PDA

View Full Version : வாரியங்கள்!



தாமரை
27-11-2007, 02:16 PM
வாரப்பட்டதால்
தூர்ந்து கிடக்கின்றன
வாரியங்கள்

ஓவியன்
27-11-2007, 02:20 PM
தூர்ந்ததை தூக்கக்
கட்டியவை
தூர்ந்து கிடக்கின்றன
வாருவோரால்....

சின்ன சின்ன வரிகள், அழகாக கருத்தைப் பிடித்து நிற்கின்றன...
அருமை அண்ணா...!!

பூமகள்
27-11-2007, 02:20 PM
வாருவோர்
வதைக்கப்பட்டால் - வாரியங்கள்
வாழுமே..!!

ஏதோ புரிஞ்சமாதிரி இருந்துச்சுங்க...!
தவறென்றால் அடிச்சிப்புடாதீங்க குருவே..!! :)

விகடன்
28-11-2007, 02:29 AM
வாரியங்கள் என்றால் என்னண்ணா?

தாமரை
28-11-2007, 03:26 AM
மந்திரிகள் இல்லா இலாக்காக்கள்..
அரசியல் வாதிகள் தோண்டிய
புதிய சுரங்கங்கள்..

குடிநீர் வடிகால் வாரியம்
சமூக நல வாரியம்
என மந்திரி சபை இலாக்கக்களுக்கு
கீழே
சில முக்கிய துறைகளை
வெகுகவனம் செலுத்தி
கவனிக்க வேண்டி
அமைக்கப்பட்டவை வாரியங்கள்
இன்று
மந்திரி பதவி கிட்டாதோருக்கும்
கட்சி தாவி வருவோருக்கும்
ஆறுதல் பரிசளிக்க
பயன்படுகிறது

விகடன்
28-11-2007, 03:31 AM
வாரியங்களிற்கு தேவையானதும் போதுமானதுமான திருப்திகரமான விளக்கங்கள் அண்ணா.
இப்போது புரிந்தது கவிதையின் ஆழம்.

எப்படித்தான் இவ்வளவு துறைகளிலும் இந்தளவிற்கு ஆழமாகவும் சிந்திக்கிறீர்களோ தெரியவில்லை. அன்றாடம் செய்தித்தாள்களை செவ்வனே புரட்டும் பழக்கம் வழக்கமோ அண்ணா.

நாட்டு நிலமையினை உணர்த்திநிற்கும் கவிதை. பாராட்டுக்கள்

சிவா.ஜி
28-11-2007, 03:34 AM
வாருவதற்கே வாரியம் என்பதை எல்லா அரசியல்வாதிகளும் மிகச் சரியாக புரிந்துவைத்திருக்கிறார்கள்.நச்சென்ற வரிகள்.அசத்தல் தாமரை.

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:24 AM
வாரப்பட்டதால்
தூர்ந்து கிடக்கின்றன
வாரியங்கள்
வாரப்பட்டதால்
தூர்ந்து கிடக்கின்றன
வாரியங்கள்!
தூர் வாரப்பட்டால்
தூய்மையாகும் வாருங்கள்!

meera
28-11-2007, 11:08 AM
வாருவோரை வார
வழி தெரியாமல்
வாடி நிற்கிறது
அப்பாவி மக்கள் வாரியம்.

ஆழமாய் வாரிவிட்டீர்கள் அண்ணா.

அமரன்
28-11-2007, 11:15 AM
ஓ..காலை வாரியவர்கள் வாருவதற்குத்தான் வாரியங்களா... நான் அரசியலிலும் வீக்குங்கோ..

தாமரை
28-11-2007, 11:40 AM
ஓ..காலை வாரியவர்கள் வாருவதற்குத்தான் வாரியங்களா... நான் அரசியலிலும் வீக்குங்கோ..

வாருபவர்கள்
வாராமல் இருக்க
வாருமிடம்
மாற்றிக்கொடுக்கப்படுகிறது

அமரன்
28-11-2007, 06:48 PM
வாருபவர்கள்
வாராமல் இருக்க
வாருமிடம்
மாற்றிக்கொடுக்கப்படுகிறது
மாற்றிக்கொடுத்தாலும்
மாறுவதில்லையே அவர்கள்
வாரோட்டமாக தொடர்கின்றதே
வாருமிடம்...