PDA

View Full Version : காதலே!



தாமரை
27-11-2007, 02:05 PM
உன் கைக் கோதலில்
கலைந்து கிடந்த
என் தமிழ்த் தலைமுடி
கவிதையாய் வாரப்பட்டது
காதலே!

ஓவியன்
27-11-2007, 03:27 PM
கவிதையை
வாரியது காதலா
இல்லை
வருடியது காதலா..?

கோவிக்காதீங்க அண்ணா...!!
சும்மா வம்புக்கு.......!! :rolleyes:

பூமகள்
27-11-2007, 04:27 PM
உன் கைக் கோதலில்
கலைந்து கிடந்த
என் தமிழ்த் தலைமுடி
கவிதையாய் வாரப்பட்டது
காதலே!
உன் கைவிரலால்
கலைந்த த(லை)மிழ்முடி..!
கவியாய் ஜொலிக்கும்
தமிழ்முடி..!

பாராட்டுகள் தாமரை அண்ணா.

இளசு
27-11-2007, 07:09 PM
இருந்தது.. சிக்கெடுக்கப்பட்டது... சீரானது .. காதல் ஒரு சீப்பு..
சரிதான்..

இல்லாதவர்க்கும் (தமிழ்ச்)சிகை முளைக்கவைக்கும் தைலமாமே காதல்..
இது சரிதானா தாமரை?


( ஏற்கனவே தலையாய யோசனைக்கு நீங்க ஆரம்பித்த திரி நினைவுக்கு வந்து.. நான் எஸ் ஆகிறேன்..)

தாமரை
27-11-2007, 11:53 PM
இருந்தது.. சிக்கெடுக்கப்பட்டது... சீரானது .. காதல் ஒரு சீப்பு..
சரிதான்..

இல்லாதவர்க்கும் (தமிழ்ச்)சிகை முளைக்கவைக்கும் தைலமாமே காதல்..
இது சரிதானா தாமரை?


( ஏற்கனவே தலையாய யோசனைக்கு நீங்க ஆரம்பித்த திரி நினைவுக்கு வந்து.. நான் எஸ் ஆகிறேன்..)

காதலின் லீலைகள் அறிந்தார் உண்டோ
அது முளைக்கவும் வைக்கும், வாரியும் விடும்
பிய்த்துக் கொள்ளவும் வைக்கும். வழித்தும் விடும்
பூமிதன்னில் காதலில்லையேல்
இத்தனை அலங்(கோல)காரங்கள் உண்டோ???:lachen001::lachen001:

அறிஞர்
28-11-2007, 12:06 AM
ஒரு புதிய கோணத்தில்... காதல் பற்றிய வரிகள்.
அருமை தாமரை...

காதலின் லீலைகள் அறிந்தார் உண்டோ
அது முளைக்கவும் வைக்கும், வாரியும் விடும்
பிய்த்துக் கொள்ளவும் வைக்கும். வழித்தும் விடும்
பூமிதன்னில் காதலில்லையேல்
இத்தனை அலங்(கோல)காரங்கள் உண்டோ???:lachen001::lachen001:
உண்மையான வரிகள்....
அனுபவித்தோருக்கு தான் தெரியும்
அதன் அலங்காரமும், அலங்கோலமும்....

கண்மணி
28-11-2007, 05:41 AM
ஒரு புதிய கோணத்தில்... காதல் பற்றிய வரிகள்.
அருமை தாமரை...

உண்மையான வரிகள்....
அனுபவித்தோருக்கு தான் தெரியும்
அதன் அலங்காரமும், அலங்கோலமும்....

அனுபவ மொழிகள் அறிஞர் அண்ணா

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 12:56 PM
அவள் கூந்தலை உலர்த்தினால்
கூந்தல் காய்ந்தது
மனசு ஈரமானது

தாமரை
09-01-2008, 08:28 AM
அவள் கூந்தலை உலர்த்தினால்
கூந்தல் காய்ந்தது
மனசு ஈரமானது

மனசு காய்ந்தபொழுது
கண்கள் ஈரமானது
கண்கள் காய்ந்தபொழுது?

இதயம்
09-01-2008, 08:30 AM
மனசு காய்ந்தபொழுது
கண்கள் ஈரமானது
கண்கள் காய்ந்தபொழுது?
மனசு பாரமானது..!!

தாமரை
09-01-2008, 08:33 AM
மனசு பாரமானது..!!

எனக்கு ஈரம் சிஃப்ட் ஆகற வரிசை தான் வேணும்

பூமகள்
09-01-2008, 08:35 AM
மனசு காய்ந்தபொழுது
கண்கள் ஈரமானது
கண்கள் காய்ந்தபொழுது?
கண்கள் காய்ந்த போது
கவிதை ஈரமானது..!
கவிதை காய்ந்த போழுது?

தாமரை
09-01-2008, 08:38 AM
கவிதை காய்ந்த பொழுது
காதல் ஈரமானது
காதல் காய்ந்த பொழுது?

பூமகள்
09-01-2008, 08:46 AM
காதல் ஈரமான பொழுது
இதயம் ஈரமானது..!
இதயம் ஈரமான போழுது?

இதயம்
09-01-2008, 08:48 AM
எனக்கு ஈரம் சிஃப்ட் ஆகற வரிசை தான் வேணும்
என்னாங்க விளையாட்டு இது..? ஈரமாக்கி... காயப்போட்டு.. அப்புறம் மறுபடியும் ஈரமாக்கி... அப்புறம் மறுபடியும் காயப்போட்டு...????

சின்னப்புள்ளத்தனமால்ல..?!!!:icon_rollout::icon_rollout:

தாமரை
09-01-2008, 08:49 AM
அச்சச்சோ இதில் யவனிகா சொல்லி இருந்த ராஜாவோட டோப்பா ரகசியம் காணோமே!!

அதாவது

"கல்யாணத்திற்கு முன் - கோதல்
பின்னால் - குடுமி பிடித்தாட்டல் இல்லையா ராஜா"னு நான் சொல்லி இருந்தேன்.;)

அப்ப யவனிகா, கோதல்னா என்ன? குடுமி பிடிச்சாட்டினா என்ன? ஒரு ரியாக்ஷனும் இல்லை இங்கன்னு ராஜாவோட டோப்பா குட்டை உடைச்சாங்க...:eek:

ஹி ஹி.. தாமரை உனக்கு ஞாபக சக்தி இந்த விஷயத்தில ரொம்பவே அதிகம்தான்...:lachen001::lachen001::lachen001:

தாமரை
09-01-2008, 08:53 AM
என்னாங்க விளையாட்டு இது..? ஈரமாக்கி... காயப்போட்டு.. அப்புறம் மறுபடியும் ஈரமாக்கி... அப்புறம் மறுபடியும் காயப்போட்டு...????

சின்னப்புள்ளத்தனமால்ல..?!!!:icon_rollout::icon_rollout:

ஈரம் காய்வதில்லை
ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
ஷிஃப்ட் ஆகிறது

ஆற்றல் அழியாமை மாதிரின்னு
ஒரு கான்செப்ட் வச்சி
கூட்டுக் கவி
சமைக்கலாம்னு ஒரு ஐடியா..

:icon_b:

இதயம்
09-01-2008, 08:54 AM
[COLOR=red]காதல் ஈரமான பொழுது[இதயம் ஈரமானது..!
இதயம் ஈரமான போழுது?

நீங்க ஏன் பூ காயப்போடவே இல்லை..?!!:icon_rollout:

இதயம்
09-01-2008, 08:57 AM
ஈரம் காய்வதில்லை
ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
ஷிஃப்ட் ஆகிறது



ஈரம் காய்வதில்லைன்னு சொல்லிட்டு வர்ற வழியெல்லாம் ஏகத்துக்கு காய வச்சிருக்கீங்களே.. அது ஏன்..? ஏன்..? ஏன்..?:eek: (கடைசி 2 ஏன் ஏன்னு பூவு வந்து சொல்வாங்க..!!)

(நான் சொன்னது மண்டை காய்வதை இல்லை...!!:D)

ஆதி
09-01-2008, 09:04 AM
கவிதை காய்ந்த பொழுது
காதல் ஈரமானது
காதல் காய்ந்த பொழுது?

காதல் காய்ந்த பொழுது
நினைவு ஈரமானது
நினைவு காய்ந்த பொழுது ?

பூமகள்
09-01-2008, 09:22 AM
காதல் காய்ந்த பொழுது
நினைவு ஈரமானது
நினைவு காய்ந்த பொழுது ?

நினைவு காய்ந்த பொழுது
நிஜம் ஈரமானது
நிஜம் ஈரமான பொழுது..?

ஆதி
09-01-2008, 09:31 AM
நினைவு காய்ந்த பொழுது
நிஜம் ஈரமானது
நிஜம் ஈரமான பொழுது..?

நிஜம் ஈரமான பொழுது
பெருமிதம் காய்ந்தது
பெருமிதம் காய்ந்த பொழுது ?

பூமகள்
09-01-2008, 09:39 AM
பெருமிதம் காய்ந்த பொழுது
உவகை ஈரமானது..!
உவகை காய்ந்த பொழுது?

ஆதி
09-01-2008, 09:42 AM
உவகை காய்ந்த பொழுது
உறவு ஈரமானது
உறவு காய்ந்த பொழுது ?

பூமகள்
09-01-2008, 09:44 AM
உறவு காய்ந்த பொழுது
மனம் ஈரமானது...!
மனம் காய்ந்த பொழுது?

ஆதி
09-01-2008, 09:49 AM
உறவு காய்ந்த பொழுது
மனம் ஈரமானது...!
மனம் காய்ந்த பொழுது?

மனம் காய்ந்த பொழுது
மதம் ஈரமானது
மதம் காய்ந்த பொழுது ?

பூமகள்
09-01-2008, 10:06 AM
மதம் காய்ந்த பொழுது
மனிதம் ஈரமானது..!
மனிதம் காய்ந்த பொழுது??

ஆதி
09-01-2008, 10:32 AM
மதம் காய்ந்த பொழுது
மனிதம் ஈரமானது..!
மனிதம் காய்ந்த பொழுது??

மனிதம் காய்ந்த பொழுது
மரணம் ஈரமானது
மரணம் காய்ந்த பொழுது ?

ஆர்.ஈஸ்வரன்
09-01-2008, 10:33 AM
என்னாங்க விளையாட்டு இது..? ஈரமாக்கி... காயப்போட்டு.. அப்புறம் மறுபடியும் ஈரமாக்கி... அப்புறம் மறுபடியும் காயப்போட்டு...????

சின்னப்புள்ளத்தனமால்ல..?!!!:icon_rollout::icon_rollout:

சரிதான்

ஆர்.ஈஸ்வரன்
09-01-2008, 10:35 AM
உறவு காய்ந்த பொழுது
மனம் ஈரமானது...!
மனம் காய்ந்த பொழுது?

அனுபவம் துளிர்த்தது.

அமரன்
09-01-2008, 11:14 AM
மனிதம் காய்ந்த பொழுது
மரணம் ஈரமானது
மரணம் காய்ந்த பொழுது ?

மரணம் காய்ந்த பொழுது
வாழ்க்கை ஈரமானது
வாழ்க்கை காய்ந்த போது...

(மரணம் காய்தல்.... நிலாக்காய்கிறது சாயல்+ சோக(ஈரம்)க் குறைவு
வாழ்க்கை ஈரம்= வறுமையின் நீர்+ செழிப்பின் வேர்)

பூமகள்
09-01-2008, 11:44 AM
மரணம் காய்ந்த பொழுது
வாழ்க்கை ஈரமானது
வாழ்க்கை ஈரமான போது...
வாழ்க்கையை
காயவிட்டிருக்க வேண்டும்..!!
சரி பரவாயில்லை
ஈரம் இருக்கட்டும்..!!

வாழ்க்கை ஈரமான போது
வசந்தம் ஈரமாகும்..!
வசந்தம் காய்ந்த பொழுது?

ஆதி
09-01-2008, 11:49 AM
[/COLOR]
வாழ்க்கை ஈரமான போது
வசந்தம் ஈரமாகும்..!
வசந்தம் காய்ந்த பொழுது?

வசந்தம் காய்ந்த பொழுது
வருத்தம் ஈரமாகும்
வருத்தம் காய்ந்த பொழுது ??

அமரன்
09-01-2008, 11:53 AM
வாழ்க்கையை
காயவிட்டிருக்க வேண்டும்..!!
சரி பரவாயில்லை
ஈரம் இருக்கட்டும்..!!

வாழ்க்கை ஈரமான போது
வசந்தம் ஈரமாகும்..!
வசந்தம் காய்ந்த பொழுது?
காய்தல் இருந்தாலே
ஈரம் மாற்றப்படும்..
ஈரம் இருந்தாலே
காய்தல் நிகழும்..

lolluvathiyar
10-01-2008, 05:42 AM
பாத்துங்க, ஓவரா கோதிவிட்டா கவிதைக்கு பதில் கதறலா வந்துரும்