PDA

View Full Version : காதல் குளிர் - 10



gragavan
26-11-2007, 06:14 PM
சென்ற பகுதியை இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13432) படிக்கவும்

"என்னது ப்ரகாஷாவைக் காணமா? என்ன சொல்ற?" தூக்கக் கலக்கத்திலும் கடுகடுத்தான் சப்யா.

"ஹலோ...என்ன கடுகடுப்பு? காணம்னு சொல்றேன்." பதில் கடுகடுப்பு சித்ராவிடமிருந்து.

"சரி... மொபைல்ல கூப்புடு. வெளிய வாக்கிங் போயிருப்பான்."

"அதான் இங்க இருக்கே. நேத்து அவன் மெடிக்கல் ஷாப் போனப்புறம் பாத்தேன். டேபிள்ளயே வெச்சிட்டுப் போய்ட்டான். அது அங்கயே இருக்கு. எனக்கென்னவோ அவன் திரும்பி வந்தானோன்னே தெரியலை. பயமாருக்கு சப்யா?"

சப்யாவையும் கவலை கொஞ்சம் கட்டிப்பிடித்தது. "ரம்யா கிட்ட சொல்லீட்டுப் போயிருப்பானோ? அவ கிட்ட கேப்போமே"

"ம்ம்ம்ம்... கேக்கலாம். இரு நானே கேக்குறேன்." லேசாகத் திறந்திருந்த கதவைத் தள்ளியவள் அப்படியே திரும்பவும் மூடிவிட்டு வந்தாள்.

"என்னது கேக்காம... கதவ மூடீட்டு வந்துட்ட? தூங்குறாளா இன்னும்?"

சத்தம் போடாதே என்று சைகை காட்டி விட்டு சப்யாவின் கையைப் பிடித்து கிச்சனுக்குள் கூட்டிச் சென்றாள் சித்ரா. கிசுகிசுக்குரலில் சொன்னாள்.

"ப்ரகாஷாவும் உள்ளதான் தூங்குறான். அதான் கதவை திரும்பவும் மூடீட்டேன்."

"ஓ உள்ளதான் தூங்குறானா? அதுக்கு ஏன் இந்த கிசுகிசுப்பு?"

"ஐயோ...மெதுவாத்தான் பேசேன். தூங்குறான்னா....தூங்குறான். புரிஞ்சிக்கோடா மரமண்டை."

நறுக்கென்று கொட்டினான். "மண்டு....ஒடனே அதான் நெனப்பா ஒனக்கு....நம்மள மாதிரியே எல்லாரையும் நெனச்சா எப்படி? உள்ள சும்மா தொணைக்குப் படுத்திருப்பான்."

சப்யாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு காதருகில் சொன்னாள். "ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான். அவன் நெஞ்சுல தலைய வெச்சு இவளும் கட்டிப் புடிச்சிக்கிட்டு தூங்குறாளா? ஜீன்ஸ் ஏன் தரைல இருக்கு? ரம்யாவோட டாப்சும்தான். வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா? இந்த விஷயத்துல என்னையவே நம்ப மாட்டேன். ரம்யாவையும் ப்ரகாஷாவை மட்டும் நம்பீருவேனா?"

சித்ராவை அணைத்துக் கொண்டான் சப்யா. நினைக்கும் பொழுதே அவனும் காதல் டிரெயினுக்கு டிக்கெட் எடுத்தான். "அப்படியா சொல்ற. இருக்கும். இருக்கும்." சித்ராவின் நெற்றியை எச்சில் படுத்தினான். "சரி.. இப்ப என்ன செய்யலாம்?"

"அட...ஒன்னுமே தெரியாதோ என்னோட ஷோனோர் பங்ளா ராஜாவுக்கு. அவங்களா வெளிய வரட்டும். கடைக்குப் போகனும்னு நீ ப்ரகாஷாவை வெளிய கூட்டீட்டுப் போ. அவனே ஏதாச்சும் சொல்வான். எங்கிட்ட காட்டுன பேச்சுத் திறமைல கொஞ்சத்த அவன் கிட்ட காட்டு. சரியா? நான் ரம்யாவை ஒரு வழி பண்றேன்."

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ப்ரகாஷா வெளியில் வந்தான். எதுவும் நடந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. சித்ரா குடுத்த டீயைக் குடித்தான்.

"சப்யா, என்னோட பிரஷ் காணோம். ஹொசா பிரஷ் வாங்கனும். வர்ரியா கடைக்குப் போகலாம்?" அவனே சப்யாவைக் கேட்டான்.

"புது பிரஷ்ஷா...வீட்டுலயே இருக்கே. எப்பவுமே ரெண்டு ஸ்பேர் பிரஷ் வெச்சிருப்போம். இரு எடுத்துட்டு வர்ரேன்." பெருமிதத்தோடு எழுந்தான் சப்யா.

பெட்ரூமுக்குள் நுழையப் போனவனை முறைப்போடு தடுத்தாள் சித்ரா. "அந்த பிரஷ் அன்னைக்கு ஒங்க காக்கா வந்தப்ப குடுத்துட்டேனே. புது பிரஷ் வீட்டுல இல்ல." புரிந்து கொண்டு வழிந்தான் சப்யா. "ஆமா ப்ரகாஷா...அன்னைக்கு சித்தப்பா வந்தப்போ சித்ரா எடுத்துக் குடுத்துட்டா. வா..கடைக்குப் போகலாம்."

சொல்லி வைத்த மாதிரி அவர்கள் வெளியே சென்றதும் ரம்யா வெளியே வந்தாள். அவள் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத மகிழ்ச்சி அவள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்து போனது. மறைக்க மறைக்க வெளியே தெரிந்தது.

"என்னடி...இப்ப ஒடம்பு எப்படியிருக்கு?"

கேட்ட சித்ராவை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ஏய்...நான் சித்ரா. ப்ரகாஷா இல்ல." சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்ரா.

"ஆமா....என்னடி இது? நேத்து சாந்தரந்தான் அவ்ளோ பேசுன? என்னென்னவோ கேட்ட. கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி? என்னாச்சு? எல்லாமே முடிஞ்சிருச்சா?"

தலையை ஆட்டி ஆமாம் என்றாள் ரம்யா.

"அடிப்பாவி. வெச்சாக் குடுமி...செரச்சா மொட்டையா? இப்ப அவங்க அம்மா அழ மாட்டாங்களா? அழுதா என்ன செய்வ?"

ரம்யாவின் வெட்கப் பனி விலகியது. "நீ கேக்குறது சரிதான். நேத்து அவன் எலக்ட்ரால் கொண்டு வந்து குடுத்தான். குடிச்சப்புறம் பக்கதுல கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டுத்தான் வெளிய போனான். போனவனை நாந்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. அவனையும் உள்ளயே இருக்கச் சொன்னேன். அவன் இருக்குறது பாதுகாப்பா இருந்துச்சு. அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு."

"நடந்ததெல்லாம் சரிதான். எந்த நம்பிக்கைல இப்பிடி செஞ்ச? அவன் விட்டுட்டுப் போய்ட்டான்னா?"

"போக மாட்டான்" ரம்யாவின் குரல் பெல்ஜியன் வைரமானது.

"எப்படிச் சொல்ற?"

"தெரியாதுடி. அவனை நான் நம்புறேன். நேத்து சாந்தரம் அவனை என்னால நம்ப முடியலை. ஆனா இப்ப முடியுது. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதுக்கு நானே பொறுப்பு. என்னோட ப்ரகாஷா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு."

"என்னது....உன்னோட ப்ரகாஷாவா? ம்ம்ம்ம்...நல்லாரு தாயே." சிரித்துக்கொண்டே ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தொடரும்....

இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவரை படித்துப் பாராட்டி நிறைகுறைகளை எடுத்துச் சொன்ன நீங்கள் அடுத்த பகுதியையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

பின் குறிப்பு

ரம்யாவின் காதில் ப்ரகாஷா சொன்ன கன்னடக் கவிதை. மொழி மாற்றப்பட்டு உங்களுக்காக.

சர்க்கரை நோயாளிக்கும் பரிந்துரைப்பேன்
முத்தத்தை விருந்தென
தித்தித்தாலும் மருந்தென

- மொழிபெயர்ப்பாளர் (ப்ரகாஷாவின் ரம்யா)

தொடரும்

மதி
26-11-2007, 06:25 PM
ஆஹா..
உங்ககிட்ட சொன்னேனே..இதுவரை வழக்கமா வர்ற "controversial" விஷயங்கள் இல்லேனு..
முடிவினை ஆவலுடன் எதிர்பார்த்து....

அன்புரசிகன்
26-11-2007, 06:37 PM
கதை நன்றாகவே நகர்ந்திருக்கிறது.... அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

மலர்
26-11-2007, 08:20 PM
ராகவன் அண்ணா..
காதல் குளிர் மட்டும்.. எப்பவும் இளமை + புதுமை..
கொஞ்சம் சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க...

அடுத்த பாகத்துல இதெல்லாம் கனவுன்னு கதையை முடிச்சிருவீங்களா....


அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

ஏன் அண்ணா
கதையை இவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீங்க..

அன்புரசிகன்
27-11-2007, 03:28 AM
ஏன் அண்ணா
கதையை இவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீங்க..

ரொம்ப feelings ஆக இருக்கோ???

lolluvathiyar
27-11-2007, 04:38 AM
இன்னும் முடிவு என்ன ஆகும் என்று சஸ்பன்சாகவே வைத்து இருகிறீர்கள். முடிவு என்ன ஆகும் என்பதை விட இந்த பாகத்தில் ஏதோ செருடுகிறது. இருந்தாலும் உன்மையான உனர்ச்சிகளை ஏற்று கொள்ளதான் வேண்டும்

மன்மதன்
27-11-2007, 06:06 AM
கதை நன்றாகவே நகர்ந்திருக்கிறது.... அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி இருக்கே.. :D:D

Ram-Sunda
29-11-2007, 05:16 AM
அருமையா இருக்கு, அடுத்த பாகத்தை படிக்க ஆவா...
வாழ்த்துக்கள்

ஓவியா
30-11-2007, 07:57 PM
சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி இருக்கே.. :D:D

:D:D:D:D

அன்புரசிகன்
01-12-2007, 09:13 AM
சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி இருக்கே.. :D:D

என்னை பொறுத்த வரை எந்த மிஸ்டேக்கும் இல்லீங்கோ...

http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif http://www.lovetack.com/home/images/smilies/georgy.gif

அக்னி
01-12-2007, 10:49 AM
கண்ணியமான, அருவருப்பற்ற வார்த்தை விபரிப்புக்களுக்கு சபாஷ்...
ஒருவரும் இந்தக் கோணத்தில், சிந்திக்கவில்லை.
மிகவும் நேர்த்தியான, அழகான திருப்பம்...
மிகுந்த பாராட்டுக்கள்...



சர்க்கரை நோயாளிக்கும் பரிந்துரைப்பேன்
முத்தத்தை விருந்தென
தித்தித்தாலும் மருந்தென
அழகிய கவிதை...

தித்திப்பில் மயக்கம்...
முத்தம்...