AM
அழுகிறாள் சிரிக்கிறாள்
முறைக்கிறாள் விழிக்கிறாள்
மனிதன் கைகளில்
சிக்கி
பைத்தியமாகிவிட்ட
இயற்கை!

அழுவதில்லை சிரிப்பதில்லை
முறைப்பதில்லை விழிப்பதில்லை
செயற்கையின் கைகளில்
சிக்கி
இருதயம் மறத்து
இயற்கை மறந்து
இயந்திரமாகிவிட்ட
மனிதம்!

சிந்திக்கத் தூண்டும் அருமையான குறுங்கவிக்கு நன்றி தாமரையாரே