PDA

View Full Version : ஆதவன் போட்ட ஆம்லெட்.

ஆதவா
26-11-2007, 02:37 PM
நேற்றைக்கு வீட்டில் யாருமில்லாததால் திடீரென ஒரு யோசனை.. நாமே சமைத்துவிடலாமே என்று.. எனக்கு சில சமையல்கள் தெரியும் என்றாலும் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம் என்ற ஆசை வந்திட்டது. முட்டை சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வாயில் எச்சில் ஊற கடைக்குப் போய் ஐந்து முட்டைகள் வாங்கிவந்தேன். முட்டைகள் ஒவ்வொன்றும் நிர்ணயிக்கப் பட்ட அளவை விட பெரியதாக இருக்கவே எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை குஞ்சுகள் உறங்கிக் கொண்டிருக்குமோ என்று... நமக்குத்தான் ரசனைகெட்ட ரசனையாச்சே!

முட்டையை சமைப்பதில் பல வகைகள் உண்டு. முட்டையை வேக வைத்து தின்னலாம், ப்ளையின் ஆம்லெட், வெங்காய ஆம்லெட், ஆப்பாயில் போன்றவை தோசை வகைகள். முட்டையில் குழம்பு இருக்கிறது. வருவல் இருக்கிறது. முட்டைப் பொறியல், முட்டை தோசை, முட்டை புரோட்டா, முட்டை சாம்பார், முட்டை போண்டா, முட்டைக்கரு பஜ்ஜி, என பல அயிட்டங்கள் இருக்கின்றன. வேகமாக செய்து சாப்பிடவேண்டும், குறைவான சமையல்பொருள்களே உள்ளது எனில், தோசை வகையறாக்களே எளிதானது. எனக்கு ஆரம்பத்திலேயே ஆம்லெட் போட்டு சாப்பிடவேண்டுமென்ற குறிக்கோள் இருந்ததினால் மற்ற அயிட்டங்கள் கண்ணுக்குத் தென்படவில்லை.

ஆம்லெட்டுக்குத் தேவையான பொருட்கள் : (ஒரு ஆம்லெட்டுக்கு)

பெரியதாகவும் அல்லாமல் சிறியதாகவும் அல்லாமல், ஒரு கோழிமுட்டை

ஒன்றரை பெரிய வெங்காயம்

இரண்டரை மிளகாய்கள், சிவப்பு என்றால் பிரச்சனையில்ல, பச்சை மிளகாய் எனில் ஒன்றரையே போதும்

தக்காளி சிறியது ஒன்று. ( கொஞ்சம் எண்ணெய், கடுகு, )

கறிவேப்பிலைகள் ஒன்றிரண்டு.

ஒரு சிறுகரண்டி உப்பு

ஒரு சிறுகரண்டியளவு பெப்பர்,

இதையெல்லாவற்றையும் விட, தோசைக்கல்லும், அடுப்பும் முக்கியம். இனி எப்படி ஆம்லெட் போட்டேன் என்பதை என் வாயிலாகவே சொல்கிறேனே.!!

முட்டையை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வெங்காயங்களை அறிந்தேன், ஆம்லெட்டுக்கு வெங்காயம் வெகு முக்கியம்.வெங்காயத்தை உரிக்க உரிக்க அதில் ஒன்றுமே இருக்காது என்று கவியரசர் சொல்லியிருக்கிறார்.. ஒன்றுமே இல்லாத வெங்காயமா நம்மை அழவைக்கிறது? இந்த மாபெரும் சிந்தனையோடு வெங்காயத்தில் சிலவற்றை உரித்து எடுத்து வைத்தேன். அடுத்து பச்சை மிளகாய் வேண்டும். அந்த நேரம் பார்த்து பச்சை மிளகாய் இல்லை. சிவப்பு மிளகாய்தான் இருந்தது. இதில் ஒரு அதிசயம் பாருங்கள். சிவப்பு கோபத்தைக் குறிப்பிடுகிறது, பச்சை சாந்தத்தைக் குறிப்பிடுகீறது. ஆனால் மிளகாயைப் பொறுத்தவரையில் நிலைமை தலைகீழ். சிவப்பு மிளகாயை விட பச்சை மிளகாய் காரம் அதிகம்... ரெண்டுக்கும் வித்தியாசம் ஏறும்போது தெரியாது. இறங்கும்போதுதான் தெரியும். :D

சரி விடுங்க... போனாப்போவுது என்று சிவப்பு மிளகாயை நறுக்கி வைத்துவிட்டு சில கறிவேப்பிலைகளைக் கிள்ளி, ஒரு பாத்திரத்தில் கொட்டினேன். தக்காளியை அறுத்து, சட்டியில் போட்டு தாழித்து தனியே எடுத்து வைத்திருந்தேன். தக்காளியை ஆம்லெட்டில் கலக்கிவிட்டால் சுவை இன்னும் கூடும், இந்த ரகசியம் நமக்குள் மட்டும் இருக்கட்டும். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். முட்டை ஐந்தையும் உடைத்து ஊற்றி கலக்கி, கொஞ்சம் உப்பு போட்டு, தயார் நிலையில் வைத்திருந்தேன். அடுத்தது அடுப்பு பற்ற வைக்கணுமே, லைட்டரைத் தேடி அடுப்பை பற்ற வைத்துவிட்டு, ஒரு கிரேட் சமையலுக்கு என்னை நான் தயார் செய்தேன்.

தோசைக்கல்லை எடுத்து, நெருப்பில் காயவைத்து எண்ணெய் கொஞ்சம் ஊற்றினேன். இப்போது முட்டைக் கலவையை தோசை போல ஊற்றிவிட்டு, சிறிது நேரம் தோசைக் கல்லில் காயவைத்தேன். வறுத்த தக்காளியை ஆங்காங்கே தெளிக்கவிட்டு சிறிதுநேரத்தில் நல்லபதம் வந்தபின்னர் பெப்பரைத் தூவிவிட்டு எடுக்க முயன்று ஒரு கரண்டி நோண்டினேன்.. அடடா! நாக்கில் தேன் ஊறியது. ஆம்லெட்டின் நிறம் என் நாவை துள்ளவைத்தது. பற்றாக்குறைக்கு வயிற்றுப் பசிவேறு! டேய் ஆதவா சீக்கிரம் வேக வையுடா என்று கிள்ளிவிட, ஆம்லெட்டைத் திருப்ப முயல்கையில்...

ஒரு கையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஆம்லெட்டை திருப்பிக் கொண்டிருக்க, நன்றாக ஒட்டிக் கொண்டது. அடடா! என்னடா இது? இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி, அடுப்பின் நெருப்பளவை சற்று குறைத்து தோசைக் கரண்டியால் வரக்கு வரக்கு என்று ஆம்லெட்டைத் திருப்பிப் போட போராடினேன். கொஞ்ச நேரத்திலேயே கருகும் வாடை வந்துவிட்டது. என் வயிறோ என்னை அல்லோலகல்லோலப் படுத்திவிட்டது. அட போங்கப்பா நீங்களும் உங்க ஆம்லெட்டும் என்று நானே ஒரு நிலையில் சலிப்பாகிவிட, சரி இது போனால் என்ன இன்னொன்று முயற்சி செய்வோம் என்று நினைத்துக் கொண்டே அடுத்ததையும் ஊற்றினேன். ஓரளவுக்கு என் வழிக்கு வந்தாலும் ஆம்லெட்டின் முழு உருவம் என் கைக்கு வரவில்லை. ஒரு வழியாக தட்டில் எடுத்துப் போட்டு ஏற்கனவே நுனிக்கி வைத்திருந்த மிளகுத் தூளை அங்கங்கே தூவி, எடுத்து வாயில் வைப்பதற்குள் சூடு தாங்க மாட்டாமல் மீண்டும் தட்டிலேயே போட்டுவிட்டேன். வயிறு, பொறுமை மவனே பொறுமை என்றது. மெல்ல மெல்ல எட்டு ஆம்லெட்டுகளை சுட்டுவிட்டென். அட பாருய்யா, கவிஞர்னாலே எதுகை தானா அமையும் போல... என்னதான் தின்பதற்கு நாக்கு அத்தனை ஜொள்ளு விட்டாலும்ன் எட்டையும் முழுங்க நான் என்ன வாத்தியாரா? (சும்மா லுலுவாயி:D :D) மூன்றே மூன்றுதான் தின்ன முடிந்தது. எனக்கு என் நாக்கின் மீதே கோவம். திகட்டுத் தனம் ஊறிப் போய்விட்ட நாக்கு ஹாயாக படுத்திருந்தது. ஒருசில சிவப்பு மிளகாய்கள் தப்பித் தவறி உள்ளே சென்றாலும் ருசி அடக்கிவிட்டது.

ஆனால் எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவே இல்லை. ஏன் ஆம்லெட் மட்டும் யார் போட்டாலும் ஒரேமாதிரி ருசியாக இருக்கிறது? இது ஆம்லெட்டுக்கே வெளிச்சம் என்கிறீர்களா? சரி நான் மேட்டருக்கு வருகிறேன். மீதமானது மொத்தம் நான்கு ஆம்லெட்டுகள். அருகே யாராவது இருந்தாலாவது கொடுக்கலாம். யாருமில்லை. என்ன செய்ய? ஒரே யோசனை. பேசாமல் ஆப்பாயில் போட்டாவது சாப்பிட்டிருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. எல்லா முட்டைகளையும் உடைத்துவிட்டேனே!. ஆப்பாயிலும் இதேமாதிரி ஒட்டிக் கொண்டால் அது இன்னும் சிரமம்தான். அதைத் திருப்பிப் போட்டுகூட சரிசெய்யமுடியாது.

ஆப்பாயில் என்றவுடனே எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. எங்கள் ஊரில் முக்காபாயில் என்று ஒன்று போடுவார்கள். ஆப்பாயிலைத் திருப்பிப் போட்டு வெந்தும் வேகாமலும் அரைவேக்காடில் கொண்டுவருவார்கள். அப்படி போடுவதற்கும் வழியில்லாமல் முழித்துக் கொண்டிருந்தேன். உடனே ஒரு யோசனை. என் நண்பன் ஒருவனுக்குப் போன் செய்து, உடனே வா, கறி சமைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்ல, அவனோ, எங்கள் வீட்டிலேயே அதுதாண்டா என்று கடுப்பேத்த, வேற வழியில்லாமல் இன்னொரு பொய் சொல்லவேண்டியிருந்தது. "ஜிக் இருக்கு வரியா?" என்றேன். உடனே ஒத்துக் கொண்டான். இது ஒரு சங்கேத பாஷை. எங்களுக்கு மட்டுமே புரியும்படி இருக்கும். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆள் வீட்டு வாசலில் வந்து நின்றான். எங்கேடா ஜிக் என்று கேட்டான். பொறு ஓபன் பண்றேன் என்று சொல்லி, முதலில் ஆம்லெட், அப்பறம் ஜிக் என்றேன். அவனோ, ஜிக்கோடுதான் ஆம்லெட் சாப்பிடுவேன் என்றான். இதென்னடா வம்பா போச்சு என்று அவனிடம் பேசி சமாளிப்பதற்குள் ஆம்லெட் வாடை அடிக்க ஆரம்பித்துவிட்டது.

ஒருவழியாக வயிற்றுக்குள் செட்டில் ஆகிவிட, ஜிக் இல்லையென்ற கோவத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டான். எனக்கு முட்டை வாங்கியது வீணாகவில்லை என்ற நிம்மதி. சிவப்பு மிளகாய் (தெலுகில் எர்ர மெரகாய்) வயிற்றுக்குள் கபளீகரம் பண்ணப் பார்க்க, எனக்கோ ஒரே கலக்கம். கிட்டத்தட்ட எட்டு ஆம்லெட்டில் ஐந்தை நானே தின்றிருக்கிறேன். சாதாரணமாக தோசையே அவ்வளவுதான் தின்பேன். இப்ப ஆம்லெட்டே ஐந்தென்றால் வயிறு சும்மா இருக்குமா? வயிற்று பயம் கொஞ்சம் ஆட்கொள்ள, நேரே கடைக்கு ஓடிப் போய் ஒரு ஏழரையை வாங்கிவந்தேன். ( ஏழு+அறை = 7+Up [அப்பினா அது அறை தானே :D] ) எதற்கும் முன்னெச்சரிக்கை தானே. ஏதோ வெறும் தண்ணியைக் குடித்ததைப் போலத்தான் இருந்தது.

மணி பத்தை கடந்துவிட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். இனி ஒருநாளும் இந்தமாதிரி நிகழக்கூடாது, அதாவது கல்யாணம் முடித்து இப்படி நடக்கக் கூடாது என்பதைச் சொல்லுகிறேன்.

என்னடா இவன் மேட்டருக்கு வரவில்லை என்று நினைப்பவர்களுக்கு, ஆம்லெட் போட்டால் அதிகம் தின்னாதீர்கள். இது என் அறிவுரை. பின்னால் பிரச்சனை, பின்னாலும் பிரச்சனை. ஆப்பாயில் ஒருவேளை சாப்பிடக்கண்டால் அதை லாவகமாக எடுத்து தின்னவேண்டும். (ஆப்பாயில் சாப்பிடும் போது பலரிடம் பெட் கட்டுவேன். ஒரே ஒருவிரலில் கரு உடையாமல் நிற்கவைக்கவேண்டும்.. பலர் தோற்றிருக்கிறார்கள்..) அப்படி தின்னும்போது உடைந்து ஒழுகிவிட்டால், அன்றைய இரவு நீங்கள் ஒரு சாக்கடைக்குள் படுத்துப் புரளுவதைப் போலத்தான் தெரியும். அளவுக்கு அதிகமாக வெங்காயமோ அல்லது மிளகாயோ சேர்க்கவேண்டாம். அதேபோல பெப்பரைத் தூவும் போது கண்ணுள் படாமல் அழகாக ஆம்லெட்டின் எல்லா இடங்களிலும் படும்படி பரவிவிடவேண்டும். அதிலும் அதிகம் இருந்தால் தொண்டை காரமெடுக்கும். உடம்புக்கு ஏற்ற உணவுதான் சரி. அதனால் என்னை மாதிரி ஒல்லிப்பிச்சானாக இருப்பவர்களுக்கு மூன்று முட்டையும், வாத்தியார் மாதிரி குண்டாக இருப்பவர்களுக்கு ஐந்து முதல் எத்தனை முட்டையும் சாப்பிடலாம். ஆம்லெட்டோ அல்லது ஆப்பாயிலோ சமைக்க, நல்ல தோசைக்கல் வேண்டும். குறிப்பாக நான் ஸ்டிக் இருந்தால் சவுகரியம்,. (எங்கள் வீட்டில் நானே, ஸ்டிக் ஆகும் [நான்-சப்பாத்தி] ) ஆம்லெட் ஒட்டிக் கொண்டால் அதை எடுத்து தின்பது அசெளகரியம். அடுத்து, நீங்கள் சமைக்கும் போது அருகிலே யாரும் இல்லாமல் இருப்பது நலம். இல்லையென்றால் மானம் போய்விடும். அப்பறம் அடுத்தமுறை நீங்கள் சமைத்ததை நீங்கள் மட்டுமே சாப்பிடும் அவலம் நேரிடும்.

இதில் எனக்கு இரு சந்தேகங்கள். ஒன்று, ஆம்லெட் மற்றும் ஆப்பாயிலின் தமிழாக்கம் என்ன? இரண்டாவது, ஆங்கிலத்தில் இதை எப்படி எழுதுவது. அதாவது ஸ்பெலிங் என்னென்ன?

என்ன, நீங்க ஆம்லெட் போட தயாராகிவிட்டீர்களா?

ஓவியா
26-11-2007, 02:51 PM
நல்ல நகைச்சுவை உணர்வை கொட்டி எழுதிய பதிவு. ஆம்லட் ஒரு சத்தாண உணவும் கூட.

ரசித்து படித்தேன். பதிவிற்க்கு நன்றி.

ஆதவா
26-11-2007, 02:55 PM
நல்ல நகைச்சுவை உணர்வை கொட்டி எழுதிய பதிவு. ஆம்லட் ஒரு சத்தாண உணவும் கூட.

ரசித்து படித்தேன். பதிவிற்க்கு நன்றி.

நான் காண்பது நனவா? கனவா? ஓவியா அக்காவா? இல்லை ஆவி"யா அக்காவா?

நன்றிக்கா.. இப்படி வந்துட்டு பதிவைப்போட்டுட்டு போனீர்கள்னா எவ்வளவு சந்தோசம் தெரியுமா?

மிகவும் நன்றி சகோதரி. (வழக்கமான ஸ்மைலிஸ் மிஸ்ஸிங்க் அக்கோய்)

lolluvathiyar
26-11-2007, 02:56 PM
சிவப்பு மிளகாயை விட பச்சை மிளகாய் காரம் அதிகம்...

இல்லை ஆதவா சிகப்பு மிளகாய்தான் அதிக காரமாக இருக்கும். ஆம்லெட்டில் மட்டும் காரம் அவ்வளவாக பரவாது.

லைட்டரைத் தேடி அடுப்பை பற்ற வைத்துவிட்டு,

என்த லைட்டர்னு சொல்லலியே. சிகரெட் லைட்டரோ.

வாத்தியார் மாதிரி குண்டாக இருப்பவர்களுக்கு ஐந்து முதல் எத்தனை முட்டையும் சாப்பிடலாம்.

ஓ சாப்பிடலாம் ஆனால் நீங்கள் சொன்னது போல சைட் டிஸ் (ஜிக்) இருந்தா தான் சாப்பிட வேண்டும்

ஆங்கிலத்தில் இதை எப்படி எழுதுவது. அதாவது ஸ்பெலிங் என்னென்ன?

Oomlet, Half Boil

என்ன, நீங்க ஆம்லெட் போட தயாராகிவிட்டீர்களா?

ஏற்கனமே செய்து வீட்ல அடிவாங்கியாச்சு, இனி வாங்கினான தாங்க முடியாது. வயசாயிருச்சல்ல

சூரியன்
26-11-2007, 03:02 PM
கடைசியா ரெண்டு கேள்வி கேட்டீங்களே..அருமையான கேள்வி.
யாராவது இதற்கு பதில் சொல்லுங்க.

தாமரை
26-11-2007, 03:02 PM
இந்தப் பதிவிற்கு முட்டைதான். அனாவசியமாக ஆம்லேட் பொடுவது எப்படிங்கற தலைப்புல போடுங்க யோசிப்போம்.. அதுசரி 2 ஆம்லேட் சாப்பிடற ஆதவா எதுக்கு 5 முட்டைகள் வாங்கி அதில் எட்டு ஆம்லேட் போட்டார்?

அது தெரியலியா? மக்களே நம்ம பள்ளிக் கூடத்தில மொத்தம் 5 சப்ஜெக்டுகள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு-புவியியல். அதனால அஞ்சு முட்டை.. தமிழ் இரண்டு தாள்கள், ஆங்கிலம் இரண்டு தாள்கள், வரலாறு - புவியியல் இரண்டு ஆக மொத்தம் எட்டு பரீட்சைகள், அவை எட்டு ஆம்லெட்டுகள்.

இப்போ புரியுதா?

அமரன்
26-11-2007, 03:03 PM
ஐந்து முட்டையில் எட்டு ஆம்லெட்டா.. அப்புட்டும் நீங்களே சாப்பிட்டீங்களா..
தக்காளிப்பழம் போட்டால் எல்லா குறைகளையும் சரிக்கட்டும்னு (அட சாப்பாட்டு பதார்த்தத்தில்தாங்க)என் நண்பர் ஒருத்தர் சொல்வாரு . இன்னொரு நண்பரும் அதை வழிமொழிந்திருக்கின்றார்.

ஆதவா
26-11-2007, 03:03 PM
இல்லை ஆதவா சிகப்பு மிளகாய்தான் அதிக காரமாக இருக்கும். ஆம்லெட்டில் மட்டும் காரம் அவ்வளவாக பரவாது.

1. ஓ அப்படி ஒரு விசயம் இருக்கா? என்ன பண்றது வாத்தியாரே ந*ம*க்குத்தான் அவ்வ*ள*வாக* ச*மைக்க*த் தெரியாதே!!!

என்த லைட்டர்னு சொல்லலியே. சிகரெட் லைட்டரோ.

ஹி ஹி .. நான் ரொம்ப* ந*ல்ல* பைய*னுங்க*.

ஓ சாப்பிடலாம் ஆனால் நீங்கள் சொன்னது போல சைட் டிஸ் (ஜிக்) இருந்தா தான் சாப்பிட வேண்டும்

ஹி ஹி ஹி.......

Oomlet, Half Boil

ந*ன்றி வாத்தியாரே! :)

ஏற்கனமே செய்து வீட்ல அடிவாங்கியாச்சு, இனி வாங்கினான தாங்க முடியாது. வயசாயிருச்சல்ல

அடடா! அப்ப மத்தவங்க அடிவாங்கட்டுமே!!

ஓவியா
26-11-2007, 03:04 PM
நான் காண்பது நனவா? கனவா? ஓவியா அக்காவா? இல்லை ஆவி"யா அக்காவா?

நன்றிக்கா.. இப்படி வந்துட்டு பதிவைப்போட்டுட்டு போனீர்கள்னா எவ்வளவு சந்தோசம் தெரியுமா?

மிகவும் நன்றி சகோதரி. (வழக்கமான ஸ்மைலிஸ் மிஸ்ஸிங்க் அக்கோய்)

ஏதோ இன்று வரவேண்டும் என்று தோன்றியது வந்தேன், ஆனாலும் என் மனதில் ஒரு மாறாகுறையுண்டு. பல நல்ல படைப்பாளிகளின் படைப்புகளை படித்து பின்னூட்டம் போட முடியவில்லையே என்ற எண்ணம்தான் அது. ஒரு சிலரின் படைப்புகளில் முதல் சிலவரிகள் படித்தாலே அவர்களின் எழுத்துத்திறமை எவ்வளவு மிண்ணுகின்றது என்று எனக்கு புரியும்.

சுயநலவாதியாக உமக்கு மட்டும் பின்னுட்டம் போட்டுவிட்டு, குற்றவுணர்வுடன் அவர்களின் முன் தலைக் குனிந்துதான் நிற்க்கிறேன்.

ஆதவா
26-11-2007, 03:07 PM
இந்தப் பதிவிற்கு முட்டைதான். அனாவசியமாக ஆம்லேட் பொடுவது எப்படிங்கற தலைப்புல போடுங்க யோசிப்போம்.. அதுசரி 2 ஆம்லேட் சாப்பிடற ஆதவா எதுக்கு 5 முட்டைகள் வாங்கி அதில் எட்டு ஆம்லேட் போட்டார்?

அது தெரியலியா? மக்களே நம்ம பள்ளிக் கூடத்தில மொத்தம் 5 சப்ஜெக்டுகள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு-புவியியல். அதனால அஞ்சு முட்டை.. தமிழ் இரண்டு தாள்கள், ஆங்கிலம் இரண்டு தாள்கள், வரலாறு - புவியியல் இரண்டு ஆக மொத்தம் எட்டு பரீட்சைகள், அவை எட்டு ஆம்லெட்டுகள்.

இப்போ புரியுதா?

ஏற்கனவே நான் வாங்கின அஞ்சு முட்டையை திங்கமுடியாம தவிச்சது போக நீங்க கொடுத்த முட்டையும் வேற சாப்பிடனுமா? அய்யோ! என் வயிறு தாங்காதுங்க..

2 ஆம்லெட்டா? அண்ணா... ஆதவனை என்னன்னு நினைச்சீங்க. அஞ்சு சாப்பிட்டேன் ஆமாம்..

முட்டையக் கலக்கிட்டு ஒவ்வொண்ணா ஊத்தினா ஓண்ணுரன்டு ஆம்லெட் அதிகமாவே வரும். இருந்தாலும் உங்க கணக்கும் சூப்பர்.

ஹிஹி

ஆதவா
26-11-2007, 03:09 PM
ஐந்து முட்டையில் எட்டு ஆம்லெட்டா.. அப்புட்டும் நீங்களே சாப்பிட்டீங்களா..
தக்காளிப்பழம் போட்டால் எல்லா குறைகளையும் சரிக்கட்டும்னு (அட சாப்பாட்டு பதார்த்தத்தில்தாங்க)என் நண்பர் ஒருத்தர் சொல்வாரு . இன்னொரு நண்பரும் அதை வழிமொழிந்திருக்கின்றார்.

அத்தனையும் நான் சாப்பிடலையப்பா.. (அதான் சொன்னேனே நான் என்ன வாத்தியாரா? அத்தனையும் சாப்பிட!!!)

ஹி ஹி ஹி நன்றிங்க.

ஆதவா
26-11-2007, 03:12 PM
ஏதோ இன்று வரவேண்டும் என்று தோன்றியது வந்தேன், ஆனாலும் என் மனதில் ஒரு மாறாகுறையுண்டு. பல நல்ல படைப்பாளிகளின் படைப்புகளை படித்து பின்னூட்டம் போட முடியவில்லையே என்ற எண்ணம்தான் அது. ஒரு சிலரின் படைப்புகளில் முதல் சிலவரிகள் படித்தாலே அவர்களின் எழுத்துத்திறமை எவ்வளவு மிண்ணுகின்றது என்று எனக்கு புரியும்.

சுயநலவாதியாக உமக்கு மட்டும் பின்னுட்டம் போட்டுவிட்டு, குற்றவுணர்வுடன் அவர்களின் முன் தலைக் குனிந்துதான் நிற்க்கிறேன்.

அக்கா, என்னைப் பொறுத்தவரையிலும் நான் தவறிவிட்ட நல்ல படைப்புகள் எத்தனையோ, படித்து பின்னூட்டமிடாதவை எத்தனையோ, இருந்தாலும் நான் கவலைப் படுவதில்லை... ஏனெனில் நம் நிலைமை அந்தமாதிரி.. அதனால் கவலைப் படாதீர்கள்.

நேரம் கிடைக்கும் போது வாருங்கள்>.. ஹி ஹி என்னோட படைப்புமட்டுமாவது படியுங்கள். ( நீங்க மட்டும்தான் சுயநலவாதியா? நானும்தான் )

நன்றி அக்கா.

தாமரை
26-11-2007, 03:13 PM
ஏற்கனவே நான் வாங்கின அஞ்சு முட்டையை திங்கமுடியாம தவிச்சது போக நீங்க கொடுத்த முட்டையும் வேற சாப்பிடனுமா? அய்யோ! என் வயிறு தாங்காதுங்க..

2 ஆம்லெட்டா? அண்ணா... ஆதவனை என்னன்னு நினைச்சீங்க. அஞ்சு சாப்பிட்டேன் ஆமாம்..

முட்டையக் கலக்கிட்டு ஒவ்வொண்ணா ஊத்தினா ஓண்ணுரன்டு ஆம்லெட் அதிகமாவே வரும். இருந்தாலும் உங்க கணக்கும் சூப்பர்.

ஹிஹி

1. ஆம்லெட்டுக்கு முட்டைகளை தனித்தனியா கலக்கணும். கூட்டாஞ்சோற்று மாதிரி பிசையக்கூஊடாது

2. எத்தனை முட்டையோ அத்தனை ஆம்லேட் தான் போடணும். வெங்காயத்தை அள்ளிக் கொட்டக் கூடாது. ஒரு முட்டைக்கு அரை வெங்காயம், 1 மிளகாய் போது. கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

3. முட்டையை அடித்துக் கலக்க நீண்ட ஸ்பூனும், உயரமான டம்ளரும் உபயோகியுங்கள். நன்கு நுரைவறும் வரை அடித்துக் கலக்குங்கல்.. ஆம்லெட் பொற்றுபொறுவென்று மென்மையாய் வரும்.

4. அளவான உப்பு சேருங்கள். மிளகுத் தூளை ஆம்லெட் வெந்தபின் போடுதல் நலம்.

5. ஒரு சிற்று துண்டு வெங்காயத்தை தோசைக்கல்லின் மேல் தடவி விட்டு ஆம்லெட் போட்டால் அதிகமாக ஒட்டாது. தோசைக் கல் காய்ந்த பின் அடுப்பு எரியும் அளவைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள பாகம் ஒட்டிக் கொள்ளும். ஓரத்தில் உள்ளவை பிய்ந்து வரும்.

ஆதவா
26-11-2007, 03:17 PM

அதெல்லாம் சரிதான் அண்ணா... பசி வந்திட பத்தும் ப்றந்திடும்னு சொல்லுவாஙக்ளே. அந்தமாதிரி எனக்கிருந்த பசியில் ஒவ்வொரு முட்டையாக உடைச்சு ஊத்தி, ம்ஜூம்....

நான் பார்த்த*வ*ரைக்கும் இப்ப*டி க*ல*க்கி ஊத்திதான் எல்லாருமே ஆம்லெட் போட்டாங்க*.. த*னியாவும் போட்டு சாப்பிட்டு இருக்கேன்... ரென்டுக்கும் வித்தியாச*ம் பெரிசா இல்லை...

நீங்க* சொன்னாமாதிரி அடுத்த*முறை நிச்ச*ய*ம் முய*ற்சிக்கிறேன்....

ந*ன்றி அண்ணா

தாமரை
26-11-2007, 03:20 PM
எத்தனை ஆயிரம் ஆம்லெட் பொட்டு இருக்கேன். (குறைஞ்ச பட்சம் ஒரு 5000 ஆவது இருக்கும். இன்னைக்கும் என் வீட்டில் அம்மண்ணி தொசைக்கல்லில் விட்டு வேகவைப்பதோடு சரி, அனைத்து பிரிப்பரேஷனும் ஆம்லெட் விஷயத்தில் அய்யாதான்)

ஷீ-நிசி
26-11-2007, 04:15 PM
நல்லா போட்டாரய்யா ஆம்லெட்டு....

ஒரு நாள் தக்காளி ஆம்லெட் எங்கியொ சாப்பிட்டேன், ரொம்ப சுவையா இருந்தது.. சரி நாம் முயற்சி பன்னலாம்னு முட்டைய கலக்கிட்டு அதுல தக்காளிய போட்டு மிக்ஸில அடிச்சி தோசக்கல்லுல ஊத்துனா.. சீக்கிரத்துல வேகவே இல்ல.. ஒருவழியா எடுத்து சாப்பிட்டா அந்த ருசி வாய்ல வைக்கவே சகிக்கல...
இது நான் முட்டை போட்ட கதை... அதனால் நான் கோழியானு கேட்காதீங்க! :)

ஓவியன்
26-11-2007, 05:02 PM
ஆதவா...!!

ஆமா இந்த பதிவை எழுதி முடித்துக் களைத்துப் போனதை ஈடுகட்ட எத்தனை முட்டை குடிச்சீங்க...??? :)
____________________________________________________________________________________________________________________________________
ஒரு முட்டைக்குள்ளே இந்தளவு விடயங்களா என வியக்க வைத்தது உங்கள் பதிவு - வாழ்த்துக்கள்..!!

மதி
26-11-2007, 05:37 PM
ஆம்லெட்ல இத்தன விஷயம் இருக்கா...?
ஆனா நீர் சாப்பிட்டது தான் நம்ப முடியல..

நேசம்
26-11-2007, 05:47 PM
ஆளுக்கும் சாப்பிடத்துக்கும் சம்பந்தமில்லமால் இருக்கு.
(நன்றி-சிவா அண்ணன்)

மலர்
26-11-2007, 08:47 PM
ஆதவா...
நீங்க உங்க கையால போட்டு குடுத்த ஆம்லேட்ட சாப்பிட்டுட்டு போன உங்க பிரண்டு இப்போ எப்படி இருக்க்கார்...????

நல்லா(உயிரோட) இருக்காரா...???
ஏன்னா எப்பவுமே டெஸ்டிங் ரொம்ப முக்கியம்..

செஞ்சி பாக்கோணும் அதுக்கு தான்...!!!

மலர்
26-11-2007, 08:49 PM
எத்தனை ஆயிரம் ஆம்லெட் பொட்டு இருக்கேன். (குறைஞ்ச பட்சம் ஒரு 5000 ஆவது இருக்கும்.இருக்கேன்.

அப்படின்னா..
ஒரு இனத்தையே உக்காந்து அழிச்சிட்டு இருக்கீங்க,,,
அப்படியா..

மன்மதன்
27-11-2007, 07:52 AM
வெந்நித்தண்ணி பதிவு மாதிரி இந்த ஆம்லெட் பதிவும் பின்னூட்டங்களால் களை கட்டட்டும்.. எனக்கும் ஆம்லெட் போட தெரியும்.. ஆஃப் பாயில் போடும் போது உடையக்கூடிய அபாயம் நிறைய இருக்கிறது.. :D

தாமரை
27-11-2007, 08:11 AM
அப்படின்னா..
ஒரு இனத்தையே உக்காந்து அழிச்சிட்டு இருக்கீங்க,,,
அப்படியா..

அம்மிணி, கோழி இனம் அழியாம இருக்கறதுக்குக் காரணமே மனுஷன் அதை ருசிச்சு சாப்பிடறதாலதான். இல்லென்னா அழிந்த வரும் உயிரினங்கள் லிஸ்ட்ல அதுவும் இருக்கும் :aetsch013:

தாமரை
27-11-2007, 08:18 AM
ஆதவா...
நீங்க உங்க கையால போட்டு குடுத்த ஆம்லேட்ட சாப்பிட்டுட்டு போன உங்க பிரண்டு இப்போ எப்படி இருக்க்கார்...????

நல்லா(உயிரோட) இருக்காரா...???
ஏன்னா எப்பவுமே டெஸ்டிங் ரொம்ப முக்கியம்..

செஞ்சி பாக்கோணும் அதுக்கு தான்...!!!

ஏன் உயிரோட இருக்கறது மட்டும்தான் பாஸ் ரிசல்டா? 5 நாளா 4 க்கு 4 அறையை விட்டு அவர் வெளிய வரலியாம். :icon_ush:

விகடன்
27-11-2007, 08:28 AM
இப்படித்தான் ஓம்ளட் போடுறதா?

வரப்போகிறவள் கொடுத்து வைச்சவள்தான்.

சிவா.ஜி
27-11-2007, 08:41 AM
ஆமா ஆதவா...அஞ்சு முட்டையில எட்டு ஆம்லெட்டு எப்படி போட்டீங்க? நாங்கல்லாம் ரெண்டு முட்டையில் ஒரு ஆம்லெட் போடறவங்க.தாமரை மாதிரி நானும் எங்க வீட்ல ஆம்லெட் ஸ்பெஷலிஸ்ட்.முட்டையில் புர்ஜி என்று ஒரு ஐட்டம் இருக்கிறது.ரொம்ப சுவையா இருக்கும்.
அப்புறம் ஏன் எல்லோரும் ஆஃப் பாயில்ன்னு சொல்றாங்க வட இந்தியாவுல அதை ஆஃப் ஃபிரைன்னுதான் சொல்வாங்க.அதுதானே சரி?
எது எப்படியோ இதே மாதிரி நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்தப் பாருங்க.

தங்கவேல்
27-11-2007, 10:53 PM
ஆம்லெட் ஆசையே போயிடுச்சு...

ஆதவா
28-11-2007, 03:09 AM
எத்தனை ஆயிரம் ஆம்லெட் பொட்டு இருக்கேன். (குறைஞ்ச பட்சம் ஒரு 5000 ஆவது இருக்கும். இன்னைக்கும் என் வீட்டில் அம்மண்ணி தொசைக்கல்லில் விட்டு வேகவைப்பதோடு சரி, அனைத்து பிரிப்பரேஷனும் ஆம்லெட் விஷயத்தில் அய்யாதான்)

ஹி ஹி.. அந்த ஐயாயிரத்தை நான் எட்ட இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.... ஒரு 4850 நு வெச்சுக்கோங்களே!! :)

ஆதவா
28-11-2007, 03:14 AM
நல்லா போட்டாரய்யா ஆம்லெட்டு....

ஒரு நாள் தக்காளி ஆம்லெட் எங்கியொ சாப்பிட்டேன், ரொம்ப சுவையா இருந்தது.. சரி நாம் முயற்சி பன்னலாம்னு முட்டைய கலக்கிட்டு அதுல தக்காளிய போட்டு மிக்ஸில அடிச்சி தோசக்கல்லுல ஊத்துனா.. சீக்கிரத்துல வேகவே இல்ல.. ஒருவழியா எடுத்து சாப்பிட்டா அந்த ருசி வாய்ல வைக்கவே சகிக்கல...
இது நான் முட்டை போட்ட கதை... அதனால் நான் கோழியானு கேட்காதீங்க! :)
]

என்ன*ங்க* நீங்க*, ந*ம்ம* க*தைய* ப*டிச்ச*துக்க*ப்ப*ற*ம் ட்ரை ப*ண்ணுங்க*.....

ந*ல்ல* ஆம்லெட் போட* வாழ்த்துக*ள்..

ஆதவா...!!

ஆமா இந்த பதிவை எழுதி முடித்துக் களைத்துப் போனதை ஈடுகட்ட எத்தனை முட்டை குடிச்சீங்க...??? :)
____________________________________________________________________________________________________________________________________
ஒரு முட்டைக்குள்ளே இந்தளவு விடயங்களா என வியக்க வைத்தது உங்கள் பதிவு - வாழ்த்துக்கள்..!!
முட்டைக்குள்ளே ப*ல* விச*ய*ங்க*ள் இருக்குங்க* ஓவிய*ன்/// இந்த* ப*திவு என்ன*ங்க* சுண்ட*க்கா ப*திவு..,. அண்ணாவே முட்டை மார்க் கொடுத்திருக்காரே////

ஆம்லெட்ல இத்தன விஷயம் இருக்கா...?
ஆனா நீர் சாப்பிட்டது தான் நம்ப முடியல..

அடப்பாவமே! அஞ்சு ஆம்லெட் சுளையா சாப்பிட்டேன்... நம்பமாட்டேங்கிறீஙக்ளே!

ஆதவா
28-11-2007, 03:18 AM
ஆளுக்கும் சாப்பிடத்துக்கும் சம்பந்தமில்லமால் இருக்கு.
(நன்றி-சிவா அண்ணன்)
பார்க்க*த்தான் அப்ப*டி இருப்பேன்.... ஹ் ஹி ஹி

ஆதவா...
நீங்க உங்க கையால போட்டு குடுத்த ஆம்லேட்ட சாப்பிட்டுட்டு போன உங்க பிரண்டு இப்போ எப்படி இருக்க்கார்...????

நல்லா(உயிரோட) இருக்காரா...???
ஏன்னா எப்பவுமே டெஸ்டிங் ரொம்ப முக்கியம்..

செஞ்சி பாக்கோணும் அதுக்கு தான்...!!!
அவ*ன் ந*ல்லாத்தான் இருக்கான். ஆனா, நீ வெச்ச* சுடுத*ண்ணி குடிச்ச உன்னோட* தோழியை இப்ப*த்தான் ஆஸ்ப*த்திரியில* பார்த்துட்டு வாரென்..

வெந்நித்தண்ணி பதிவு மாதிரி இந்த ஆம்லெட் பதிவும் பின்னூட்டங்களால் களை கட்டட்டும்.. எனக்கும் ஆம்லெட் போட தெரியும்.. ஆஃப் பாயில் போடும் போது உடையக்கூடிய அபாயம் நிறைய இருக்கிறது.. :D
ஹி ஹி.... ந*ல்லா முட்டை போடுங்க*,,,, ஆப்பாயில் நானும் ட்ரை ப*ண்ணியிருக்கேன். உடையாம* எடுத்த* வ*ர*லாறு உண்டு.

இப்படித்தான் ஓம்ளட் போடுறதா?

வரப்போகிறவள் கொடுத்து வைச்சவள்தான்.
ஹிஹி ந*ன்றிக்ன்க* விராட*ன்

ஆமா ஆதவா...அஞ்சு முட்டையில எட்டு ஆம்லெட்டு எப்படி போட்டீங்க? நாங்கல்லாம் ரெண்டு முட்டையில் ஒரு ஆம்லெட் போடறவங்க.தாமரை மாதிரி நானும் எங்க வீட்ல ஆம்லெட் ஸ்பெஷலிஸ்ட்.முட்டையில் புர்ஜி என்று ஒரு ஐட்டம் இருக்கிறது.ரொம்ப சுவையா இருக்கும்.
அப்புறம் ஏன் எல்லோரும் ஆஃப் பாயில்ன்னு சொல்றாங்க வட இந்தியாவுல அதை ஆஃப் ஃபிரைன்னுதான் சொல்வாங்க.அதுதானே சரி?
எது எப்படியோ இதே மாதிரி நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்தப் பாருங்க.

அண்ணா, அது ர*க*சிய*ம்.. ஒண்ணை ரென்டாக்க* ம*ந்திர*ம் உண்டு என்னிட*ம்....
ந*ன்றிஅண்ணா

ஆம்லெட் ஆசையே போயிடுச்சு...

என்னாஙக் இப்படி சொல்லீட்டீங்க.

தாமரை
28-11-2007, 03:19 AM
]

அடப்பாவமே! அஞ்சு ஆம்லெட் சுளையா சாப்பிட்டேன்... நம்பமாட்டேங்கிறீஙக்ளே!

ஆரு அஞ்சு சுளையாச் சாப்பிட்டது??:lachen001::lachen001:

ஆதவா
28-11-2007, 03:36 AM
ஆரு அஞ்சு சுளையாச் சாப்பிட்டது??:lachen001::lachen001:

தக்காளி இருக்கே அதில....

தக்காளியோட அக்காதான் ஆரஞ்சு.. ஹி ஹி

தாமரை
28-11-2007, 03:40 AM
தக்காளி இருக்கே அதில....

தக்காளியோட அக்காதான் ஆரஞ்சு.. ஹி ஹி

நான் எலுமிச்சம்பழத்தின் அக்கான்னு நெனச்சேன்.
தக்காளி யோட அக்கா ஆப்பிள் தானே!

ஆதவா
28-11-2007, 03:42 AM
நான் எலுமிச்சம்பழத்தின் அக்கான்னு நெனச்சேன்.
தக்காளி யோட அக்கா ஆப்பிள் தானே!

அது கஸின்,.... ஹி ஹி

தாமரை
28-11-2007, 03:48 AM
அது கஸின்,.... ஹி ஹி

உங்கள்ளுக்கு தேவை - குரோசின்
இல்லைன்னா - கெரசின்

ஆதவா
28-11-2007, 03:53 AM
உங்கள்ளுக்கு தேவை - குரோசின்
இல்லைன்னா - கெரசின்

ஆதவனுக்கே கெரசினா?

தாமரை
28-11-2007, 04:06 AM
ஆதவனுக்கே கெரசினா?

ரசிகன் - குழம்பினால் - கரசின் - அவனுக்கு கொம்பு முளைத்தால் - கெரசின்.

ஆதவா
28-11-2007, 04:19 AM
ரசிகன் - குழம்பினால் - கரசின் - அவனுக்கு கொம்பு முளைத்தால் - கெரசின்.

கொம்பு முளைத்த ரசிகன் என்று அன்பாக சொல்கிறீர்களா?

அன்பு ரசிகரே! இதுக்கு நான் பொறுப்பில்லை. அண்ணன் தான் சொன்னார்..

ஓவியன்
28-11-2007, 04:27 AM
நான் எலுமிச்சம்பழத்தின் அக்கான்னு நெனச்சேன்.
தக்காளி யோட அக்கா ஆப்பிள் தானே!

தப்பு, தப்பு எல்லாமே தப்பு..!!
தக்காளியோட அக்கா அக்காத் தக்காளினு தானே வரும்..!! :icon_rollout:

நேசம்
28-11-2007, 04:57 AM
தப்பு, தப்பு எல்லாமே தப்பு..!!
தக்காளியோட அக்கா அக்காத் தக்காளினு தானே வரும்..!! :icon_rollout:

இல்லை.தக்காளியக்கா ண்ணு தான் வரும்

தாமரை
28-11-2007, 05:14 AM
தப்பு, தப்பு எல்லாமே தப்பு..!!
தக்காளியோட அக்கா அக்காத் தக்காளினு தானே வரும்..!! :icon_rollout:

அப்போ ஓவியனோட அண்ணா, அண்ணா ஓவியன், தம்பி தம்பி ஓவியன், அப்பா அப்பா ஓவியன் அம்மா அம்மா ஓவியன், மனைவி மனைவி ஓவியன் அப்படித்தானுங்களே..

தக்காளி பொதுபேருன்னு சொல்வீங்க.. அப்ப மனுஷனோட அண்ணன் யாரு?? சொல்லுங்க பார்ப்போம்.:icon_p:

கண்மணி
28-11-2007, 07:18 AM
கொம்பு முளைத்த ரசிகன் என்று அன்பாக சொல்கிறீர்களா?

அன்பு ரசிகரே! இதுக்கு நான் பொறுப்பில்லை. அண்ணன் தான் சொன்னார்..

ரசிகனைக் குழப்பாதீர்கள் அவர் கெரசினாகி "குபுக்" என்று பற்றி எரிந்து விடப் போகிறார்.:lachen001::lachen001:

யவனிகா
28-11-2007, 08:25 AM
அது தெரியலியா? மக்களே நம்ம பள்ளிக் கூடத்தில மொத்தம் 5 சப்ஜெக்டுகள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு-புவியியல். அதனால அஞ்சு முட்டை.. தமிழ் இரண்டு தாள்கள், ஆங்கிலம் இரண்டு தாள்கள், வரலாறு - புவியியல் இரண்டு ஆக மொத்தம் எட்டு பரீட்சைகள், அவை எட்டு ஆம்லெட்டுகள்.

இப்போ புரியுதா?

என்னமா யோசிக்கறாருப்பா...

யவனிகா
28-11-2007, 08:27 AM

ஒருத்தரு என்னமா ஆம்லெட் போடறாரு...

மனோஜ்
28-11-2007, 09:11 AM
ஆம்லைட் அருமை இப்ப எனக்கு சாப்பிடனு போல இருக்கு ஆதவா நன்றி

ஜெயாஸ்தா
28-11-2007, 12:00 PM
ஆம்ப்ளைட் திருப்பிப் போட சரியாகவரவில்லை என்றால் அதை கரண்டியால் நன்றாக கிளறி 'முட்டைப் பொரிய'லாக மாற்றிவிட வேண்டியதுதானே..... இதே மாதிரி நான் காப்பி போட்ட கதை ஒண்ணு இருக்கு. நேரம் கிடைக்கும்போது எழுறேன்.

சிவா.ஜி
28-11-2007, 12:24 PM
இங்கேயும் ஆணாதிக்கமா....ஏன் ஆம்ப்ளேட்.......ஏனில்லை பொம்ப்ளேட்?
இதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

ஜெயாஸ்தா
28-11-2007, 12:56 PM
இங்கேயும் ஆணாதிக்கமா....ஏன் ஆம்ப்ளேட்.......ஏனில்லை பொம்ப்ளேட்?
இதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

ஹி....ஹி....பூமகள் சார்பில் நான் இதை வழிமொழிகிறேன்...!