PDA

View Full Version : ஓ(ஆ)வியும் அன்புரசிகனும்....!!

ஓவியன்
26-11-2007, 11:46 AM
நேற்று மன்றத்திலே சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுத் திரிக்கு அனிச்சைச் செயலாக சென்ற போது அங்கே "மலர்" அடுத்த பாடலுக்காக "தேவதை" என்ற சொல்லை விட்டுச் செல்ல அந்த சொல்லில் தொடங்கும் பாடல் ஒன்றைத் தேடுகையில் "தேவதை இளந் தேவி" என்ற பாடல் என் ஞாபக அலைக்குள் சிக்கியது. அந்த பாடல் ஒரு சுவையான சம்பவத்தையும் தூண்டில் போட்டு மேலே தூக்கி விடவே இதோ இந்தப் பதிவு. இந்தப் பதிவினை படிக்கும் முன்னர் "ஆயிரம் நிலவே வா" என்ற திரைப் படத்தில் வந்த இந்தப் பாடலை இதுவரை கேட்டு, பார்த்திராதவர்கள் ஒரு தடவை பார்த்து இரசித்தால் சம்பவக் கருவுடன் ஒன்றித்துப் போவது இலகுவாகியிருக்கும்.
இதுவரை பார்க்காதவர்களும் பார்த்து இரசிக்கவும் ஏற்கனவே பார்த்தவர்கள் மீள பார்த்து இரசிக்கவும் இதோ அந்த பாடலின் சுட்டி..!!

http://youtube.com/watch?v=65AYebuJfOs

அது இரண்டாயிரத்து மூன்றாமாண்டின் நடுப்பகுதி, நான் இலங்கையில் தென்பகுதி மாவட்டமான கொழும்பிலே எனது பல்கலைப் படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய சொந்த கிராமம் இலங்கையின் வடபகுதியிலிருந்தமையால் படிப்பு நிமித்தம் நான் படித்த பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலிருந்த ஒரு சிறு நகரத்தில் ஒரு தொடர்மாடிக் குடியிருப்பு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கே நான்கு நண்பர்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். பல்கலைக் கழக நாட்களில் இந்த நான்கு நண்பர்களும் இணைபிரியாதவர்கள். நம் நான்கு பேரின் சிறப்பியல்பு என்னவெனின் நான்கு பேரும் எந்த நேரமும் நமக்குள் முட்டி மோதிக் கொண்டே இருப்போம், பார்ப்பவர்கள் இவர்களும் ஒரு நண்பர்களா என்று நினைப்பார்கள். ஆனால் வெளியே இருந்து ஒருவர் இந்த நால்வரிடை ஏதும் குளப்பம் பண்ண வந்தால் அதோ கதிதான். நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்து பிச்சு உதறிவிடுவோம்.
நாம் எப்போது சேர்கிறோம் எப்போது சண்டை பிடிப்போம் என்பது நமகே தெரியாது ஆனால் மிக ஆழம் கொண்ட நட்பு நமக்குள் வியாபித்திருந்தமையால் எதனைப் பற்றியும் நாம் கவலைப் பட்டதில்லை. இந்த நான்கு நண்பரில் மூவரை மன்ற நண்பர்கள் நன்றே அறிவார்கள். ஆமாம் ஒன்று அடியேன் தான்(இது சொல்லவும் வேண்டுமா என யாரோ முணு முணுப்பது கேட்கிறது; மலராகத் தானிருக்கும்:rolleyes:), அடுத்தது விராடன் மூன்றாவது அன்புரசிகன்.

நாமிருந்த அந்த வீடு இரண்டு அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு விருந்தினர் வரவேற்பறை கொண்ட மிக அடக்கமான வீடு. ஆகவே இரண்டு அறைகளிலும் இரண்டிரண்டு நண்பர்களாகத் தங்கியிருந்தோம். நானும் அன்புரசிகனும் ஒரே அறையில் தங்கியிருந்தோம், இது இவ்வாறிருக்க ஒரு விடுமுறை நாள் விராடனும் மற்றைய நண்பரும் தம் வீடுகளுக்கு சென்று விட நானும் அன்புரசிகனும் மாத்திரமே வீட்டில் தங்கியிருந்தோம். அன்றைய இரவு அன்புரசிகன் புட்டு அவித்து மீன் குழம்புக்கறியும் (அன்பு நல்லா சமைப்பாருங்க..!!, நான் அன்பு சமைக்கும் போது எடு பிடி வேலை மட்டும் செய்து கொடுப்பேன்:D) வைத்துத் தர ஒரு கட்டுக் கட்டிவிட்டு நித்திரை கொள்ளத் தயாரானேன். அந்தக் காலங்களில் நான் நேரத்திற்கு நித்திரையாகிவிடுவேன், அன்பு மட்டும் விழித்திருந்து ஒன்றில் இணையத்தில் அரட்டையடிப்பார் அல்லது கொம்பியூட்டர் கேம் விளையாடுவார். அத்துடன் நாம் தூங்கும் போது கூட அன்புரசிகனின் குறுவட்டு இயக்கி (சிடி பிளேயர்) தூங்காது விடியும் வரை இடைக் காலப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பது வழமை. அன்றும் அப்படித்தான் எதோ ஒரு குறுவட்டை ஒலிக்கச் செய்து விட்டு நான் நித்திரையாகிவிட்டேன் அன்பு விழித்திருந்தார்.

காலையில் வழமை போல கண் விழித்தேன், அன்பு உறங்காமல் கணினி இருக்கும் மேசைக்கு அருகில் இருந்து கொண்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்னடா, என்ன பிரச்சினை ஏன் இப்படி முளிசி முளிசிப் பார்கிறாய்...???:)"
"இல்லைடா, ஒன்றுமில்லை..!!"
"இல்லை சொல்லு, என்ன பிரச்சினை..?, நீ நோர்மலாக இல்லையென்று விளங்குது..!!"
"ம்ம்,ம்ம்..!!"
"அப்ப சொல்லித் தொலையேனடா... "
அப்போது அன்பு திருவாய்மலர்ந்தருளினார்...!
"இரவு எதாவது கனவு கண்டனியே....??"
"இல்லையே ஏன்...?"
"இல்லை..."
"என்ன இல்லை, ஓமெண்டு கொண்டு..., சொல்லுறதை ஒழுங்காச் சொல்லு(எனக்குத் தெரியுமே அவர் என்னை ஆவிபோல பார்த்துக் கொண்டிருக்கிறாரென்று..?":rolleyes:)..!!"
"இல்லை இரவு சிடிபிளேயரிலே "தேவதை இளந்தேவி" என்ற பாட்டுப் படிக்கும் போது நீ திடீரென்று ஒரு வித்தியாசமான சத்தம் போட்டுக் கொண்டு கட்டிலிலே எழும்பி இருந்து காலினை மடித்து வைத்துக் கொண்டிருந்தாய் என்றார்..!!"
"என்னது, பேந்து என்ன நடந்தது..??"
"நான் ஓவி, ஓவி என்று கூப்பிட்டுப் பார்த்தேன், பதிலில்லை..!!"
"ம்ம்,ம்ம்...!!"
"கட்டிலுக்கு அருகில் வந்து பார்த்தால் உன்ர ரெண்டு கண்ணும் மூடி இருந்திச்சு, சிடிபிளேயரிலே பாட்டு வேற பேய் வாற மாதிரி சத்தம் போட்டுக் கொண்டிருந்தது, நீ என்னைப் புரிந்து கொள்ளவேயில்லை கட்டிலில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தாய். நான் பயந்து போய் உன்னை தள்ளிப் படுக்க வைத்தேன். அப்போதும் நீ கண்ணைத் திறக்கவில்லை அப்படியே கட்டிலில் மடித்த காலைக் கூட நீட்டாமல் கண்களை மூடிய படியே இருந்தாய். மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தேன் பதிலில்லை. எனக்கு ஒரே பயம் பிடித்துக் கொண்டது ஓவிக்கு என்னவோ நடந்திட்டுது என்று உடனே சிடிபிளேயரை நிறுத்திவிட்டு அறையைவிட்டு வெளியே ஓடி விட்டேன் "
என்றார்.
என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, ஏனென்றால் எனக்கு இது தொடர்பாக எந்த நினைவும் இல்லை. வழமையாக கூப்பிட்டால் உடனே விழித்தெழும்பும் நான் அன்று ஏன் விழிக்கவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் விடையில்லை. அன்புவைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருந்தது இரவெல்லாம் பயத்தால் தூங்காமல் கந்தசஸ்டி கவசம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருப்பார் போல..!! :D, அந்த விழி விழித்தார். ஒருவாறாக அவரைத் தேற்றி வழமைக்கு கொண்டு வர போதும் போதும் என்றாகிவிட்டது :D.

இதுவரை விடை தெரியாத அந்த சம்பவம் கிட்டத் தட்ட மறந்தே போய்விட்டது எப்போதாவது நாங்கள் நான்கு நண்பர்களும் சேந்து இருக்கையில் இந்த "தேவதை இளந்த தேவி" பாடல் ஞாபகத்துக்கு வந்தால் அது பற்றிப் பேசிச் சிரித்துக் கொள்வோம். அவ்வாறே நீண்ட நாட்களின் பின் நேற்று ஞாபகத்துக்கு வரவே இந்த பதிவைப் பதித்தேன்...!!

தேவதை இளம் தேவி
உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஹோஓஓஓஓ நீயில்லாமல் நானா...???

நன்றி..!!

விகடன்
26-11-2007, 11:55 AM
மீட்டிப் பார்க்கும்போது இன்றும் இனிக்கும் நினைவுகளாக தித்திக்கின்றன.
அப்படி ஒரு காலம் இனியும் மலராதோ என்று எண்ணுகையில் கண் இரண்டும் நீரில் மூழ்கிறது.
--------

இரவெல்லாம் பயத்தால் தூங்காமல் கந்தசஸ்டி கவசம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருப்பார் போல..!! :D, அந்த விழி விழித்தார். ஒருவாறாக அவரைத் தேற்றி வழமைக்கு கொண்டு வர போதும் போதும் என்றாகிவிட்டது :D.

அடப்பாவிங்களா.
இப்பதானே விளங்குகிறது அந்த திருநீறு டப்பா திடீரென்று எப்படி முடிந்தது என்று.

சிவா.ஜி
26-11-2007, 12:01 PM
எல்லாம் சொன்ன நீங்க முக்கியமான ஒன்றை சொல்லவில்லையே.நீங்க ஏதோ ஆவி பின்னால சுத்தியிருக்கனும் இல்ல அந்த ஆவி உங்களை சுத்தியிருக்கனும்.அதுதான் அந்த ஆவியோட டூயட் பாடறதா நினைத்து கட்டில்ல உட்கார்ந்து கொண்டே தூங்கியிருக்கீங்க.நல்ல வேளை அன்பு யாரையாவது மந்திரவாதியை கூட்டி வந்து வேப்பிலை அடிக்காமல் விட்டாரே.எது எப்படியோ இனி இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் நீங்கள் \"குத்தவெச்சு\" உட்கார்ந்திருந்ததுதான் நினைவுக்கு வரும்.

ஓவியன்
26-11-2007, 12:02 PM
உண்மைதான் விராடன் இன்னும் எத்தனையோ இனிய சம்பவங்கள் உள்ளன, நேரம் கிடைக்கையில் பதிவுகளாக்கினால் அடிக்கடி மீட்டிக் கொள்ளலாம்.

ம்,ம்...!!!

அந்த திருநீற்று டப்பா கூட நம் அறையில் இருக்கவில்லை வெளியே தான் இருந்தது, வெளியே ஓடிப் போயயத்அனை எடுத்து வந்து கையிலேயே வைத்துக் கொண்டிருந்திருப்பார் போல...!! :D :D :D

ஓவியன்
26-11-2007, 12:04 PM
எல்லாம் சொன்ன நீங்க முக்கியமான ஒன்றை சொல்லவில்லையே.நீங்க ஏதோ ஆவி பின்னால சுத்தியிருக்கனும் இல்ல அந்த ஆவி உங்களை சுத்தியிருக்கனும்.

ஆவி பின்னே நான் சுத்தினேனா...!!
அப்படி ஞாபகம் இல்லையே, ஆவி வேணா என் பின்னே சுத்தியிருக்கும்..!! :)

இதயம்
26-11-2007, 12:06 PM
ஓவியம் வரைவதில் வல்லவர் என்பதால், இவருக்குள் ஒரு ஓவியன் மட்டும் தான் இருக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவருக்குள் ஒரு ஆவியும் இருந்திருப்பது இப்போதான் புரியுது..! இப்படி ஆவி அவதாரம் எடுத்து, அன்பை வம்பாக மிரட்டியிருக்கிறீர்களே... இது எந்த வகையில் நியாயம்..? பாவம்.. அன்றிலிருந்து அவர் பேய்ப்படங்கள் பார்ப்பதை கூட விட்டுவிட்டார் என்பது எனக்கு கிடைத்த செவிவழிச்செய்தி..! உண்மையிலேயே உங்களுக்குள் ஆவி வந்ததா, அல்லது உங்களை நிம்மதியாக தூங்கவிடாமல் டிவி பார்த்து சத்தத்தாலும், ஒளியாலும் தூக்கத்தை தொந்தரவு செய்த அன்பை அடக்க நீங்கள் திட்டமிட்டு செய்த சதியா..?:D:D அதற்கு அடுத்து வந்த நாட்களில் அன்பு ரொம்ப நல்ல பிள்ளையாக நேரத்துடன் தூங்கியிருப்பாரே..?!!!

எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..? ஆவிக்கிட்ட அட்வைஸ் கேட்ருப்பாங்களோ..?!!:icon_rollout::icon_rollout:

விகடன்
26-11-2007, 12:12 PM
பாவம்.. அன்றிலிருந்து அவர் பேய்ப்படங்கள் பார்ப்பதை கூட விட்டுவிட்டார் என்பது எனக்கு கிடைத்த செவிவழிச்செய்தி..!

தவறான செய்தி இதயம்.
அதற்கு பிறகு அன்பு பேய்ப்படங்கள் பயமின்றி பார்க்க தொடங்கிவிட்டார். கேட்டால் "ஓவியனிற்கு முன்னால் இதெல்லாம் ஜிஜிப்பி என்று கூறுவார். :icon_b:

இதயம்
26-11-2007, 12:20 PM
ஓவியனிற்கு முன்னால் இதெல்லாம் ஜிஜிப்பி என்று கூறுவார். :icon_b:

ஓ.. கதை அப்படி போகுதா..? அதான் ஓவி அடிக்கடி என்னிடம் நான் யாருக்கும் பயப்படமாட்டேன், பயப்படமாட்டேன்னு சொல்றாரா..? உண்மை தான்..! அவரைப்பார்த்து தான் நாமெல்லாம் பயப்படணும்..!!

ஓவியன்
26-11-2007, 12:47 PM
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..? ஆவிக்கிட்ட அட்வைஸ் கேட்ருப்பாங்களோ..?!!:icon_rollout::icon_rollout:

என்னமா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறாங்கப்பா....
வாயைத் திறந்தது தப்போ, இனி யோசித்து என்னவாகப் போகுது....
நடக்கிறதைப் பார்ப்போம்....!! :aetsch013:

பூமகள்
26-11-2007, 01:19 PM
ஹா ஹா ஹா..!
ஓவியன் அண்ணா...! இப்படி நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை. காரணம், அன்பு அண்ணா ஒருவேளை உங்களை ஓட்டி பயங்காட்ட இப்படி உங்களை காலையில் சொல்லி பயமுறுத்தியிருக்கலாமோ??(எப்படி பூவு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்னு நீங்க கேட்பது புரியுது..!!)
ஏன்னா, எங்க ஓவியன் அண்ணா... இப்படியெல்லாம் செஞ்சிருக்கவே மாட்டாரு...!!

அப்படி செய்திருந்தாலும் ஓவியண்ணாவுக்கு ஆவி நினைப்பு வந்திருக்காது......... அந்த தெய்வம் தான் வந்து ஆவியை ஓட்டியிருக்கும்.. இங்கு கவனிக்க... ஓவியன் அண்ணா... கட்டிலில் கால்களை மடக்கி, கண்கள் மூடி அமர்ந்திருந்ததாக அன்பு அண்ணா சொல்லியிருக்கிறார். அப்படியெனில் என் அனுமானத்தின் படி, ஓவியன் அண்ணா, பத்மாசனத்தில் அமர்ந்து கடவுள் போல் தியானம் செய்து அன்பு அண்ணாவை ஆவியிடமிருந்து காப்பாற்ற முயன்றிருப்பார் என்று தோன்றுகிறது..!!

எப்படி என் மூளை??? அன்புரசிகன் அண்ணா, என்னை மூளையில்லை என்று சொல்லி கிண்டல் பண்ணினீங்கல்ல... இப்ப என்ன சொல்றீங்க???

ஓவியன்
26-11-2007, 01:25 PM
ஹா ஹா ஹா..!
ஓவியன் அண்ணா...! இப்படி நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை. காரணம், அன்பு அண்ணா ஒருவேளை உங்களை ஓட்டி பயங்காட்ட இப்படி உங்களை காலையில் சொல்லி பயமுறுத்தியிருக்கலாமோ??

அடடே அப்படியும் இருக்குமோ..??
இவ்வளவு நாளும் அன்பு விட்ட ரீலை நம்பிட்டேனோ...??? :mini023:

அமரன்
26-11-2007, 01:27 PM
நாமிருந்த அந்த வீடு இரண்டு அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு விருத்தினர் வரவேற்பறை கொண்ட மிக அடக்கமான வீடு.

அடக்கமான வீட்டில இருப்பவர்களை ஆவி எங்காமல் வேறெப்படி சொல்றதாம்..

இரண்டு+ஒன்று+ஒன்று=நான்கு----கணக்குச்சரியாத்தேனே இருக்கு..
அன்பு,ஓவி,விராட்,விருந்தினர் யாருப்பா..

ஓவியன்
26-11-2007, 01:29 PM
அடக்கமான வீட்டில இருப்பவர்களை ஆனி எங்காமல் வேறெப்படி சொல்றதாம்....

அதான் ஏன் ஆவணி என்று சொல்லக் கூடாதெங்கிறேன்......!! :icon_b:

அன்புரசிகன்
26-11-2007, 01:29 PM
எப்படி என் மூளை??? அன்புரசிகன் அண்ணா, என்னை மூளையில்லை என்று சொல்லி கிண்டல் பண்ணினீங்கல்ல... இப்ப என்ன சொல்றீங்க???

நான் எனது அநுமானத்தை சொன்னேன். இன்று நீங்களே நிரூபித்துவிட்டீர்கள்.

அமரன்
26-11-2007, 01:31 PM
அதான் ஏன் ஆவணி என்று சொல்லக் கூடாதெங்கிறேன்......!! :icon_b:
ஆவி உச்சந்தலையில் ஆணியை மெல்ல அடித்தததை ஆனி என்றேன்..இல்லை ஆணி தானென்றால் ஆவிக்கே ஆணி அடித்தது யாருப்பா..விருந்தினராவியா..

யவனிகா
26-11-2007, 01:33 PM
அய்யய்யே....ஆவிகெல்லாம் பயப்படுற ஆளா நீங்க?சேம் சேம் பப்பி சேம்.

இப்படி அன்போட ரகசியத்தை அம்பலம் செய்திட்டீங்களே ஓவியன்.
எனக்குத் தெரிஞ்சு மன்றத்தில ஒருத்தர் இருக்கார். பீலாப் பீட்டர்.அவரு 25 வயசு வரைக்கும் அறையில தனியாப் படுக்க மாட்டார்.மோகினிப் பேய் வந்து தூக்கிட்டுப் போயிடும்னு பயமாம்.

இப்பக் கேளுங்க...பேயாவது பிசாசாவது என்பார், ஏன்னா...25 வயசுக்கு அப்புறம் கல்யாணம் ஆன பின்னால பேயோடவே தூங்கிப் பழகிட்டாராம். இப்ப பேய் இல்லன்னாத் தான் தூக்கம் வர்றது இல்லையாம்.

பென்ஸ்
26-11-2007, 01:35 PM

எங்கப்பா குதிருகுள்ள இல்லை....:lachen001::lachen001::lachen001:

ஓவியன்
26-11-2007, 01:35 PM
ஆவி உச்சந்தலையில் ஆணியை மெல்ல அடித்தததை ஆனி என்றேன்..இல்லை ஆணி தானென்றால் ஆவிக்கே ஆணி அடித்தது யாருப்பா..விருந்தினராவியா..

ஆவி உச்சந்தலையில் ஆணி அடிச்சிசா...??
யாருக்கு உங்களுக்கா.....??? :sprachlos020:

அமரன்
26-11-2007, 01:36 PM
ஆவி உச்சந்தலையில் ஆணி அடிச்சிசா...??
யாருக்கு உங்களுக்கா.....??? :sprachlos020:
ஆடாதசையாதிருந்தது யாருங்கோ...

ஓவியன்
26-11-2007, 01:36 PM
எங்கப்பா குதிருகுள்ள இல்லை....:lachen001::lachen001::lachen001:

:D:D:D:D:D:D :) :D:D:D:D:D:D :icon_b:

ஓவியன்
26-11-2007, 01:38 PM
பேயாவது பிசாசாவது என்பார், ஏன்னா...25 வயசுக்கு அப்புறம் கல்யாணம் ஆன பின்னால பேயோடவே தூங்கிப் பழகிட்டாராம். இப்ப பேய் இல்லன்னாத் தான் தூக்கம் வர்றது இல்லையாம்.

இதனைத் தான் பேய் பிடிச்சிட்டுது என்பார்களா.........??? :mini023:

ஓவியன்
26-11-2007, 01:40 PM
ஆடாதசையாதிருந்தது யாருங்கோ...

காலையில் அன்பு தானே விறைத்துப் போய் இருந்தார்..!! :)

அமரன்
26-11-2007, 01:42 PM
காலையில் அன்பு தானே விறைத்துப் போய் இருந்தார்..!! :)
அடக்கமானவீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் ஆவிதானுங்களே..
என்னோட சந்தேகமெல்லாம் ஏன் பயப்படவேண்டும் என்பதே..

தாமரை
26-11-2007, 01:44 PM
எங்கப்பா குதிருகுள்ள இல்லை....:lachen001::lachen001::lachen001:

எங்கப்பா இந்தக் குதிருக்குள்ளும் இல்லை. :lachen001::lachen001:

அமரன்
26-11-2007, 01:46 PM
எங்கப்பா இந்தக் குதிருக்குள்ளும் இல்லை. :lachen001::lachen001:

சொல்லென்றால் பிரிப்பீங்க.. இழை என்றால் இணைப்பீங்களோ:icon_b:

ஓவியன்
26-11-2007, 01:47 PM
எங்கப்பா இந்தக் குதிருக்குள்ளும் இல்லை. :lachen001::lachen001:

அப்போ
எங்கப்பா உங்கப்பா..!

தாமரை
26-11-2007, 01:52 PM
விடிய விடிய இராமயணம்

ஆதவா
26-11-2007, 02:51 PM
ஓவியரே! எதற்கும் உங்ககூட பேசும்போது எச்சரிக்கையாகவே இருக்கணும் போல. அன்பு எப்படிங்க அந்த நாட்களை நகர்த்தினாரு? கஷ்டம்தான்.

இப்படி பல கதைகள் இருக்குமே! அப்படியே ஒரு பதிவைப் போட்டு தரறது...

விராடரே! திருநூறு சாப்பிட்டா அன்பு அம்பூட்டு வளர்ந்தாரு?

யவனிகா
26-11-2007, 02:58 PM
எங்கப்பா குதிருகுள்ள இல்லை....:lachen001::lachen001::lachen001:

நானும் கையையும் வாயையும் கட்டித் தான் வைக்கணும்ன்னு நினைக்கிறேன்,பெருமூளை மட்டுமே அதிகம் இருக்கிற பெருந்தலைகளுக்கிடையே அதெல்லாம் செல்லுபடியாகிறதில்லை.

அன்புரசிகன்
26-11-2007, 03:12 PM
எனக்குத் தெரிஞ்சு மன்றத்தில ஒருத்தர் இருக்கார். பீலாப் பீட்டர்.அவரு 25 வயசு வரைக்கும் அறையில தனியாப் படுக்க மாட்டார்.மோகினிப் பேய் வந்து தூக்கிட்டுப் போயிடும்னு பயமாம்.
இப்பக் கேளுங்க...பேயாவது பிசாசாவது என்பார், ஏன்னா...25 வயசுக்கு அப்புறம் கல்யாணம் ஆன பின்னால பேயோடவே தூங்கிப் பழகிட்டாராம். இப்ப பேய் இல்லன்னாத் தான் தூக்கம் வர்றது இல்லையாம்.

அது சரி. அந்த பயத்தை போக்கியவள் யார்????????:confused:

அமரன்
26-11-2007, 03:13 PM
Originally Posted by யவனிகா http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=303293#post303293)
எனக்குத் தெரிஞ்சு மன்றத்தில ஒருத்தர் இருக்கார். பீலாப் பீட்டர்.அவரு 25 வயசு வரைக்கும் அறையில தனியாப் படுக்க மாட்டார்.மோகினிப் பேய் வந்து தூக்கிட்டுப் போயிடும்னு பயமாம்.
இப்பக் கேளுங்க...பேயாவது பிசாசாவது என்பார், ஏன்னா...25 வயசுக்கு அப்புறம் கல்யாணம் ஆன பின்னால பேயோடவே தூங்கிப் பழகிட்டாராம். இப்ப பேய் இல்லன்னாத் தான் தூக்கம் வர்றது இல்லையாம்.
அது சரி. அந்த பயத்தை போக்கியவள் யார்????????:confused:
ஏனுங்க ரசிகரே..இதுக்கப்புறமுமா

பென்ஸ்
26-11-2007, 03:17 PM
அது சரி. அந்த பயத்தை போக்கியவள் யார்????????:confused:
டேய் நீங்க இப்புட்டு நல்லவங்களாடா...???:lachen001::lachen001::lachen001:

அன்புரசிகன்
26-11-2007, 03:24 PM
ஏனுங்க ரசிகரே..இதுக்கப்புறமுமா

அவரு யார கல்யாணம் பண்ணினாரு???? :icon_rollout:

டேய் நீங்க இப்புட்டு நல்லவங்களாடா...???:lachen001::lachen001::lachen001:

என்னப்பத்தி ரொம்ப புகளாதீங்கண்ணோய்.... :p

அமரன்
26-11-2007, 03:27 PM
அவரு யார கல்யாணம் பண்ணினாரு???? :icon_rollout:

எங்கப்பா குதிருகுள்ள இல்லை....:lachen001::lachen001::lachen001:

எங்கப்பா இந்தக் குதிருக்குள்ளும் இல்லை. :lachen001::lachen001:

விடிய விடிய இராமயணம்

டேய் நீங்க இப்புட்டு நல்லவங்களாடா...???:lachen001::lachen001::lachen001:

:lachen001::lachen001::lachen001::lachen001:

மதி
26-11-2007, 05:28 PM
அட...
இங்கேயும் தொடருதா....? ஹ்ம்ம்.. அவங்களாவே சொல்றாங்களா பாப்போம்..

ஓவியன்..அன்பை இப்படியெல்லாம் பயமுறுத்தலாமா...? பாவம் அவர்... அதற்கப்பறம் எத்தினி நாள் பயந்து போய் உங்க கூட தங்கியிருந்தாரோ?

ஓவியா
26-11-2007, 05:35 PM
விராடரே! திருநூறு சாப்பிட்டா அன்பு அம்பூட்டு வளர்ந்தாரு?

:lachen001::lachen001::lachen001:

நாளையிலிருந்து நம்ம காலையுணவு, மதிய உணவு எல்லாம் துன்னூருதாம். பின்னே வளர வேண்டாமா???

வெற்றிவேல் முகனுக்கு அரகரா.

மதி
26-11-2007, 05:44 PM
போய்விடுவாள் என
நினைத்திருந்தேன்
போவேனா என்றிருந்தாள்
என்னவள் கண்ணோடு
கண்ணோக்கினேன்..
முத்தத்தை பரிசாய் பெற்று
மிச்சமாய் தந்தாளே
மெட்ராஸ்-ஐ ()(நன்றி:மதி)

இந்த மதி யாருங்க..?

ஓவியா
26-11-2007, 05:48 PM
இந்த மதி யாருங்க..?

நீங்கதான் சார். உங்க கவிதைதான். சும்மா அதிருதில்லே :sprachlos020:

சொற்சமரில் அவுத்துவுட்டீகளே அதேதான். தேடி கண்டு புடிச்சு போட்டிருக்கேன்லே. :lachen001:

அந்த திரு.மதி (திருமதி ஜோக் ஹி ஹி ஹி.. சூப்பர்)

ஓவியன்
26-11-2007, 05:50 PM
:lachen001::lachen001::lachen001:
நாளையிலிருந்து நம்ம காலையுணவு, மதிய உணவு எல்லாம் துன்னூருதாம். பின்னே வளர வேண்டாமா???

வெற்றிவேல் முகனுக்கு அரகரா.

நான் தொடக்கிய திரியினுள் வந்து பதிவினைப் பற்றி ஒரு வரி கூட பேசாமல் சாப்பாட்டைப் பற்றி பேசும் அக்காவை ஓவியன் வனமையாகக் கண்டிக்கிறான்..!!

:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

நேசம்
26-11-2007, 05:52 PM
ஒவியனுக்கு ஆவி படித்து இருக்காது.ஏன்னா ஆவி எதை பிடிக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஓவியா
26-11-2007, 05:53 PM

அக்கா பதிவ படிக்கலப்பா, அதான் பின்னுட்டம் போடலே. மில்லியன் ஃசோரிபா. :redface::redface:

சாப்பாட்டு ராமி
- ஓவியா

ஓவியன்
26-11-2007, 05:53 PM
இந்த மதி யாருங்க..?

விண்மதியா
தண்மதியா
வெண்மதியா
இல்லை
உங்கள் திருமதியா..??

அமரன்
26-11-2007, 05:55 PM
விண்மதியா
தண்மதியா
வெண்மதியா
இல்லை
உங்கள் திருமதியா..??
அறிவு'மதியை விட்டுவிட்டீங்களே

ஓவியன்
26-11-2007, 05:56 PM
ஒவியனுக்கு ஆவி படித்து இருக்காது.ஏன்னா ஆவி எதை பிடிக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
நேசம்..!!

எதுவேணா நமக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கலாமே...!! :)

மதி
26-11-2007, 05:56 PM
நீங்கதான் சார். உங்க கவிதைதான். சும்மா அதிருதில்லே :sprachlos020:

சொற்சமரில் அவுத்துவுட்டீகளே அதேதான். தேடி கண்டு புடிச்சு போட்டிருக்கேன்லே. :lachen001:

அந்த திரு.மதி (திருமதி ஜோக் ஹி ஹி ஹி.. சூப்பர்)

ஓ..நம்பவே முடியல..நானா...
ஹ்ம்ம்..

சரி ஓவியன் கோச்சுக்க போறார்..

மதி
26-11-2007, 05:58 PM
விண்மதியா
தண்மதியா
வெண்மதியா
இல்லை
உங்கள் திருமதியா..??

திருமதி தவிர எந்த மதி வேணும்னாலும் இருக்கட்டும்.. :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

ஓவியன்
26-11-2007, 06:02 PM
அறிவு'மதியை விட்டுவிட்டீங்களே

அறிவு மதியை விட்டு விலகியதால் விட்டு விட்டேன்..!! :D:D:D

ஓவியன்
26-11-2007, 06:05 PM
சாப்பாட்டு ராமி
- ஓவியா

சாப்பாட்டு சீதைனு கூறினா ஏற்றுக்கொள்ளலாம், அதுவென்ன சாப்பாட்டு ராமி..!!?? :)

ஓவியன்
26-11-2007, 06:07 PM
ஓவியன்..அன்பை இப்படியெல்லாம் பயமுறுத்தலாமா...? பாவம் அவர்... அதற்கப்பறம் எத்தினி நாள் பயந்து போய் உங்க கூட தங்கியிருந்தாரோ?

அட நீங்க வேற...
ஒவ்வொரு நாள் காலையிலும் அன்பு புதுசா என்ன கத(ரடி) விடப் போறாருனு நான் தான் பயந்து பயந்து தங்கினேன்..!! :)

நேசம்
26-11-2007, 06:10 PM
சாப்பாட்டு சீதைனு கூறினா ஏற்றுக்கொள்ளலாம், அதுவென்ன சாப்பாட்டு ராமி..!!?? :)

சாப்பாட்டு ராமி சரிதான்.நான் ஒவியாவை நெசமா சொல்லவில்லை.
சாப்பாட்டு ராமன் எதிர்பதம் சாப்பாட்டு ராமி:wuerg019:

மதி
26-11-2007, 06:11 PM
அறிவு மதியை விட்டு விலகியதால் விட்டு விட்டேன்..!! :D:D:D

அட.. ஆமாங்க...
எங்கியாவ்து விலைக்கு கிடைக்குமா?:confused::confused:

அமரன்
26-11-2007, 06:20 PM
அட.. ஆமாங்க...
எங்கியாவ்து விலைக்கு கிடைக்குமா?:confused::confused:
நீங்க கான்வென்ட் ஸ்கூல்லயா படிச்சீங்க..

ஓவியன்
26-11-2007, 06:23 PM
அட.. ஆமாங்க...
எங்கியாவ்து விலைக்கு கிடைக்குமா?:confused::confused:

தெரியலை...
கவிஞர் அறிமதிகிட்ட வேணும்னா கேட்டுப் பார்க்கலாம்...
ஆனா அதனை அவர் விற்பாரோ தெரியலையே...!!

விற்றால் அவர் வெறும் மதியாயிடுவாரே :D:D:D

மலர்
26-11-2007, 06:24 PM
அன்புவைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருந்தது இரவெல்லாம் பயத்தால் தூங்காமல் கந்தசஸ்டி கவசம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருப்பார் போல..!! :D,

அதுமட்டுமா..
தேவாரம் திருவாசகம்ன்னு வேற விடிய விடிய படிச்சாராம்..

நேசம்
26-11-2007, 06:27 PM
அதுமட்டுமா..
தேவாரம் திருவாசகம்ன்னு வேற விடிய விடிய படிச்சாராம்..

அதுக்கு அடுத்த நாளையிலே தேர்வு இருந்திச்சாம்.இல்லையா அன்பு

மதி
26-11-2007, 06:27 PM
நீங்க கான்வென்ட் ஸ்கூல்லயா படிச்சீங்க..

இல்ல்லியே...:confused::confused:

மதி
26-11-2007, 06:29 PM
தெரியலை...
கவிஞர் அறிமதிகிட்ட வேணும்னா கேட்டுப் பார்க்கலாம்...
ஆனா அதனை அவர் விற்பாரோ தெரியலையே...!!

விற்றால் அவர் வெறும் மதியாயிடுவாரே :D:D:D

இதுல ஏங்க பெரிய மனுஷங்கள எல்லாம் இழுத்துகிட்டு..
உங்ககிட்ட இருந்தா தாங்க..இல்லீன்னா...
இருக்கறவங்க கிட்ட கேட்டு வாங்கிகறேன்..

அமரன்
26-11-2007, 06:31 PM
இல்ல்லியே...:confused::confused:
அப்போ காசுகொடுத்து அறிவு வாங்கறதைப்பற்றிப்பேசுறீங்க..:)

அமரன்
26-11-2007, 06:32 PM
இதுல ஏங்க பெரிய மனுஷங்கள எல்லாம் இழுத்துகிட்டு..
உங்ககிட்ட இருந்தா தாங்க..இல்லீன்னா...
இருக்கறவங்க கிட்ட கேட்டு வாங்கிகறேன்..
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த என்னாலான உதவி..
மலரை உங்க லிஸ்டிலிருந்து நீக்கிடுங்க.

ஓவியன்
26-11-2007, 06:35 PM
அதுமட்டுமா..
தேவாரம் திருவாசகம்ன்னு வேற விடிய விடிய படிச்சாராம்..
அட இதனை நான் உங்க கிட்ட சொல்லலையே
அப்படியானால்
அன்புவே உங்களிடம் சொல்லி இருக்கிறாரோ...?? :D

மதி
26-11-2007, 06:36 PM
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த என்னாலான உதவி..
மலரை உங்க லிஸ்டிலிருந்து நீக்கிடுங்க.

சபாஷ்...சரியான யோசனை..
செயல்படுத்தி பார்க்கிறேன்...

நேசம்
26-11-2007, 06:36 PM
அட இதனை நான் உங்க கிட்ட சொல்லலையே
அப்படியானால்
அன்புவே உங்களிடம் சொல்லி இருக்கிறாரோ...?? :D
மலர் பெரிய புராணமெல்லாம் படிக்கும்.அதை கேட்டுகிட்டு நிங்க வேற.. சின்னபுள்ள தனமா இருக்கு

மலர்
26-11-2007, 06:37 PM
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த என்னாலான உதவி..
மலரை உங்க லிஸ்டிலிருந்து நீக்கிடுங்க.

ஆமா...
ஏன்னா அமருக்கு கடனா குடுத்திருக்கேன்...

ஓவியன்
26-11-2007, 06:37 PM
இதுல ஏங்க பெரிய மனுஷங்கள எல்லாம் இழுத்துகிட்டு..
உங்ககிட்ட இருந்தா தாங்க...

எங்கிட்ட இருந்தா உங்க கூட இப்படி பேசிட்டு இருப்பேனா..!! :icon_rollout:

மலர்
26-11-2007, 06:38 PM
எங்கிட்ட இருந்தா உங்க கூட இப்படி பேசிட்டு இருப்பேனா..!! :icon_rollout:

அட நம்ம கட்சி...

நேசம்
26-11-2007, 06:38 PM
ஆமா...
ஏன்னா அமருக்கு கடனா குடுத்திருக்கேன்...
அப்போ அமரனை லிஸ்டில் இருந்து தூக்கிடுங்க மதி.
ஏன்னா அது உங்களுக்கு பயன்படாது.

அமரன்
26-11-2007, 06:39 PM
ஆமா...
ஏன்னா அமருக்கு கடனா குடுத்திருக்கேன்...
இல்லைங்கிறதை தெளிவாக்குகின்றாயே மலரு.

ஓவியன்
26-11-2007, 06:39 PM
ஆமா...
ஏன்னா அமருக்கு கடனா குடுத்திருக்கேன்...

ஹீ,ஹீ!!

அமரனுக்கு அப்போ கடனா வாங்கிப் பாவிக்கணும் என்ற மட்டிலாவது அறிவு இருந்திருக்கே..!! :lachen001:

அமரன்
26-11-2007, 06:40 PM
அப்போ அமரனை லிஸ்டில் இருந்து தூக்கிடுங்க.
ஏன்னா அது பயன்படாது.
நீங்க ஒண்ணு.. மூளையில்லாத பொண்ணு சொல்றதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கிட்டு..

ஓவியன்
26-11-2007, 06:41 PM
அட நம்ம கட்சி...

இப்போ கொஞ்ச நேரம் சேர்ந்தே இருப்போம் சரியா..!! :icon_good:

மதி
26-11-2007, 06:41 PM
எங்கிட்ட இருந்தா உங்க கூட இப்படி பேசிட்டு இருப்பேனா..!! :icon_rollout:

அதானே பார்த்தேன்..

அன்புரசிகன்
26-11-2007, 06:42 PM
அதுமட்டுமா..
தேவாரம் திருவாசகம்ன்னு வேற விடிய விடிய படிச்சாராம்..

அப்புறமா மலர் நடுங்கி நடுங்கி சிவபுராணம் படித்தார். :music-smiley-012:... மலரே... அத வுட்டுட்டீங்களே..

ஓவியன்
26-11-2007, 06:43 PM
நீங்க ஒண்ணு.. மூளையில்லாத பொண்ணு சொல்றதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கிட்டு..

ஆமா இவரு பெரிய மூளை டாக்டர்...
அங்கே இருந்து கொண்டே சொல்லிடுவார் மூளை இருக்கா இல்லையானு..!! :lachen001:

அமரன்
26-11-2007, 06:45 PM
ஆமா இவரு பெரிய மூளை டாக்டர்...
அங்கே இருந்து கொண்டே சொல்லிடுவார் மூளை இருக்கா இல்லையானு..!! :lachen001:
நானாச்சும் பரவாயில்லை... மலருக்கு மூளை இல்லைன்னு சொன்னேன்.. மூளை வைத்தியராக என்னையாக்கி மலரை...... இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்..

மதி
26-11-2007, 06:47 PM
என்ன...அறிவு..மூளை..மதின்னு பேச்சா இருக்கு...
ஒன்னு மட்டும் புரியுது..
நான் மட்டும் இல்ல..இங்க நிறைய பேர்..இருக்கறத தொலைச்சுட்டு தேடறாங்க.... இல்லாதவங்களும் என்ன தேடறோம்ம்னு தெரியாம தேடறாங்க... :)

நேசம்
26-11-2007, 06:49 PM
நானாச்சும் பரவாயில்லை... மலருக்கு மூளை ..
மூளை இல்லை .. இல்லைன்னு சொல்லி இல்லாததை யோசிக்க வச்சிடாதிங்க

மலர்
26-11-2007, 06:51 PM
இப்போ கொஞ்ச நேரம் சேர்ந்தே இருப்போம் சரியா..!! :icon_good:

அதான் உடனே கவுத்துட்டீங்களே..
உங்க கூட கா...

மலர்
26-11-2007, 06:57 PM
அப்புறமா மலர் நடுங்கி நடுங்கி சிவபுராணம் படித்தார். :music-smiley-012:... மலரே... அத வுட்டுட்டீங்களே..

ஹீ....
சிவபுராணத்தை வுட்டுட்டேனா....
அதையும் சேத்துக்கோங்கப்பா...

விகடன்
27-11-2007, 03:27 AM
எப்படி என் மூளை??? அன்புரசிகன் அண்ணா, என்னை மூளையில்லை என்று சொல்லி கிண்டல் பண்ணினீங்கல்ல... இப்ப என்ன சொல்றீங்க???

மூளை இருக்கு என்று நிரூபிக்க கடுமையாக உழைப்பதுமட்டும் தெரிகிறது... ஆனால் என்ன செய்வது, நிரூபிப்பது வேறொன்றாக அல்லவா இருக்கிறது.
ம்ம்ம்ம்
முயற்சியுங்கள்...

இப்பக் கேளுங்க...பேயாவது பிசாசாவது என்பார், ஏன்னா...25 வயசுக்கு அப்புறம் கல்யாணம் ஆன பின்னால பேயோடவே தூங்கிப் பழகிட்டாராம். இப்ப பேய் இல்லன்னாத் தான் தூக்கம் வர்றது இல்லையாம்.

யாரு?
மலரா???:lachen001::lachen001::lachen001:

விடிய விடிய இராமயணம்

விடிஞ்சதுக்கு அப்புறம் மஹாபாரதமா அண்ணா?

விராடரே!
திருநூறு சாப்பிட்டா அன்பு அம்பூட்டு வளர்ந்தாரு?

அன்புவ நேரில கண்டிங்களா?
அடேய் அன்பு,
தனிமடல்ல ஆதவாண்ட வாயை பொத்திடப்பு.
இல்லைன்னா கன விடயம் சந்திக்கு வந்திடும். :D

அது சரி. அந்த பயத்தை போக்கியவள் யார்????????:confused:

கலியாணத்துக்கப்புறம் கணவனை விட்டு விட்டு பேயோடு படுத்ததை யவனிக்கா பார்த்திருக்கிறார் என்றால் விளங்க வேண்டாமா?

அதற்கப்பறம் எத்தினி நாள் பயந்து போய் உங்க கூட தங்கியிருந்தாரோ?

உண்மையை சொல்லட்டுமா....
அதற்கு பிறகு ஹோலில்த்தான் உறங்குவார். நானும் அவருடன் பக்கத்தில் உறுங்குவேன்.

நாளையிலிருந்து நம்ம காலையுணவு, மதிய உணவு எல்லாம் துன்னூருதாம். பின்னே வளர வேண்டாமா???

வெற்றிவேல் முகனுக்கு அரகரா.

சாப்பிடுங்க... சாப்பிடுங்க....
மலிவானதும் கூட...

வளரும்.... உடம்பல்ல, வயித்தில புற்றுநோய் :D

அன்புரசிகன்
27-11-2007, 03:54 AM
அன்புவ நேரில கண்டிங்களா?
அடேய் அன்பு,
தனிமடல்ல ஆதவாண்ட வாயை பொத்திடப்பு.
இல்லைன்னா கன விடயம் சந்திக்கு வந்திடும்.

நேரில பார்த்திருந்தால் இப்படி சொல்லியிருக்கமாட்டார்....

தனிமடலா.... சான்ஸ்ஸே இல்ல...

ஓவியன்
28-11-2007, 04:39 AM
தனிமடலா.... சான்ஸ்ஸே இல்ல...

ஏம்பா..........?!?!! :confused::confused::confused:

அன்புரசிகன்
28-11-2007, 05:06 AM
ஏம்பா..........?!?!! :confused::confused::confused:

கெஞ்சவேண்டிய அவசியமில்லயில்லே..... :p

விகடன்
28-11-2007, 08:39 AM
கெஞ்சவேண்டிய அவசியமில்லயில்லே..... :p
கதையப்பார்த்தால் ஆதவனிடம் கெஞ்சிபவர்கள்தான் தனிமடல் அனுப்புகிறார்கள் என்று சொல்வதுபோலல்லவா தெரிகிறது....:confused:

இதுவரை ஓவியன் அனுப்பியவற்றிற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள்

அன்புரசிகன்
28-11-2007, 08:47 AM
கதையப்பார்த்தால் ஆதவனிடம் கெஞ்சிபவர்கள்தான் தனிமடல் அனுப்புகிறார்கள் என்று சொல்வதுபோலல்லவா தெரிகிறது....:confused:

இதுவரை ஓவியன் அனுப்பியவற்றிற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள்

ஓவியன் ஆதவனுக்கு அனுப்பும் தனிமடலை நான் எப்படி வாசிக்க முடியும்.....

(ஓவியனின் கடவுச்சொல் தெரிந்தால் தாருங்கள். பார்த்தறிகிறேன். :D :D :D)

ஆதவா
28-11-2007, 02:31 PM
நேரில பார்த்திருந்தால் இப்படி சொல்லியிருக்கமாட்டார்....

தனிமடலா.... சான்ஸ்ஸே இல்ல...

விராடரே! பார்த்தவ*ர்கள் சொன்னார்கள்....

பார்க்காதே!@@

என்று... அதன் அர்த்தம் இன்றுவரையும் விளங்கவில்லை... :D

ஓவியன்
28-11-2007, 03:30 PM
(ஓவியனின் கடவுச்சொல் தெரிந்தால் தாருங்கள். பார்த்தறிகிறேன். :D :D :D)

இதென்ன கொடுமை...
என்னோட பயணாளர் பெயருக்குரிய கடவுச்சொல் விராடனுக்குத் தெரிந்த மாதிரிலே நீர் சொல்லுறீர்..!!?? :confused:

அன்புரசிகன்
28-11-2007, 03:41 PM
ஓவியன் ஆதவனுக்கு அனுப்பும் தனிமடலை நான் எப்படி வாசிக்க முடியும்.....

(ஓவியனின் கடவுச்சொல் தெரிந்தால் தாருங்கள். பார்த்தறிகிறேன். :D :D :D)
இதென்ன கொடுமை...
என்னோட பயணாளர் பெயருக்குரிய கடவுச்சொல் விராடனுக்குத் தெரிந்த மாதிரிலே நீர் சொல்லுறீர்..!!?? :confused:

அடிக்கோடிட்ட தடித்த எழுத்திலுள்ளதை பாருங்கள்.

ஓவியன்
29-11-2007, 03:25 AM
அதனை இப்போது அடிக்கோடிட்டு என்ன பயன்...??
முன்பே அடிக்கோடிட்டுக் காட்டிருந்தீர்களென்றால் முதலிலேயே விளங்கியிருக்கும்.........

அன்புரசிகன்
29-11-2007, 04:31 AM
அதனை இப்போது அடிக்கோடிட்டு என்ன பயன்...??
முன்பே அடிக்கோடிட்டுக் காட்டிருந்தீர்களென்றால் முதலிலேயே விளங்கியிருக்கும்.........

நீங்கள் கடும் புத்திசாலி என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டேனுங்க....

தப்புத்தான்....

இனிமேல் சற்று விளக்கமாகவே உதாரணங்களுடன் பதில் தர முனைகிறேன்...

ஓவியன்
29-11-2007, 04:33 AM
அது...!! :icon_b:

மிக்க நன்றி ரசிகரே..!! :)

நேசம்
29-11-2007, 04:35 AM
அது...!! :icon_b:

மிக்க நன்றி ரசிகரே..!! :)

இது எதுக்கு த*ப்பா க*ண*க்கு போட்ட*துக்கா..! இருந்தாலும் பெரிய* ம*ன*சுங்க* ஒவிய*னுக்கு

ஓவியன்
29-11-2007, 05:21 AM
இது எதுக்கு த*ப்பா க*ண*க்கு போட்ட*துக்கா..! இருந்தாலும் பெரிய* ம*ன*சுங்க* ஒவிய*னுக்கு

ஆமாங்க...!!
என்னோட மனசுபோல கடலுனு நம்ம ஊரிலே சொல்லுவாங்க...! :)

ஷீ-நிசி
29-11-2007, 06:01 AM
ஓவியன்.. அந்த பாட்டு ஒரு மாதிரி திகில் எஃபெக்ட்ஸ் எல்லாம் இருக்கும்தான்... மிக மிக நான் விரும்பும் பாடல்...

ஆனால் அந்த இரவு நேரத்தில் அந்த பாடல் ஒலிக்க, நீ அவரை உட்கார்ந்த நிலையில் பயமுறுத்த அன்பு ரசிகன் நிலைமையில் நான் இருந்திருந்தால் உள்ளாரவே வந்திருக்கமாட்டேன்...

நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!

அன்பு! நீ என் இனமடா!

ஓவியன்
29-11-2007, 06:04 AM
நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!

அன்பு! நீ என் இனமடா!

பீதியைக் கிளப்பினது அன்பு தானே...

ஓ...!!
நீங்களும் நல்லாவே பீதியைக் கிளப்புவீங்களோ..?? :D:D:D

அன்புரசிகன்
29-11-2007, 06:12 AM
அன்பு! நீ என் இனமடா!

என்னினமே... என்சனமே...
என்னை உனக்கு தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா???

இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது...

ஷீ-நிசி
29-11-2007, 06:28 AM
பீதியைக் கிளப்பினது அன்பு தானே...

ஓ...!!
நீங்களும் நல்லாவே பீதியைக் கிளப்புவீங்களோ..?? :D:D:D

ஏப்பு! தூக்கத்துல எழுந்து உட்கார்ந்தவாக்கில தூங்கிட்டு, எழுப்பினாலும் எழும்பாம டகால்டி வேல காட்டிட்டு பீதிய கிளப்பிட்டு இப்ப நான் இல்ல! அன்புதான்னு சொல்றியே!

நீ ஆவி வேல எல்லாம் காட்டினதால இன்று முதல் நீ ஒவியன் இல்ல ஆவியன்.... :)

இதேப்போல செய்து அம்மணிய பயமுறுத்திடாதப்பு! :)

ஓவியன்
29-11-2007, 04:38 PM
நீ ஆவி வேல எல்லாம் காட்டினதால இன்று முதல் நீ ஒவியன் இல்ல ஆவியன்....

ஓஹோ..!!

அப்படியா சேதி ஷீ..!!!
இருங்க, இருங்க.....
இன்றிரவு உங்களைச் சந்திக்கிறேன்...!! :aetsch013:

அமரன்
29-11-2007, 06:03 PM
இதேப்போல செய்து அம்மணிய பயமுறுத்திடாதப்பு! :)
நடைமுறைச்சாத்தியமானதாக ஏதாச்சும் சொல்லுங்க ஷீ..

iniya
29-11-2007, 07:59 PM
ஆகா அருமையான நினைவுப் பகிர்வு. சிருப்பு அடக்க முடியவில்லை.
எம்மோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஓவியன்

lolluvathiyar
30-11-2007, 06:34 AM
ஓவியனுக்கு ஆவிபயமா, அது வேற ஒன்னும் இல்ல நன்பர்களே நான் அந்த ரகசித்தை கண்டு பிடித்து விட்டேன். ஓவியன் கனவில் ஆவியாய் வருவது யார்? ஒரு வேலை மயூர் சொன்ன தவளையோ என்னவோ. இல்ல 36 மனைவிகளில் ஒருத்தி ஆவியாய்? சேச்ச அப்படி எல்லாம் சொல்ல கூடாது நான் என்ன இதயமா கிசு கசு பரப்பரதுக்கு

அன்புரசிகன்
30-11-2007, 06:38 AM

இப்படியெல்லாம் சேதி இருக்கா,,,??? :eek:

ஓவியன்
19-12-2007, 10:40 AM
இதேப்போல செய்து அம்மணிய பயமுறுத்திடாதப்பு! :)

ஆமா, அது தப்புத் தான்...!! :aetsch013:

ஓவியன்
19-12-2007, 10:42 AM
இல்ல 36 மனைவிகளில் ஒருத்தி ஆவியாய்? சேச்ச அப்படி எல்லாம் சொல்ல கூடாது நான் என்ன இதயமா கிசு கசு பரப்பரதுக்கு

இது என்ன புதுக் கரடி.......??? :confused::confused::confused:

சுகந்தப்ரீதன்
20-01-2008, 09:55 AM
நல்லவேலை ஓவிய அண்ணன் கண்ண மூடியிருக்கும்போதே அன்பு அண்ணாத்தே இந்த பயம் பயந்திருக்காரு...! கண்ண தொறந்திருந்தா என்னாயிருக்குமோ.. நெனைக்கும் போதே நிசமா சிரிப்பு வருதுங்க..!

கடைசியில ஓ(ஆ)வியால விபூதியும் அன்பு அண்ணாவோட வியர்வையும்தான் வீணானதுதான் மிச்சம்...! பாவம் அதவச்சுதான் அதுவரைக்கும் விராடன் அண்ணா பல்லு துலக்கிட்டு இருந்தாரு..! அநியாயமா அவ்ரு வீட்டுல இல்லாத நேரம் பாத்து விபூதிய காலி பண்ணிட்டீங்களே கபோதி அண்ணனுங்களா...!

ஓவியன்
20-01-2008, 01:26 PM
அட குசும்புக்கார தம்பி...
இப்படி உள்ளது உள்ளபடி சொல்லிட்டுப் போக, ஏதோ நான் தான் சொன்னேனு விராடன் என்னோடு சண்டைக்கு வரப் போகிறார்...!! :D:D:D

சுகந்தப்ரீதன்
23-01-2008, 06:13 AM
அட குசும்புக்கார தம்பி...
இப்படி உள்ளது உள்ளபடி சொல்லிட்டுப் போக, ஏதோ நான் தான் சொன்னேனு விராடன் என்னோடு சண்டைக்கு வரப் போகிறார்...!! :D:D:D
அது சரி நீங்க ரெண்டு பேரும் ஏன் எப்பவும் விராடன் அண்ணாவ பாத்து பயப்புடுறீங்க..?:lachen001: ஏதோ ரெண்டு பேரும் தப்பு பண்ணி மாட்டிக்கிட்டீங்களா அவர்கிட்ட..?:aetsch013:

ஓவியன்
23-01-2008, 07:05 AM
விராடனைப் பார்த்து பயமா..?
சே, சே...
அப்படியெல்லாம் இல்லை, சும்மா ஒரு மருவாதைதான்...!!:icon_rollout:

சுகந்தப்ரீதன்
23-01-2008, 12:01 PM
ஹா..ஹா.. அண்ணன் மழுப்புறதுலேயே தெரியுது பயப்புடுறது..?

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் வீக்கு.. இது நல்ல ஜோக்கு இல்ல அண்ணா..?

விகடன்
31-01-2008, 09:08 AM
பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் வீக்கு.. இது நல்ல ஜோக்கு இல்ல அண்ணா..?

பில்டிங் என்றாலே பேஸ்மண்டோட சேர்த்துத்தானே சுகந்தப்ரீதன்? :confused:

தெளிவாக குழம்பியிருக்கிறீர்கள்.
கட்டாயம் யாரிடமாவது குப்பி எடுக்கவேண்டும்.

சுகந்தப்ரீதன்
31-01-2008, 10:39 AM
பில்டிங் என்றாலே பேஸ்மண்டோட சேர்த்துத்தானே சுகந்தப்ரீதன்? :confused:
.
ஆஹா.. அப்ப மொத்தமும் வீக்கா..?:traurig001: அதான் ஓவியரு வீக் எண்டுக்கு வெளில போறதில்லையா...?:wuerg019:

விகடன்
02-02-2008, 03:19 AM
ஆஹா.. அப்ப மொத்தமும் வீக்கா..?:traurig001:

இதற்கும் முதலில் எழுதியதிற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா சுகந்தப்ரீதன்?

ஓவியனுக்கு பில்டிங் ஸ்ரோங் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள் சற்று முதலில்.

இப்ப சொன்ன "வீக்" உங்களுக்கா???

ரதி
25-03-2008, 02:22 PM
அட இப்படியெல்லாம் நடந்திருக்கா ?

பாவம் அன்பு அண்ணா.

அன்புரசிகன்
25-03-2008, 03:33 PM
அட இப்படியெல்லாம் நடந்திருக்கா ?

பாவம் அன்பு அண்ணா.

யாரும் நடக்கவில்லை....

பாவம் நான் அல்ல.... நீங்கள் தான்... :lachen001:

(வருங்காலத்தை சொன்னேனுங்கோவ்.....................)