PDA

View Full Version : பிள்ளையார் சுழி



ஆதி
26-11-2007, 04:24 PM
பரணேறிய என் பழைய கவிதையில் இருந்து..

அழியாமல் என்னுள்
ஒட்டி இருக்கிறது
உயிர் மாதிரி
உன் ஞாபகங்களும்..

எதிர்பாராத வினாடிகளில்
என்னையும் மீறி
ஏதாவது திசையில்
தலை நீட்டிவிடிகின்றன
பழைய சம்பவங்கள் எல்லாம்..

எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?

யாப்புப் போல நீ
வார்த்தைகளின் ஊடே
வசப்படாமல் போனாலும்
எழுத தகிக்கிற
ஏக்கமாயாவது நெஞ்சுக்குள் இரு..

கடவுளும் காதலித்ததை
உன்னைக் கண்டப் பிறகே
உணர்ந்தேன்..

மாற்றப் பட்டேனா..
மாற்றமுற்றேனா..
தெரியவில்லை ?

ஒவ்வொரு வினாடியிலும்
ஒரு பருவ மாற்றம்
நிகழ்கிறது..

வண்ண தாஜ்மகால்
உனை நோக்கி
என் எண்ண யமுனைத்
திரும்புகிறது..

தண்ணீரில் விழுந்த
கீறல் போல்
எதுவும் புலப்படாதவளாய் நீ..

பிள்ளையார் சுழிப் போற்
புரியாத எழுத்தா
என் காதல் ?

-ஆதி

ஷீ-நிசி
26-11-2007, 04:44 PM
நன்றாக இருக்குது ஆதி!


எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?

இந்த வரிகள் ரொம்பவே ரசிக்க வைக்குது! வாழ்த்துக்கள்!

யாப்புப் போல நீ
வார்த்தைகளின் ஊடே
வசப்படாமல் போனாலும்
எழுத தகிக்கிற
ஏக்கமாயாவது நெஞ்சுக்குள் இரு..

பூமகள்
26-11-2007, 04:53 PM
எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?
சரியான கேள்வி..!
நிதர்சன நிலை..!

வண்ண தாஜ்மகால்
உனை நோக்கி
என் எண்ண யமுனைத்
திரும்புகிறது..
இந்த ஒப்புமை அருமை..!!

எல்லா வரிகளுமே அற்புதம்..!
வாழ்த்துகள் ஆதி..!!

ஆதி
26-11-2007, 04:59 PM
நன்றாக இருக்குது ஆதி!

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஷி-நிசி

வெண்பா எழுத யாப்பு படித்து கொண்டிருந்த காலத்தில் எழுதியது..

மீண்டும் என் நன்றிகள்..

ஆதி
26-11-2007, 05:05 PM
சரியான கேள்வி..!
நிதர்சன நிலை..!


என் நண்பன் ஒருவனுக்காய்
எழுதிக் கொடுத்த கவிதை இவை..

வார்த்தைகளின் வலிமை - நம்
வாழ்க்கையில் பலிக்கும்
போதுதான் புரியும்..




எல்லா வரிகளுமே அற்புதம்..!


கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த
காலம்
கடைசி கவிதையாய்
காதலை முறிக்குமுன்
கொடுக்க எண்ணி எழுதக்
கோரினான் புனைந்து தந்தேன்

வருத்தங்கள் எல்லாம்
செயர்க்கையானது என்பதால்
வார்த்தைகளில்
வலிகள் குறைவாக இருக்கலாம்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பூமகள்..

ஓவியா
26-11-2007, 05:11 PM
வணக்கம் ஆதி. நலமே காண்க.

உங்களுடைய எழுத்து சிற்ப்பியில் உதிக்கும் முத்துகளின் ஒன்றை இன்றுதான் கண்டேன். அபாரம்.

இன்றுதான் நானே யோசித்தேன் பிள்ளையார் சுழிக்கு அர்த்தம் இருக்கு ஆனால் அது உண்மையிலே புரியாத எழுத்துதான். {(உ) இந்த பிள்ளையார் சுழியல்ல} அந்த கடைசி வரி 'நச்'.

கவிதை மிகவும் யதார்த்தம் நிரைந்து காணப்படுகிறது. ஒவ்வொறு வரிகளும் சிறப்பாகவே இருக்கின்றன. பாராட்டுகிறேன்

தங்களின் சிந்தனையென்னும் சிற்பியிலிருந்து இன்னும் அதிகமான கவி முத்துக்களை இங்கு பிரசவிக்க எனது வாழ்த்துக்கள்.

ஆதி
26-11-2007, 05:27 PM
இன்றுதான் நானே யோசித்தேன் பிள்ளையார் சுழிக்கு அர்த்தம் இருக்கு ஆனால் அது உண்மையிலே புரியாத எழுத்துதான். {(உ) இந்த பிள்ளையார் சுழியல்ல} அந்த கடைசி வரி 'நச்'.


பழமைவாய்ந்த மொழிகளை எழுதும் விதத்திற்கு உண்மையில் உட்பொருள் உண்டு.. அதாவது..

ஹிப்ரூ போன்ற மொழிகளை தோலில் எழுத ஆரம்பித்தார்கள், தோலில் எழுதும் போது இடமிருந்து வலம் எழுத ஏதுவாய் இருக்காது, அது மட்டுமின்றி கிழிந்தும்விடும்.. அதனால்தான் வலமிருந்து இடம் எழுதினார்கள்..

சீனம் போன்ற மொழிகளை மூங்கிலில் எழுத ஆரம்பிதனர், அதனால் தான் இன்றும் மேலிருந்து கீழாய் எழுதுகிறார்கள்..

தமிழை ஓலைச்சுவடியில் எழுதினார்கள்.. எழுதாணியில் எழுதியதால் நிறுத்தி நிதானமாய் எழுத இயலாது.. துவங்கிவிட்டால் தொடர்ந்து எழுத வேண்டும்.. சுவடி நல்லதா பழுதுள்ளதா என அறியவே மேலே ஒரு கிறுக்கு கிறுக்குவார்களாம் அதைதான் பிள்ளையார் சுழி என்கிறோம்..

அதானால்தான் பிள்ளையார் சுழிப்போல் புரியாத எழுத்தா என வினவினேன்.

உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி..
தொடர்ந்து ஊக்கம் தருவீர் என்கிற நம்பிக்கையுடன் ஆதி

ஓவியா
26-11-2007, 05:30 PM
ஓ அப்படியா கதை.

நல்ல விளக்கம். நன்றி.

அமரன்
26-11-2007, 06:13 PM
பிள்ளையார் சுழிபோட்டு
கட்டுரைகளை எழுதினால்
தடைபடாது எழுத்து..
மிளிரும் எழுத்து..
கட்டு உரையின்
சாயம் வெளுத்தது ஆதி..
முதற்கண்
நன்றி நவில்கின்றேன்..
+++++++++++++++++++++
வாழ்க்கை என்னும் ஏட்டில்
காலம் என்னும் எழுத்தாணி
எழுதிய அங்கங்களில்
முதன்மையானது காதல்...

அன்பு மட்டும் கொண்டு
துய்மையாக இருந்த வண்ணத்தில்
கலப்படங்கள் அதிகரிக்க
வெளிக்காட்டத்
தயக்கம் காட்டுகின்றன ஏடுகள்
எழுதப்பட்டது தெரிந்தும்..
+++++++++++++++++++++++++
தேர்வுக்காக என்பது
ஏற்றுக்கொள்ள முடியாதது
கட்டுக்கதை வழி
ஏற்றுக்கொள்வேன்-வாழ்க்கைக்கு
காதலே பிள்ளையார் சுழி

யவனிகா
27-11-2007, 04:54 AM
நல்ல வரிகள்...ஆழமான ஈர வார்த்தைகள்...எப்போதும் போல ஆதியிடமிருந்து. நான் நினைத்ததையெல்லாம் பின்னூட்டமாகக் கண்டபின் என்ன பின்னூட்டம் இடுவதே என்று தெரியவில்லை.
தமிழுக்கு முதன்மைக் கடவுள் பிள்ளையார். அதனால் தானே பில்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கிறோம்.ஆனாலும் நீங்கள் அளித்த விளக்கம் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

ஆதி
27-11-2007, 06:49 AM
தமிழுக்கு முதன்மைக் கடவுள் பிள்ளையார். அதனால் தானே பில்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கிறோம்.ஆனாலும் நீங்கள் அளித்த விளக்கம் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

நம் முன்னோர்கள் நிலத்தை ஐந்தினையாக பிரித்திருந்தனர், அதை நீங்கள் நன்கு அறிவிர், சிந்தித்துப் பார்த்தால் யானைமுகத்தோன் எந்த தினையினராலும் வழிபடப்பட்டவனன்று.. சங்க இலகியினங்களிலும் அவனை வாழ்த்தி எங்கும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லை..
தவறாக என்னை எண்ண வேண்டாம் கணப்பதி தமிழ் தெய்வமில்லை..
பிள்ளையார் சுழியின் பின்புலம் நான் கண்டறிந்து தந்த விளக்கமில்லை..
தமிழ் அரிமா தேவநேய பாவானர், ஐய்யா அருளி இன்னும் பற்பல அறிஞர்கள் அகழ்ந்தாராய்ந்து நிரூபித்த ஒன்று இது..

உங்கள் தொடர்ப்பின்னூட்டத்திற்கு ஊட்டத்திற்கும் நன்றி..


-ஆதி

ஆதி
27-11-2007, 09:10 AM
பிள்ளையார் சுழிபோட்டு
கட்டுரைகளை எழுதினால்
தடைபடாது எழுத்து..
மிளிரும் எழுத்து..


நிதர்சனம் அமர்.. எழுத்தாணியில் எழுதும் போது தடைப்படாது எழுத்து.. அதற்காக தானே மெனக்கெட்டு கிறுக்கிப்பார்த்தார்கள்.. எழுதும் மிளிரும்.. அதாவது தெளிவாக இருக்கும்..


பிள்ளையார் சுழிப்பற்றி வினவினால், உங்கள் வரிக்கொண்டே விளக்க எளிதாயாக இருக்கும் என நம்புகிறேன்..

நல்ல கவிதைக்கு பின்னூட்டத்திற்கு நன்றி அமரன்..

-ஆதி

அமரன்
27-11-2007, 09:17 AM
அட...
கட்டுரைக்குள் கட்டுரைக்கட்டுமான இரகசியம்.. உரைத்த உங்களுக்கு பாராட்டுக்கள் ஆதி..
நான் சொல்லவந்தது பிள்ளையார் சுழி போட்டால் தேர்வில் தேறிடிலாமுன்னு ஒருசிலர் தப்பாக புரிந்து இருக்காங்க என்பதையே..நீங்க அதையே பாசிட்டாவாக பார்த்து இருக்கின்றீர்கள். மனமாரப்பாராட்டுகின்றேன்..

meera
27-11-2007, 02:38 PM
ஆதி, கவிதை நன்று. ஒவ்வொரு வரியும் அருமை என்றாலும்..என்னை கவர்ந்த வரிகள் இவை.




கடவுளும் காதலித்ததை
உன்னைக் கண்டப் பிறகே
உணர்ந்தேன்..

ஆதி
27-11-2007, 03:35 PM
ஆதி, கவிதை நன்று. ஒவ்வொரு வரியும் அருமை என்றாலும்..என்னை கவர்ந்த வரிகள் இவை.

எனக்கும் பிடித்த வரிகள் இவைதான் மீரா.. இந்த கவிதையில்..

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..

-ஆதி

நேசம்
27-11-2007, 08:08 PM
எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?

மாற்றப் பட்டேனா..
மாற்றமுற்றேனா..
தெரியவில்லை ?



பிள்ளையார் சுழிப் போற்
புரியாத எழுத்தா
என் காதல் ?

-ஆதி

எனக்கு அதிகம் பிடித்த வரிகள் இது தான் ஆதி.பிள்ளையார் சுழிக்கு இப்படி ஒரு விளக்கம் உண்டா..? வாழ்த்துக்கள் ஆதி

ஆதி
28-11-2007, 06:49 AM
எனக்கு அதிகம் பிடித்த வரிகள் இது தான் ஆதி.பிள்ளையார் சுழிக்கு இப்படி ஒரு விளக்கம் உண்டா..? வாழ்த்துக்கள் ஆதி

நன்றி நேசம் அவர்கட்கு.. தொடர்ந்து தரும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும்..

அன்பன் ஆதி

ஆதவா
06-12-2007, 02:43 PM
பழைய கவிதைகள், (இன்னுமிருந்தால் கொடுங்கள்) நம்மை திரும்பி பார்க்க வைக்கும் நினைவுகள் (நாளை ஒரு கவிதை எடுகிறேன். படித்துப் பாருங்கள்..)

ஞாபகங்கள் பின்னே ஓடும்போது இப்படித்தான் தட்டுத்தடுமாறி நுழைந்தோ நுழையாமலோ காதல் தொக்கி நிற்கும்.

பிள்ளையார் சுழி (உ) எதற்கு என்பது இதுவரையிலும் தெரியாது. நானும் இட்டதில்லை.

வெண்பா கற்கும் நேரத்தில் உதித்த கவிதை... அதை வைத்தே. பெரும்பாலான கருக்கள் நம்மிலிருந்தே உருவாகின்றன என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று?

வாழ்த்துகள் ஆதி.

ஆதி
06-12-2007, 03:04 PM
பழைய கவிதைகள், (இன்னுமிருந்தால் கொடுங்கள்) நம்மை திரும்பி பார்க்க வைக்கும் நினைவுகள் (நாளை ஒரு கவிதை எடுகிறேன். படித்துப் பாருங்கள்..)

ஞாபகங்கள் பின்னே ஓடும்போது இப்படித்தான் தட்டுத்தடுமாறி நுழைந்தோ நுழையாமலோ காதல் தொக்கி நிற்கும்.

பிள்ளையார் சுழி (உ) எதற்கு என்பது இதுவரையிலும் தெரியாது. நானும் இட்டதில்லை.

வெண்பா கற்கும் நேரத்தில் உதித்த கவிதை... அதை வைத்தே. பெரும்பாலான கருக்கள் நம்மிலிருந்தே உருவாகின்றன என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று?

வாழ்த்துகள் ஆதி.


நிதர்சனம் ஆதிவா, பழைய கவிதைகளில்தான் எத்தனைப் பழைய நினைவுகளின் இருப்புக்கள், பழையச் சம்பவங்களின் சேம்மிப்புகள்..
ஒரு குறும்படைத்தையே ஓட்டிவிடுகிறது விழிகளில்..

பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா..

ஒரு வேண்டுகோள்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13713

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=308380#post308380


இந்த இரு கவிதைகளையும் படித்து சொஞ்சம் பின்னூட்டம் தர வேண்டும்
குறைகளை சுட்டிக்காட்டினால் மிக மகிழ்வேன்..

ஆவலுடன் ஆதி

இளசு
10-12-2007, 08:54 PM
எழுதத் தகிக்கிற தாகம்..
நீரில் விழுந்த கீறல்
வண்ண தாஜ்மகால் - எண்ண யமுனை..

அழகான சொல்லோவியங்களின் உச்சமாய்
புரியாத எழுத்தா என்ற கருத்தோவியம்..

வாழ்த்துகள் ஆதி..

குறியீடாய் மாறிவிட்ட ஐதீக எழுத்து அது..
தூரத்துப் பார்வையையே மொழியாக்கி வளரும்
நம்மூர் ஊமைக்காதலுக்கும் இங்கே உவமையாய்..

மிகவும் ரசித்தேன்..

எழுத்துகள், எழுதுதல் பற்றி -உங்கள் மேல்தகவல்களால் சில கற்றேன்.

நன்றி..

jpl
11-12-2007, 12:15 AM
தண்ணீரில் விழுந்த
கீறல் போற்
எதுவும் புலப்படாதவளாய் நீ..
வித்தியாசமான கற்பனைக்குச் சொந்தகாரர் ஆதி.

ஆதி
11-12-2007, 09:15 AM
எழுதத் தகிக்கிற தாகம்..
நீரில் விழுந்த கீறல்
வண்ண தாஜ்மகால் - எண்ண யமுனை..

அழகான சொல்லோவியங்களின் உச்சமாய்
புரியாத எழுத்தா என்ற கருத்தோவியம்..

வாழ்த்துகள் ஆதி..

குறியீடாய் மாறிவிட்ட ஐதீக எழுத்து அது..
தூரத்துப் பார்வையையே மொழியாக்கி வளரும்
நம்மூர் ஊமைக்காதலுக்கும் இங்கே உவமையாய்..

மிகவும் ரசித்தேன்..

எழுத்துகள், எழுதுதல் பற்றி -உங்கள் மேல்தகவல்களால் சில கற்றேன்.

நன்றி..


தொடர்ந்துவரும் உங்கள் ஊக்கங்களும் பின்னூட்டங்களும் என் நன்றிகள்..

-ஆதி

சுகந்தப்ரீதன்
12-12-2007, 02:00 PM
எதிர்பாராத வினாடிகளில்
என்னையும் மீறி
ஏதாவது திசையில்
தலை நீட்டிவிடிகின்றன
பழைய சம்பவங்கள் எல்லாம்..

-ஆதி
கலக்கல் நண்பரே... புரியாத எழுத்தாய்..புரியாத புதிராய்.. என் காதலும் அவளின் செய்கைகளும்... நல்ல கற்பனைவளம்... வாழ்த்துக்கள் ஆதியாரே..!

ஆதி
13-12-2007, 04:25 AM
.
வித்தியாசமான கற்பனைக்குச் சொந்தகாரர் ஆதி.

நன்றி jpl அவர்கட்கு..

ஆதி
19-12-2007, 07:06 AM
கலக்கல் நண்பரே... புரியாத எழுத்தாய்..புரியாத புதிராய்.. என் காதலும் அவளின் செய்கைகளும்... நல்ல கற்பனைவளம்... வாழ்த்துக்கள் ஆதியாரே..!

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே..

-ஆதி

சிறுபிள்ளை
01-09-2009, 08:18 AM
கவிதை நன்றாக உள்ளது. நான் முதலில் இதை பார்த்தேன் இதில் விளக்கம் இருக்குமென்று. உள்ளே வந்ததும் தெரிந்தது கவிதை என்று. உங்களின் கவிப்புலமை வாழ்க*

ஆதி
02-09-2009, 04:30 PM
நன்றி சிறுபிள்ளை அவர்களே..

பிள்ளையார் சுழிப்பற்றியும் விளக்கம் இருக்கு, ஓவியா அக்காவின் பின்னூட்டத்திற்கு நான் இட்டிருக்கும் பதிலை பாருங்கள்