PDA

View Full Version : இறுதி கணக்கு

சுகந்தப்ரீதன்
27-11-2007, 08:41 AM
உயிர்போகும் தருவாயில்
உயிர்பெற்ற கணக்கிது..!

என் வாழ்வின்
இன்பங்களை கூட்டி
துன்பங்களால் கழித்து
வந்த விடையை என்
வாழ்நாட்களால் பெருக்கி
வாழ்ந்த நாட்களால்
வகுத்துப் பார்க்கையில்
எல்லோருக்கும் போலவே
சமவிகிதமாய் என் வாழ்வின்
சதவிகிதம்-எதிர்மறை குறியில்!

ஆர்.ஈஸ்வரன்
27-11-2007, 10:26 AM
உயிர் போகும் தருவாயில் உயிர் பெற்றமைக்கு நன்றி

தாமரை
27-11-2007, 10:56 AM
உயிர்போகும் தருவாயில்
உயிர்பெற்ற கணக்கிது..!

என் வாழ்வின்
இன்பங்களை கூட்டி
துன்பங்களால் கழித்து
வந்த விடையை என்
வாழ்நாட்களால் பெருக்கி
வாழ்ந்த நாட்களால்
வகுத்துப் பார்க்கையில்
எல்லோருக்கும் போலவே
சமவிகிதமாய் என் வாழ்வின்
சதவிகிதம்-எதிர்மறை குறியில்!

அது என்ன சதவிகிதமுங்கோ? மைனஸ்ல சதவிகிதம் காட்டுற முதல் ஆளு நீங்கதானுங்கோ!:icon_rollout:

விகடன்
28-11-2007, 02:27 AM
வாழ்க்கை கணக்கு என்பது இதைத்தானோ...

இருந்தாலும் உங்கள் கவியில் ஓரிடத்தில் மட்டும் விளங்கவில்லை
அதாவது,

வாழ்நாட்களால் பெருக்கி
வாழ்ந்த நாட்களால்
வகுத்துப் பார்க்கையில்
என்று சொல்லியிருக்குமிடத்தில், தேறிய முடிவு என்ன?
ஒன்றால் பெருக்குவதா?
ஏனெனில், இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்

தாமரை
28-11-2007, 03:38 AM
எல்லா வாழ்நாட்களிலும் வாழ்வதில்லை மனிதன்
எதையாவது உருப்படியாய் செய்யும் நாட்களில் மட்டுமே வாழ்ந்திருக்கிறான் என்று கணக்கு
அரை நிமிடம் மட்டுமே கூட
வாழ்ந்தோர் உண்டு
சிலர்
ஒராண்டுக்கு!

விகடன்
28-11-2007, 03:42 AM
புதுக்கதையாக இருக்கிறது...
புரிந்துகொள்ள மனம் மறுக்கிறது.
முயற்சிக்கிறேன் விளங்கிக்கொள்ள. :)

தாமரை
28-11-2007, 03:49 AM
புதுக்கதையாக இருக்கிறது...
புரிந்துகொள்ள மனம் மறுக்கிறது.
முயற்சிக்கிறேன் விளங்கிக்கொள்ள. :)

உதாரணம்
நீங்கள் தமிழ் மன்றம்
வராத நாட்கள்
வாழாத வாழ்நாட்கள் :lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
28-11-2007, 04:55 AM
உயிர் போகும் தருவாயில் உயிர் பெற்றமைக்கு நன்றி
மிக்க நன்றி ஈஸ்வரா...!

சுகந்தப்ரீதன்
28-11-2007, 04:57 AM
அது என்ன சதவிகிதமுங்கோ? மைனஸ்ல சதவிகிதம் காட்டுற முதல் ஆளு நீங்கதானுங்கோ!:icon_rollout:
குட்டிகரணம் போடாம..கூட்டி கழிச்சு பாருங்கண்ணா.. என் கணக்கு சரியா வரும்..!

சுகந்தப்ரீதன்
28-11-2007, 05:04 AM
புதுக்கதையாக இருக்கிறது...
புரிந்துகொள்ள மனம் மறுக்கிறது.
முயற்சிக்கிறேன் விளங்கிக்கொள்ள. :)
விராடன் அண்ணா.. விளக்கத்தை தாமரை அண்ணா தெளிவாகவே கூறிவிட்டார்..! வாழ்நாட்களெல்லாம் வாழ்ந்த நாட்களாகாது.. உதாரணத்திற்க்கு உடலில் உயிர் இருந்தும் உணர்வில்லாமலிருக்கும் படுக்கையில் இருக்கும் மனிதர்களை பார்த்திருப்பீர்கள்.. அவர்களின் வாழ்நாட்களில் அந்த தினங்களும் கணக்கில் கொள்ளப்படும்.. ஆனால் வாழ்ந்த நாட்களில் அவை கணக்கில் வருவதில்லை...!

தாமரை
28-11-2007, 05:17 AM
குட்டிகரணம் போடாம..கூட்டி கழிச்சு பாருங்கண்ணா.. என் கணக்கு சரியா வரும்..!

என் வாழ்நாளில் ஒரே ஒரு விநாடி வாழ்ந்திருந்தாலும் சதவிகிதம் பிளஸ்தான் தம்பி.. அப்புறம் அப்படி ஒரு விநாடி கூட இல்லைன்னாலும் பூஜ்யம் தான். அதுக்கு கீழே :icon_rollout: போட்டாலும் :icon_nono:

சுகந்தப்ரீதன்
28-11-2007, 05:30 AM
என் வாழ்நாளில் ஒரே ஒரு விநாடி வாழ்ந்திருந்தாலும் சதவிகிதம் பிளஸ்தான் தம்பி.. அப்புறம் அப்படி ஒரு விநாடி கூட இல்லைன்னாலும் பூஜ்யம் தான். அதுக்கு கீழே :icon_rollout: போட்டாலும் :icon_nono:
ஒத்துக்குறேன் அண்ணாச்சி.... குட்டி கரணம் போட்டா அப்புறம் எப்படி நடக்க முடியும்..?:wuerg019:

கண்மணி
28-11-2007, 05:32 AM
ஒத்துக்குறேன் அண்ணாச்சி.... குட்டி கரணம் போட்டா அப்புறம் எப்படி நடக்க முடியும்..?:wuerg019:

நிஜமாவா??? :confused: "க்" விட்டு மாட்டிகிட்டீங்களா?:lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
28-11-2007, 05:53 AM
நிஜமாவா??? :confused: "க்" விட்டு மாட்டிகிட்டீங்களா?:lachen001::lachen001:
அய்யோ அது குட்டிக்கரணம் இல்லீங்க... குட்டி(பாப்பா):icon_rollout:கரணம் போடறத சொன்னேன்..! (வர வர மன்றத்துல உளவுத்துறை சேர்ந்தவங்க..உற்சாகமா வேலை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க...)

கண்மணி
28-11-2007, 06:03 AM
அய்யோ அது குட்டிக்கரணம் இல்லீங்க... குட்டி(பாப்பா):icon_rollout:கரணம் போடறத சொன்னேன்..! (வர வர மன்றத்துல உளவுத்துறை சேர்ந்தவங்க..உற்சாகமா வேலை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க...)

கரணம் போடற குட்டிக்கு நடக்கத் தெரியாதா? கதை விடறீங்களே:sprachlos020:

சுகந்தப்ரீதன்
28-11-2007, 07:21 AM
கரணம் போடற குட்டிக்கு நடக்கத் தெரியாதா? கதை விடறீங்களே:sprachlos020:
யப்பப்பா.. எப்படியோ..கண்டுபுடிச்சிட்டீங்களே கண்மணி... வாழ்த்துக்கள்..:icon_b:!

அனுராகவன்
03-05-2008, 06:53 AM
நன்றி சுபி!!
கவிதை அருமையாக உள்ளது...
தொடர்ந்து எழுதுங்கள்..
இறுதி கணக்கு என்றும் வராமல் இருக்கதான் கடவுளை வேண்ட வேண்டும்..