PDA

View Full Version : உலகிலேயே 5வது இடத்தில் ஈழப்பாடல்



kampan
27-11-2007, 07:35 AM
"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்" என்ற பாடல் சிறந்த பத்துப்பாடல்களில் வரிசையில் ஐந்தாவது இடம் பிடித்து உள்ளது. மேலதிக செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்குங்கள்..

http://www.bbc.co.uk/worldservice/us/features/topten/

கம்பன் ஆங்கிலப்பதிவுகளை தவிர்த்து உங்கள் பதிவுகள் நீக்கப்படுவதை தவிருங்கள்.-அமரன்

விகடன்
27-11-2007, 07:48 AM
பெருமைப்படவேண்டிய விடயம்.
அதிலும்,
மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், இசைக்கருவிகளுடன் வெற்றிகரமான செயலொன்று.

Narathar
27-11-2007, 07:49 AM
பெருமைப்பட வேண்டிய விஷயம்

சிவா.ஜி
27-11-2007, 07:57 AM
மிகப் பெருமையாய் இருக்கிறது.சந்தோஷம் ஏற்படுகிறது.பகிர்வுக்கு நன்றி கம்பன்.

அமரன்
27-11-2007, 08:08 AM
1995 ஆம் ஆண்டு யாழ்நகரைவிட்டு ஒட்டுமொத்த மக்களும் தென்மராட்சி பிரதேசத்துக்கு இருந்த ஒரே ஒரு குறுகிய பாதையால் இடம்பெயர்ந்தபோது எழுதப்பட்ட பாடலாக இருக்கவேண்டும். அக்காட்சியை காணொளியில் பார்த்துக்கொண்டு பிண்ணனியில் ஒலிக்கும் இப்பாடலை கேட்கும்போது இப்போதும் மனது கனக்கும்..

அன்புரசிகன்
27-11-2007, 08:19 AM
உண்மைதான் அமரா...

இன்னும் ஒரு பாடல் வந்தது. குருவிக்கூட்டம் போல எங்கள் வாழ்விருந்தது என்ற பாடல்....

இடம் கிடைத்தது சிறப்புத்தான்.

ஆனால் அந்த இடம் கிடைத்த அளவிற்கு சர்வதேசத்திற்கு நம் உணர்வுகள் புரியவில்லையே...

விகடன்
27-11-2007, 08:32 AM
ஆனால் அந்த இடம் கிடைத்த அளவிற்கு சர்வதேசத்திற்கு நம் உணர்வுகள் புரியவில்லையே...

கவலை வேண்டாம் அன்பு,
சர்வதேசத்திற்கு இனி மெல்ல மெல்ல புரிய வரும்.

என்ன ஒரு கவலை என்றால்...,

அந்த வேளைகளில் நாங்கள் இருக்கமாட்டோம்.

அன்புரசிகன்
27-11-2007, 08:37 AM
கவலை வேண்டாம் அன்பு,
சர்வதேசத்திற்கு இனி மெல்ல மெல்ல புரிய வரும்.

என்ன ஒரு கவலை என்றால்...,

அந்த வேளைகளில் நாங்கள் இருக்கமாட்டோம்.

சரியாகச்சொன்னீர்கள்....
இதுவரைக்கும் தெரியாமல் இல்லை....
தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது சர்வதேசத்தின் இயல்பு....
ஒரு கட்டடம் தகர்ந்ததற்கு அமெரிக்காவின் எதிர்ப்பின் அளவின் 1 % ம் கூட இலங்கையில் குண்டுத்தாக்குதலில் இருக்கவில்லை.... இதிலிருந்து புரியவில்லையா...........
நமது பூட்டப்பிள்ளைகளின் காலத்திலும் சர்வதேசம் பார்க்குமா என்பது தெரியவில்லை...

ஓவியன்
27-11-2007, 12:32 PM
தகவலுக்கு நன்றி கம்பன்..!
__________________________________________________________________________________________________________________________

இந்தப் பாடலின் முழுமையான வரிகள் இதோ.....

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகுமிடம் தெரியாமல் - இங்கு
சாகும்
வயதினில் வேரும் நடக்குதே
தங்குமிடம் தெரியாமல்

கூடு கலைந்திட்ட குருவிகள் -
இடம்
மாறி நடக்கின்ற அருவிகள்.

ஒற்றை வரம்பினில் ஓடும்
இவர்களின் ஊரில் புகுந்தது
-ஆமி
ஒரு குற்றம் செய்யாதவர் முற்றத்தில்
ஆயிரம் குண்டுகள் விழுதே
-சாமி

சோகத்தின் கோடுகள் முகத்தில்
இந்த
சொந்தங்கள் சேருமா நிலத்தில்....

கூடி மகிழ்ந்திட்ட கோயில்
வயல்வெளி யாவும் இவரிழந்தாரே
நேற்று
பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் துறந்துமே
போகும் திசை அறியாரே....

நெஞ்சில் வழிவதோ துயரம்
வழி
நீளும் திசை இவர் பயணம்.....

தாயில் மடியினில் ஆசையுடன்
தலை சாய்த்து உறங்கிய நேரம்
வந்த பேய்கள் கொளுத்திய
தீயில் எரிந்தவர்
போகும் வழியெலாம் ஈரம்

மாடுகள் கூடவா அகதி
தமிழ்
மண்ணிலே ஏனிந்த சகதி

பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: திருமலைச் சந்திரன்

இந்த பாடலை ஒலிவடிவில் கேட்க விரும்பினால் இதனைச் (http://www.eelatamil.net/eelamsongs/index.php?l=8&p=ThamizheezhThiraippadapPaadalkal/poovum.smil&m=1)சுட்டவும் ....!

ஓவியன்
27-11-2007, 12:37 PM
ஆனால் அந்த இடம் கிடைத்த அளவிற்கு சர்வதேசத்திற்கு நம் உணர்வுகள் புரியவில்லையே...

சோகத்தைத் தாங்கிய உணர்வின் வலிகளுடன் படைப்பாளிகள்
அந்தப் பாடலைப் படைத்ததே அந்த பாடலின் வெற்றி....

பாடலை உணர்ந்தவர்கள் அது சொல்லும் வலிகளையும்
உணரும் நாள் வருமென நம்புவோம்.....

தீபன்
27-11-2007, 12:52 PM
உண்மைதான் அமரா...

இன்னும் ஒரு பாடல் வந்தது. குருவிக்கூட்டம் போல எங்கள் வாழ்விருந்தது என்ற பாடல்....

இடம் கிடைத்தது சிறப்புத்தான்.

ஆனால் அந்த இடம் கிடைத்த அளவிற்கு சர்வதேசத்திற்கு நம் உணர்வுகள் புரியவில்லையே...

வடு நிறைந்த தேசத்திலேயே அந்த வடு தரும் வலியை புரிந்து கொள்ளாமல் சோகங்களும் துயரங்களும் தங்கள் வீட்டு வாசலுக்குள் நுளையாதவரை சரிதானென இங்கேயே தொலைக்காட்சி தொடர்களிலும் களியாட்டங்களிலும் காலத்தை களிக்கும் நம்மவர்கள் இருக்கையிலே சர்வதேசம் புரிந்து கொள்ளவில்லையென கூப்பாடு போட்டுப் பயனென்ன நண்பா...?

அன்புரசிகன்
27-11-2007, 01:06 PM
வடு நிறைந்த தேசத்திலேயே அந்த வடு தரும் வலியை புரிந்து கொள்ளாமல் சோகங்களும் துயரங்களும் தங்கள் வீட்டு வாசலுக்குள் நுளையாதவரை சரிதானென இங்கேயே தொலைக்காட்சி தொடர்களிலும் களியாட்டங்களிலும் காலத்தை களிக்கும் நம்மவர்கள் இருக்கையிலே சர்வதேசம் புரிந்து கொள்ளவில்லையென கூப்பாடு போட்டுப் பயனென்ன நண்பா...?

ஆமோதிக்கிறேன் தீபன்...

என்ன செய்ய....

பட்டு தெளியவேண்டும் என்று எண்ணுதுகள்....