PDA

View Full Version : பிறவி இதய குறைபாடுகளுக்கு சர்ஜரி



பகுருதீன்
27-11-2007, 05:57 AM
.

.
சென்னை, அக்.2:பிறவியிலேயே இதய குறைபாடு களுடைய ஏழைக் குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவும் அறக்கட்டளை ஒன்றை மியாட் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
.
உலக இதய தினக் கொண் டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மியாட் மருத்துவ மனையில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் பிறவியிலேயே இதய குறைபாடுகளுடைய ஏழைக் குழந்தைகளின் அறுவைச் சிகிச்சை களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளை மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சைகள் அந்த மருத்துவமனையின் குழந்தைகள் இதய சிகிச்சை மையத்தின் மூலம் செய்யப்படும்.

"சிஎச்ஐஎம்இ' (இஏஐMஉ) என்ற இந்த அறக்கட்டளையை மருத்துவ மனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய அமைச்சர், குழந்தைகள்தான் நாட்டின் அஸ்தி வாரம் என்றும் அவர்களுடைய நலன் காக்க தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

அரசின் முயற்சிகளுக்கு பொது மக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றவர்களும் துணை நிற்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். குழந்தைகளுக்காக புதிய அறக்கட்டளை தொடங்கி இருக்கும் மியாட் மருத்துவமனையின் நடவடிக் கையை வரவேற்று பாராட்டிய அமைச்சர், அதற்கு அனைவரும் உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.

விழாவில் பேசிய மியாட் மருத்துவ மனை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர்.பி.வி.ஏ. மோகன்தாஸ், அதிக செலவு செய்து இதய நோய்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள முடியாத மிக வறிய நிலையில் உள்ள ஏழைகளின் குழந்தைகளுக்கு உதவுவதே தங்களுடைய அறக் கட்டளையின் நோக்கம் என்று கூறினார். இத்தகைய குழந்தைகளுக்கு அரசாங்கம் மட்டுமே தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவிட முடியாது என்றும் மோகன்தாஸ் குறிப்பிட்டார்.

நன்றி: மாலைச்சுடர்.காம்

நேசம்
27-11-2007, 06:14 AM
கருனை உள்ளத்துடன் இந்த சேவையை துவக்கிய மியாட் மருத்துவமனைக்கும்,நிர்வாக இயக்குனருக்கும் மனமார்ந்த நன்றி.பகிர்தலுக்கு ந்ன்றி தீன்

ஜோய்ஸ்
29-11-2007, 04:45 AM
நன்றி.சிறந்த செய்தி.