PDA

View Full Version : காருன்னா... இது தான்!



mgandhi
27-11-2007, 05:29 AM
காருன்னா... இது தான்!
http://www.dinamalarbiz.com/admin/news/1196057.jpg

கார் உலகில் மகுடம் சூட்டிய சூப்பர் கார் லம்போகினி. பிராங்க்பர்ட்டில் நடந்த 'ஆட்டோ ஷோ'வில், அனைவரையும் வைத்த கண் வாங்காமல் உற்றுநோக்க வைத்த கார்; தூரத்தில் இருப்பவர்களையும் சுண்டியிழுத்து 'தொட்டுப்பார்' என கூற வைத்தது. சூப்பர் கார்களை தயாரிக்கும் இத்தாலி நிறுவனத்தை, ஆடி நிறுவனம் எடுத்துக் கொண்டு, அதன் கார் விற்பனையை 10 மடங்கு உயர்த்தியது. இங்கே இருபதே லம்போர்கினி கார் தயாரானது. அமெரிக்காவின் போர் விமானத்தை நினைவூட்டும் தோற்றம்; முதலில் முற்றிலும் கம்ப்யூட்டரில் தான் தயாரானது. மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டது இந்த காரின் டிசைன்.காரின் பெரும்பாலான பகுதி 'கார்பன் பைபர்'ரால் ஆனது; கூரையும், கதவுகளும் ஸ்டீலால் ஆனது. முன் பகுதியில் ஊடுருவும் காற்று, இன்ஜினை 'கூல்' செய்கிறது. இன்ஜின், 6.5 லி.,கொள்ளளவு, 12 வால்வுகளை கொண்டதாக, சக்தி வாய்ந்ததாக உள்ளது. முகப்பு விளக்கு, 'பை - ஜெனான்' வகையைச் சார்ந்தது. இதில், பொருத்தப்பட்டுள்ள 'எல்இடி' விளக்குகள், பாய்ந்து செல்லும் அம்புபோன்ற தோற்றத்தை அளிக்கிறது. இன்ஜின் சக்தி என்ன தெரியுமா, 641 பி.எச்.பி., காரின் 'ரிம்' முற்றிலும் கார்பன் பைபரால் ஆனது. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு வித டிசைனைக் கொண்டுள்ளது.கார்பன் பைபர், அல்கண்டாரா, அலுமினியம் உலோக கலவையில் உன்னதமான படைப்பாக இந்த காரை கருதுகின்றனர். செல்லும் பாதையை காருக்குள் டிஷ் போர்டில் எதிரொலிக்கும் 'லிக்யுட் கிரைஸ்டல் டிஸ்பிளே' போர் விமானத்தின் 'காக்பி ட்டை' நினைவுபடுத்தும். இன்ஜின்வேகம், ரிவர்ஸ் மற்றும் வழக்கமான 'டிஸ்ப்ளே'க்கள் இதில் உள்ளன. உள்ளே பிரத்யேகமாக அமைக்கப் பட்டுள்ள 'ஜி - போர்ஸ்' மீட்டர், வாகனம் எதிர்கொள் ளும் திசையில் உள்ள விசைகளை தெரிவிக்கும். பல லட்சம் இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்தாலும், நம்ம ஊரு ரோடுக்கு சரிப்பட்டு வருமா? இந்த காரின் விலை என்ன தெரியுமோ...ஆறு கோடியே 20 லட்ச ரூபாய். இதோடு வரியையும் சேர்த்துக் கொள்ளுங் கள்; ரூ.10 கோடியை தொட்டு விடும்.

தேவிப்ரியா
11-12-2007, 11:43 AM
விலை கேட்டவுடன் மயக்கம் வருகிறது.

மற்றபடி செய்தி தந்ததற்கு நன்றி

அறிஞர்
12-12-2007, 10:59 PM
வாவ் அருமையான கார்.. வேறு என்ன என்ன வசதிகள் இருக்கிறது என ஆராயவேண்டும்.

அன்புரசிகன்
13-12-2007, 02:19 AM
சூப்பரான கார். ஆனா 10 கோடி.:sprachlos020::eek:........... வேணாம். இது கூடாத கார்.


வாவ் அருமையான கார்.. வேறு என்ன என்ன வசதிகள் இருக்கிறது என ஆராயவேண்டும்.

உங்க வீட்டுக்கு இன்கம் டக்ஸ் காரர்கள் வரப்போகிறார்கள். :D