PDA

View Full Version : அமெரிக்காவிலும் நம்மாளுங்க 'டாப்'



mgandhi
27-11-2007, 05:23 AM
அமெரிக்காவிலும் நம்மாளுங்க 'டாப்'

அமெரிக்காவில், குடியேறியுள்ள வெளிநாட்டவரில், அதிக சம்பளம் வாங்குவது, அதிக சொத்து சேர்ப்பதில் இந்தியர் தான் முதலில் உள்ளனர்.மருத்துவம் முதல் சாப்ட்வேர் வரை, எல்லா துறைகளிலும், 30 ஆண்டுகளாக பரவி உள்ள இந்தியர்கள், இரண்டாவது தலைமுறையினர் கூட வளர்ந்து வேலைக்கு போய்வருகின்றனர்.
அமெரிக்காவில் குடியேறி உள்ள வெளிநாட்டவரில், இந்தியர்கள் பல வகையில் முதலில் உள்ளனர். படிப்பில் ஆரம்பித்து, சொத்து சேர்ப்பது வரை, அவர்களை சீனர்கள் கூட முந்த முடியவில்லை.இதுகுறித்து, சான்ஜோஸ் மெர்க்குரி நியூஸ் பத்திரிகை வெளியிட்ட தகவல்கள்:

* அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவரில், அதிகமாக உள்ளவர்கள், இந்தியர், மெக்சிகோவினர், சீனர்கள் மற்றும் வியட்நாமியர்.

* இவர்கள் தான், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

* அமெரிக்காவில் உள்ள மொத்த இந்தியரில், மூன்றில் இரண்டு பங்கினர், அங்கே பிறந்த இரண்டாம் தலைமுறையினர்.

* பத்தாண்டுகளாக வேலை செய்து வரும் சராசரி அமெரிக்க இந்தியர் சம்பளம் ரூ. 50 லட்சத்தை தாண்டும்; மற்ற வெளிநாட்டவர் சம்பளம் 35 லட்சம்.

* வீடு வாங்குவதிலும் இந்தியர் தான் முதல். அமெரிக்காவில் இரண்டு கோடி ரூபாய்க்கு வீடு வாங்குவது என்பது, ஐந்தாண்டு பணி புரிந்தாலே போதும். நான்கு கோடிக்கு வீடு வாங்குவோர் கணிசமாக உள்ளனர்.

* மற்ற வெளிநாட்டவர், அதிகபட்சம் மூன்று கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியுள்ளனர்.

* வேலையிலும் ஊதியத்திலும் மவுசை தருவது, இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள ஆங்கில திறன் தான்.

* ஆங்கிலம் பேசுவதில், சீனர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள சீனர்களில், 40 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் பேச தெரியாது.

* மற்ற வெளிநாட்டவர், சாதா வேலைகளில் இருந்தாலும், இந்தியர் பெரும்பாலோர், கவுரவமும், சம்பளத்தையும் அதிகம் தரும் 'ஒயிட் காலர்' வேலையில் தான் உள்ளனர்.

* அமெரிக்க பொருளாதாரம், வர்த்தகத்துக்கு அதிக ஒத்துழைப்பு தருவதிலும் இந்தியர் முன்னணியில் உள்ளனர்.

* அமெரிக்காவில் இருக்கும் இந்தியரில், ஐந்தில் நான்கு பேர், திருமணம் ஆகாதவர்கள்.

மதி
27-11-2007, 05:28 AM
நல்ல புள்ளிவிவரம் காந்தி..!
தகவலுக்கு நன்றி.

நேசம்
27-11-2007, 06:24 AM
பெருமைப்பட கூடிய விசயமா இருக்கிறது.தகவலுக்கு நன்றி காந்தி அண்ணா

மாதவர்
02-12-2007, 09:27 AM
கடைசி தகவல் மிக முக்கியமானது.
5இல் 4 பேருக்கு திருமணம் ஆக வில்லை.

மயூ
02-12-2007, 01:17 PM
4 இந்தியப் பெண்களுக்கு அமெரிக்க மாப்பிளளை இருக்கிறன்றது... 1 இந்தியப் பெண் ஏமாற்றப்்பட வாய்ப்பிருக்கின்றது! :)

சிவா.ஜி
02-12-2007, 01:34 PM
பெருமைப் படக்கூடிய செய்தி.தகவலுக்கு நன்றி மோகன்காந்தி.