PDA

View Full Version : வாயில் நேர்வாய்



ஆதி
26-11-2007, 02:52 PM
என்னைத் திறந்து
என்னுள் நுழைந்து கொண்டாய்
இடப் பற்றாக்குறையால்
என்னை வெளியேறிய
நான்
உனக்குள் குடிபுக ஆவலாய்..

-ஆதி

பூமகள்
26-11-2007, 04:11 PM
என்னில் நீ..
உன்னில் நான்..!!
மாற்றம் நிகழ்வது
எப்போது..!!

தெரிந்த கரு..!
தெரியாத சாயலில்..!

வாழ்த்துகள் ஆதி.
தலைப்பு விளங்கவில்லையே..! :confused:
விளக்க முடியுங்களா ஆதி?

அமரன்
26-11-2007, 04:16 PM
கதிதேடிய உன்னால்
கதியில் அகதியான நான்
உன்னிடமே..
நிறையுடன் தஞ்சம் கோரி.!
தலைவாசலில்
என்னை நிறுத்துவாயா.

ஆதி
26-11-2007, 04:28 PM
தலைப்பு விளங்கவில்லையே..! :confused:
விளக்க முடியுங்களா ஆதி?
[/QUOTE]

வாயில் நேர்தல் எனின் கதவை திறந்து அழைத்தல்..

பின்னூட்டத்திற்கு நன்றி..

பரனேறிய பழைய கவிதையில் இருந்து

-ஆதி

ஆதி
26-11-2007, 05:09 PM
கதிதேடிய உன்னால்
கதியில் அகதியான நான்
உன்னிடமே..
நிறையுடன் தஞ்சம் கோரி.!
தலைவாசலில்
என்னை நிறுத்துவாயா.

பின்னூட்ட கவிதை அழகு.. நன்றி அமரன்

-ஆதி

ஓவியன்
28-11-2007, 04:49 AM
ஓ இடம் கொடுத்து
விட்டுத் தான்
இருக்க இடம்
தேடுவது தான்
காதலோ...!!

அருமை ஆதி..!!

ஆதி
28-11-2007, 09:30 AM
நன்றி ஓவியன் உங்கள் தொடர் பின்னூட்டத்திற்கு

-ஆதி

நேசம்
28-11-2007, 09:41 AM
இருக்க இடம் கிடைக்க்ம் போது,இருக்கும் இடத்தை விட்டு கொடுத்து தான் ஆகனும்.எளிய அழகான கவிதை.வாழ்த்துக்கள் ஆதி